புத்தாண்டு நற்செய்தி திருப்பாடல்கள் 147:13-15.லூக்கா 13:6-9.
1 இறைவனை துதிப்போம்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இப் புத்தாண்டில் பிரவேசித்துள்ள உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். திருப்பாடல்கள் 147:12,13,14 இறைவார்த்தைகளே புத்தாண்டின் நற்செய்தியாகும்.
12.எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே என் தேவனைத் துதி.
வானத்திலிருந்து இறங்கி வரும் புதிய எருசலேமின் வாசிகளே முதலாவதாக நாம் கடவுளை துதிக்க வேண்டும் மற்றும் போற்ற வேண்டும். (திருவெளிப்பாடு: 20;9)
ஏனேனில் நம் ஆண்டவர் தூதிகளின் மத்தியில் வாசம் செய்கிறார். எருசலேம் தேவனின்நகரம். பரிசுத்தவான்களின் கூடாரம். எருசலேம். சமாதானத்தின் நகரம் என்றும், தாவீதின் நகரம் என்றும் அழைக்கப்பட்ட நகரம். எருசலேம் ( சாலேம் நகர்) மகாராஜாவின் நகரம் என அழைக்கப்படுகிறது.
எருசலேமின்பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.’—மத்தேயு 5:34, 35.
எருசலேம் குமாரித்திகள்தான் இயேசுவின் சிலுவைப்பாட்டில் கண்ணீர் விட்டவர்கள். நம் இறைமைந்தன் ஏசுவை சிலுவையில் அறறையப்பட்ட இடமும் எருசலேம்தான். ஆனால் இறைவன் நமக்கு கொடுப்பதோ வானத்திலிருந்து இறங்கி வரும் புதிய எருசலேம். (திருவெளிப்பாடு 21:10-14) எனவே அந்த புதிய எருசலேமில் வாசம் செய்யப் போகின்ற நாம் என்றொன்றும் அரசாளப் போகின்ற இறைவனை துதிக்க வேண்டும்.நம் தேவனை எப்போதெல்லாம் துதிக்கிறோமோ அப்போதெல்லாம் தேவசமாதானம் நம்மை நிரப்பும். எனவே இப் புத்தாண்டில் முதலாவதாக தேவனை துதிப்போம்.
2, நம் வீடு எப்படி பட்டது:
நாம் தேவனை துதிக்கின்ற பொழுது நம் வீட்டின் வாசலின் தாழ்ப்பாள்களை பலப்படுத்துகிறார், பாதுகாக்கிறார். இந்த உலகம் பொல்லாத உலகம் என வேதம் சொல்லுகிறது. நல்லோர் எவருமில்லை. எனவே நாம் நம் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி நம்மை இவ்வாண்டில் காக்க வல்லவராக இருக்கிறார். நம் வீடு இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டு கற்பாறையின்மீது கட்டப்பட்டதாய் நிலைநிரறுத்துகிறார்.
நம் ஆண்டவர்.
நம் வீட்டின் வாசல், " நானே வாசல்"( யோவான் 10:9)
அவர் வழியாக வருகிறவனே இரட்சிக்கபாபடுவான்.இறைவன் வரும் வாசலாக அமையட்டும் நம் இல்லங்கள்.திருவெளிப்பாடு:3:8. ஆண்டவர் நமக்கு திறந்த வாசலை முன்வைக்கிறார்.
நம் கதவுகள் ஆண்டவர் வர உயரட்டும்:
திருப்பாடல்கள் 24:7
வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 24:7 நம் வீட்டின் வாசல்கள் நம் ஆண்டவர் வந்து வாசம் செய்யும் இல்லமாக இருக்கட்டும். பிசாசனவன் யாரை விழுங்கலாம் என அலைந்து திரிந்தகிறான். அவனுக்கு நம் வீட்டில் இடமில்லை.
3,முழுஇருதயத்தோடு அன்பு கூறுவாயாக:
இனணச்சட்டம் ( உபாகம்) 6:4-9 நாம், நம் வீடு, நம் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?
4 இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
5 உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!
6 இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.
7 நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன்வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
8 உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும்.
9 உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது. நாம் அவ்வாறு செய்கின்ற போது கடவுள் நம் வீட்டை பாதுகாத்து நம் பிள்ளைகளை ஆசிர்வதிக்கிறார்.
13.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்..
பிரியமானவர்களே!
இந்த ஆண்டிலே நாம் முழுமையாக இறைவார்த்தைபடி நடக்கின்றபோது (திருப்பாடல்கள்
147:14) அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமானகோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். யோசுவா கூறுவது போல,"நானும் என் வீட்டாருமே என்றால் கர்த்தரையே சேவிப்போம் " என்ற உறுதிமொழியோடு நம் இல்லம் அன்பு, சந்தோசம், சமாதானம் என்ற ஆவியின் கனிகளில் அமைந்திடவும், சண்டைகள் , கெட்ட வார்த்தைகள் அற்ற இல்லமாகவும்
இறைமகன் மட்டும் வேத வாசிப்பும் இரண்டு கண்களாக இருக்கட்டும். நம் இல்லத்தின் தலைவர் இயேசு கிறிஸ்து என்பதை செயலில் காட்டுவோம்.
4 தட்டுங்கள்
திறக்கப்படும்.
திருவெளிப்பாடு 3:20 அவர்( இயேசு) வாசற்படியின் நின்று கதவை தட்டுகிறார்.
20 "இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
திருவெளிப்பாடு 3:20"
நம் ஆண்டவர் உள்ள கதவுகளையும், இல்ல கதவுகளையும் தட்டிக்கொண்டிருக்கிறார்.ஆண்டவருக்கென்று நம் இல்லக்கதவை திறந்து வைப்போம். நம் பிள்ளைகள் ஏசு வந்த வீட்டிலே என்ன சந்தோசம் என்ன சந்தோசம் என பாடகேட்போம்.சிலுவை சின்னம் நம் வீட்டின் அடையாளமாகஇருக்கட்டும்.
வருடங்கள் கடவுளின் ஈவு;. லூக்கா 13:6-9.
லூக்கா 13 : 6..9 “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் ( இயேசு) மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் (தந்தையாகிய பிதா)கூறினார். நம்மையும் இவ்வாறு இந்த ஆண்டடையும் கிருபையால் நமக்குகொடுத்திருக்கிறார்.இப்புத்தாண்டில் கனி தரும் வாழ்வை வாழ்வோம். மிக முக்கியமாக நம் சக மக்களோடுசமாதான மாகவும் நல்லிணக்கத் துடனும் வாழ்ந்திட வேண்டும். அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Dear friends. Pl. Write your comments for any additions and corrections. Thank you
ReplyDelete