இறை தூதன் காபிரியேல் ஏன் முதன் முதலில் யோவான் ஸ்நானகனின் பிறப்பை சகரியாவிற்கு அறிவித்தார்? லூக்கா 1:16,17.அவர்,(யோவான்) இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.
17 எலியாவின் உளப்பாங்கையும்வல்லமையையும் உடையவராய் அவருக்கு (இயேசு) முன் செல்வார்; தந்தையரும் மக்களும்உளம்ஒத்துப்போகச்செய்வார்;நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்; இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார். இத்தகைய பண்புகள் நிறைந்த யோவான் (லூக்கா 3:2-4) அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தகாலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். அவர் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப்போட்டிருக்கிறார்; தோல் வாரை இடுப்பில் கட்டியிருக்கிறார். வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிடுகிறார். யோவான் இயேசுவை காட்டிலும் 6 மாதம் மூத்தவர். இயேசு பிறந்த பொழுது ஏரோது மன்னன் எருசலேமிலுள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை கொள்ளும்படி கட்டளை இடுவதற்கு முன்பாகவே சகரியாவும், எலிசபெத்தும் குழந்தை யோவானோடு மலைநாட்டில் பாலை நிலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்.
1.விண்ணரசின் வருகையை அறிவித்தல்: “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று எல்லாருக்கும் பிரசங்கிக்கிறார்.—மத்தேயு 3:2.
3 "பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.
4 இதைப்பற்றிஇறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது; "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்;
ஆண்டவருக்கு வழியை ஆயத்தப்படுத்தவே யோவான் பிறப்பை தூதன் முன்னறிவித்தார்.கிறிஸ்துவின்
முன்னோடியாக வந்த இறைவாக்கினர் கிறிஸ்துவ சமயத்தில் முக்கிய நபரும்
ஆவார். இறைமகன் இயேசுவின் உறவினரான இவர், யோர்தான்
நதியில் திருமுழுக்கு கொடுத்துவந்தார்.இவரை மற்றயோவான்'களிடம்இருந்து,பிரித்துஅடையாளப்படுத்தும் விதமாக '
திருமுழுக்கு' என்ற சொல் அடைமொழி இவரது பெயரோடுஇணைக்கப்பட்டுள்ளது.மற்றும் ஆண்டவரை (லூக்கா 3:16) யோவான் அவர்கள் அவரிடம் வந்த மக்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
2.இயேசுவின் திருமுழுக்கு:
யோவானிடம்மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. 22பரிசுத்த ஆவியானவர்ரூபங்கொண்டுபுறாவைப்போலஅவர்மேல்இறங்கினார்.வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர்என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
(லூக்கா நற்செய்தி 3:21)
திருமுழுக்குயோவான் இயேசுவைகுறித்து (தூய. யோவான் 1:15 ) , "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்;" யோவான் நற்செய்தி 1:29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். என உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.
இயேசுவை குறித்து சாட்சி பகரவே இறைதூதர் யோவானின் பிறப்பை முன்னறிவித்தார்.
Baptism of Jesus |
மலாக்கி 4:5. ல் கூறப்பட்ட இறைவாக்கினர் எலியா என யோவானை குறிப்பிடுகிறார்.யோவானும் இறைமைந்தன் இயேசுவும் உறவினர்கள்.
புனித திருமுழுக்கு யோவான் |
---|
திருமுழுக்கு யோவான் ஓவியம், வரைந்தவர்: தீசியன். 1542. |
பிறப்பு கி.மு.6. யூதேயா நாட்டில் உள்ள என்கேரிம்.
இறப்பு கி.பி 28. எருசலேம்.
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன்னர் இறைதூதர் தோன்றவேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது அல்லவா. ஆம் எனக்கு அன்பானவர்களே!. இயேசு கிறிஸ்து, அவர் அமைக்கும் இறையரசின் அரசர்.( King of kings) அரசர் வருகின்ற போது " அரசர் வருகின்றார் வழி விடுங்கள்" என்று காவலாளிகள் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். இங்கு இறைமைந்தன் இயேசுவின் வருகையை ஆயத்தப்படுத்தவே யோவான் தோன்றினார்.
3.எபேசு பட்டணத்தில் பவுல்:
திருத்தூதர் பணிகள் 19:1- 4.பவுல் சில சீடர்களை நீங்கள் நம்பிக்கை கொண்ட போது தூய ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டீர்களா? என் கேட்கிறார். அதற்கு அவர்கள் "தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றார்கள். அப்படி என்றால் நீங்கள் எந்த திருமுழுக்கு பெற்றீர்கள்? என பவுல் கேட்க, அவர்கள் நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கு பெற்றோம் என்றார்கள்."அதற்குப் பவுல், யோவானின் திருமுழுக்கு
தகுதியானவர்களுக்கு மட்டுமே திருமுழுக்கு கொடுத்து, தமக்குப் பின் வரும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார் என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு பெற்றனர்.மதத் தலைவர்களும்,பரிசேயர்களும், சதுசேயர்களும் அங்கே வந்தபோது, அவர்களைப் பார்த்து “விரியன் பாம்புக் குட்டிகளே” என்று யோவான் கூப்பிடுகிறார். அதோடு, “நீங்கள்மனம்திருந்திவிட்டீர்கள் என்பதைச் செயலில் காட்டுங்கள். ‘ஆபிரகாம் எங்கள் தகப்பன்’ என்று மனதுக்குள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதீர்கள்; கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்துகூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க முடியுமென்று நான் உங்களுக்குச்சொல்கிறேன். மரங்களின் வேருக்குப் பக்கத்தில் ஏற்கெனவே கோடாலி இருக்கிறது; நல்ல பழங்களைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படும்” என்று அவர்களிடம் சொல்கிறார்.(மத்தேயு :3:7-10.) யோவான் பலருக்கு ஞானஸ்நானம்கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த
யூதர்கள், ஆலய குருமார்களையும்லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீ யார்?” என்று கேட்கிறார்கள்.“நான் கிறிஸ்து அல்ல” என்று அவர் சொல்கிறார். அப்படியானால், நீ எலியாவா?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.“இல்லை” என்று யோவான் சொல்கிறார்.
“நீதான் வரவேண்டிய தீர்க்கதரிசியா?” என்று அவர்கள் கேட்கிறார்கள். அதாவது, மோசே முன்கூட்டியே சொன்ன அந்தப் பெரிய தீர்க்கதரிசி இவர்தானா என்று கேட்கிறார்கள்.—. (இனணச்சட்டம் 18:15, 18.)
அப்போது அவர்கள், “நீ கிறிஸ்துவும் அல்ல, எலியாவும் அல்ல, வரவேண்டிய தீர்க்கதரிசியும் அல்ல என்றால், எதற்காக ஞானஸ்நானம் கொடுக்கிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு யோவான், “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார், அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாது. அவர் எனக்குப்பின்வரப்போகிறவர்” என்று சொல்கிறார்.—(யோவான் 1:25-27.)தன்னை தாழ்த்தி இயேசுவை உயர்த்துவதைபார்க்கிறோம்.மேசியாவைஏற்றுக்கொள்ள மக்களைத் தயார்படுத்துகிற ஒருவேலையைச்செய்வதாக யோவான் சொல்கிறார். “எனக்குப் பின்பு வரப்போகிறவர் என்னைவிட வல்லவர்; அவருடைய செருப்புகளைக் கழற்றுவதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை” என்றும் சொல்கிறார். (மத்தேயு 3:11) அதோடு, “எனக்குப் பின்னால் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார்; ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தேஇருக்கிறார்”( ஆதியும் அந்தமும் ஆனவர்) என்றும் யோவான் சொல்கிறார்.—(யோவான்1:15.) இவரிடம் மத தலைவர்கள், பரிசேயர், சதுசேயர்கள், வரி வசூலிப்போர், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திருமுழுக்குப் பெற்றனர்.
4.கண்டிப்பான போதனையாள் வந்த மரணம்: ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "Call a spade as a spade ". உண்மை உண்மை தான் . யாராக இருந்தாலும் தவறை கண்டிப்பது யோவானின் வழக்கம். முக தாட்சண்யம் பார்க்காதவர்.திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி,அதிகாரத்திலும் பதவியிலும்இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, குறுநில அரசன் ஏரோது ஆன்டிபஸ் (கி.மு 20 - கி. பி 39.)தன் சகோதரனான ஏரோதுபிலிப்பின் -1. (Philip-1) மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார்.ஏரோது, ஏரோதியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்துசெவிசாய்த்தான். இதனால் ஏரோதியாள் யோவான் மீது சினம் கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்.ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர்தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு பிறந்த நாள் விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் ( Salome)உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்களாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக்கொண்டுவருமாறு பணித்தான். அவர்கள் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்துஅச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்றயோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள். இவனே இயேசு கிறிஸ்துவையும் கொன்றவன்.
பிரியமானவர்களே!. யோவானைப்போல இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தில் மெசியா என்றும், இரட்சகர் என்றும் மீட்பர் என்றும், உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டி எனஅறிக்கை செய்வோம். ஆண்டவரின் ஆசிர்வாதம் உங்களை முழுமையாக ஆட்கொள்வதாக.
ஆமென்.
Comments
Post a Comment