ஆண்டவர் வருகிறார் ஆயத்தமாகுக. PREPARATION: THE LORD IS COMING. மீகா:4:1-5. 1 யோவான் 4:7-21. யோவான் 4:21-37.
14உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,“உன்னதத்தில் கடவுளுக்குமாட்சி உரித்தாகுக!உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதியும்,மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, கடவுளைப் புகழ்ந்தார்கள். வாழ்த்தலுக்குறிய இறைவனுக்கு வாழ்த்துக்கள் இல்லை. ஆண்டவரின் பிறப்பு தாழ்ந்த நிலையில் உள்ள ஆட்டிடையர்களுக்கும், அறிவில் உயர்ந்த வானசாஸ்திரர்களுக்கும் நட்சத்திரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆட்டிடையர்கள் முதலில் சென்று பிறந்த இயேசுவை வணங்கினர் வாழ்த்தினார். ஆனால் வான சாஸ்திரி களோ யூதருக்கு அரசனான இயேசு ஏரோதூ அரண்மனையில் தான் பிறந்திருக்க வேண்டும் என தவறுதலாக அரண்மனை சென்றனர் இரண்டு வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளின் பலிக்கும் காரணமானர்.
2. இடம் தேடும் இறைவன்:
இந்த மண்ணுலகில் இயேசு பிறப்பதற்கு இடம் தேடி அலைந்தனர் யோசேப்பும் மரியாளும். இயேசு வரலாற்று நாயகன். உலகத்தின் இரட்ச்சகர் தாழ்மையின் ரூபமாய் மாட்டு தொழுவத்தில் பிறந்தார். இவர் பிறக்கின்ற காலத்தில்தான் ரோமப் பேரரசின்அகஸ்துவராயனால் முதலாம் குடிமதிப்பு (Census)ஏற்படுத்தினர். லூக்கா 2:1-5. (The Romans conducted censuses every five years, calling upon every man and his family to return to his place of birth to be counted in order to keep track of the population.But the first Census was conducted by the Babilonians in 4000 BC.)
Augustus Caesar | |
---|---|
Roman emperor |
கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற மேசியா வந்துகொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் வந்ததும் எங்களுக்கு அனைத்தையும் விளக்குவார்” என்றாள். .26 பிறகு இயேசு, “இப்பொழுது அவர்தான் உன்னோடுபேசிக்கொண்டிருக்கிறார். நான்தான் மேசியா”என்றார்.அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்றுகூறி இருந்தாள் . சமாரிய பெண்தான் முதல் முதலில் "இயேசுவே மேசியா" என அறிவித்தார்.
40 சமாரியர்கள் இயேசுவிடம் சென்றார்கள். இயேசுவை அவர்களோடு தங்கும்படி வேண்டினார்கள். ஆகையால் இயேசு அவர்களோடு இரண்டு நாட்கள்தங்கினார். 41 மேலும் மிகுதியான மக்கள், இயேசு சொன்னவற்றின் மூலம்அவரை நம்பினர். இயேசு தன் வாழ்நாள் முழுவதும் தான் மேசையா என்பதை சொல்லிக் கொள்வதில் போராடிக் கொண்டிருந்தார். இயேசு ஒரு சமூக,சமய போராளி. அன்பானவர்களே மேசையா வருவார் என்பதை நம்பிக்கையோடு இந்த உலகத்தில் வந்த மெய்யான மேசையாவை ஏற்றுக் கொள்வோம். இடம் தேடும் இறைவனுக்கு நம் உள்ளத்திலும் இல்லத்திலும் இடம் தருவோம். நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம்.
4. இயேசு வருகிறார்:
இயேசுவின் பிறப்பு முதல் வருகை. பாவிகளாகிய நம்மை மீட்கும் பொருட்டு இவ்வுலகில் வந்தார். 1. தீமோத்தேயு1:15.இயேசு வருகிறார் என்பது நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் குறிக்கிறது.
இதோ! நான் விரைவில் வருகிறேன் இந்நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர் (தி.வெ. 22:7) எனவே அன்பானவர்களே! இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாகின்ற நாம் கைக் கொள்ள வேண்டியவை;
1. சத்திய வார்த்தையை வாழ்க்கையில் கடை பிடிப்போம் .
2. அன்பை அடிப்படை யாகக்கொண்டு வாழ்வோம்.
3. கிறிஸ்து பிறந்தார் என்பது நற்செய்தி அந்த நற்செய்தியை உலகில் சுமந்து செல்வோம்.
4. நம்முடைய விழா காலங்களில் ஏழைகளையும் நினைவு கொள்வோம்.
5. ஆண்டவராக இயேசு கிறிஸ்து பிற சமயத்தார் மத்தியில்மகிமைப்படும்படியாக நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.
6 உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக.
7. மகிழ்ச்சியையும் அமைதியையும் அதிகமாய் பகிர்ந்து கொடுங்கள்.
8. வேதவாசிப்பும், இறை வேண்டலும் இரு கண்களாக இருக்கட்டும்.
9. நம்முடைய இல்லங்களில் கிருஸ்மஸ்அடையாளங்களான சிறு குடில், கிருஸ்மஸ் மரம், நட்சத்திர விளக்கு, சிறிய அளவில் பரிசுகள், வீட்டிற்கு அலங்காரம் போன்றவை செய்வோம்.
குழந்தைகள் விரும்பும் குழந்தை ஏசுவின் குடில்.
கிருஸ்து பிறப்பின் பாடல்கள் நம் இல்லங்களில் ஒலிக்கட்டும். ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக. அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். ஆமேன்.
Comments
Post a Comment