PROMISE OF IMMANUEL இம்மானூவேல் பற்றிய உறுதிமொழி. ஏசாயா: 7:10-17, திருப்பாடல்: 98. 1 பேதுரு:3:8-16. மத்தேயு 1:18-25.
ஏசையா 7:11-14.
முன்னுரை: ஆண்டவர் ஏசையா தீர்க்கதரிசி மூலமாக ஆகாசுக்கு (Ahaz) அளிக்கப்பட்ட செய்தி என்னவென்றால், 11. நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.12 ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான்.13 அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும்விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஆகாஷ்.
ஆகாஷ் ஊசியாவின் பேரன். யோதாமின் குமாரன். யூத நாட்டின் பன்னிரண்டாவது அரசன் இவன் தன் 20ம்வயதில் யூதேயாவின் அரசனாக்கப்பட்டான். இவன் காலம் கி.மு.732–716. 16 ஆண்டுகள் ஆட்சி செய்தான். தாவீதின் யூதா வம்சத்தை சேர்ந்தவன். மிகக் கொடுமையான மன்னனாக கருதப்பட்டான். ( 2 . சாமுவேல்:16:2) . இவனுடைய பெயர் இயேசுவின் வம்ச வரலாற்றில் (genealogy) மத்தேயு 1:8 ல். கூறப்பட்டுள்ளன.ஆகாசுக்கு எதிராக சிரியா, எப்ராயிமோடு கூட்டணி அமைத்துகிளர்ந்தெழுந்தது. இவர்களை எதிர்க்க பலமற்ற ஆகாஸ் அசீரியாவின் உதவியை நாடினார்.இத்தருணத்தில் ஏசாயா தீர்க்கர் “நீங்கள் கடவுள் மீது நம்பிக்கைகொ ள்ளாவிடில் நிலைநிற்க முடியாது எனவே கடவுளின் உதவியை நாடுங்கள்'' என்றார். இதற்குச் சான்றாக இம்மானுவேல் என்னும் அடையாளத்தை கடவுள் கொடுப்பார் என்றார். ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கும் படியாக ஏசையா கேட்கிறார். பழைய ஏற்பாட்டில்வாக்களிக்கப்பட்ட அனைத்தும் இயேசுவின் வருகையால் புதிய ஏற்பாட்டில்நிறைவேறியது.
2. இம்மானுவேல்:
இம்மானுவேல் என்ற வார்த்தை பைபிளில் மூன்று முறை மட்டுமே தோன்றுகிறது. ஏசாயா 7: 14-ல் உள்ள குறிப்பு தவிர, ஏசாயா 8: 8-ல் காணப்படுகிறது, அது மத்தேயு 1: 23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.இம்மானுவேல் தேவன் நம்மோடு இருக்கிறார். நாம் மற்றவர்களின் இருதயங்களில் நல்லவர்களாக இருக்கின்றோமா? நேசிக்கின்றவராக இருக்கின்றோமா! அன்பாக இருக்கின்றோமா? என்பதை சிந்திக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக என்றார்கள் நாம் அனைத்து மக்களையும் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் கிறிஸ்துமஸின் செய்தியாகும்.ஏனென்றால் ஆண்டவர் அன்பாக இருக்கிறார். அன்பாக இருப்போம், அன்பை கொடுப்போம், அமைதியை தருவோம்.1.பேதுரு: 4:8 எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும்.
ஏசாயா 7: 14-ல் உள்ள தீர்க்கதரிசனத்தை இயேசுவைப் பற்றி 700- ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்: "இம்மானுவேல்’ என்பது அவர் நம்மோடு இருக்கிறார்; நம்மோடு பூமியிலே மனிதனாகப் பிறந்து வாழப்போகிறார் என்பதையும்குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது. இந்த இம்மானுவேலர் எப்பொழுதெல்லாம் நம்முடனே இருக்கிறார்? உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து மத்.28:20ல் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அவர் நம்மோடு எப்போதும் இருக்க விரும்புகிறார். வெளிப்படுத்தின விசேசம்:3:20
Comments
Post a Comment