The Star of Bethelehem. கிழக்கித்ய ஞானிகளின் வருகை. மத்தேயு 2: 1-12.ஏசாயா 60:1-6.

ASYSB011001
விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

அரண்மனை விட்டு வெளியே வந்தவுடன் ஞானிகள் அங்கே நின்ற விண்மீனை கண்டதும்  மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் ஞானிகள் போய்க் குழந்தையையும் அதன் தாய் மரியாளையும் கண்டார்கள்.நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பி போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாக தங்கள் நாடு திரும்பினார்கள்.

1024pxMagi__1_
(The three wise men, or Magi, arrived after Jesus' birth carrying gold, frankincense and myrrh, as captured in this Byzantine mosaic created in 565 A.D.)

கிழக்கில் தோன்றிய நட்சத்திரம் மூன்று ஞானிகளை சரியாக வழிகாட்டியது.

Giotto__Scrovegni__18__Adoration_of_the_Magi
Italian painter Giotto di Bondone witnessed Halley's Comet when it appears.
3.ஞானிகள் செய்த தவறு:
வானத்தையும், வானில் உள்ள விண்மீன்களை படைத்த இறைவனுக்கு நன்றி கடனாக இறைமைந்தன் இப்புவியில் பிறந்தபோது கிழக்கில் தோன்றியது அதிசய விண்மீன். இதைக் கண்ட ஞானிகள், ஒரு அரசர் பிறந்திருக்க வேண்டும், நாம் அந்த அரசரை உடனே சென்று பார்ப்போம் என நட்சத்திரம் காட்டிய வழியில் சென்றுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பெத்லகேம் நகரில் சென்றபோது, தவறுதலாக முடிவு எடுத்து, ஏரோது அரண்மனைக்குச் சென்றனர். அவர்கள் தவறுதலாக அரண்மனை சென்றவுடன் விண்மீன் மறைந்து விட்டது‌. ஏரோது அரண்மனையில் சென்ற ஞானிகள்,  அரசரிடம் யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே என்று கேட்டார்கள். நீங்கள் சென்று குழந்தையை குறித்து திட்டவட்டமாய் கேட்டு எனக்கு அறிவியுங்கள் அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். ஞானிகள் அரண்மனையை விட்டு வெளியே வந்த போது மீண்டும் அந்த நட்சத்திரத்தை கண்டார்கள். அது அவர்கள் முன்பாக நகர்ந்து செல்வதை கண்டு அதைப்பின் தொடர்ந்து இயேசுவாக  குழந்தையை வணங்கினார்கள். அவர்கள் தவறுதலாகஅரண்மனைக்கு சென்றதினாலே எருசலேமில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் செய்த தவறுகள்:
1. அவசரப்பட்டு ஞானிகள் ஏரோது அரண்மனைக்கு சென்றது.
2. நட்சத்திரம் காட்டிய வழியை பின்பற்ற தவறிவிட்டனர்.
3. அரசர், அரசர் மாளிகையில்தான் பிறப்பார் என்ற தவறான கருத்து.
4. எண்ணிக்கை 26:17. தீர்க்கதரிசன வார்த்தையே ஞானிகள்அறிந்திருக்கவில்லை. " நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப்பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிருந்து செங்கோல் ஒன்று எழம்பூம்"
ஏசாயா 60:1-6 ல் உன் ஒளி தோன்றியுள்ளது. உம்மை நோக்கி பிற இனத்தார் வருவார் என்று தீர்க்கன் திட்டவட்டமாக கூறினார். இயேசுவின் பிறப்பு இரு திறத்தாரையும் ஒன்றாக இணைக்கின்றது. கற்றோர் (ஞானிகள்) கல்லாதோர் (மேய்ப்பர்கள்). கிழக்கு என்பது சூரியன் உதிக்கும் திசை. மல்கியா 4:2 இயேசு "நீதியின் சூரியன்" எனவே சூரியன் உதிக்கும் திசையில் கிழக்கில் இருந்து ஞானிகள் இயேசுவை தேடி புறப்பட்டனர். ஞானிகள் இயேசுவுக்கு காணிக்கை கொடுத்த பரிசுகள் ஒன்று 1.தங்கம் : காலங்களில் தங்கம் ராஜாக்களின் பொக்கிஷமாக இருந்தது இயேசு ராஜாதி ராஜா.
2.சாம்பிராணி; இது நறுமணத்தின் அடையாளம். கிறிஸ்தவர்கள்நறுமணமாய் பிறருக்கு ஒளி வீச அழைக்கப்படுகிறது.
3. வெள்ளைப்போளம்; இது ஒரு நறுமணம். இறந்த உடல்களுக்கு பூசுவார்கள். இயேசு கிறிஸ்துவின் இறப்பிலே வெள்ளைப் போளம் அவருக்கு ஊற்றி அடக்க செய்கிறார்கள் என்பதை குறிக்கிறது. மத்தேயு 11:25. அவ் வேளையில் இயேசு தந்தையே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மை போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஞானிகள் ஏரோது குறித்து தெளிவாக தெரிந்திருக்கவில்லை. என்பதை மத்தையு   குறிப்பிடுகிறார். ஏரோது இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கொன்றதினால், ஞானிகள் பல நாட்கள் நட்சத்திரத்தை தொடர்ந்து வந்திருக்கலாம் என்று  கருதலாம். யூதர் அல்லாத புற இனத்தாருக்கும் கடவுள் தன்னைவெளிப்படுத்தினார். அந்த மூவரும் யூதரல்லாத வான சாஸ்திரிகள். கிழக்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள். ஆகாய விரிவுகள் விண்மீன்கள் கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகின்றன. கிறிஸ்மஸ் காலங்களில் வான சாஸ்திரிகள் போல இறைவனை தேடி செல்வோம். கண்டு மகிழ்வோம். உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் உண்டாவதாக. ஆமென்.

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.