இரு பார்வைகள்: Two Views: ( வேறுபட்ட காட்சிகள்) தொடக்க நூல்: 16:13,

பார்வைகள் பல விதம். யாரும் ஒரே மாதிரி பார்ப்பதே இல்லை. ஒவ்வொருவரின் பார்வையும் தனித்துவமாக இருக்கும். சில பார்வை நல்லதாகவும் கெட்டதாகவும் இருக்கும். மனிதனின் செயல்கள் சிந்தனைகள் கடவுளின் பார்வைக்கு பொல்லாதவை என வேதம் கூறுகிறது.
1. காண்கின்ற இறைவன்:     The God of seeing.
சாராளும் ஆகாரும் இரு வேறு கருத்துகளளை உடையவர்கள். சாராள் ஆகாருக்கு அதிகம் தொல்லை கொடுத்தினாள், சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். அவள் பாலைவனத்தில் அலைந்து திரிந்துக் கொண்டுயிருக்கும் பொது, ஆண்டவரின் தூதர் , நீ உன் தலைவியிடம் திரும்பிச்சென்று அவளுக்குப் பணிந்து நட என்கிறார். தூதுவரின் வாழ்த்துக்களுக்குப் பிறகு, " நீர் என்னை காண்கின்ற இறைவன்" என்றழைப்பதை பார்க்கிறோம்.

Abraham's second wife.

Hagar ஆகார் வெளியேற்றப்படும்.
Expulsion of Ishmael and His Mother.png
Expulsion of Ishmael and His Egyptian Mother, by Gustave Doré.


2 கடவுளின் பார்வையில் யோபு: 2:3.9,10.
 அப்போது ஆண்டவர் சாத்தானிடம் என் ஊழியன் யோபுவை பார்த்தாயா ?அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி, தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில், ஒருவனும் இல்லை. காரணம் இன்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராக தூண்டி விட்ட போதிலும் அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்" என்றார்.
ஆனால் யோபுவின் மனைவியோ, இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்துமடிவது தானே?என்றாள். ஆனால் யோபு அவளிடம்,  நீ அறிவற்ற பெண் போல் பேசுகிறாய்! நன்மையை கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப்பெறக் கூடாது என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை. யோபுவின் பார்வையில் கடவுள் உயர்ந்து நிற்கிறார். ஆனால் அவருடைய மனைவியின் பார்வையில் கடவுள் தாழ்ந்து நிற்கிறார்.
3.யோனாவும்ஆண்டவரும்
யோனா 1:2,3. அமித்தாயின் மகனாகிய யோனாவே: "நீ புறப்பட்டு நினிவே, மாநகருக்கு போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோரனருக்கு அறிவி.அவர்கள் செய்யும் தீமைகள் என் முன்னே வந்து குவிகின்றன" என்றார். ஆனால் யோனாவோ ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் தர்சீசுக்கு புறப்பட்டு போனார் ‌‌ (Disobedience). பாவம்கீழ்ப்படிமையின்மையினால் தொடங்கியது. இப்படியாமை ஒரு பாவம்.
யோனா ஏன் நினுவே பட்டணத்திற்கு போகவில்லை என்றால்; நினிவே பட்டணத்தில் வசிக்கும் மக்கள் யூதர்கள் அல்ல. எனவே அவர்கள் அழியட்டும் என அவர்கள் மீது இவன் இறக்கம் காட்ட வில்லை. யோனா 4:10,11. ஆண்டவர் யோனாவை நோக்கி; ஆமணக்கு செடியை குறித்து நீ இவ்வாறு சினம் கொள்வது முறையா? அந்த செடி ஓர் இரவில் முளைத்து மறு இரவில் முற்றும் அழிந்து போனது.  நீ அதற்காக உழைக்கவும் இல்லை அது வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்ககம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள்‌.வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடைகளும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?! என்றார். கடவுளின் இரக்க குணமும், யோனாவின் சினமும் இங்கு வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம். நினிவே மக்கள் கடவுளுக்கு பயந்து;  இன்னும் 40 நாளில் நினிவே அழிக்கப்படும் என்று யோனா அறிவித்தவுடன் அவர்கள் மனம் திரும்பினார்கள்.மாட்ச்சிமை பெற்றார்கள்.
4. மறைநூல் அறிஞரும் பரிசேயரின் பார்வைகள் இயேசுவின் செயல்கள்:
யோவான் 8:3-10.
வேதபாரகர் பரிசேயர் ஒன்று சேர்ந்து விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி , "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று மோசே நமக்கு கொடுத்த திரு சட்டத்தில் உள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? என்று கேட்டனர். (இனணச்சட்டம் 22:22 .) இயேசு அவர்களை நிமிர்ந்து  பார்த்து," உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்" என்றார். இயேசு சொன்னதை கேட்டதும் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள் இறுதியில் இயேசு, "அம்மா அவர்கள் எங்கே?  நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?என்று கேட்டார். அதற்கு அவள், "இல்லை ஐயா"என்றார். இயேசு அவரிடம் "நானும் தீர்ப்பளிக்கவில்லை." நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்" என்றார். ஆண்டவர் பார்ப்பது போல் நாம் பார்க்க வேண்டும்.
ஆண்டவர் 5 அப்பம் இரண்டு மீனை 5000 பேருக்கு மேல் உணவாக அளித்தார். ஆனால் சீடர்களோ; "இவர்களுக்கு உணவு கொடுப்பது என்றால் அதிக பணம் ஆகுமே" என்று சொன்னார்கள். ஆண்டவரின் பார்வை வேறு சீடர்களின் பார்வை வேறு. ஆண்டவர் ஆன்மீக உணவோடு சரீர உணவையும் கொடுத்தார். நம்முடைய பார்வை ஆண்டவருடைய பார்வை போல் அன்பினை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
நாம் யாரையும் குற்றவாளியாக பார்க்கக் கூடாது. மனிதநேயம், அன்பு, இரக்கம் காட்டுதல் இவைகளைஅடிப்படையாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கும் இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.