Why did the Angel select the Shepherds to inform the birth of Christ.? ஏன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மேய்ப்பர்களுக்கு(இடையர்கள்) அறிவிக்கப்பட்டது. லூக்கா2:8-20..தொடக்கநூல்: 46: 31-34. யோவான் 10:1-42.
உடனே பரமசேனையின் திரள் அந்த தூதனுடன் தோன்றிதேவனுக்குமகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள். லூக் 2:13-14 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு உடனே மேய்ப்பர்கள்பெத்லகேமுக்கு விரைந்து வந்து முன்னணையில்கிடத்தியிருந்த பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டஎல்லாவற்றிற்காகவும்தேவனைமகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்.-
மேய்ப்பர்கள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள் இரவும் பகலும் ஆடுகளுடன் இருப்பார்கள். புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீர் அண்டை ஆடுகளை நடத்தி செல்வர். ஆடுகளுக்கு முன்பாக சென்று பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.உயரமான கோலை (தடியை) கையில் எப்போதும் வைத்திருப்பர். கானாமல் போன ஆட்டை தேடி அலைந்து திரிந்து கண்டுபிடிப்பர். மிக எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் கடவுளை காண்பார்கள் எனவே ஆண்டவரின் பிறப்பு ஆட்டிடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
- விடியற்காலையிலேயே மந்தையைத் தொழுவத்திலிருந்து மேய்ச்சல் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு செல்வான், அவற்றிற்கு முன்பாக நடந்துசெல்வான். அங்கே நாள் முழுக்க அவற்றைக் கண்காணித்து, அவற்றில் ஒன்றுகூட வழிவிலகிப் போய்விடாதவாறு பார்த்துக்கொள்வான்; அப்படியே தப்பித்தவறி ஏதோவொன்று தொலைந்துவிட்டதென்றால், முழுமூச்சாக அதைத் தேடிக் கண்டுபிடித்து, திரும்பக் கொண்டுவருவான். . . . பொழுதுசாயும்போது, மந்தையை மீண்டும் தொழுவத்திற்குள் கூட்டிச்சேர்ப்பான், அப்போதுதொழுவத்தின் கதவருகே நின்றுகொண்டு, தன் கோலை குறுக்கே பிடித்தவாறு ஒவ்வொரு ஆடாக அதனடியில் போகவிடுவான், அப்போது எல்லா ஆடுகளும் இருக்கின்றனவா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ள அவற்றைஒவ்வொன்றாக எண்ணுவான். . . . மந்தையைக் காட்டு மிருகங்கள் தாக்காமல் அல்லது கள்வர்கள் திருடாமல்இருப்பதற்காகப் பெரும்பாலும் இரவுநேரங்களில் கண்விழித்திருப்பான்."
- இத்தகையகுணநலன்கள்பெற்றுள்ளமேய்ப்பர்களுக்கு கிருஸ்து பிறப்பின் இறை செய்தி கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ஆட்டிடையர்கள் இறை செய்தி கேட்டவுடன் பெத்லகேம் செல்வோம் வாருங்கள் என்று குழந்தை இயேசுவை கண்டு களித்து கடவுளை துதித்துக்கொண்டு வாழ்த்தி சென்றனர்.அவர்களிடம் கடவுளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து. கடவுளை தேடிச்சென்றனர் கண்டு களித்தனர். நாம் கடவுளை தேடுகிறோமா? கிருஸ்மஸ் காலங்கள் நம்மை முழுமையாக கடவுளை தேடும் நாட்களாக அமையட்டும். நாம் ஆண்டவரின் குறல் கேட்கும் ஆடுகளாய்இருப்போம்.என் ஆடுகள் என் சத்த்திற்கு செவி கொடுக்கும் என ஆண்டவர் நம்புகிறார்.நம்பிக்கையே வாழ்க்கை. கடவுள் உங்களுக்கு கிறிஸ்மஸ் காலத்தின் சமாதானம் சந்தோஷத்தை கொடுப்பாராக! ஆமேன்.
Comments
Post a Comment