ஆகா தென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக் கல்லாய்ிற்று. மத்தேயு 21:42
ஒர் ஊரில் ஒரு ஆலயம் கட்டிகொணடிருந்தனர். அப்போது வேலையாட்கள் நல்ல தரமான செங்கற்களை முதலில் எடுத்து கட்டி கொண்டிருந்தனர். அதில் ஒரு கல் விழுந்து உடைந்து விட்டது. அதை காலால் உதைத்து தள்ளிவிட்டனர். அதற்கு அந்த கல் மிகவும் வருத்தப்பட்டு யாரும் என்னை பயன்படுத்த வில்லை என புளம்பிக் கொண்டிருந்தது.கட்டுமான பனிகள் முடிந்தது. கட்டிடத்தின் முகப்பு வாயலின் உச்சியில் சிலுவை வைக்கும் பணி நடந்துக் கொண்டிருந்து. அப்பொழுது சிறு சிறு கற்களை எடுத்து சிலுவை கட்டும் பணி தொடர்ந்தது, அப்பொழுது தேவையற்றது என தூக்கி எறியப்பட்ட கல்லை எடுத்து சிலுவை கட்ட பயன்படுத்தினர். அழகாக முழுமையாக இருந்த கற்களெள்ளாம் அடித்தளத்திலும் உள்பகுதி யிலும் மறைந்துவிட்டன. ஆனால் சிலுவை மட்டும் உயர்ந்து நின்றது. அது அனைவரும் வணங்கும் சின்னமாக மாறிவிட்டது. ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்கு தலைக் கல்லாயிற்று. அது யாரால் ஆயிற்று, கர்த்தரால் ஆயிற்று. எனவே , பிரியமான தேவ பிள்ளைகளை! 1.பேதுரு 5:6 "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கி யிருங்கள்." சாந்தோம் பேராலயம் (பசிலிக...