ஒருமைப்பாட்டுக்கான அழைப்பு: An Invitation to Integrtation. ( Solidarity) எசே 37:15-23, சங்கீதம் 133. எபேசி 4:1-6,; யோவான் 15 :1-12.

1.ஒருமைப்பாடு என்றால் என்ன?

கணியன் பூங்குன்றனார் என்னும் சங்க கால புலவரின் புறப்பாடல் ஒன்றே நம் தமிழரின் உலக ஒருமைப்பாட்டு ( Integration) கொள்கையை உலகுக்கு பறைசாற்றும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்". என உலகில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய உறவினர்கள் அதேபோல் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நம் ஊர் என்ற ஒருமைப்பாட்டின் சிந்தனையை 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாடி வைத்தார் கணியன் பூங்குன்றனார்.

உலகில் உள்ள மக்கள் யாவரையும் உறவாக என்னும் பண்புடைய பண்டைய தமிழர்களின் உள்ளம் உயர்ந்ததேயாகும். "அனைவரையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டினையே "ஒருமைப்பாடு" எனலாம்."

நம் கடவுள் ஒருமைப்பாட்டின் கடவுள். அவர் அனைவருக்குமான கடவுள் . ஏனேனில் அவர் அனைவரையும் நேசிக்கின்றவர். ஆண்டவரின் படைப்பு அனைவருக்கும் சொந்தமானது. இவ்வுலகில் மனிதன் இயற்கையோடும் சக மனிதர்களோடும், மற்றும் கடவுளோடும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உலகினை படைத்தார். 2.பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் 6ம் நூற்றாண்டில் (கி .மு. 595-573).22 ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்.எருசலேம் நகரின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிருப்பின் போதும் வாழ்ந்தவர். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டோருக்கு மட்டுமன்றி, எருசலேமில் எஞ்சியிருந்தோருக்கும் அவர் இறைவாக்கு உரைத்தார். எசேக்கியேல் ஆழ்ந்த இறைப்பற்றும் கற்பனை வளமும் கொண்டிருந்தார்.

மனுபுத்திரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின் கோலென்று எழுதி,
17 அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.(Integration) Union is strength என்று ஒரே அடிப்படையில் அனைத்து இஸ்ரவேலரும் ஒன்றிணைய  வேண்டும் என்ற இறைவனின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
18 இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்,
19 நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.
Ezekiel the Prophet
Ezekiel by Michelangelo, restored - large.jpg
Ezekiel, as depicted by Michelangalo on the Sidtine Chapel ceiling.

இவரின் முக்கிய நோக்கமே பிரிந்து கிடந்த இஸ்ரவேலரை ஒன்று சேர்த்து ஒரே நாடாக்கி ஒரே அரசின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே. (Solidarity) அவர்கள் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை இரண்டு நாடாக பிரிவதில்லை. "One King under One Nation " என்பது தீர்க்கரின் தீர்க்கதரிசனமாய் இருந்தது. யூதாவின் ( Judah) கீழ் இருக்கின்ற இஸ்ரேல் மக்களும் எப்ராயீம் ( Israel) (யோசேப்பு) கீழ் இருக்கின்ற இஸ்ரேல் மக்களும் இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணைக்க வேண்டும் ஒரே நாடாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று உணர்த்துகின்றார்.

3.என்னில் நிலைத் திருங்கள்:Abide in me: Jesus. யோவான் 15:1-12.

இயேசு கிறிஸ்துவே உண்மையான திராட்சைச் செடி. ( Vine), என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.(vinedresser) அவருடைய சீடர்கள் (Vine branches) திராட்சை கொடிகள்.என திராட்சை செடியை உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.( Metaphor) 

இப்பகுதி தந்தை, மகன் மற்றும் சீடர்களுக்கான ஒருமைப்பாட்டின் உறவை வெளிப்படுத்துகிறது‌ .

1.என்னில் நிலைத்திருங்கள்: (Abide in me - it is a phrase and also a request by God) 

கடவுள் நம்மிடத்தில் வேண்டுவது என்னவெனில்: "என்னில் நிலைத்திருங்கள்." இன்று மட்டுமல்ல என்றுமே அவரோடு இணைந்து  இருத்தல் வேண்டும், இனணந்து செயல்படவும் வேண்டும் ‌. ஏனெனில் அவரால் இன்றி தந்தையிடம் நாம் செல்ல முடியாது. Jesus is the bridge between the Father and the people. அவரிடம் நிலைத்திருந்தால் நாம் விரும்பியதெல்லாம் கிடைக்கும்.

2. நாம் அவ்வாறு கடவுளோடு இணைந்திருந்தால்,   ( It's a conditional sentence) "நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; ( It's a reciprocal) இதுவே கடவுள் நமக்கு கொடுக்கும் நம்பிக்கையின் வாக்குத்தத்தம்.  3.கொடியானது( Branches are disciples) திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், அமைதி, நீடிய பொறுமை, விசுவாசம், தயவு, சாந்தம், நற்குணம், இச்சைய அடக்கம். ( கலாத்தியர் 5 : 22, 23) நம் வாழ்வில் இவைகளை பின்பற்ற வேண்டும். இத்தகைய ஆவின் கனிகளை நம் வாழ்வில் கொடுக்கின்ற போது நாம் ஆண்டவருக்கான சீடர்களாக மாறுகிறோம்.( யோவான் 15:8)

4 என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய இயலாது : 

சங்கீதகாரன் ( 18:29) இவ்வாறு கூறுகிறார் 

"உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்." ஏனேனில் கடவுள் நம்மோடு கூட இருக்கின்ற போது நம்மை பலப்படுத்துகிறார். "பெலப்படுத்துகிற கிறிஸ்துவாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு."என்று நம்பிக்கையும்,  நீயின்றி நான் இல்லை ஐயா . என்ற பணிவு நமக்கு வேண்டும். என்னில் வாரும் ஐயா என்றும் எண்ணில் நிலைத்திரும்.

5. கடவுளோடு இணைந்தி ராதவர்  கொடியைப் போல் வெட்டுண்டு எறியப்பட்டு உலர்ந்து போவார். இவைகள் நெருப்பில் சுட்டெரிக்கப்படும். இவர்களின் எரி நரகத்திற்கு பங்காளர்.

6. அன்பின் கட்டளை:

நான் உங்களிடத்தில் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவருடன் ஒருவர் அன்பு கொண்டிருங்கள் என்ற புதிய கட்டளையை கொடுக்கின்றேன். ஆண்டவரின் ஒருமைப்பாடு தந்தை, மகன் மற்றும் நாம் அனைவரோடும் சேர்ந்திருப்பதே, ஒன்றாய் இருப்பதே இறைவனின் ஒருமைப்பாடு ஆகும்

4. தூய ஆவியின் ஒருமைப்பாடு எபேசி 4 :1-6. Integration of the Holy spirit;

 தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டை நாம் காத்துக் கொள்ளவும் கை கொள்ளவும் முழு மனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி அமைதியுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே. இவைகளைப் பெற்றுக் கொள்ள நாம் முழு முயற்சியுடன் செயல்படுவோம். நம்முடைய சரீரத்தின் அவையங்கள் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றாக செயல்படுகின்றன.(Though the parts of the body are seperated, but they're collectively functioning.) அவ்வாறு ஒன்றாக செயல்பட்டால்தான் நம்மால் உயிர் வாழ முடியும் அவ்வாறே நாம் தந்தை மகன் தூய ஆவியின் அன்பிலே இணைந்து(Integrate) செயல்படுவோம். ஆமேன்.

 
 


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.