மெய்யான பக்திமை: True Devotion. ( Piety)or Pious மீகா 6:1-8. மத்தேயு 6:1-8 யாக்கோபு1:19-27. சங்கீதம் 42. 29-01-2023.

பக்தி என்றால் என்ன?

What is meant by Piety? or Pious or Devotion? கடவுள் மேல் நாம் காண்பிக்கும் உளமார்ந்த அன்பின், மதிப்பின்,மேன்மைத்துவத்தின்,வெளிப்பாடே பக்தி எனப்படும்…According to Oxford Dictionary, Devotion is," great love, care and support for somebody"

For Christians, Piety or pious means "trust and love for God, by following His commandments and faithfully praying to Him for mercy and strength.

1.மீகா தீர்க்கதரிசியின் பக்தி:

எபிரேயர் வேதத்தின்படி மீகா இஸ்ரயேலின் தீர்க்கராக கி.மு 700ம் ஆண்டில் ஏசயா, ஆமோஸ், ஓசியா தீர்க்கர்களின் சம காலத்தவர். இவர் ஜோதம், ஆகாஷ், எசேக்கியா மன்னர்களின் காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தவர்.

Micah the Prophet 

Micah prophet.jpg
Russian Orthodox icon of the Prophet Micah, 18th-century.
மீகா தீர்க்கக்கர் எருசலேம், சமரியா குறித்தும், அதன் அழிவு மற்றும் சீரமைப்பையும் குறித்தும் தீர்க்கமாய் உரைத்தார். இஸ்ரவேலரின் அநீதி, நேர்மையற்ற வாழ்க்கை, மற்றும் விக்கிரக வழிபாடுகளை கண்டித்தார்.
மெய்யான பக்தி:
மீகா 6:8ல்
"மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித் திருக்கிறார்; நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகிதது, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் கர்த்தர் உன்னிடத்தில்கேட்கிறார்.
மூன்று காரியங்களளை கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
 1. நன்மையான செயல்கள்.
2. இரக்கத்தை தேடுவது.
3.  மனதாழ்மையாக நடப்பது. இவைகள் மெய்யான பக்திக்கிற்கான அடையாளங்கள்.
இஸ்ரவேலர் கடவுளை மறந்து போவதும்,  கடவுள் தண்டிப்பதும், தீர்க்கர்கள் எச்சரிப்பதும் தொடர்ந்து வரும் வரலாறு. 430 ஆண்டுகளாக எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரேவேளர்களை கடவுள் மீட்டு கானான் என்ற தேசத்தில் குடியமர்த் தினார்.ஆனால் அவர்கள் வணங்கா கழுத்தினர், கடவுளின் வார்த்தையை மீறினார்கள். இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் 40 ஆண்டு காலம் ஆண்டவரால் வழிநடத்தப்பட்டார்கள் ஆனால் அவர்கள் மண்ணாவை புசித்தும் ஆண்டவரை மறந்தார்கள். எனவே அவர்கள் கானானுக்குள் பிரவேசிக்கவே இல்லை. எண்ணாகமம் அதிகாரம்: 26ல் 6,00,000 ஆண்கள் கானானுக்கு சென்றனர். பெண்களும், குழந்தை களும் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. எகிப்திற்கும் கானானுக்கும் இடையே உள்ள தூரம் 847 கி.மி.  நடந்து சென்றால் 11 நாளில் செல்லலாம். ஆனால் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் கடவுள் அவர்களின் கீழ்படியாமை யின்மை, ஆண்டவரின் வாக்குறுதி மீது( Promised Land)  நம்பிக்கையற்ற தன்மையினால்தான் அளைய வைத்தார்.
திருப்பாடல் 95:10,11.
"நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளைஅறியாதவர்கள்.  11எனவே, நான் சினமுற்று, ‛நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன்.

2. உபாகமம்:6:4,5.பக்தி என்பது கடவுள் மீதும் மனிதர் மீதும் வைக்கும் அன்பே பக்தியாகும்:

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.என்பதும்; உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக என்ற வார்த்தையே மெய் பக்த்தியின்வெளிப்பாடு. "Devotion to God should reflect love toward mankind."

3. இயேசு காட்டும் பக்தி: மத்தேயு :6: 1-8. 

1.நீ தர்மம் செய்யும் போது மனிதர் பார்க்கும் படியாகவும், புகழ்ச்சிக்காகவும், பேருக்காகவும், பெருமைப் படும்படியாகவும் வெளியரங்கமாய் செய்யாதே!.உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.

2. நீ இறைவேண்டல் செய்யும்போது மக்கள் பார்க்கும் படியாக செய்யாதே! மறைவாக விண்ணப்பம் செய், நீ நோன்பில் இருப்பதை யாரும் தெரியாதபடி பார்த்துக்கொள். இதை காணும் உன் தந்தையும் உனக்கு நல் பதில் அளிப்பார்.

3. இறைவேண்டல் செய்யும்போது வீணான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நம் தந்தைக்குத் தெரியும் நமக்கு எது தேவை என்று. ஏற்ற காலத்தில் நமக்கு தேவையானதை கொடுப்பார்‌  நாம் செய்ய வேண்டியது முதலாவது நாம் இறையரசையும் அதன் நீதியைத் தேடுவது தான்.தர்மம் செய்வதிலும், இறைவேண்டல் செய்யும்போதும், உண்ணா நோன்பு இருக்கும் போதும், கடவுளுக்கு பிரியமாக இவைகளை செய்யவேண்டும். இவைகளே மெய்யான இறை பக்தியாகும்.

4. யாக்கோபு 1:19-27. கிருஸ்தவர்கள் எப்படி இருக்க வேண்டும்:

(மரபுக் கருத்துப்படி யாக்கோபு (James) இயேசுவின் சகோதரன்; எருசலேம் திருச்சபையின் தலைவர்; பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9,12; அப் 15:13).

எருசலேம் சபையில் அவர் ஒரு மேய்ப்பனாக இருந்தார்; அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. கேபாவும் யோவானும் சபையின் ‘தூண்களாக’ ( Pillars) கருதப்பட்டனர்; அவர்களோடு ‘கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபும்’ ஒரு தூணாக இருந்தார் என்று பவுல் சொல்கிறார். (கலா. 1:19; 2:9)

  கிருஸ்தவர்கள் கொடிய துர்க்குணத்தை ஒழித்துவிடவேண்டும். சாந்த குணம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்;ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தேயு 5:8) என வேதம் கூறுகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவரும் நல்ல சமாரியானாக இருக்க வேண்டும். 

யாக்கோபுகூறும் மெய்யான பக்தி:

என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், ( patience) கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமை யுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாத படிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தி யுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. சுய பக்தி ( Self Piet) யாருக்கும் பயனளிக்காது. அன்பானவர்களே ! கடவுள் நமக்கு அளிக்கும் இறையரசு , நமது பக்தியின் அளவுகோல் படி கொடுப்பதில்லை. "இந்த சிறியோரில் ஒருவருக்கு எதை செய்தீர்களோ அது எனக்கே செய்தீர்கள் என்ற தர்மத்தின் அடிப்படையில்    ( மத்தேயு 25:35-40) விண்ணரசு கொடுக்க ப்படுகிறது.எனவே, பிரியமானவர்களே! நம்முடைய பக்தி கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் நன்மையானதாக இருக்க வேண்டும். மெய்யான பக்தி என்பது இறைவன் மீதும் மக்கள் மீதும் அன்பு கூறுவது மெய்யான பக்தியாகும்.


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.