தீர்க்கதரிசி ஏசாயா - (சு)1904 இல்பிரசுரிக்கப்பட்ட விவிலிய அட்டை
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பாடுகள், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்களை மரண தீர்க்கதரிசனமாக 700 ஆண்டுகளுக்கு முன்பாக உறுதியாக கூறினார். இவர் மன்னன் மனேசேவால் கொள்ளப்பட்டார். யூதர்களின் நீதி நியாயமற்ற செயல்களைகண்டித்தார். இருண்ட எருசலேம்: நீங்கள் செய்த குற்றங்கள்தானே உங்கள் கடவுளைவிட்டு உங்களைப் பிரித்துவிட்டன? நீங்கள் செய்த பாவங்களால்தானே அவர் உங்கள் ஜெபங்களைக்கேட்காமல், அவருடைய முகத்தை உங்களிடமிருந்து மறைத்துக்கொண்டார்? என 59ம் அதிகாரத்தில்; "அதனால்தான், நியாயம் எங்களைவிட்டுத் தூரமாக இருக்கிறது.நீதி எங்களை நெருங்குவதே இல்லை.நாங்கள் ஒளிக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் இருளைத்தான் பார்க்கிறோம்.குருடர்களைப் போலத் தடவித் தடவி சுவரைத் தேடுகிறோம்.பார்வை இல்லாதவர்களைப் போலத் தட்டுத்தடுமாறுகிறோம்.ராத்திரியில் தடுக்கி விழுவதைப் போலப் பட்டப்பகலிலும் தடுக்கி விழுகிறோம். தலைநகர் டெல்லியில் ஒரு இளம் பெண்ணை 13 கி.மி. தூரத்திற்கு 5 வாலிபர்கள் காரிலியே இழுத்து சென்று கொன்ற நிகழ்ச்சி நம் உள்ளத்தை நடுங்க வைக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தலித் மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த செயல் நாம் எவ்வளவு மனித தன்மையற்றவர்களாய் இருக்கிறோம் என இந்த சமுதாயத்தின் மீது அச்சம், கோபம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலைதான் அன்னாளில் எருசலேம் நகரும் இருந்து. எனவே இருளில் இருந்து மக்களுக்கு ஏசாயா 60:1ல்
இயேசுவின் பார்வையில் எருசலேம்: மாற்று 11: 15-17. இயேசு தன் சீடர்களுடன் எருசலேம் தேவாலயத்தில் நுழைந்து அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தி " என் இல்லம் "மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய "இறைவேண்டலின் வீடு" என அழைக்கப்படும். என்று கற்பித்தார். மற்றும் இதை " கள்வர் குகையாக்கிவிட்டிர்கள்" ( The Den of Thieves).லூக்கா 19:41-44 ல் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார். (Jesus wept)இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாடாதா? ஆனால் ஒரு காலம் வரும் , உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகை யிடுவார்கள்; உன்னையும் உன் மக்களையும் அழித்து ( தானி9:27) தரைமட்டமாக்குவார்கள். உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனேனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை." என்றார். இந்த தீர்க்கதரிசனம் கி.பி. 70 ஆண்டு Titus Caesar எருசலேமை தரைமட்டமாக்கிய தேவாலயத்தை ஒரு கல்மீது ஒரு கல் இல்லாதபடி செய்தான். எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. என நம்பிக்கை ஊட்டுகிறார். இவ்விடத்தில் நாம் நினைவில் இருக்கவேண்டிய வார்த்தை எருசலேமின் எதிர்காலத்தை தீர்க்கமாக கூறுகிறார்.அக்காலத்தில் எருசலேம் சண்டைகளாலும், கொடுமைகளாலும் எதிரிகளாலும் சூழப்பட்டு இருளில் மூழ்கிய நகராய் இருந்தது. இக்கால கட்டத்தில் தான் புதுவாழ்வு தருகின்ற வார்த்தையாய் அமைந்தது முதலாம் வார்த்தை ஒளி வந்தது எழும்பி பிரகாசி. இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும் என நம்பிக்கையூட்டுகிறார். ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.6ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து,கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.( இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் வான சாஸ்திரிகள் பொன், வெள்ளி, தூபவர்கத்தையும் படைத்தார்கள்)(மத்தேயு 2:11) ஏசாயா 9:2 "இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." என் இஸ்ரவேலருக்கு நம்பிக்கை அளிக்கின்றன வார்த்தை "எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது" என தீர்க்கர் கூறுகிறார். இயேசுகிருஸ்துவே ,' நான் உலகத்தில் இருக்கேயில் உலகிற்கு ஒளியாய்
இருக்கிறேன்" (யோவான் 9:5). இயேசு கிருஸ்துவே உலகின் ஒளி. என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைவான்’ என்றார். நம்மை பார்த்து நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” (மத்தேயு 5:14).என நம்மை ஒளியா இருக்க விரும்புகிறார். ஏசாயா 9:2ல் இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; அது யார் என்றால் இயேசுவை குறிக்கிறது. இருளாகிய பாவத்தை மன்னிக்கும் வல்லமை, அதிகாரம் உள்ளவர் இயேசு கிருஸ்த ஒருவரே. அவர் ஒருவரே மரணம் இல்லாதவர். மரணத்தை வென்றவர். 2. நூற்றுக்கு அதிபதியின் பனிவு, தாழ்மை அன்புறுக்கம்: மத்தேயு 8: 5-13: "இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். 6“ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். 7.இயேசு அவரிடம், 'நான் வந்து அவனைக் குணமாக்குவேன்”என்றார். 8நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர்என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.9நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். 10இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. 11கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்.இதுவே அனைவருக்குமான இறைவனின் வெளிப்பாடாகும். நூற்றுக்கு அதிபதி ஒரு கிரேக்கன். ஆனால் யூதரை காட்டிலும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தான். 12.வின்னரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்”என்றார்.13பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்”என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். நாம் நூற்றுவரிடம் கண்ட நற்பண்புகள்; 1. தாழ்மை: தான் அதிகாரத்தில் இருந்தும் தன் வீட்டிற்கு ஆண்டவர் வர தான் தகுதி இல்லை என தன்னை தாழ்த்துகிறார். 2. நம்பிக்கை: ஆண்டவர் நிச்சயம் குணப்படுத்துவார் அவர் மெய்யாகவே கடவுள். என நூற்றுவர் நம்பினார். சாட்சி: இவரே இயேசுவின் சிலுவை மரணத்தில்" மெய்யாகவே இவர் இறைவனின் மைந்தன்" என சாட்சி பகிர்ந்தார்.
எபிரெயர் 1:1-2, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.”கடவுள் பல நிலைகளில் மக்களோடு தொடர்புகொண்டார்; 1. ஆதாம், மோசேவுடன் நேரிடையாக பேசினார்.
2. இறை தூதுவர்கள் மூலம்( Angels) 3. கனவில் தோன்றி பேசுவது,(Dresms ) 4. தீர்க்கர்கள்மூலமாக (Prophets) 5.. வேத வார்த்தைகள் மூலமாக கடவுள் மக்களோடு பேசினார். இதன்மூலம் கடவுளின் வெளிப்பாடு அனைவருக்குமானது என வெளிப்படுகிறது. இவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி. பூமியும் அதன் மக்களும் கர்த்தருடையவர்கள். சங்கீதம் 145:9 கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது. Our God is Universal God . எனவே கடவுள் அனைவருக்குமானவர். அனேகர், கிழக்கிலும், மேற்கிலிருந்துமிருந்து வந்து வின்னரசில் பந்தியிருப்பர். ஆனால் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாத வின்னரசின் மக்களோ புறம்பான இருளில் (Hell) தள்ளப்படுவர். |
Comments
Post a Comment