Ecumenical Sunday. பற்றுறுதியுடன் செயல்பாட்டில் ஒருங்கினணப்பு. Unity in Faith & Action. யோசுவா 3:9-17, சங்கீதம் 53, அப் 9:20-25 மாற்கு 1:21-34

What is Ecumenical Sunday? திருச்சபை ஞாயிறு என்றால் என்ன?
கிறித்தவ உலக முழுமைக்கும் உரிய ஞாயிறு ‌‌. இது உலகளாவிய கிறிஸ்துவ ஒற்றுமையை குறிக்கின்றது. உ.ம். தென்னிந்திய திருச்சபை. யோவான் 17:21.
 The Arch of Covenant: இஸ்ரவேலர் யோர்தானை  கடத்தல்: யோசுவா 3;9-17. யோசுவா இஸ்ரவேல் மக்களை பார்த்து; 11ம் வார்த்தை, இதோ உலகனைத்திற்குமான ஆண்டவரின் ( Universal) உடன்படிக்கைப் பெட்டியானது , உங்கள் முன் யோர்தானை கடக்கிறது. பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார்.17இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள்( லேவி யர்கள்) யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.உடன்படிக்கைப்பெட்டி அவர்களை வழி நடத்தியது. யோசுவா இஸ்ரேல் மக்களைப் பார்த்து," இதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்” என்றார்.  தங்கள் முற்பிதாக்களுக்கு ஆண்டவர் செங்கடலை பிளந்து எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்டார்.  தங்கள் கடவுள் மீது இஸ்ரவேலர் அளவற்ற பற்றுறுதி கொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த அற்புதங்களை நிகழ்த்தினார். உடன்படிக்கை பெட்டி இஸ்ரேவேளர்களின் காக்கும் கடவுள் என்ற நம்பிக்கை இருந்து.
2. பற்றுறுதியுடன் செயல்பாட்டில் ஒன்றினைத்தல்: Unity in Faith:. மாற்கு 1: 21-34
நம் நற்செய்தியில் ( Gospels), நம்முடைய பற்றுறுதி (Faith) தந்தை, மகன், தூய ஆவி ரோடும் மற்றும் சக மனிதர்தளோடும் ஒன்றுபட்டு இருப்பதை கூறுகிறது. இயேசு ஓய்வு நாளில் கப்பர்நகூம் ( கிறித்தவ விவிலியத்தின்  புதிய ஏற்பாட்டில், குறிப்பாக லூக்கா நற்செய்தியில் கப்பர்நாகூம் என்னும் ஊர் இயேசுவின் சீடர்களாயிருந்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் வரிதண்டுபவரான மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் என்று குறிக்கப்படுகிறது. இங்கே இயேசுவின் வீடும் இருந்திருக்கலாம் (காண்க: மத்தேயு 4:13).

Capernaum
Sites of Christianity in the Galillee - Ruins of the ancient Great Synagogue at Capernaum (or Kfar Nahum) on the shore of the Lake of Galilee, Northern Israel.jpg
Capernaum synagogue

லூக்கா நற்செய்திப்படி, இயேசு கப்பர்நாகுமில் இருந்த யூத தொழுகைக்கூடத்தில் ஓய்வுநாளன்று கற்பித்தார். தொடர்ந்து, இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு நலமளித்தார். அதன்பின், இயேசு பேதுருவின் வீட்டுக்குச் சென்று அங்கு பேதுருவின் மாமியார் காய்ச்சலால் அவதியுற்றதைக் கண்டு, அவரைக் குணப்படுத்தினார் (காண்க: லூக்கா 4:31-44).
கப்பர்நாகுமில் நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் உரோமைப் படைத்தலைவர் ஒருவர் இயேசுவை அணுகித் தம் வேலையாள் ஒருவர் முடக்குவாதத்தால் பீடிக்கப்பட்டதை எடுத்துக்க் கூறி, இயேசுவின் துணையை நாடுகின்றார். இயேசு அவரை நோக்கி, "நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்" என்று கூற, அந்நேரமே அவ்வேலையாள் குணமடைகின்றார். 
ஒருநாள் இயேசு கப்பர்நாகுமில் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தபோது முடக்குவாதமுற்ற ஒருவரை அவரிடம் கொண்டுவர சிலர் முயன்றார்கள். பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்ததால் அவர்கள் வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு இயேசுவின்முன் இறக்கவேண்டியதாயிற்று. இயேசு அம்மனிதருக்குக் குணமளித்து, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்று கூறினார், இந்த அற்புதத்தின் வெளிப்பாடு முடக்குவாத மனிதனை ஒன்று சேர்ந்து (Unity) தூக்கி வந்த அந்த நான்கு பேரின் பற்றுறுதி அவனுக்கு விடுதலை கிடைத்தது.
கப்பர்நாகும் ஊரில் இயேசு பல முறை மக்களுக்குக் கற்பித்து, பலரைக் குணமாக்கினார். இயேசுவின் பணி மையம் போல கப்பர்நாகும் விளங்கியது. கானா என்னும் ஊரில் திருமணத்தில் கலந்துகொண்ட பிறகு இயேசுவும் அவருடைய தாயும் சீடர்களும் கப்பர்நாகும் சென்று தங்கியிருந்தனர் 
மற்றொரு முறை, கப்பர்நகூமில் இயேசு மக்களுக்கு அதிசயமான விதத்தில் அப்பங்களைப் பலுகச் செய்து உணவளித்ததும் அவர்கள் மீண்டும் அவரைத் தேடிக் குவிந்தனர். அப்போது அவர், "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் உணவுக்காகவே உழையுங்கள்...வாழ்வுதரும் உணவு நானே" I am the Bread. என்றார் (காண்க: யோவான் 6:27,35.
இயேசு முதன்முதலாகத் தம் சீடர்களாக அழைத்த சீமோன் பேதுரு மற்றும் அவர்தம் உடன்பிறப்பாகிய அந்திரேயா ஆகியோரின் வீடு கப்பர்நாகுமில் இருந்தது இயேசு அவ்வூரைத் தம் பணி மையமாகத் தேர்ந்தெடுத்தார்.)

 ஆண்டவரின் போதனைகள் அதிகாரம் ( Authority) உடையதாக இருந்தது. இதுவரையிலும் அத்தகைய பிரசங்கத்தை அவர்கள் கேட்டதில்லை. ஆண்டவரின் பிரசங்கம், போதனை அவர்கள் உள்ளத்தை தொட்டது. ஆண்டவரின் வார்த்தை உள்ளத்தை உடைக்கும் சம்மட்டி.                 ( சுத்தியல்). பல நூறு ஆண்டுகளாய் மெசியா வருவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஆண்டவருடைய கிருபை நிறைந்த அருள் வார்த்தை அவர்களுக்கு ஆறுதல் அளித்தது,  மகிழ்ச்சி அளித்தது, மன மாற்றத்தை கொடுத்தது. ஆண்டவரின் அருள் வார்த்தை கேட்ட மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.
இயேசு தீய ஆவியை விரட்டல்:
 அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். 
அந்த தீய ஆவி, "நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று கத்தியது.  இயேசு உடனே
"வாயை மூடு; இவரை விட்டு வெளியோ போ" என்று இயேசு அதனை அதட்டினார். 
26 அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. 
இயேசுவின் வார்த்தையில் அதிகாரம் இருந்தது வல்லமை இருந்தது மகத்துவம் இருந்தது. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, "இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!" என்று தங்களிடையே பேசிக் கொண்டனர். தீய‌ ஆவிகள் இயேசு கிறிஸ்து யார் என்பதை யூத மக்களை காட்டிலும் அதிகமாக தெரிந்திருந்தனர். அவர் தேவகுமாரன் என்பதை பறை சாற்றின.
அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது. இயேசு  தான் பிரபல மாவதை விரும்பவில்லை. 
3. பவுல் அடிகளார்;  அப்:9:20-25.கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் ( The Apostle of Gentiles) என அழைக்கப்படுகிறார். எவ்வளவுக்கெவ்வளவு கிருஸ்தவர்களை துன்புருத்தினாரோ, அவ்வளவுக்கெவ்வளவு ஆண்டவருடைய வார்த்தையை உலகில் விதைத்தார். திருச்சபையை உருவாக்கினார். அசைக்கமுடியாத பற்றுருதியை ஆண் டவர்மீது வைத்திருந்தார்.
எபிரேய.11:1
நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.  திருச்சபை மற்றும் இறை பணியாளர்கள் ஆண்டவர்மீது உறுதியான பற்றுறுதியாளர்களாய் இயேசுவை முன்மாதிரி கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பவுலின் செயல்பாடு நற்செய்தியை பரப்புவதை முதன்மையாக கொண்டிருந்தார். நற்செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்கு "ஐயோ' என்றுரைத்தார்.பவுல் ஆண்டவரின் நாமத்தை அறிவிக்கிறதற்காக ஆண்டவர் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறார்.( Chosen Vessel).  நாம் ஆண்டவரால் தெரிந்து கொள்ளுப்பட்டவர் எனில் நற்செய்தியை அறிவிப்பது நம் தலையாய கடமையாய்  இருக்கிறது. நற்செய்தியைஅறிவிக்காமல் ஆண்டவருக்கு பிரியமான கிருஸ்தவனாய் இருக்கவே முடியாது.
நம் உடலின் அவயங்கள் தனித்தனியாக செயல்பட்டாலும் அவைகள் ஒன்றிணைந்து மூளையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. திருச்சபைகள் பல இருப்பினும் கிறிஸ்துவை முன்னிறுத்தி அன்பின் நிமித்தமாக உலக மக்களுக்கு சேவை செய்வதை நாம் ஆண்டவர் மீது வைத்திருக்கின்ற பற்று உறுதியை வெளிப்படுத்து கிறோம்.நம் நம்பிக்கை கற்பாறையின் மீது கட்டிய வீட்டிற்கு ஒப்பிடப் படுகிறது.இக் காலத்தில் நம் பற்றுறுதியை செயல் வடிவில் காட்டவேண்டியது மிக அவசியமாகிறது. 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிதாவினுடைய அன்பு தூய ஆவியின் அரவணைப்பு நம் அனைவரிடம் கூட இன்றும் என்றும் சதா காலங்களும் நீடித்து நிலைத்து இருப்பதாக ஆமென்.

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.