படைப்பினை முழுமை யாக்கும் ஓய்வுநாள். ஏசா 65:17-25 சங்கீதம்:8 எபி:4:2-13, மாற்கு 2:23-28.
1.ஓய்வு நாள் இறைவனின் கட்டளை:
யூத வாரத்தின் ஏழாவது நாள். (வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் நேரத்திலிருந்து சனிக்கிழமை சூரியன் மறையும்வரை) ஓய்வுநாள் எனப்படும்.விடுதலைப் பயணம் 34:28 இல் மூன்றாவது நான்காவது கட்டளைகள் "ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப் பிடிப்பதில் கருத்தாயிரு." மற்றும் ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்."ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்." எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால் நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார். கட்டளைகளுள் முதன்மையானது எது?" என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இனை சட்டம் (உபாகம்)(6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக் குரியது.ஆலயத்தில் செய்யப்பட்ட குருத்துவச் சேவைகளைத் தவிர, ஓய்வுநாளில் வேறெந்த வேலையையும் செய்ய யாரும் அனுமதிக்கப் படவில்லை.
(Sunday), which is recognized as the Christian Sabbath in first-day Sabbatarian denominations.

The Ten Commandments on a monument on the grounds of the Texas State Capitol. The fourth commandment listed is "Remember the Sabbath day, to keep it holy"
ஓய்வுநாளை ஏன் "ஆசரிக்கவேண்டும்" ஒவ்வொரு ஏழு நாட்களில் ஒரு நாள், இஸ்ரவேலர்கள் தங்கள் கடின உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும், Rest is highly needed for every human being . அதே நாளில் தங்கள் வேலைக்காரர் களுக்கும் மிருகங்கு களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். இங்கு இறைவனின் அன்பான இரக்க குணத்தை காட்டுகிறது. தங்களிடத்தில் இருக்கும் மிருக ஜீவன்களும் வேலை ஆட்களுக்கும்(slaves and servants) ஓய்வு தேவை என்பதை கடவுள் கட்டளையாக கொடுக் கின்றார். இல்லை யென்றால் எல்லா நாட்களிலும் வேலை யாட்களையும் மிருக ஜீவன்களையும் வேலை என்று சொல்லி இந்த மக்கள் வாட்டி எடுத்து இருப்பார்கள். மக்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் முழுவதும் நிறுத்த வேண்டும். சாபத் நாள் என்பது, மக்கள் தங்கள் வேலைகளிலிருந்து ஓய்வெடுக்கவும், ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு புதிதாகத் தொடங்கவும் சாபத் நாள் நிறுவப்பட்டது. Refreshments for re-energising to work for other six days.
படைப்பு Creation :
உலகில் உள்ள உயிரினங்கள், வின், மண் அனைத்தையும் படைத்தவர் நம் இறைவன். கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரி னங்களை இறைவன் படைத்துள்ளார். ஆனால் இறைவனின் படைப்பில் மிகவும் அற்புதமானது மனிதன். வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் மனிதனை இறைவன் படைத்துள்ளார். மனிதனை தன்னுடைய சாயலாக படைத்தார் அவனை ஆணும் பெண்ணுமாக படைத்தார். இந்த உலகத்தை பாது காக்கவும் பண்படுத்தவும் உரிமைகளை கொடுத்தார். படைப்பின் பணி தொடர்ந்துக் கொண்டே ருக்கிறது. Creation is a contineous process.
பரிணாம விதியின்படி The Law of Evolution, ஓர் உயிரினம் புவியின் தகவமைப்புக்கு ஏற்ப தன்னைப் படிப்படியாக மாற்றிக் கொள்வதையே (adaptation) பரிணாமம் என்கிறோம். படைப்பும் பரிணாமமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது. Interalated Related. பரிணாம வளர்ச்சியிலும் படைப்பிலும் இறைவன் செயல்படுகிறார்.உலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். நாம் இருந்தாலும் இல்லா விட்டாலும் பெரிய மாற்றங்கள் இருக்காது. விடியலும் அஸ்தமனமும் யாருக்கும் காத்துக் கொண்டு இருப்ப தில்லையே.
2. ஏசாயா தீர்க்கதரிசியின் வாக்குறுதி: 65:17-25.
நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் படைப்பேன். ஜனங்கள் கடந்த காலத்தை நினைக்கமாட்டார்கள். அவற்றில் எதையும் அவர்கள் நினைக்க மாட்டார்கள். ஏன் புதிய வானம் புதிய பூமியை படைக்கின்ற அவசியம். கடவுள் முதலாம் படைப்பை
முற்றிலும் அழிக்கிறார். நோவாவின் குடும்பமும் ஒருசில விலங்குகள் தவிர மற்றவற்றை ஊழி வெள்ளத்தால் அழிக்கிறார். (40 நாட்கள் பெறு மழை) மண்ணுலகு சீர்கெட்டு, இப்பூவுலகம் வன் முறை யால் நிறைந்திருந்தது. எனவே பாவ பூமியை அழிக்கிறார். எனவே புதிய வானம் புதிய பூமியை படைக்கும் அவசியம் ஏன் ஏற்படுகிறது. இஸ்ரவேலரே நீங்கள் கர்த்தரைவிட்டு விலகினீர்கள். எனவே, நீங்கள் தண்டிக்கப் படுவீர்கள். நீங்கள் எனது பரிசுத்தமான மலையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் அதிர்ஷ்டத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தீர்கள். நீங்கள் விதி என்னும் பொய்த் தெய்வத்தின் முன்பு உணவு மற்றும் பான பலிகளை படைத்து, அதைச் சார்ந்து இருக்கி றீர்கள். எனவே உங்களை அழிப்பேன் என்கிறார்.
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. (ஏசாயா 58:13,14)
இயேசு மத்தேயு 24:37ல் நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும் என்கிறார். எனவே புதிய வானம் புதிய பூமி என்கிற தீர்க்கதரிசனம் இவ்வுலகில் இறைவனின் வின்னரசு அமையும் போதுதான் இந்த தீர்க்கதரிசனம் நிறை வேறும். "Amnivores can become Herbivores " when the Kingdom God establishes on this earth .
3 இயேசுவின் ஓய்வுநாள்:
மாற்கு 2:23:28.ஓய்வுநாளில் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் பசிக்காக கதிர்களை கொய்து சாப்பிட்டதை அவர்கள் வேலை செய்தார்கள் என்று யூதர்கள் குற்றம்சாட்டினார்கள். அதற்கு இயேசு இரண்டு உதாரணங்களை வேதத்திலிருந்து எடுத்து கூறுகிறார்.
1 தாவீது ஓய்வு நாளில் ஆசாரியனிடத்தில் போய் தேவ சமூகத்து அப்பத்தை வாங்கி அவரும் அவரோடு இருந்தவர்களும் புசித்த போதும் அவர்கள் குற்ற மில்லாமல் இருக்கிறார்கள்.
2.ஓய்வுநாட்களில் ஆசாரி யர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல் ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் அவர்கள் குற்றமில்லா திருக்கிறார்கள் என்றார். The fault finders will find faults even in Paradise.இயேசு கிறிஸ்து ஓய்வுநாளுக்கும் கர்த்தராக இருக்கிறார்.மத்தேயு 12:8 .
இஸ்ரவேலர் ஓய்வு நாள் பிரமாணத்தை வைத்து கொண்டு இரக்கமில்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத் தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்ன தென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை (சீடர்கள்) நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். என்றார். ஓய்வு நாளில் நன்மை செய்வதால் தீமை செய்வதா என கேட்டு நன்மை செய்பவராய் ஆண்டவர் சுற்றித் திரிந்தார்.
(Then Jesus said to them, “The Sabbath was made for man, not man for the Sabbath. So the Son of Man is Lord even of the Sabbath.”) ஓய்வு நாளில் ஆலயம் சென்று யாவரோடும் இணைந்து ஆராதிப்பதே "சரியான ஆராதனை".எந்த ஒன்றிற்காகவும் ஆலய ஆராதனைகளைத் தவறவிடுதல் நல்லதல்ல.
ஓய்வுநாளை நியமித்த கர்த்தர் அந்நாளுக்கென்று மனிதர் ஏற்படுத்திய பாரம்பரியங்களை மாற்றுவதற்கும், நீக்குவதற்கும் அதிகாரம் உடையவராயிருக்கிறார் – கொலோ 1:16 என மக்களளுக்கான நன்மை செய்யும் நாளாக மாற்றினார்.
லூக்கா 14 : 3 -6 “இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் நீர்க்கோவை (Ascites - Swelling in the abdomen) பிடித்த மனிதனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதை யாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கி விடானோ என்றார்.”
யோவான் 5:1-18
பெதஸ்தா என்ற குளத்தின் அருகில் 38 வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷனை இயேசு கண்டு , அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டு, இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. 38 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த ஒருவனை யாரும் அவனை அந்த குளத்தில் கொண்டு செல்ல முன்வரவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவோ அவனை பார்த்தவுடன் அந்த ஓய்வு நாளில் நன்மை செய்கின்ற ஆண்டவர் அவனை குணப்படுத்தினார்.
அன்புக்குரிய கிறிஸ்துவின் பிள்ளைகளே! படைப்பினை முழுமையாக்கும் முக்கிய நிகழ்வாகிய ஓய்வு நாளை ஆண்டவரை ஆராதிக்கின்ற நாளாகவும் மற்றும் ஆண்டவர் செய்த அறப்பணியாக அன்பின் நற்பணியை செயலாற்றுவதே ஓய்வு நாளுக்கு நாம் அளிக்கும் மதிப்பும் மரியாதையாகும். ஆண்டவர் நம்மோடு கூட இருந்து அவருடைய பரிசுத்த ஓய்வு நாளை ஆராதிக்க அருள் புரிவாராக. அலங்கார வாசலில் கோவிலுக்கு செல்வோம். இது கர்த்தர் உண்டு பன்னின நாள் இதிலே ஆவியில் களிகூர்ந்து மகிழக்கடவோம். ஆமென்.
Comments
Post a Comment