Ash Wednesday. சாம்பல் புதன். சிலுவை: மனந்திரும்புதலுக்கு ஓர் அழைப்பு, CROSS: A call to Repentance. ஏசாயா 1:16-20.. 2. கொரிந்தியர் 7:8-16. மாற்கு 1:12-15.

முன்னுரை:
சாம்பல் புதன் என்றால் என்ன?
நாற்பது நாள் நீடிக்கின்ற லெந்து காலத்தின் முதல் நாள் இதுவே.இயேசு தன் ஊழியத்தை ஆரம்பிதப்பதற்கு முன்பாக நாற்பது நாள் இரவும் பகலும் பாலைநிலத்தில் நோன்பிருந்தார் என்னும் செய்தி உள்ளது. நற்செய்தி நூல்களை எழுதிய மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இச்செய்தியைக் குறிப்பிடுகின்றனர்.(காண்க: மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). இயேசுவைப் பின்பற்றி, கிறித்தவர்களும் நாற்பது நாள்கள் நோன்பிலும் இறைவேண்டலிலும் ஈடுபட தொடக்கமாக அமைகிறது சாம்பல் புதன். (Ash Wednesday) சாம்பல் தவத்திற்கும் (meditation)   தன்னொறுத்தலுக்கும் ( self denial) மன மாற்றத்திற்கும் (transformation) அடையாளம். Lent leads us to denounce our sins one by one. சாம்பல் எளிமையின் அடையாளம். சாம்பல் துக்கத்திற்கு அடையாளம். சாம்பல் உண்ணா நோன்பின் அடையாளம். சாம்பல் மன மாற்றத்திற்கான அடையாளம் ‌.மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் நீ மண்ணுக்கு திரும்புவாய் என்பதை உணர்த்துவது சாம்பல் புதன். பாவசெயல்களை விட்டொழிப்பதே லெந்து காலத்தின் அடையாளம். இயேசு சிலுவையில் மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழும் ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய நாற்பது நாட்கள் தவக்காலமாகும்.
லெந்து காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்.
ஏசாயா 1:16-20ல் உங்களைக் கழுவித்தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை (Evils) என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழி யுங்கள்; 17நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு ( oppressed) உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பென்னுக்காக வழக்காடுங்கள்.18“வாருங்கள், இப்பொழுதுநாம் வழக்காடுவோம்”என்கிறார் ஆண்டவர்;“உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்.இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மை யாகும். 19மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்; நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். என அர்த்தமுள்ள லெந்து அனுசரிப்பை நமக்கு தீர்க்க உறுத்துகிறார். The Cross is not only a call to Repentence, but a warning for Repentence.
சிலுவையே வாழ்வுக்கு வழி; (The Cross is the Way for Life) நமது அன்பின் இனிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, மனிதரின் மீட்புக்காகச் சிலுவையில் இறந்தார் என்பதால் அவர் அனுபவித்த துன்பங்களில் தாமும் பங்குபெற லெந்து காலம் நம்மை அழைக்கின்றது. மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் (மாற்கு 1:15). ” என்ற வார்த்தை நம்மை லெந்து காலத்தில் மனமார அழைக்கின்றது. லெந்து சிலுவை பாட்டை அனுதினமும் நினைக்க வைக்கின்றது. யாருக்காக ஆண்டவர் அந்த கொடிய சிலுவையை சுமந்தார்,  ரத்தம் சிந்தினார்,  அவமானப்பட்டார்,  மரித்தார் என்ற சிந்தனையும் கேள்வியும் நமக்குள் எழ வேண்டும்‌.  எனக்காக என் ஆண்டவர் சிலுவை சுமந்தார் , பாடுகள் பட்டார் என்னை மீட்பதற்காக அவர் தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது‌. நான் மேன்மை பாராட்டு வேண்டுமானால் சிலுவை குறித்தே மேன்மை பாராட்டுவேன். வேதம் வாசித்தல் (Bible Reading) படித்தல், எப்போதும் ஜெபம் செய்தல், Pray without ceasing பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருத்தல், பிறருக்கு உதவி செய்தல் போன்றவை தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்கு முறைகளாகும். நம்மை நாமே தூய மனிதர்களாகத் தயார் செய்துகொள்ளக் கடவுளால் தரப்பட்டிருக்கும் தயவான காலம்தான் லெந்து காலம். 
 யோனா தீர்க்கதரிசி நினிவே பட்டணம் அழியப்போகின்றது என்று தீர்க்கதரிசனம் உரைத்த போது, நினிவேயின் ஜனங்கள் தங்களுடைய செயல்களுக்காக மனம் வருந்தி, இரட்டுடத்திக் கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார்கள், இது உள்ளான மனமாற்றத்தின் வெளியரங்கமான அடையாளம். இதே தன்மை நம்மில் இந்த லெந்து காலத்தில் வரவேண்டும். மத்தேயு நற்செய்தி 11 ஆம் அதிகாரம் 20 , 21 வசனங்களில், இயேசு தாம் செய்த பெரும்பாலான அற்புதங்களைக் கண்ட பட்டணங்கள் மக்கள் மனம் திரும்பாமல் இருந்ததைக் கண்டு இந்த வார்த்தைகளைக் கூறி கண்டித்தார் :

…கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.

இந்த பாரம்பரிய அடையாளம் சாம்பல் கிறிஸ்தவர்களால் பல நூற்றாண்டுகளாகக் கைக்கொள்ளப்பட்டு, பிற்காலங்களில் சாம்பல் புதன் தபசுகாலத்தின் முதல் நாளாக அதாவது தங்கள் வாழ்க்கை முறை மாற விசுவாசிகள் ஒப்புக்கொடுக்கிற நாளாக அமைந்துள்ளது. இன்னும் சில பாரம்பரிய ஆலயங்களில் சாம்பலை விசுவாசிகளின் நெற்றியில் வழிபாட்டின்போது பூசிக்கொள்வது உள்ளான மனமாற்றத்தின் வெளியரங்க அடையாளமாகக் கருதப்படுகின்றது !
சாம்பல் புதன்.






 
மேலும், சாம்பல் புதன் நாம் உறுதியான தீர்மானத்தை எடுக்கும் நாள் : உலக காரியங்களுக்கு நம்மை விலக்கிக் கொண்டு விண்ணுக்குரியவைகளைக் நோக்கித் திரும்ப வேண்டும். தபசு காலத்தின் இந்த முதல் நாள் மிக முக்கியமாக உபவாசித்து ஜெபிக்கும் நாள். சிலுவை குறித்து சிந்திக்க தொடங்கும் நாள். இந்த லந்து காலங்கள் மனம் திரும்புதலின் காலமாக அமையட்டும்.பழையபாவ வாழ்வை அழித்து, புதிய வாழ்வுக்கு இட்டுச் செல்லும் காலம் லெந்து என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
கர்த்தர் தாமே நம்மை இந்த லெந்து காலத்தை மன மாற்றத்தின் காலமாக கிருபை செய்வாராக ஆமென்.



Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.