லெஸ்லி நியூபிகின்
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு*
*ஜனவரி 30*
*லெஸ்லி நியூபிகின்*
மண்ணில் : 08-12-1909
விண்ணில் : 30-01-1998
ஊர் : நியூ காஸல்
நாடு: இங்கிலாந்து
தரிசன பூமி : *இந்தியா*
*ஜேம்ஸ் எட்வர்ட் லெஸ்லி நியூபிகின்* ஒரு பிரிட்டிஷ் இறையியலாளர், *மிஷனரி, திருச்சபையின் தலைவர்* மற்றும் பிஷப் ஆவார். 1929 ஆம் ஆண்டில் அவர் கேம்பிரிட்ஜில் உள்ள க்வீன்ஸ் கல்லூரியில் படிக்கும் போது, இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். வில்லியம் டெம்புல் மற்றும் ஜான் ராலீ மோட் ஆகியோரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அவர், "ஸ்டூடெண்ட் கிறிஸ்டின் மூவ்மெண்ட்" *எஸ்.சி.எம்-யில் மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தில்* சேர்ந்தார். ஸ்டான்விக் என்ற ஊரில் நடந்த ஒரு எஸ்.சி.எம் கூட்டத்தில் கலந்துகொண்டபோது ஊழியத்திற்கான கர்த்தரின் அழைப்பை அவர் பெற்றுகொண்டார்.
the "Fathers of the Church".
The Rt Rev . Lesslie Newbigin | |
---|---|
![]() Bishop Lesslie Newbigin in 1996 Church of South India | |
and United Reformed Church. |
ஆகவே ஊழியம் செய்ய பயிற்சி பெறுவதற்காக 1933 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், 1936ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் *சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து*' *மிஷனரியாக மெட்ராஸ் மிஷனில்* பணியாற்ற நியமிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு ஹெலன் ஹென்டர்சனை மணந்த லெஸ்லி, தனது மனைவியுடன் ஊழியத்திற்காக இந்தியாவுக்கு புறப்பட்டார். அங்கு வந்த பிறகு விரைவிலேயே தமிழ் மொழியைக் கற்றுக் கொண்ட அவர், கிராமப்புறங்களில் ஒரு சுவிசேஷகராக தனது ஊழியத்தைத் தொடங்கினார். எனினும், பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளுக்கிடையிலுள்ள போட்டி மனப்பான்மையை கண்ட அவர் மிகுந்த வருத்தம் அடைந்தார். கிறிஸ்தவ பிரிவுகளுக்கிடையிலான இந்த வேறுபாடுகள் *கிறிஸ்தவர்கள் தங்கள் சாதியின்* அடிப்படையில் தங்களை பிரித்துக் கொள்ள காரணமாயிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் “ஆண்டவர் நம்மை அவருடன் ஐக்கியப்படுத்தியுள்ளார்” என பிரசிங்கிக்கிற சுவிசேஷத்திற்கு முரணானது என்றும் மிஷனரி பணிகளுக்கு முதன்மையான தடையாகவும் அவர் கண்டார். ஆகவே, கிறிஸ்தவ பிரிவுகளிடையே ஒற்றுமையை கொண்டுவர அவர் கடுமையாக உழைத்தார். அவரது முயற்சிகளின் விளைவாக, *ஆங்கிலிகன்,* *காங்கிரிகேஷனல்*, *மெதடிஸ்ட்* மற்றும் *பிரஸ்பைடிரியன்* சபைகளை ஒன்றிணைத்து *தென்னிந்தியத்* *திருச்சபை" "சர்ச் ஆஃப் சவுத்* *இந்தியா"-சி.எஸ்.ஐ.*
உருவானது. 1947 ஆம் ஆண்டில் அவர் *மதுரை மறைமாவட்ட பிஷப்பாக* நியமிக்கப்பட்டார். 1959 ஆம் ஆண்டில் *ஜெனீவாவில் உள்ள 'இன்டர்நேஷனல் மிஷனரி* கவுன்சில்'-யின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட லெஸ்லி, அதை 'வேர்ல்ட்டு கவுன்சில் ஆஃப் சர்ச்செஸ்'-உடன் ஒருங்கிணைக்க பொறுப்பாக செயல்பட்டார்.
லெஸ்லி ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, தம் காலத்தில் கிறிஸ்தவத்தில் ஒற்றுமையை வலியுறுத்திய மிகவும் செல்வாக்குமிக்க இறையியலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். *கிறிஸ்தவ சபை* என்றால் கர்த்தர் தெரிந்தெடுத்துக்கொண்ட மக்கள் என்றும், அவர் நம்மை தெரிந்துகொண்டது தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், மிஷனரிகளாக கர்த்தரின் ஊழியம் செய்வதற்கும் என்றும் லெஸ்லி நம்பினார். சபையின் ஒற்றுமையை மிகவும் நாடிய அவர், ஒன்றுபட்டு மிஷனரி பணிகளை பகிர்ந்துகொண்டு செய்வதின் மூலம் உலகெங்கிலும் உள்ள ஊழியத்தில் முன்னேற்றம் அடைய முடியும் என்று பரிந்துரைத்தார். விசுவாசிகளின் எண்ணிக்கையை விட அவர்களது விசுவாசத்தின் தரத்தை வாஞ்சித்தார். அவருடைய இருதயத்தின் தன்மை, மேய்ப்பராக ஆற்றிய சேவைகள், *மிஷனரி தரிசனம்* மற்றும் அவரது ஊழியத்தின் தன்மை ஆகியவற்றை கொண்டு உண்மையாகவே அவர் வல்லமையுள்ள ஒரு தேவமனிதர் என்று காணமுடியும்.
*சிஎஸ்ஐ*
*தென்னிந்திய திருச்சபை உருவாவதற்கு முக்கிய காரணமானவர்* இவருக்கு சுமார் 40 ஆண்டுகளாக சமையல் பணி, ஓட்டுநர் பணி செய்தவர் செங்கல்பட்டு B. மோசஸ். நியூ பிகின் சென்ற இடங்களிலெல்லாம், அவருக்கு உதவியாளராக உண்மையாய் இருந்தார்.
வாழ்வு முழுவதும் மனிதநேயத்தை மனிதனுக்கு கற்பித்த *பேராயர் லெஸ்லி நியூபிகின்*
அவர்கள் 1998 ஆம் ஆண்டு இதே நாளில் ஜனவரி 30 இறைவனின் ஐக்கியமானார்
ஒற்றுமையின் சீர் குலைக்கு வித்திடுகிறவர்ள் சுவிசேஷத்தில் எதிராளிகள்
*லெஸ்லி நியூபிகின்*
----------------------------------------
*லெஸ்லி நியூபிகின்*
*நினைவு தினம் இன்று*
*பிரான்சிஸ் ஸ்கேபஃர் 1912*
----------------------------------------
*கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்*
Comments
Post a Comment