முன்னுரை:
அன்பானவர்களே! கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்" என்ற சொற்றொடர் வேதாகமத்தில் இரண்டு முறை வருகிறது, பழைய ஏற்பாட்டில் ஒரு முறை (ஏசாயா 6:3) மற்றும் புதிய ஏற்பாட்டில் ஒரு முறை (வெளிப்படுத்துதல் 4:8). இரண்டு முறையும், இந்த சொற்றொடர் பரலோகவாசிகளால் கூறப்படுகிறது. சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்பது அவருக்கு மட்டுமே பொருத்தமாகும். வெளிப்படுத்தின விசேஷம் 4:8 ல்"அந்த நான்கு ஜீவன் களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ள வவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
பழைய ஏற்பாட்டில் "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக் கேற்ற பரிசுத்த வான் களாயிருப்பீர்களாக”. (லேவியராகமம் 20:26) அடிப்படையான தேவை பரிசுத்தம். அவ்வாறே மத்தேயு 5:8ல் "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்". சங்கீதம் 24:3,4ல் "யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத் திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லா தவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே." திருவள்ளுவர் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர் பிற" அதாவது ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். என்பதே அறம் என கூறுகிறார்.
கிறிஸ்துவ வாழ்வில் சுத்தம் என்பது மிக அவசியமாகிறது. சுத்தம் இரண்டு வகைப்படும் ஒன்று அக( உள்ளம்) சுத்தம் இரண்டு புற(வெளி) சுத்தம். ஆங்கிலத்தில் :"Cleanliness is next to Godliness ''.என்பர். "சுத்தம் சோறு போடும் " . என்பர்.
துப்புரவாளருக்கும் (scavenger) தூய்மை பணியாளர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன வென்றாள் : துப்புரவாளர் வெளியே இருக்கின்ற குப்பைகளை நீக்கும் சமூக பணியாளர் ஆனால் தூய்மை பணியாளர் உள்ளத்திலும் வெளியே இருக்கின்ற அழுக்கையும் கழுவும் ஆன்மீகவாதிகள். திருவிவலியம் திட்டமாக கூறுகிறது. எபிரேயர் 12:14.
"எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது." எனவே கிறிஸ்துவ வாழ்வில் பரிசுத்தம் மிக முக்கியமானது. பரிசுத்தமாய் இருங்கள் என்பது தேவனின் கட்டளை. "Being holy is not an option, it's a compulsion" இந்த லெந்து காலத்தில் நம்மை நாமே தூய்மைப் படுத்துவோம். சிலுவை நோக்கி பார்க்கின்ற பொழுது நம் உள்ளத்தில் தூய்மை அடைய செய்கிறது.
1. சகரியா தீர்க்கரின் நம்பிக்கை: சகரியா 13:1-9.ல்
"அந்நாளின் பாவத்தையும் தீட்டையும் நீக்கித் தூய்மையாக்கும் நீரூற்று (The fountain of Living Water) தாவீதின் குடும்பத் தாருக்கெனவும் எருச லேமில் குடியிருப் போருக்கெனவும் தோன்றும்". என தாவீதின் வம்சத்தில் தோன்றும் இயேசு கிறிஸ்துவை உலகத்தின் பாவத்தை நீக்கி நம்மை சுத்திகரிக்கின்ற கருவியாய் இங்கு உறுதி படுத்துகிறார். விக்கிரக ஆராதனை செய்கின்ற வர்கள் பொய்யான தீர்க்க தரிசனம் உறைப்பவர்கள் இந்த பூமியை விட்டு அகற்றப் படுவார்கள் என்று தீர்க்கர் கூறுகிறர். இயேசு கிறிஸ்து "The fountain of Living Water" இயேசுவே ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்று என தீர்க்கர் கூறுகிறார்.(சகரியா13:1) ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் என ஜீவ தண்ணீரால் கழுவப்பட வேண்டும் என விரும்புகிறார். சங்கீதம் 130:7,8ல்
7இஸ்ரயேலே!ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
2. இயேசு கிறிஸ்துவின் இரத்தமே நமக்கு இரட்சிப்பு:
1.யோவான் 1:7ல் "அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போ மானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டி ருப்போம். மேலும், அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத் தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்." கிறிஸ்துவம் தூய்மையின் பாதை. வேதம் திட்ட வட்டமாக சொல்கிறது. இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபிரெயர் 9:22). மற்றும் எபிரேயர்8:14 ல் "ஆனால், கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல் களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில், என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே.". இயேசு கிறிஸ்து மாசற்ற ஜீவ பலியாக இருக்கிறார் என்பதை எபிரேயரில் கூறப்பட்டுள்ளது.ஆக இயேசு கிறிஸ்து ஒருவரே நம்மை நித்திய வழியில் நடத்திட தன் தூய இரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.கிறிஸ்து இரத்தம் சிந்தித் தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங் களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். (எபேசியர் 1:7)
3. இயேசு தேவாலயத்தை சுத்திகரிப்பு: Cleansing the Church :
இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்தல் நிகழ்வை பற்றி நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளவை.
யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள். "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். (யோவான் 2:13-17) ஆலயம் சுத்தமாக இருந்தால் தான் மனிதனும் சுத்தமாய் இருப்பான். The Church is the body of Christ
4 குணமாகும் கிறிஸ்து: The Healing Christ:
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்பு விக்கிறார்(சங்கீதம் 107:20).என சங்கீதக்காரன் கூறுகிறார்.மாற்கு1:40-45 ல் குஷ்டரோகி ஒருவன் வந்து இயேசுவைப் பணிந்து: ஆண்டவரே உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.”ஆண்டவருடைய சித்தம் என்னவென்றால் 1 தெசலோனிக்கேயர் 4 : 3 ல் “நீங்கள் பரிசுத்தமாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” என்றும் 5 : 18 ல் “குஷ்டரோக வியாதி மிகவும் கொடிய வியாதி. மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியது. எனவேதான் லேவியராகமம் 13 : 45, 46 ல் குஷ்டரோகியை யாரும் தொடக்கூடாது என்றும், தொட்டு விட்டால் அவன் ஏழு நாட்கள் தீட்டுப்பட்டிருப்பான் என்றும், தீட்டுப்பட்டவன் தேவாலயத்துக்குள் வரமுடியாதென்றும் கூறப்பட்டிருக்கிறது. குஷ்டரோகி என்ன பண்ண வேண்டுமென்றால் தன் தலையை மூடாதவனாய் அவனுடைய தாடியை மூடிக்கொண்டு தீட்டு தீட்டு என்று சத்தமிட வேண்டும். அப்போது குஷ்டரோகி வருகிறான் என்று மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள். இவனுடைய பெயரை ஆலயத்தின் பதிவேட்டிலிருந்து கிறுக்கிப் போடுவார்கள். அவனைப் பாளையத்திற்கு வெளியே தனியே இருக்கச் செய்வார்கள் என்று பழையஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம். இதை நமது ஆண்டவர் அன்பின் நிமித்தமாக வரும், மனித நேயத்தை வெளிப்படுத் துகிறார்.இதனால் மோசேயின் கட்டளையை மக்களுக்காக மாற்றியமைக்கிறார். மத்தேயு 8 : 3 “ இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.”மற்றும் அவர்மத்தேயு 8 :4 “ இயேசு அவனை நோக்கி: இதை நீ ஓருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக் கையைச் செலுத்து என்றார்.”.இதன்மூலம் மோசேயின் கட்டளையை நிறைவேற்றினார். இயேசு நம்மை மன்னிக்கின்ற போதுதான் நாம் சுத்தமாகிறோம்.சங்கீதம் 51:7ல் "ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்." ஆக நாம் ஆண்டவரிடம் பாவத்திலிருந்தும், வியாதி, வேதனைகளிளிருந்தும் விடுதலைப்பெற மனதாழ்மையாய் வேண்டுவோம். கொலெசியர்1:20ல் "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்." பிரியமானவர்களே!. நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம். இந்த உலகம் பொல்லாத உலகம். நாம் முழுமையாக பாவத்திலிருந்து விடுதலை பெறுவதே நம்மை நாமே சுத்தமாக முடியும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள் அப்பொழுது நீங்களும் உங்கள் வீட்டார் யாவரும் இரட்சிக்கப்படுவீர்கள். ஆமேன்.
Comments
Post a Comment