மன்னிக்கும் கிறிஸ்து. The Forgiving Christ . (The second Sunday in Lent) தொடக்க நூல் 4 : 8- 16. தூய மாற்கு 2:1-12. திருப்பாடல் 25. உரோமையர் 5: 6-11.
தேசிய மன்னிப்பு நாள் (National Sorry Day), 1905-ஆம் ஆண்டு முதல் ஆஸாதிரேலியா நாட்டின் சட்டப்படி, ஆஸ்திரேலி யாவின்பழங்குடி மக்களின் குழந்தைகளை, ஐரோப்பிய பண்பாட்டு (European Culture) முறையில் வளர்த்ததை, 1998-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அரசு செய்த மாபெரும் தவறு உலகிற்கு தெரிய வந்தால் பழங்குடி மக்களிடம், வெள்ளை இன ஆஸ்திரேலியர்கள், ஆண்டுதோறும் மே மாதம் 26ஆம் நாளன்று மன்னிப்பு கேட்கும் நாளாக 1998 முதல் கடைபிடிக்கப்படுகிறார்கள.
மனித உரிமைகளை (Human Rights) உலகெங்கும் வலியுறுத்தவும் பாது காக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் UNO 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டது. மற்றும் உலகளாவிய மன்னிப்பு தினம் 1994 இல் CECA (கிறிஸ்துவின் தூதர்) ஆல் நிறுவப்பட்டது. இது முதலில் கனடாவிலேயே தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகளவில் பிரபலமடைந்ததால், இது உலகளாவிய மன்னிப்பு தினம் என மறு பெயரிடப்பட்டது.
மன்னிப்பு என்றால் என்ன?
மன்னிப்பு என்பது ஒருவர் தவறு செய்தால் அந்தத் தவறுக்காகப் பாதிக்கப் பட்டவரிடம் கேட்பது மன்னிப்பாகும். அதே போல் பாதிக்கப்பட்டவர் அதனைப் பெரிதுபடுத்தாமல் தவறிழைத்தவருக்கு வழங்குவதும் மன்னிப்பாகும். Forgiveneess is a two way aspects. நாம் மன்னிப்பது குற்றவாளியின் நலனுக்காக அல்ல, நமக்காக என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அதாவது மனக்கசப்பு மற்றும் மனவேதனையின் பெரும் சுமையிலிருந்து விடுபட மன்னிப்பு உதவுகின்றது. தவறு செய்வது மனித இயல்பு. "To Err is human to forgive is divine " மன்னிக்க தெரிந்த மாபெறும் உள்ளம் மாணிக்க கோவில் என்பர்.
மன்னிக்கத் தெரியாத மக்கள் பெரும்பாலும் கோபம், (anger) விரக்தி(depression) மற்றும் வெறுப்பு (hatred) ஆகியவற்றால் நிறைந்திருக்கிறார்கள். எனவே இவற்றிருந்து விடுபட மன்னிப்பானது மிக மிக அவசியமாகும்.கோபம் கொள்ளும்போது மனப்பதட்டம் அதிகரிக் கின்றது, இதய நோய், நீரிழிவு நோய், மனச்சோர்வு போன்ற பல நோய் களுக்கும் காரணமாக அமைகின்றது.உங்கள் இளமையும் அழகும் பாதிக்கபாபடுகிறது. மன்னிக்கும் திறன் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் கணிசமாகக் குறைக்கிறது. இந்த உலகில் சந்தோஷமாகவும் நீடிய நாட்கள் உயிர் வாழவும் மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். " Forgiveness is the gateway to the Kingdom of God". மன்னிப்பு பெற்றால் மட்டுமே இறையரசில் பங்கு பெறமுடியும். இதற்காகவே நாம் திருவிருந்தில் பங்கு பெற்று மன்னிப்பு பெறுகிறோம்.
வேதத்தில் முதன் முதலாக மன்னிப்பு என்ற வார்த்தை விடுதலைப் பயணம் 9:27,28ல்
27 பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனை யும் கூப்பிட்டான். அவன் அவர்களை நோக்கி, "நான் இம்முறை பாவம் செய்து விட்டேன். ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர். 28.எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள். இடிமுழக் கங்களையும் கல்மழை யையும் கடவுள் அனுப்பியது போதும்; நான் உங்களைப் போக விடுவேன். இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்" என்றான். இப்படி முதன் முறையாக மன்னிப்பு கேட்ட மாமனிதன் பாரோதான். (Pharaoh) முதன்முதலாக மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் ஆதாம், ஏவாள்தான். அவர்கள் மற்றவர்களை தன் தவறுகளுக்கு குற்றம் சாட்டினர். அதனால்தான் அவர்களின் மகனான காயின் தன் உடன் பிறந்த சகோதரனை (ஆபேல்) பொறாமையால் கொன்று போட்டார். ( தொடக்க நூல் 4: 8-16)
இயேசு கிறிஸ்துவின் பாவமன்னிப்பு: பாவிகளை ரட்சிக்கவே இயேசு கிறிஸ்து உலகில் தோன்றினார். ஒரு நாள் பேதுரு இயேசுவிடம் போய், “எஜமானே, எனக்கு விரோதமாக என் சகோதரன் பாவம் செய்தால் நான் எத்தனை தடவை அவனை மன்னிக்க வேண்டும்? ஏழு தடவையா?” என்று கேட்கிறார். பொதுவாக மதத் தலைவர்கள் சிலர் மூன்று தடவை மன்னித்தால் போதும் என்று கற்பித்தார்கள். அதனால், ஒரு சகோதரனை “ஏழு தடவை” மன்னிப்பது போதுமா என பேதுரு ஆண்டவரிடம் கேட்கிறார் (மத்தேயு 18:21,22.) இயேசு ஒருவர் எத்தனை தடவை தவறு செய்தார்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளும்படி இயேசு கற்பிக்கவில்லை. அவர், “ஏழு தடவை அல்ல, 77 தடவை என்று நான் உனக்குச் சொல்கிறேன்” என்று சொல்லி பேதுருவைத் திருத்துகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கணக்கு வழக்கில்லாமல் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்றுதான் இயேசு சொல்கிறார். தன் சகோதரனை இத்தனை தடவைதான் மன்னிக்க வேண்டும் என்று பேதுரு கணக்குப் பார்க்கக் கூடாது.
Comments
Post a Comment