மறுவுருவத்திற்கான காலம் லெந்து. Lent : A Time for Transformation ஏசாயா 44: 21-28, சங்கீதம் 6, யோவான் 2: 1-11, ரோமர் 11:13-24
முன்னுரை:
What is Lent?
According to Webster Dictionary, ' Lent is a period of fasting and regret for one's sins that is observed on the 40 weekdays from Ash Wednesday to Easter by many churches."
Lent என்ற வார்த்தையானது கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளில் உயிர்த் தெழுதல் நாளுக்கு முந்தைய நாற்பது நாட்களைக் (Forty days before Easter) குறிக்கிற ஒன்றாக இருக்கின்றது. லெந்து காலம் என்பதற்கு வசந்த காலம் என்று பொருள். ஆங்கிலத்தில் Spring Season என்று பொருள். லெந்து காலம் என்பது சாம்பற் புதன் கிழமை அன்று துவங்கி உயிர்த்தெழுதலை நினைவுகூறும் ஈஸ்டர் பண்டிகை வரையிலான நாட்களை உள்ளடக்கியது ஆகும். நாற்பது நாட்கள் என்று பொதுவாக கிறிஸ்தவர்கள்கூறினாலும், உண்மையில் 46 நாட்களை உள்ளடக் கியதே லெந்து காலம் ஆகும். லெந்து காலத்தில் வரும் ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. லெந்து என்பது துளிர் விடும் காலம். இது மனமாற்றத்திற்கான காலம்.மனம் திரும்பும் காலம். A time for Transformation. நம்மையே மாற்றிக்கொள்ளும் காலம். இதையே ஏசாயா தீர்க்கன் 44:21-28ல் யாக்கோபு என்ற இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங் களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக் கொண்டேன் என்று நம்மை அழைக்கின்றார். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாக இருக்கிறான் ( New Creation) பழையவைகள் (பாவங்கள்) ஒழிந்து போனது. லெந்து காலங்கள் பாவத்தை விட்டு விலகும் காலம். (A time of Repentance) கிறிஸ்து வோடு இனையும் காலம்.
எப்படி லெந்து காலத்தை கைகொள்வது:
வேதத்தை படித்தல், (Bible Reading) எப்போதும் ஜெபம் செய்தல், (Prayer) பாவத்துக்காக மனம் வருந்தி உண்ணா நோன்பு இருத்தல் (Fasting), பிறருக்கு உதவி செய்தல் (Charity) போன்றவை தவக்காலங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முக்கிய ஒழுங்கு முறை களாகும். ஏன் 40 நாட்கள் அனுசரிக்க வேண்டும்.
Why 40 days?
1. ஆண்டவர் இரவும் பகலும் 40 நாட்கள் மழை பெய்து பாவம் செய்த மக்களை அழித்துப் போட்டார்.
2. இஸ்ரவேலர் 40 ஆண்டுகாலம், வனாந்திரத்தில் பயணத்ததை குறிக்கும்.
3. மோசஸ் 40 நாட்கள் சீனாய் மலையில் உபவாசம் இருந்து பத்து கட்டளைகளை பெற்றது.
4. இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக வனாந்தரத்தில் 40 நாட்கள் இரவு பகலும் உண்ணா விரதம் இருந்தார். இப்படி பல 40 நிகழ்வுகள் வேதத்தில் இடம் பெற்றுள்ளன.
யாத்:12:14. பஸ்கா பண்டிகையைக் குறித்து ஆண்டவர் சொல்லும்போது அதை தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும்படியாக சொல்லியிருந்தார்.நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. (1கொரி:5:7). நமக்காக பலியிடப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை நினைவுகூர்ந்து இந்த லெந்து காலத்தில் நம்மை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவதே அர்த்தமுள்ள லெந்து அனுசரிப்பாகும்.
நாம் எவ்வாறு நோன்பு இருக்க வேண்டும்:
மத்தேயு 6: 16-18.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 17நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். 18அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார். இயேசுநோன்பிருந்ததைக் கிறித்தவர்களும் தம் வாழ்வில் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். யோவேல் 2:13ல்
"நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாப ப்படுகிறவருமாயிருக்கிறார்"லெந்து காலம் கடவுளிடம் மிகவும் நெருங்கும் காலம் அவர் இரக்கமும் மன உருக்கமும் உடையவராய் நம் பாவங்களை மன்னித்து புது வாழ்வு தரும் இறைவனாய் இருக்கிறார்.
நாம் முற்றிலுமாக தம்மைத்தாமே ஆறாய்ந்து, தமது பாவங்களை அறிக்கையிட்டு, தங்களை கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதற்காக இந்நாட்களை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
லெந்து சிலுவைப் நோக்கி அழைக்கிறது:
சிலுவையைத் தியானிக்கத் தியானிக்க நமது உள்ளம் உண்மையாகவே உடைகிறது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன் என்றார்.
மத்தேயு:16:24].
லெந்து காலம் சிலுவை பாடுகளை கண்ணோக்கி பார்க்க நம்மை அழைக் கின்றது.சிலுவை மன்னிப்பின் சின்னம். அது கிறிஸ்துவின் பாடுமரணத்தை நினைவுட்டும் இரட்சிப்பின் சின்னமாக இருக்கிறது. பவுல் கூறுவது போல கலாத்தியர் 6:14
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறை யுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவை யிலறையுண்டிருக்கிறேன். லெந்து காலம் சிலுவயை குறித்தான சிந்தனையை நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். சிலுவை எனக்கு முன் உலகம் எனக்கு பின் என்ற மேன்மையான சிலுவையை தியானிப்பதே லெந்து கால ஆராதனை. சிலுவை நமக்கு மன்னிப்பு என்ற மாபெறும் வழியை காட்டுகிறது. இந்த லெந்து காலங்களில் நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்க கற்றுக் கொள்வோம். இயேசு கிறிஸ்து சிலுவையில் கூட பிதாவே இவர்களை மன்னியும் என்று மன்னிப்பை கொடுத்தார். நீங்கள் மற்றவர் தவறுகளை மன்னிக்கின்ற போது தங்கள் தவறுகளும் மன்னிக்கப்படும். கடவுள் நமக்கு இந்த லெந்து காலத்தில் கிருஸ்துவின் சிலுவை பாடே நம் உள்ளத்தில் இருக்க கிருபை செய்வாராக. ஆமேன்.
Comments
Post a Comment