வார்த்தையும் வாழ்க்கையும் PETITION And PROMOTION. யோவான் 4:46-54.

முன்னுரை:  யோவான் நற்செய்தியில் இயேசுவின் முதலாம் அற்புதம் தொடங்கி(கானா ஊர் திருமணம் - தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுதல்- யோவான் 2:11)  மொத்தம் 7 அற்புதங்கள் யோவான் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பானவர்களே! இயேசு இங்கு மூன்றுவிதமான இன மக்களை சந்திக்கிறார். முதல் அற்புதம் யூதர்களுக்கும், சீடர்களுக்கும்( Jews) இரண்டாவதாக இயேசு சந்திக்கும் பெண் சமாரியர் ( Samaritan- யோவான் 4:1-42.) மூன்றாவதாக அவர்சந்திக்கும் மனிதர் புற சாதியினர் (Gentiles) இது இயேசு" அனைவருக்குமான கடவுள் (Universal God)" என்பதை தெரிவிக்கின்றது. அதுமட்டுமல்ல மக்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் தேடுவதாக இயேசு கூறுகிறார்.(யோவான் 4:48). இந்த அற்புதங்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கவும், இயேசு கடவுளின் திருமைந்தன் என்பதை உறுதிபடுத்தவே பல அற்புதங்களை செய்தார்.
           கப்பர்நாகூம் என்ற ஊர் கலிலேயா கடற்கறை யோரம் அமைந்துள்ள பட்டினம்.இது கானாவிற்கு கிழக்கே 25 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. கானா நாசரேத்திலிருந்து 7:கி.மீ (
  (4.3 மைல்)  

 

Healing the royal official's son by Joseph-Marie Vien, 1752.

அரசு அதிகாரி ஏரோது அரண்மனை ஊழியர்.  இவர் இயேசு கலிலேயாவிற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, தன் மகன் மரண வேதனையில் இருக்கிறான் அவனை சீக்கிரம் வந்து குணப்படுத்துங்கள் என வேண்டிக் கொள்கிறார்.அதற்கு இயேசு மறுமொழியாக, நீ போகலாம் அவன் பிழைத்திருப்பான் என்றார். இயேசுவின் வார்த்தை யின்படியை செல்கிறான். அவ்வாறு சென்றுக் கொண்டிருக்கும் போது அவனுடைய வேலைக் காரர்கள் வழியில் வந்து ஐயா மகன் பிழைத் திருக்கிறான் என்றார்கள். மகன் பிழைத்த நேரமும் இயேசு சொன்ன நேரமும் ஒன்றாக இருந்தது.

இயேசுவின் வார்த்தை: " The Word of Christ:

யாரிடம் செல்வோம் இறைவா "வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடமே உண்டு" என்று பேதுரு கூறினார். தன்னுடைய சீடர்களில் பலர் தன்னை விட்டு விலகிச் சென்றபிறகு, இயேசு பன்னிரு சீடரிடமும், “நீங்களும் போய்விட நினைக்கின்றீர்களா?” என்று கேட்கின்றார்.  இதற்கு பதிலாக தான் பேதுரு இவ்வாறு கூறுகிறார் ‌. யோவான் நற்செய்தியாளர்  தெளிவாக எழுதுகிறார்: “ஆதியிலே வார்த்தை:(logos) இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” இயேசு தேவனால் அனுப்பபட்டவர். எனவே தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்.”​—⁠யோவா. 3:⁠34. கடவுளின் வார்த்தை "அவைகள் தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமானதுமாய் இருக்கிறது (சங்.19:10)."இயேசுவின் வார்த்தை வாழ்வுக்குச் சுகம் தருகின்ற வார்த்தை அது நம்மை உயிர்ப்பிக்கிறது, ஞானியாக்குகிறது, இருதயத்துக்கு மகிழ்ச்சி தருகிறது, நம்மைத் தூய்மைப்படுத்தி கண்களை தெளிவிக்கிறது, நம்மை எச்சரிக்கிறது, நமக்குப் பலனளிக்கிறது. வசனம் நம் பாதையில் உள்ள பயங்கரத்தை உணர்த்தி நம்மை நல்வழிப்படுத்துகிறது‌. மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தை யினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4: 4)

வார்த்தை ஆண்டவரின் கட்டளை."இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசு. (உபாகமம் 6: 4–7)". இயேசு திட்டவட்டமாய் கூறுகிறார்."ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.என்கிறார்.  (யோவான் 14:23) கடவுளுடைய வார்த்தை நம்முடைய அனுதின வாழ்க்கையில் வழிகாட்டுதலை தரும். அதன்மூலம் நாம் பரிசுத்தமான வழியில் வாழ முடியும். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்.25:35) என இயேசுகிறிஸ்து வாக்களித்த வண்ணம், தனது வார்த்தையை இன்றுவரை பாதுகாத்துள்ளார். உலகிலுள்ள அனைத்தும் அழிந்துவிட்டாலும் “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1பேதுரு1:25). ஏனெனில், அது “…என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ள துமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்து…” (1பேதுரு 1:23) வேதாகமம் தன்னுடைய வார்த்தை என்பதனாலேயே தேவன் அதை மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலவிதமான அழிவுகளில் இருந்தும் பாதுகாத்துள்ளார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இயேசுவின் வார்த்தைகள்   வாழ்க்கையையே மாற்றும் வல்லமை இருக்கிறது. ஏனென்றால் வார்த்தையில் ஜீவனிருக்கிறது!வேதவாக்கியம் தவறாததாய் இருக்கின்றமையால் (யோவா 10:35) எந்த ஒரு அறிவியல் துறையாலும் அதை அழித்துவிட முடியாதுள்ளது. நம்முடைய வார்த்தையும் செயலும் ஆண்டவருக்கு பிரியமாக இருக்க வேண்டும்.

 நமது தேவனுடைய வசனம் என்றென்றைக்கும் நிற்கும் (ஏசா. 40:8). தேவன் எவ்வாறு நித்தியமானவராக இருக்கிறாரோ, அதைப் போலவே, அவருடைய வார்த்தையும் நித்தியமானது. எனவே, வேதாகமம் இன்றுவரை அழியாமல் நிலைத் திருப்பது.அது தேவனுடைய வார்த்தை என்பதற்கான உறுதியான சான்றாக உள்ளது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் அவர் வார்த்தைகளும் மாறாதது. 

ஆண்டவருடைய வார்த்தை அழியாதது. அதை நம்பி அதனது செய்தியை ஏற்றுக்கொள்ளும்போது அழியாத நித்திய வாழ்வு நமக்கு கிடைக் கின்றது.வார்த்தைகளுக்குச் சக்தி இருப்பதால் நாம் என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். “சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது. ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது” என்று நீதிமொழிகள் 15:4 சொல்கிறது. 

வல்லமையுள்ள வார்த்தை:

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.என வேதம் கூறுகிறது. (எபிரேயர் 4: 12–13)

திருத்தூதுவர் பணிகள் 1:8 ல் `"தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையை பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்’" என்று எழுதப்பட்டிருக்கிறது. தூய ஆவியின் வல்லமை நம்மோடு என்றும் இருப்பதாக.பிரியமானவர்களே, தேவவார்த்தை இருதயத்தை ஊடுருவிச் செல்லவல்லது. ஆனால், அதற்கு யார் யார் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள் நிச்சயம் வாழ்வு பெறுவார்கள். பாவிகளை நேசிக்கும் இயேசு பாவத்தை விரும்புவதில்லை. பாவத்தை மன்னித்து வாழ்வளிக்க ஆயத்தமாயிருக்கிறார். லெந்து காலம் பாவத்தை விட்டு விலகும் காலம்.

வாழ்க்கை:

கிறிஸ்தவ வாழ்க்கை அன்பினால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட வாழ்க்கை. இந்த அன்பு தற்காலிகமானது அல்ல. இது நித்தியமான அன்பு. வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கலாம். வேதம் சொல்லுகிறபடி பல போராட்டங்களை நம்முடைய வாழ்க்கையில் கடந்து போகிற பாதையாக நமக்கு நியமிக் கப்பட்டிரு க்கிறது.கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஜெபம், வேதவாசிப்பு, ஆராதனை, தேவ ஊழியம் போன்றவைகளோடு மட்டும் சம்பந்தப்பட்டவை அல்ல. கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, கிறித்ஸ்துவின் ஐக்கியத்தோடு, கிறிஸ்துவின் வழிகளில் நடந்து, கிறிஸ்துவை பிரதிபலித்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை. ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு வாழும் வாழ்க்கையே கிறிஸ்துவ வாழ்க்கை. நானும் என் வீட்டாறுமே என்றால் கர்த்தரயை சேமவிப்போம் என்ற சிந்தனையோடு இந்த லெந்து காலத்தில் சிலுவைப் பாட்டை தினமும் தியானிப்போம். புது வாழ்வு பெறுவோம். ஆமேன் ‌‌.


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.