THOMAS GAJETAN RAGLAND.
இவர்தான் வெளிநாட்டில் இருந்து சிவகாசி க்கு வந்து
தன் தொப்பியில் கூழ் வாங்கி குடித்துக் கொண்டு
தன்னுடைய சொத்துக்களை எல்லாம் சைக்கிள்ல அள்ளிக் காட்டிக் கொண்டு
2017
THOMAS GAJETAN RAGLAND
இவர் அந்த காலத்தில் கட்டிவைதுப் போன church இன்றும் பிரபலமாக சிவகாசியில் உள்ளது.கனம் தாமஸ் ராக்லண்டு
THOMAS GAJETAN RAGLAND (1815-1858) was born at Gibraltar in 1815.He had studied Maths in Cambridge University. He later worked in Corpus Christi College as a tutor. After working as a tutor he was drawn to missionary work by God.
In 1845, Ragland offered himself to the CMS for service in India and was accepted. He reached Madras in January 1846. He accepted the position of secretary of the
தாமஸ் ராக்லண்டு அவர்கள் இங்கிலாந்து தேசத்தில் பாரம்பரியமிக்க பிரபுக்கள் குடும்பத்தில், 1815 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ம் நாள் லிவர்பூல் என்ற இடத்தில் பிறந்தார். சிறுவயதிலே இவருடைய பெற்றோர்கள் காலரா நோயில் இறந்தமையால் அவருடைய தாய்மாமா வின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இளமையில் பக்தியிலும் ஒழுக்கத்திலும் வளர்க்கப்பட்ட ராக்லண்டு அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது அவருடைய ஒய்வுநாள் ஆசிரியர். ராக்லண்டு கல்வியிலும் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திலும் சிறந்து விளங்கினார். ராக்லண்டு அவர்கள் இங்கிலாந்தில் உலக பிரசித்தி பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் கணிதத்தில் அறிவர் பட்டம் பெற்று சிறந்த கணித ஆசிரியராக அதே கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றினார்.
ராக்லண்டு அவர்கள் குருத்துவ ஊழியம் செய்ய விருப்பங் கொண்டு தன்னுடைய பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, அங்குள்ள வேதாகம கல்லூரியில் சேர்ந்து எபிரேயம், கிரேக்கு மற்றும் இலத்தீன் மொழிகளில் புலமைபெற்றார். ஆகையால் 1842 ம் ஆண்டு இங்கிலாந்தில் தூய. பவுலின் ஆலயம், நியோட்டின் என்ற இடத்தில் குருவானவராக பணியாற்றினார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து தேசத்தின் church mission society (cms) என்ற சங்கத்தின் மூலம் நடைபெற்ற மிஷனெரி அறைகூவல் கூடுகையில், இயேசுவானவர் இந்திய தேசத்தில் நற்செய்திபணி அறிவிக்க அழைப்பதை உணர்ந்தார்.
ஆகவே இந்த அறைகூவலை ஏற்றுக்கொண்டு தன்னை இங்கிலாந்தில் குருத்துவ பணியிலிருந்து விடுவித்துக்கொண்டு நற்செய்தி பணிக்காக தன்னை அற்பணித்தார். ஆகவே அங்கிருந்த cms மிஷனெரி ஸ்தாபனத்தின் மூலம் 1845 ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வந்தடைந்தார். அங்கு தமிழ் புலவர்களிடம் தமிழ் கற்று, பின்னர் வட திருநெல்வேலி பகுதியின் முதல் மிஷனெரியாக நற்செய்திபணி செய்ய வடக்கே கல்பட்டி, தெற்கில் சிவகாசி, கிழக்கில் விருதுநகர், மேற்கில் திருவில்லிப்புத்தூர் பகுதியில் நற்செய்திபணி அறிவிக்க அனுப்பப்பட்டார்.
தாமஸ் ராக்லண்டு அவர்கள் பனை மரங்கள் மிகுதியாய் இருந்த சிவகாசி பகுதியை தேர்வுசெய்து அங்கு ஒரு ஒலை குடிசையில் தங்கி தன்னுடைய நற்செய்திபணியை ஆரம்பித்தார்.
இதுவரைக்கும் வட திருநெல்வேலி பகுதியில் ஒரு கிறிஸ்தவர்கூட இல்லாதநிலையில், வளர்ந்து பெருகி இருக்கும் தென் திருநெல்வேலியை சேர்ந்த கிறிஸ்தவ உபதேசிமார்கள் வட திருநெல்வேலிக்கு வந்து நற்செய்தி அறிவிக்க அறைகூவல் விடுத்தார். இதனால் பவுல் தானியேல், மரியான் உபதேசியார் போன்ற பல உபதேசியார்கள் வட திருநெல்வேலியில் நற்செய்திபணி செய்ய முன்வந்தனர்.
ராக்லண்டு அவர்கள் வட திருநெல்வேலி பகுதியில் ஒன்பது மாதங்களில் உபதேசியார்கள் குழுவினரோடு சென்று சுமார் 750 கிராமங்களுக்கு நடந்து சென்று நற்செய்தி பணியை அறிவித்ததார்.
ராக்லண்டு அவர்கள் அதிகாலமே பனை மரம் ஏறும் சாணார் இன மக்களிடம் சென்று பனங்காட்டில் அவர்கள் பனை மரம் ஏறி இறங்கும் வரை காத்திருந்து ஆண்டவரின் அன்பை ஒவ்வொருவருக்காக அறிவித்து பின்னர் அவர்கள் அடுத்த பனை மரம் ஏறி இறங்கும் வரை காத்திருந்து பின்னர் அவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார்.
ராக்லண்டு அவர்கள், சாணார் இன மக்களும் தலித் இன மக்களும் இந்துமத பூசாரிகளால் சமுதாயத்தில் இழிவாக நடத்தப்பட்டதை கண்டு மனம் பதைபதைதத்துப் போனார்.
ஒருமுறை இராஜபாளையம் பகுதியில் நற்செய்திபணி அறிவிக்க சென்றபோது அங்கு ஒரு ஜமின்தார் விளைநிலத்தில் ஏர் மாடு மூலம் நிலத்தை உழுவதற்காக ஏரின் ஒரு முனையில் ஒரு காளை மாட்டையும் மறுமுனையில் சாணார் இன பெண்ணையும் கட்டி வைத்து வேலை வாங்கியதை கண்டு மனம் வெதும்பி அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
ராக்லண்டு அவர்கள் இந்துமத பூசாரிகளின் சாதீய கொடுமைகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராக போராட ஆரம்பித்ததினால் ஜமின்தார்கள், மிராசுதார்கள் மற்றும் இந்துமத பூசாரிகள் இவருடைய நற்செய்திபணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இந்நிலையில் வட திருநெல்வேலியில் அமைந்திருந்த கிராமங்களுக்குள் நற்செய்தியைப் பறைசாற்ற உள்ளே நுழைந்தார். நுழைந்ததுதான் தாமதம் கற்களும் தூசிகளும் அவரை நோக்கி வீசப்பட்டன. கிறிஸ்துவின் நற்செய்தி பணியினிமித்தமாக பல அவமானங்கள், நிந்தனைகள், போராட்டங்களை சந்திக்க நேரிட்டது. ஆயினும் சோர்ந்துபோகாமல் நற்செய்தி பணியை செய்ததினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
ஒருமுறை ராக்லண்டு அவர்கள் சிவகாசி பகுதியில் நற்செய்திபணிக்காக சென்றபோது அவருக்கு களைப்பு ஏற்பட்டு மிகுந்த பசி உண்டாயியிற்று. ஆகவே அங்கிருந்த ஒரு இந்துமத பூசாரியின் வீட்டில் உணவு தரும்படி கேட்டுக்கொண்டார். அவர்களோ கூழ் மட்டும் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அந்த குடும்பம் ராக்லண்டு அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல், தங்கள் பாத்திரங்களில் உணவு கொடுத்தால் பாத்திரங்கள் தீட்டு பட்டுவிடும் என்று கூறினர். ஆகவே ராக்லண்டு அவர்கள் தான் அணிந்திருந்த தொப்பியில் அவர்கள் கொடுத்த கூழ் ஐ பெற்றுக்கொண்டு அதைக்குடித்து பின்னர் நற்செய்தி அறிவிக்க சென்றார். இவை எல்லாம் வட திருநெல்வேலி மக்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள பொறுத்துக்கொண்டார்.
ஒரு முறை 1855 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம் நாள் சாத்தூர் பகுதியில் நற்செய்திபணி அறிவிக்க சென்றபோது அங்கு ஒரு இந்துமத பூசாரி ஒருவன் தடியால் தலையில் அடித்தான். இடம் விட்டு நகரும் முன்னே சரமாரியாக அடிகள் விழுந்தன. இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் நடக்கக் கூட தெரியாத சிறு பையனும் கூட, கல்லை தூக்கி எறிந்ததுதான் பரிதாபம்.
எதிர்ப்புகளை கண்டு பழகிப்போன ராக்லண்டு அவர்கள் அவர்களையும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். இதையெல்லாம் பார்த்த சாணார் இன மக்கள் நற்செய்திபணியை கேட்க வாஞ்சை கான்பிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில் *அருணாச்சலம் என்பர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வேதபோதகம் என்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். வேதபோதகம் தன்னுடைய சொந்த பணத்தின் மூலம் 1860 ம் ஆண்டு ஒரு ஆலயத்தை கட்டினார். இதை ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த மரியான் உபதேசியார் அவர்கள் திறந்து வைத்தார். இப்படியாக பல ஆலயங்கள் சிவகாசி மற்றும் சுற்றுப்புரங்களில் கட்டப்பட்டன.
இதனையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்துமத பூசாரிகள், நிலச்சுவான்தாரர்கள் எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறிய மக்களின் வாழ்வாதாரமாக இருந்த, பனை ஏறுதல், துணி சுத்தம் செய்தல், முடி வெட்டுதல் இவைகளை செய்யவிடாமல் அவர்களுடைய பொருளாதாரத்தை சூறையாடினார்கள். அநேக கிறிஸ்தவர்களின் விளைநிலங்கள், குடிசைகள், உடைமைகள் எல்லாம் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கிறிஸ்தவகளை ஊரில் இருந்த குடிநீர் கிணறுகளிள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும் எவரும் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்தார்கள். கிறிஸ்தவர்களை இந்து கோவில்களுக்கு அழைத்து அவர்கள் மூலம் தேர் இழுக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். இதை கிறிஸ்தவர்கள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்த்தவர்களை இந்துமத பூசாரிகள் அடித்து விளாசினார்கள். ஆயினும் ஒருவரும் கிறிஸ்துவை மறுதலிக்க வில்லை.
பல நிலச் சுவான்தாரர்களும், மிராசுதாரர்களும் அவர்களுடைய ஆதிக்கத்தினால், அவர்கள் அதிகாரத்திற்குட்பட்ட கிராமங்களில் கிறிஸ்துவின் நற்செய்திபணி நுழைந்துவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
இதையெல்லாம் கண்ட ராக்லண்டு அவர்கள் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு என்று ஒரு கிராமத்தை விலைக்கு வாங்கி அதற்கு சாட்சியாபுரம் என்று பெயரிட்டு அதில் கிறிஸ்தவர்களை குடியமர்த்தினார். அப்படியே வேங்கிடாசபுரம், ஒட்டரம்பட்டி, கல்லத்திக்கிணறு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.
1856 ம் ஆண்டு சிவகாசி பகுதியில் கடும் காலரா நோய் தாக்கியது. பல கிராமத்து மக்கள் மரித்துப்போனார்கள். இந்நிலையில் ராக்லண்டு அவர்கள் தியோபிலஸ் ஜார்ஜ் பேரன்புரூக் என்னும் மருத்துவ மிஷனெரியை அழைத்து வந்து அநேக மக்களை காலரா நோயிலிருந்து காப்பாற்றினார்.
ராக்லண்டு அவர்களின் நற்செய்திபணியினால், அச்சம்பட்டி, வாகைக்குளம், பொட்டல்பட்டி, திருவில்லிப்புத்தூர், சிவகாசி, பனையடிப்பட்டி, சாத்தூர், நல்லூர், பனைவடலி, பன்னீர்குளம் போன்ற கிராமங்களில் இருந்து அநேக சாணார்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவர்களுக்கு என்று ஆலயத்தை கட்டி ஆண்டவரை ஆராதிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் கட்டிய முதல் திருச்சபை கல்போது என்ற கிராமமாகும்.
ராக்லண்டு அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழும்பி அங்குள்ள மக்களின் பொருளாதார வாழ்க்கை உயருவதற்காக ஒரு மணிநேரம் ஜெபித்து, பின்னர் பனை ஏறுவதற்காக கிறிஸ்தவர்கள் கடந்து செவார்கள். இப்படியாக பனை ஏறும் மக்களை ஆலயத்திற்கு அழைத்து வந்தார்.
ராக்லண்டு அவர்களின் இடைவிடாத நற்செய்தி பணியினால் ஆயிரத்திற்க்கும் அதிகமான கிராமங்களில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். எனவே அவர்களுக்கு அங்கு ஆலயங்களும் கட்டப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 1857 ம் ஆண்டு ஒரு மழை காலத்தில் ராக்லண்டு அவர்களின் சரீரம் காச நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டது. ராக்லண்டு அவர்கள் திருமணம் செய்யாமல் வட திருநெல்வேலி பகுதி மக்களுக்கு மழை, பனி, குளிர், வெயில், பசி, பட்டினி என்று பாராமல் ஊழியம் செய்ததால் காச நோயின் கடுமையினால் இரத்தம் வாந்தி எடுத்தார்.
கிறிஸ்தவர்களும் cms மிஷனெரிசங்கமும் குருவானவர் ராக்லாண்டு அவர்களை சொந்த தேசத்திற்கு சென்று மருத்துவ சிகிச்சை செய்யவும் சற்று ஒய்வு எடுத்துக்கொள்ள வற்புத்தியும் அதை அன்போடு தடுத்துவிட்டு, தொடர்ந்து நற்செய்திபணியை அறிவித்தார்.
இந்நிலையில் ஒருநாள் கடுமையான மழைபெய்து கொண்டிருக்கும்போது பனையடிப்பட்டியில் ஒரு கால்வாயை தாண்ட முற்பட்டபோது தடுமாறி விழுந்தார். ஆகவே வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் வாயிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டே இருந்தது. பின்னர் தன்னை திடப்படுத்திக் கொண்டு, எல்லோரையும் வேத போதனையால் விசுவாசத்தில் பலப்படுத்திவிட்டு, இயேசுவே நீர் கொடுத்த வாழ்க்கைக்காக நன்றி என்று உரத்த சத்தமாய் கூறி தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
ராக்லண்டு அவர்கள் தன்னுடைய 43 ம் வயதில் அக்டோபர் 22 ம் நாள் 1858 ம் ஆண்டு கோதுமை மணியாக விதைக்கப்பட்டார். முதலில் பனையடிப்பட்டியில் ராக்லண்டு அவர்களின் சரீரத்தை அடக்கம் செய்ய கிறிஸ்தவர்கள் விரும்பினார்கள். ஆனால் கடும் அடை மழையினால் பின்னர் சிவகாசி யில் அடக்கம் செய்யப்பட்டார்.
1916 ம் ஆண்டு ஜுன் மாதம் 29 ம் நாள் ராக்லண்டு அவர்களின் நினைவாக சிவகாசியில் ராக்லண்டு மெமோரியல் ஆலயம் என்ற பெயரில் கட்டி எழுப்பப்பட்டது. அங்கு அவர் இங்கிலாந்து தேசத்தில் இவருடைய கணித அறிவிற்கு கொடுக்கப்பட்ட 4 வெள்ளிப்பதக்கங்கள் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ராக்லண்டு அவர்களின் புகழ்பெற்ற வாசகம் "நற்செய்தி பணியில் வெற்றியடைய தீட்டும் திட்டங்களில் மிகச்சிறந்த வழி இயேசு காட்டிய வழியே. அது கோதுமை மணிபோல் நிலத்தில் விழுந்து சாவதே" என்பதாகும்.
1945 ம் ஆண்டு தாமஸ் ராக்லண்டு அவருடைய கல்லரைக்கு வந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மௌன்ட் பேட்டன் பிரபு கூறும்போது இங்கிலாந்தின் பிரபுக்களோடு அடக்கம் பண்ணப்பட்டிருக்க வேண்டிய இவருடைய சரீரம், இந்திய மன்னுக்காய் தன்னை அற்பணித்தார் என்று புகழ் அஞ்சலி செலுத்தினார்.
வட திருநெல்வேலி மக்களுக்கு என்று தன்னுடைய வாழ்க்கை முழுவதும் அற்பணித்து தன் சொந்த தேசம் திரும்பி செல்லாமலே தன்னுடைய கடைசி மூச்சு வரைக்கும் நற்செய்திபணியை அறிவித்தார். தாமஸ் ராக்லண்டு அவர்கள் வட திருநெல்வேலியின் அப்போஸ்தலன் என்று இன்றுவரை அழைக்கப்படுகின்றார்.
தாமஸ் ராக்லண்ட் ஊழியம் செய்தது குறுகிய ஆண்டுகள் எனினும், சுமார் 1400 கிராமங்களுக்கும் அதிகமாக கால்நடையாய் சென்று நற்செய்தி பணியை அறிவித்தது இன்றும் அநேக ஊழியர்களுக்கு முன்மாதிரியாகவும், சவலாகவும் இருக்கின்றது. இன்றும் வட திருநெல்வேலி மக்களின் மனங்களில் மட்டுமல்ல எல்லா கிறிஸ்தவர்களின் மனங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.
தாமஸ் ராக்லண்டு ஒரு கோதுமை மணியாய் விதைக்கப்பட்டார். அவருடைய நற்செய்திபணியின் அறுவடையாய் இன்று வட திருநெல்வேலி பகுதியிலிருந்து அநேகர் ஆத்துமா ஆதாயம் செய்யும் பணியில் மிஷனெரிகளாக, சுவிசேஷகர்களாக, தீர்க்கதரிசிகளாக, போதகர்களாக, வேதாகம கல்லூரி ஆசிரியர்களாக முளைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். தாமஸ் ராக்லண்டை நமக்கு தந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.
Comments
Post a Comment