சவாலும் சத்தியமும்.CHALLENGE & COMMITNENT. , யோவான் 6: 5-14. நான்காம் வெள்ளி..
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இந்த தவக்காலத்தில் தென்னிந்திய திருச்சபை மிக சிறப்பாக தூய யோவான் நற்செய்தி நூலிலிருந்து ; தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அற்புதங்களை தியானிக்கும்படி ஒவ்வொரு வெள்ளியும் நமக்கு சிறப்பான தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். மிகவும் மன மகிழ்ச்சியான செயல். அதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஏனென்றால், இதன்மூலம் பல வேத கருத்துக்களை கற்றுக் கொள்கிறேன்.
What is meant by Challenge?
According to Cambridge Dictionary, Challenge is
"something that needs great mental or physical effort in order to be done successfully and therefore tests a person's ability:"
இது ஆண்டவருக்கு தன் திறமையை நிரூபிக்க கொடுக்கப்பட்ட சவால். ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்தல் என்பது அதுவும் வனாந்தரமான இடத்தில் பெரிய சவால் ஆகும்.இதை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந்த அற்புதம் மட்டும் தான் நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறுகிறது. (aside from the Resurrection) இந்த அற்புதம் கப்பர்நாகூம் அருகே உள்ள பெத்சாய்தா பட்டிண மலைப்பகுதியில் நிறைவேற்றினார் என்பதை லூக்கா நற்செய்தியாளரும் இதை உறுதிப்படுத்து கிறார்.(லூக்கா 9:10) யோவான் நற்செய்தியில் (யோவான் 1:44) பெத்சாய்தா பட்டிணம் பேதுரு, அவன் சகோதரர் அந்திரேயா, மற்றும் பிலிப்பின் சொந்த ஊராகும். எனவேதான் இந்த அற்புதத்திள் அந்திரேயா, பிலிப்பும் மிக ஆர்வமாக பங்கு பெற்று; இயேசு இந்த அற்புதத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவிபுரிந்தனர். இந்த அற்புதம் நடந்த பின்னணியை நாம் மனதில் கொள்ளவேண்டும். இயேசு திருமுழுக்கு யோவான் ஏரோது ஆன்டிபாஸ் ஆல் கொள்ளப்பட்டதை அறிந்து; தன்னையும் அடுத்து கொள்வான் என்று அறிந்து ஒரு படகில் ஏறி பெத்சாய்தா பட்டிணத்தின் அருகில் உள்ள வனாந்திறத்திற்கு சென்றார்.
What's meant by Commitment? According to Oxford Dictionary; Commitment is "a promise to support somebody". இது இறை மைந்தன் இயேசு கிறிஸ்து 5000 பேருக்கு உணவளிக்கின்ற நிகழ்வை பொருத்தமாககுறிப்பிடுகின்றது. "பசி வந்தால்பத்தும் பறந்து விடும் என்பர்" ஆண்டவரும் நியாய தீர்ப்பு நாளில்; "நான் பசியா இருந்தேன் எனக்கு உணவளித்தீர்களா" ? என்று கேட்பார்.திருவள்ளுவரும்; "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்" என குறிப்பி டப்படுகிறார். அதாவது; "நம்மிடம் இருக்கும் உணவை பசியில் இருப் போருக்கு பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும். ஒவையார் தன் ஆத்தி சூடி மில்," ஐயம் இட்டு உண்" என மூன்றே வார்த்தையில் இல்லை என்று வந்த ஏழைகளுக்கு உணவைப் பகிர்ந்து அளித்துவிட்டு பின்பு தானும் உண்ண வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
எனவே தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பசியால் வாடிய மக்களுக்கு உணவு அளிக் கின்ற அன்பின் தன்மையை பார்க்கின்றோம். நமக்கு என்ன தேவை என்பதை ஆண்டவர் நன்றாகவே அறிந்திருக்கிறார். தக்க சமயத்தில் அதை நமக்கு கொடுக்க சித்தமாய் இருக்கிறார். 1பேதுரு 5:6ல் "ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்" என்று கூறுகிறார்.
விடுதலை பயணத்தில் மன்னா என்ற உணவு அதிசயமாக கடவுளால் இசுரவேலருக்கு அவர்களது 40 ஆண்டுகால பாலைவன வாழ்க்கையில் கொடுக்கப்பட்டதாகும். அந்தப் பயணத்தில் மக்கள் இறைச்சிக்காக எப்படி போராடினார்கள் என்பது தெரியும். உணவு பொருட்கள் கிடைக்காமல் எத்தனை நாட்டில் பசி, பட்டினி போராட்டங்கள் வெடிக்கின்றன. எனவே தான் ஆண்டவர்
ஆன்மீக உணவோடு சரீர உணவையும் கொடுத்து தன்னுடைய அற்புதமான செயலைநிகழ்த்துகின்றார்.
முண்டாசுக்கவிஞ்சன் பாரதி " தனியொருவனக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடு வோம்" என்று சொன்னார். பிரான்ஸ் நாட்டின் புரட்ச்சிக்கு காரணமே ரொட்டி துண்டுக் காகத்தான். ( Bread or blood) 16ம் லூயி பதவி இழந்தான்.
உணவு என்பது உயிர் வாழ்வது. அதனால்தான் ஆண்டவர் உணவு கொடுத்தார். கொரனா (Corana) என்ற கொடிய நோயின் காலத்தில் நமது திருச்சபைகள் தினமும் ஏழைகளுக்கு உணவு கொடுத்து உதவியது. இந்து ஆலயங்களில் தினமும் உணவளிக்கின்றனர். கிறித்தவர்கள் உணவளிப்பதை இறைப்பணியாக செய்ய வேண்டும்.
1. படைப்பில் துவங்கிய அற்புதம்: Wonders Start in the Creation:
உலகமும் அதன் குடிகளும் ஆண்டவரால் அற்புதமாய் படைக்கப்பட்டது. ஆண்டவரின் அற்புத வார்த்தையால் அனைத்தும் உருவாயிற்று. அந்த அற்புதம், படைப்பின் காலம் முதற்கொண்டு இயேசுவின் காலம் வரை நிகழ்ந்தது. இன்றளவும் ஆண்டவரின் நாமத்தினால் நிறைவேறி வருகிறது. ஆண்டவரின் நாமங்களில் ஒன்று "அவர் அற்புதமானவர்" ( Wonderful God). அற்புதங்கள் செய்கின்றவர் நம் மத்தியில் இருக்கிறார். " யோசுவா 3:5ல் "கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்" என்று கூறுகிறார். ஆனால் அதன் முற்பகுதியில் "நீங்கள் உங்களை புனித படுத்திக் கொள்ளுங்கள்" என்ற வார்த்தை வருகிறது. எனவே அன்பானவர்களே நமக்கு ஆண்டவர் அற்புதங்கள் செய்ய வேண்டுமானால் நாம் தூயவராய் இருக்க வேண்டும். மற்றும் வேதத்திலேயே யோசேப்புவை அற்புத வரங்கள் பெற்றிருந்த முதல் மனிதனாக நாம் பார்க்கிறோம். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி. கனவுகளின் அர்த்தத்தை வெளிப்படுத்தி வரலாற்றில் நடக்கபோகும் (Interpretation of Dreams) நிகழ்ச்சிகளை அவனால் முன்கூட்டியே சொல்ல முடிந்தது. மோசேயின் தலைமையில் நடந்த விடுதலைப் பயணம் அற்புதங்கள் பல நடந்தேறிய பயணமாகும். யோபு 9:10ல்
"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங் களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்’ .".என்று தன் வாழ்நாளில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து சொல்கிறார்
2. அற்புதத்தின் ஆணிவேர் - சிறுவன்: The Root cause of Wonder is the boy :
இயேசு இந்த அற்புதத்தை திபேரியா கடல் பகுதியில் உள்ள மலையின் மீது( பெத்சாய்தா) நின்றுகொண்டு கிறிஸ்து பேசத் தொடங்கினர்.
மக்கள் யாவரும் அவரது பேச்சை ஆழ்ந்த அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நேரமோ மதியத்திலிருந்து மாலைப் பொழுதை நெருங்கிக் கொண்டிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக்கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்க லாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, . "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.ஆனால் இயேசு அந்த சிறுவனிடமிருந்து ஐந்தப்பம் இரண்டு மீன் களை வாங்கி ஆசிர்வதித்து சீடர்களிடம் கொடுக்கிறார். அது பலுகிப் பெருகி ஐயாயிரம் பேருக்கு மேல் திருப்தியாக உணவு அளிக்கப்படுகிறது. இந்த சிறியவனின் கொடுக்கும் தன்மை மிகவும் பாராட்டத்துக்குரியது. அவன் தன் பசியை பொருட்படுத்தாமல் மற்றவர்களின் பசியாற்றும் அட்ச்சய பாத்திரமாய் (தெய்வத் தன்மையால் உணவு குறையாத பாத்திரம்) திகழ்கிறார். இவனின் தாயையும் நாம் பாராட்ட வேண்டும். அவனுடைய உள்ளத்தில் கொடுக்க வேண்டு
மென்ற எண்ணத்தைத் தேவன் அளித்திருந்தார். பெற்றோர்களாகிய நாம் நம் பிள்ளைகளுக்கு கொடுக்கும் தன்மையை கற்றுத் தர வேண்டும். "கொடுங்கள் அப்போது கொடுக்கப்படும்’ என்பதே இறைவன் வாக்கு. ஆக ஐந்தப்பம் இரண்டு மீனை தேவன் ஆசீர்வதித்தது, அவர்களுக்கு உணவு கொடுக்க மட்டுமல்ல, தன்னை மேசியா என நிரூபிக்கவுமே. அந்தச் சிறுவனின் செயலால் அநேகர் பயனடைந்தனர். நம்மிடத்திலும் இருக்கிற திறமைகளைக் கொண்டு இயேசு பெரிய காரியங் களைச் செய்வார். அதற்கு நாம் உண்மையுள்ள வர்களாக, அவருடைய வார்த்தையின்படி வாழவேண்டும்.
3. சிறிய உணவு விருந்தாக மாறியது: The small meal turned into Feast:
சிறுவன் கொடுத்த உணவு சிறியது ஆனால் அது ஆண்டவர் கரத்திற்கு சென்ற பொழுது பெரிய விருந்தாக மாறியது. எல்லோரும் தேவையான அளவு திருப்தியாக சாப்பிட்டு முடித்தனர். அவர்கள் சாப்பிட்டது போக, மிகுதியாக 12 கூடைகளில் அப்பமும் மீன் துண்டுகளும் இருந்தன. மீதியான வைகளை வீண் படுத்தக் கூடாது என்பதை இங்கு கடவுள் பாடமாக கற்றுத் தருகிறார்.இந்த அற்புதத்தைப்பார்த்த மக்கள் இவர் தீர்க்கதரிசி என மக்கள் நம்பினார்கள். இந்த தீர்க்கதரிசி எப்போதும் நமக்கு உணவு தரும்படி இவரை ராஜாவாக்கிவிடலாம் என்று கருதி அவரை நெருங்கு கையில், அவர் விலகிப் போனார். இது மனித செயல். ஆனால் அவர்களோ அவர் கொடுத்த சாப்பாட்டின் மேலேயே கவனமாக இருந்ததால் இயேசு அவர்களை கடிந்து கொள்ள வேண்டியதாயிற்று. (நீங்கள் அப்பம் புசித்த் தாலேயே என்னை பின் பற்றுகிறீர்கள் என கூறினார்) ஆண்டவரால் ஒன்றும் இல்லாமையிலுருந்து அவரால் எதைவேண்டு மானாலும் உருவாக்க முடியும். அது மந்திரம் ஆகும். தம்மிடம் உள்ளதை வைத்தே பெறுக செய்வார். மிக முக்கியமாக ஒன்றே நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இயேசு அப்பத்தையும் மீனையும் வாங்கியவுடன் வானத்தை நோக்கி பிதாவை வேண்டி தான் இந்த காரியத்தை செய்தார். முதலில் கடவுளை வைத்து செய்கின்ற காரியம் வெற்றி பெறும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு நமக்கு வழிகாட்டி நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் . முதலாவது நாம் இறைவனின் இறையர சையும் அவருடைய நீதியும் தேட வேண்டும், அவர் நமக்கு சரீர பிரகாரமான தேவைகள் அனைத்தையும் கொடுக்க வல்லவராயும், நல்லவராயும் இருக்கிறார்.
4. ஆண்டவரின் அற்புதம் மக்களுக்கானதே: The miracles by God is for his People:
இயேசுவின் மனதுருக்கமே பல அற்புதங்களை செய்ய வைத்து. பலருக்கு புது வாழ்வை கொடுத்தது. இயேசு செய்த அற்புதங் களில் 35 அற்புதங்களை நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் விவரிக்கின்றனர்.நாம் ஆராதிக்கிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவனுள்ளவர். ‘அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்’. (சங்.33:9) ஆண்டவர் அற்புதங்களை மக்கள் நலனுக்காகவே செய்தார். ஆனால் யூதர்கள் இவர் பிசாசுகளின் தலைவன் பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர்.(மத்தேயு 12:24) அன்பானவர்களே!
உங்களுக்கு அற்புதம் செய்வதற்கு என்று ஆண்டவர் ஒரு வேளை வைத்திருப்பார். அந்த நேரம் வரும்போது நிச்சயம் ஆண்டவர் அற்புதம் செய்வார்.இறைவன் நமக்கு அற்புதங்கள், அதிசயங்கள் செய்கிறவர். நமக்கு இறைவன் செய்யும் அற்புதங்கள் நம் பக்தியை வளர்க்கும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பிய அனைவருக்கும் அதிசயம் நடக்கிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது.உ.ம் பார்வையற்ற இருவர் நம்பியதால் அவர்களுக்கு ஆச்சரியம் நடக்கிறது. கண்கள் மிக அற்புதமாய் திறக்கின்றன. அதிசயம் நடந்த பிறகு அவர்கள் செய்தது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆண்டவர் இயேசு நடந்ததை வெளியே சென்று அறிவிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் அதையெல்லாம் தாண்டி நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியை பரப்புகிறார்கள். இதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டும்.
எபேசியர் 3:20 நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறை எனயாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
5. மோசஸ் இயேசு அளிக்கும் உணவிற்கு முன்னோடி: Moses was the pioneer of Jesus Christ in Feeding the Multitudes:
1 இயேசு இந்த அற்புதத்தை செய்வதற்கு முன்பாக தன் சீடர்களுடன் படகில் ஏறி கலிலேயா கடலை கடந்து பாலைவனமான இடத்திற்கு சென்றனர்.
மோசசும் இஸ்ரவேல் மக்களும் செங்கடலை கடந்து சீனாய் மலை The Mount Sinai) பாலைவனத்தில் தங்கினர்.
2 இயேசுவின் சீடர்கள் இந்த பாலைவனத்தில் எவ்வாறு இம்மக்களுக்குஉணவளிக்க முடியும் என்று கேட்டனர். அவ்வாறே இஸ்ரேல் மக்கள் மோசேயிடம் இந்த வனாந்தரமான இடத்தில் என்ன சாப்பிட முடியும் என்று கேட்டனர்.
3. இயேசு இந்த மக்களுக்கு உணவு அளிப்பதற்கு முன்பாக 50 ஆகவும் 100 ஆகவும் வரிசைப்படுத்தி மக்களை அமர செய்தார்.
அவ்வாறு மோசே இஸ்ரேல் மக்களை 100 ஆகவும் 50 ஆகவும் வரிசைப்படுத்தி உணவளித்தார்.
4. இயேசு அப்பத்தையும் மீனையும் உணவாக கொடுத்தார். மோசே மன்னா என்ற விண்ணக (The bread of Heaven) உணவையும், காடையும் (quil) உணவாக கொடுத்தார்.
5. இயேசுவின் கரத்திலிருந்து அப்பமும் மீனும் பலுகு பெருகி அனைத்து மக்களும் திருப்தியாக சாப்பிட்டு மீதியாகும் வரை கொடுத்துக் கொண்டே இருந்தார். மோசே காலையில் மன்னாவை பனி பொழிவது போல கொடுத்துக் கொண்டே இருந்தார்.மாலையில் காடையை விழச்செய்தார்.
6 இயேசு கிறிஸ்து இஸ்ரேல் மக்களை வியாதி, வேதனை, பிணி, பாவங்கள் போன்றவற்றிலிருந்து விடுதலை கொடுத்தார். மோசே இஸ்ரவேல் மக்களை பாரோவிடமி ருந்து மீட்டு விடுதலை கொடுத்தார்.
7, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்த நோக்கமே பாவிகளை மீட்க, சிலுவையை சுமந்து, பாடுபட்டு, மறித்து, உயிர்த்தெழுந்து தன் பிதாவின் சித்தத்தை வெற்றியுடன் நிறைவேற்றினார். ஆனால் மோசே அவர்கள் ஆண்டவர் கொடுக்க இருந்த கானானை( The Promised Land) நெருங்கும் தூரத்திலே பாலைவனத்திலே மரித்துப் போனார். The Incomplete Mission.
பிரியமானவர்களே! நமது ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.(வெளிப் 22:13) என்றவர். நாம் ஆண்டவர் இடத்தில் அற்புதங்களை எதிர்பார்ப்போம். கேட்போம். கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற நம்பிக்கையும் விசுவாசமும் மிக அவசியம். அற்புதங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். துதிப்போம் துதித்துக் கொண்டே இருப்போம். ஜெபிப்போம் ஜெபித்துக் கொண்டே இருப்போம். வேத வசனங்களை தியானிப்போம். தியானித்துக் கொண்டே இருப்போம். சிலுவை பாடு எனக்காக என்ற சிந்தனை என்றும் நம்மில் இருக்க கடவுள் நமக்கு கிருபை செய்வாராக ஆமென்!
Comments
Post a Comment