கிறித்து அமைதியின் அரசர்.CHRIST: THE KING OF PEACE. குருத்தோலை ஞாயிறு. சகரியா 9-1-12. திருப்பாடல்கள் 24: எபேசியர் 2:11-22 மாற்கு 11:1-11.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!. கிறித்து அமைதியின் அரசர். அவர் இந்த உலகின் அரசர் அல்ல. அவரின் அரசு வின்னரசு என்ற இறையரசு, இந்த மண்ணகத்தில் மலர வேண்டும் என்பதே ஆண்டவரின் எதிர்நோக்கு. கடவுளின் திருவுளப்படி நாம் செயல்பட்டாள் அவரின் இறையாட்சியில் பங்கு பெறுவோம். இயேசு உண்மையில் யூதருடைய அரசரா? Is Jesus really The King of Jews? இந்த கேள்விக்கு நாம் மத்தேயு 2:1,2 ல் "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்." என ஞானிகள் முதன் முதலாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பிளேயே ராஜாவாக பார்ப்பதை நாம் பார்க்கிறோம். இறைத்தூதர் காபிரியேள் இயேசுவின் தாயாக மரியாளுக்கு வாக்காக உரைத்தது. " அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரிய ணையை ( The Crown of the King David) ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப் பார்.அவர் யாக்கோ பின் குடும்பத்தின் மீது என்றெ ன்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். (லூக்கா நற்செய்தி 1:32.33)
There is no end for his Kingdom. என இயேசு கிறிஸ்து இவ்வுலகில் இராஜவாகவே தோன்றினார்.அடுத்ததாக அவரை உரோம பேரரசின் பொந்தியு பிளாத் (Pontius Pilate) இயேசுவை "யூதருடைய இராஜா" என எபிரேயம், கிரேக்கம், லத்தின் என்று மூன்று மொழிகளில் அதிகார பூர்வமாக எழுதி சிலுவை யில் பொருத்தினார். "JESUS OF NAZARETH, THE KING OF THE JEWS” (John 19:19). It's an authentication of the authority by the Romen Emperor to give the Title as The King.
அவர் அரசர் என்பதை உலகிற்கு அறிவித்தார். இயேசுவின் பிறப்பிற்கு முன்பாக சக்கரியா தீர்க்கர் கி.மு 520.ல் "மகளேசீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர்நீதியு ள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதை யின்மேல், கழுதைக் குட்டி யாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். (செக்கரியா 9:9) ல் அவர் வெற்றி அரசர் என தீர்க்கரும் முன்னுரைத்தார். இயேசு செய்த அற்புதங் களை பார்த்து; யூதர்கள் இயேசுவை இஸ்ரவேலின் அரசராக முயற்சித்தனர். ஆனால் விலகி போனார். அவர் அமைதியின் அரசர் என ஏசாயா 9:9ல் குறிப்பிட்டு ள்ளார். அவரது ஆட்சியில் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரிய ணையில் அமர்ந்து தாவீதி ன் அரசை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை இஸ்ரேவே ளர்களுக்கு இருந்தது.
". கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். The King of Kings, The Lord of Lords. என
1 திமொத்தேயு 6:15ல் பவுலடிகளார் கூறுகிறார். அவர் நம்மை எந்நாளும் ஆளும் அரசர். The King who reigns us. அவரின் அரசாட்சியின் கீழ் நாம் வாழ்வது மிக மகிழ்ச்சி. ,அன்பு சந்தோஷம், சமாதானம் என்றும் நமக்கு உரித்தாகுக.
2. ஏன் இயேசு கிறிஸ்து அமைதியின் அரசராக கருதப்படுகிறார்: Why Jesus is called the Prince of Peace?.
பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவை ஏன் அமைதி யின் அரசராக நாம் காண்கி ழறோம்; விவலிய கருத்துக ளின் அடிப்படையில் நான் அவரை அமைதியின் அரச னாக பார்க்கிறேன்
தீர்க்கர்களின் முன்னறிவிப்பு: The prophecy of the Prophets:
இயேசு கிறிஸ்து அமைதியின் அரசர் இந்த உலகில் தோன்றுவார் என்று
சுமார் கி.மு.600 ஆண்டுகள் முன்பாகவே முன்னுரி வித்தார்.( ஏசாயா 9:9) இவர் உலக அரசர்கள் போல நாடுகளை வெல்கின்ற, சண்டை இடுகின்ற அரசராக இல்லாமல் இவ்வுலகில் அமைதிய நிலைநாட்டும் அரசராக தோன்றினார். சங்கீதக்காரன் 20:7,8ல் "சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்.
அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்; நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.
(திருப்பாடல்கள் 20:8) என ஆண்டவரின் பெயரிலே பெருமை கொள்கிறோம் என கூறுவதை பார்க்கி றோம். ஏன் ஆண்டவர் கழுதை குட்டியாகிய மறியி ன் மீது ஏறி வரவேண்டும். ஏன் குதிரையை பயன் படுத்தவில்லை? ஆண்டவர் அமைதியின் அரசர். இந்த உலகத்திற்கு அமைதியை கொண்டு வந்தவர். அவர் பிறப்பிலேயே தேவதூதன் "உன்னதத்திலே தேவனுக்கு மகிமையும், பூமியிலேயே அமைதியையும், மனுஷன் மேல் பிரியமும் உண்டா வதாக" (லூக்கா 2:14) என்று வாழ்த்தினார் அவர் ராணு வங்களின் அரசர் அல்ல; சண்டைக்கு பயன்படும் குதிரையின் மீது வருவ தற்கு. சாந்தமும், அமைதி யும், அன்பும், தாழ்மையும், இரக்கமும் ஆனவர். எனவே கழுதை குட்டியாகிய மறி யின் மீது ஏறி வந்தார். இந்தத் தீர்க்கர்களின் முன்னறிவிப் பின்படியே அவர் அமைதியின் அரசராக பவனி வந்தார்.
வின்னக தந்தையுடன் அமைதி: To Peace with Heavenly Father:
எபேசியர் 2:16-18: இயேசு தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவரே இவ்வுல கில் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்க ளுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவி த்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம். அவரேயன்றி நாம் தந்தை யுடன் சேரமுடியாது.
2. குருத்தோலை ஞாயிறு: Palm Sunday:
இந்த ஞாயிறு லெந்து காலத்தின் கடைசி ஞாயிறும் மற்றும் தூய வாரத்தின் தொடக்கமாகும். இந்த ஞாயிறு இயேசுவின் வெற்றி பயணமான எருசலேமின் பவனியை நினைவுப்படுத்த கொண் டாடப்படுகிறது. ஒலிவ மலையிலிருந்து இறங்கி இயேசு கிறிஸ்து எருசலே மிற்கு நுழைகின்ற பொழுது எருசலேமை பார்த்து கண்ணீர் விடுகி றார். லூக்கா 19:41,42ல் "இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார். "இந்தநாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக் கப்பட் டுள்ளது". என இயேசுவின் கண்ணீர் என் கண்களை களங்கிவிட்டது.அமைதியின் அரசர், எருசலேமே! அமைதியின் வழியை இந்த நாளிலாவதுஅறியக்கூடாதா? என கேட்கிறார். எருசலேம் இறைவாக்கினரை கொல் கின்ற நகரம். தன்னையும் கொல்லப் போகிறது என்பதை முன்பே அறிந்திருக்கின்றவர் நம் ஆண்டவர். அதுமட்டுமல்ல இந்த பாஸ்கா பண்டிகை யின் போது எருசலேமில் 3,00,000 மக்கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில்தான் எருசலேம் தேவாலய சுத்திகரிப்பு இயேசு நடத்தினார்.இந்த பவனியில் ஒலிவமர கிளைகளையும், குருத்தோலைகளையும் மக்கள் பயன் படுத்தினர். மக்கள் தங்கள் ஆடையை கழட்டி அவர் அமர்வதற்கு கொடுத்து தங்களையே கொடுப்பதற்கு சமம். ஒலிவ இலை அமைதியின் சின்னம், இது அமைதி அரசரின் பவனியின் கொடியாய் மக்கள் கைக ளில் ஏந்தி வரவேற்றனர். குருத்தோலை அவர் இளவரசர் என்பதை குறிப்பதற்காகவும், சிலுவையின் அடையாள மாக பயன்படுத்தப் படுகிறது. அக்காலத்தில் அரசர்கள், தலைமைக் குருக்கள் மட்டுமே கழுதை மேல் அமர்ந்து நகர் வலம் வருதல், கம்பள வரவேற்பு பெறுதல் ஆகிய உயர் பெருமை நிலையைப் பெற்றிருந்தனர். இந்த எருசலேம் வீதிகளில் பவனி செல்லும் இயேசு கிறிஸ்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சிலுவை சுமந்து செல்லும் அவறுக்கு முன்னோட்டமாக இது அமைகிறது. இதே வீதியில் தான் அவர் சிலுவையை சுமந்து செல்ல இருக்கிறார். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரி த்தனர். (மத்தேயு நற்செய்தி 21:9)குருத்தலை ஞாயிறு பவணி ஏசுவின் சிலுவை பாட்டின் பயணத்தின் முன்னோட்டமாக கருதப்படுகிறது.
3. இயேசுவின் வெற்றி பவனி வேதனை தந்தது: The triuph entry brings the sufferings:
இயேசு தலைநகர் எருசலே மில் அரசரைப் போல நுழைந்தார். எருசலேம் மக்களும் அவருக்கு அரச மரியாதையுடன் ஒலிவ் மர குருத்து ஏந்தி ஆடம்பரமான வரவேற்பு அளித்தனர். இது அந்த கால அரசியல் சூழலில் சாதாரண செயல் அல்ல. ஏற்கனவே (Chief Priests)தலைமைக் குருக்கள், பரிசேயர், இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய தகுந்த காரணத்தை தேடிக்கொண்டுஇருந்தனர்.இந்நிலையில் இது அவர்க ளுக்கு பொய் குற்றத் திற்கான தகுந்த காரணமாக கிடைத்தது.இது இயேசுவின் மீதான தலைமைக் குருக் கள், பரிசேயர், அரசியல் தலைவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது. இந்நிகழ்விற்கு பின்னர் இயேசுவே கொலை செய்யும் முயற்சியை வேகப் படுத்தனர். இவர்கள் இயேசு வை ரோம அரசருக்கு இணையாக ஊர்வலம் மக்களோடு வந்ததை" நானே அரசன்" என சொன்னதாக பிளாத்துவி டம் பொய்சாட்சி சொல்ல இதையும் பயன்படுத்தினர். ஆனால் இயேசு தான் பாடுகள் பட்டு, கொடிய சிலுவை மரணம் அடைவத ற்காகத் தான் எருசலேம் வருகிறோம் என்பதையும், மக்களுடன் தனது இறுதி பயணம் இது தான் என்பதையும் உணர்ந் திருந்தார்.இறுதியாக, கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
எருசலேம் மக்கள் கடவுள்பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற் றாலும் அவர்கள்தான் அவர் இறக்கவேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்க வில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்க ளும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க் காமல் நம்மை மீட்பதற்காக, நித்திய வாழ்வு தரும் ஆண்டவராக; நமக்கு அமைதி தரும் இறைவனாக இதயத்தில் வைப்போம் துதிப்போம். ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam.
Comments
Post a Comment