சிலுவையும் மறு சீரமைக்கும் கிறித்துவும். Cross And The Restoring Christ. யோபு: 42:10-17, எபேசியர் 2:1-10, திருப்பாடல்கள் 126. மாற்கு 10:46-52. பாடுகளின் ஞாயிறு.

முன்னுரை:
அன்பானவர்களே!. சிலுவையும் மறு சீரமைக்கும் கிறித்துவும் என்ற தலைப்பில் தியானிக்கின்ற நாம் முதலில் "மறு சீரமைப்பு"( Restoring) என்றால் என்ன என்பதை சிந்திப்போம். "மறுசீரமைப்பு என்பது முன்பு எப்படி இருந்ததோ அதேபோல் சரி செய்வது தான்" மறுசீரமைப்பு அல்லது புதுப்பித்தல் என்பதே‌. "Restoration is a bringing back to a former position or condition"
வேதத்தில் எசேக்கியேல் 36:11ல் மறு சீரமைப்பு என்பது, "உங்களில் மானிடரையும் விலங்கு களையும் மிகுதியாக்கு வேன். அவர்கள் பலுகிப் பெருகுவர். முற்காலங் களைப்போல் உங்களைக் குடியேற்றுவேன். முந்தைய காலங்களை விட மிகுதி யாக  நீங்கள் வளமடையச் செய்வேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். " என மறு சீரமைப்பை மனிதர்க ளுக்கும், விலங்குகளுக்கும் ஆண்டவர் செய்வதை பார்க்கிறோம். Restoration is for the entire Creation. Restoration is a Contineous process. நிறுவனங்களின் மறு சீரமைப்பு என பலரின் வேலை வாய்ப்புகளை பறிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.(Employee Reduction) ஆனால் ஆண்டவர் வழங்கும் மறு சீரமைப்பு புது வாழ்வு தருவது. இதனால்தான் இயேசு," வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னிடம் இளைப்பாற" என அழைக்கிறார்.  சிலுவை என்ற தண்டனை சின்னம்.  வேதத்தின் படி தொடக்க நூல் ( ஆதியாகமம்) 40:18,19.ல் "அதற்கு யோசேப்பு, "கனவின் பொருள் இதுவே; மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும். 
இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் (Impalment or Stake) ஏற்றுவான். பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும்" என்றார். " இந்த தண்டனை வேதத்தின் படி முதன்முதலில் எகிப்து தேசத்தில் சிலுவை மரணம் வழக்கத்தில் இருந்து ள்ளது.இதற்கான ஆதாரங்கள் (உபாகமம் 21:22, எண்ணாகமம் 25:4) இது பாரசீகம், கிரேக்கம், ரோமப் பேரரசிலும் மற்ற நாடுகளிலிலும் வழக்க த்தில் இருந்துள்ளன.நம் தமிழகத்திலுள்ள பல கோயில்களில் கழுவேற்றம் குறித்தான ஓவியங்களும், சிற்பங்களும் காணப்ப டுகின்றன. கழுவேற்றம் அரசை எதிப்பவர்களுக்கும், கள்ளர்களுக்கும் வழங்க ப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமக் கோயிலில் உள்ள ஐந்து கழுமரங்களில் கழுவேற்றிக் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவாக இன்றும் உள்ளது. கிரேக்க மன்ன னான அலெக்சாண்டர் கி‌.மு.333ல் தற்போது லெபனான் நாட்டில் உள்ள தீர்(Tyre) நகரை கைப்பற்ற கடுமையான போர் நடந்தது. அலெக்சாண்டர் வெற்றிப் பெற்றார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட 2000 மேற்பட்ட இராணுவ வீரர்களை சிலுவையில் அறையும் படி உத்தர விட்டார். இந்த தீரு சீதோன் பட்டணங்களிள் இயேசுவும் பயணத்திருக்கிறார். (மத்தேயு 15:21 ) எனவே சிலுவை என்பது ஒரு தண்டனை சின்னமாக இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கருதப்பட்டது. ரோமர்கள் 500 ஆண்டுகள் வரை கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை: ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் -1. மன்னன் தடைசெய்யும் வரை இத்தண்டனை அரசியல் கைதிகளுக்கும், அடிமைகளுக்கும், கிறித்தவர்களுக்கும், அன்னிய நாட்டினருக்கும் வழங்கப்பட்டது. மிக்குறை வாகத்தான் ரோமர்களுக்கு இத்தண்டனை வழங்க ப்பட்டது. இப்படி தண்டனை கருவியாக இருந்த சிலுவை; இயேசு கிறிஸ்துவால் புனித சின்னமாக ( Holy Cross,) மாற்றப்பட்டது. கிறித்தவர் களாகிய நமக்கோ மீட்பின் சின்னம். எனவேதான் பவுலடிகளார் ;
"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனா யிருக்கிறது” (I கொரிந்தியர் 1:18).என்று கூறுகிறார். சிலுவை  நமக்கு பெலன்  தருவதாக இருக்கிறது.
1. புதுப்பிக்கும் யோபின் வாழ்க்கை:  Restoration in Job's Life: யோபு 42:10-17.
யோபு எல்லாவற்றையும் இழந்தவராய்,  நிற்கதியாய் இருக்கின்ற சூழ்நிலை யிலுயும்,  ஆண்டவர் மீது வைத்திருக்கின்ற தீராத நம்பிக்கையை,  பற்றுறுதி யை விட்டு விடவில்லை. தனக்கு ஏற்பட்ட சோதனை களை எல்லாம் பொறுமை யாய் சகித்தார்.  (யோபு 1:21)ல் "நான் நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிரு ந்து வந்தேன்; நிர்வாணி யாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றார். சோதனை காலங்களில் நாம் பொரு மையாய் யோபுவை போல் அமைதி காக்க வேண்டும்.
யோபு 42: 10-13ல் தம் நண்பர்களுக்காக யோபு மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தன வற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார். 
பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்; அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்; ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர். ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர். யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங் கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன. அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். 
புதுப்பிக்கின்ற ஆண்ட வராய் அவர் வாழ்வில் மறு சீரமைப்பு செய்தார்.
2. சிலுவை அளிக்கும் புது வாழ்வு: Restoration through the Cross.  எபேசியர் 2 1-10.
புனித பவுல், நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்கின்றார். நம் கல்வி, அறிவு, திறமை, வளங்கள் அனைத்தும் மற்றவர்க ளுக்கு நற்செயல்கள் செய்வதற்காக பயன்படுத்த வேண்டும்.ஏசாயா 1:17 ல் "நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத் தையும், விதவையின் வழக்கையும் விசாரியு ங்கள்." என தீர்க்கர் நாம் பெற்ற கல்வி மற்றவர் களுக்கு நன்மை செய்ய பயன் படுத்த வேண்டும். "திரண்டு ஆஸ்தி, உயர்ந்த கல்வி, செல்வாக்குகள் எனக்கு இருப்பினும் குருசை நோக்கி பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே" என பாடல் நம்மை சிலுவையை மேன்மை படுத்த அழைக்கின்றது. 
பவுல் அடிகளார் எபேசியர் நிருபத்தில்; ஒரு காலத்தில் மனிதர்கள் தங்களுடைய ஊனியல்பிற்கு ஏற்ப நடந்து, குற்றங்கள் பல புரிந்து, இறந்தவர்கள் போன்று இருந்தார்கள். இந்நிலை யில் கடவுள் தன்னுடைய பேரன்பினால், மனிதர்களை உயிர்பெறச் செய்தார். இவ்வாறு உயிர்பெற்ற நாம், கிறிஸ்து இயேசு வழியாய் நற்செயல்கள் புரிய வேண்டும். அதற்காகவே, நாம் படைக்க ப்பட்டிருக் கின்றோம். We are created to do good deeds. இயேசுவின் சிலுவை பயணமும்,  பாடுகளும் பாவத்தில் அடிமைப்பட்டிருந்த நம்மை விடுவித்து இரட்சித்து புது வாழ்வு தருகிறது. இயேசு கிறிஸ்து இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே இவ்வுலகில் தோன்றினார். இவ்வளவு பெரிதான இரசிப்பை குறித்து கவலையற்றுயிருப்போமானால் வரும் தண்டனைக்கு எப்படி தப்பித்துக் கொள்வோம் என எபேசியர் 2:4ல் கூறப்படுகிறது.
3. அடிமைதனத்திலிருந்து புது வாழ்வு: Restoration from Slavery: திருப்பாடல் 126.
அடிமைத்தனத்தை மாற்றுகிறார் நம் ஆண்டவர். நாம் பலவற்றிற்கு அடிமைப்பட்டிருக்கிறோம். நம்மில் குடி கொண்டுள்ள பாவமே நம்மையும் நம் ஆண்டவரையும் பிரிக்கிறது. கண்ணீரோடு விதைப் பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
விதை எடுத்துச் செல்லும் போது — செல்லும்போது — அழுகையோடு செல்கி ன்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது — வரும்போது — அக்களி ப்போடு வருவார்கள். நம் கண்ணீரிலிருந்து விடுதலை கொடுத்து புது வாழ்வு தரும் ஆண்டவர். 430 ஆண்டுகள் அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரே வேளர்களை விடுவித்தார். அப்பொழுது, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். என சங்கீதக்காரன் கடவுளின் புது வாழ்வை நினைவு ப்படுத்துகிறார்.
4 புது வாழ்வு தரும் கிறித்து. Restoration of New Life.மாற்கு 10:46-52. 
நற்செய்தி நூல்களில் முதன்முதலில் எழுதப்பட்டது மாற்கு நற்செய்தி நூலா கும்.கி.பி 70 ம் ஆண்டு.
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். எரிகோ  எருசலேமிலிருந்து 30 கி.மீ தூரத்தில்  இப்பட்டணம் இருக்கிறது. எரிகோ ஓர் இரட்டை நகரம், பழைய யூத நகரம்,   உலகின் மிகவும் பழமையான நகரம்" சுமார் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.  இந்த நகரை தான் யோசுவா அவர்கள் ஒரு குடும்பத்தை தவிர மற்ற அனைவரையும் கொன்று போடு கிறார். இங்கு  திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழி யோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். 
இயேசு அவ்வழியே செல்கிறார் என்பதை கேள்விப்பட்டு பர்திமேயும் அவனுடைய கூட்டாளி யும்(மத்தேயு 20:29-34) உரத்த குரலில் கூப்பிடத் தொடங் குகின்றனர்: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்.” ஜனக்கூட்டத்தார் அமைதலாயிருக்கும்படி கண்டிப்பாக சொன்ன போது, அவர்கள் இன்னு மதிக உரத்த சப்தத்தோடு கூப்பிடுகின்றனர்: “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்.” என்று சத்தமிட்டு கின்றனர். (Son of David comes here only in Mark) இவர்கள் ஆண்டவரை மெசியா என்றும், தாவிதின் வம்சத்தை சேர்ந்தவர் என அறிந்திருக்கின்றனர். இவரால் குணப்படுத்த முடியும் என்று நம்பு கின்றனர். தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து கின்றனர். பல தடைகள் வந்தும்; அவர்கள் ஆண்டவரை அழைத்துக் கொண்டிருந்தனர். மீண்டும் மீண்டும் அழைக்கின்றனர். ஆண்டவர் அவர்களை அழைக்கின்ற வரை அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். நம்பிக்கை வீண் போகவில்லை. ஆண்டவர் அவர்கள் அழைக்கின்றார். அவர்கள் ஆண்டவரை தாவீதின் குமாரன் என்று தெளிவாக அறிந்திருக்கின்றனர். மற்ற மக்கள் அமைதியா இருங்கள், அமைதியா இருங்கள் என்று அவர்களளை திட்டினார்கள், அதற்றினார்கள். ஆண்டவர் உங்களுக்கானவறள்ள, ஆண்டவர் எங்களுக் கானவர் ஒரு என கூட்டத்து மக்கள் நினைத்தனர். ஆனால் பர்த்திமேயோ விடவில்லை‌ இன்னும் சத்தமாக கூப்பிட்டார். எங்கள் மீது கிருபையாய் இரும் என்றார்..ஆண்ட வருடைய இதயம் கனிந்தது, ,அழைத்தது அவர்களை.  இயேசு நின்று, "அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, "துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள். 
இந்த செய்தி அவர் வாழ்நாளில் என்றும் கிடைக்காத ஒரு நற்செய்தி. வாருங்கள் என்னிடத்தில் அத்தகைய அன்பின் வார்த்தை அது. என்னிடத்தில்  வருகிற வரை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை, புறக்கணிப்பது இல்லை. இதுதான் ஆண்டவருடைய அழைப்பு. முதலில் பிச்சைக்காரர் என்ற அடையாளப்படுத்திய துணியை (cloak) தூக்கி எறிந்தார்கள், அடுத்து எழுந்து குதித்தார்கள், விரைந்து ஆண்டவரிடம் சென்றார்கள். ஆண்டவர் அன்புடன் அவர்களைப் பார்த்து நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?. What do you want me to do for you?” என்று கேட்டார் ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் பல தேவைகளும் உண்டு‌. எனவே ஆண்டவர் அவனை குறிப்பாக கேட்கிறார். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று. ஆண்டவரே, ( ரபி) நான் பார்வையடையவேண்டும் என்றான். இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.  அவன் நம்பிக்கையே நலமாக் கியது. ஆண்டவர் செய்வார் என்ற நம்பிக்கை எந்நாளும் நம்மில் இருக்க வேண்டும்‌ நம்பிக்கை இல்லாமல் ஆண்டவரிடம் பிரியமாய் இருப்பது எவ்வாறு? 
பர்திமேயூவிற்கு மீண்டும் பார்வை பெற்றான்.என்பது புது வாழ்வு பெற்றான் என்பது. அவன் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி அவருடன் வழி நடந்தார். ஆண்டவர் சிலரை பேர் சொல்லி அழைத்து தனக்கு சீடர் ஆகும்படி பணித்தார். ஆனால் இவனோ தன்னை 'போ' என்று சொன்ன ஆண்டவருக்கு தன்னையே சீடனாக ஒப்புவித்தான். அவரை பின் சென்றான்.
மாற்று 10:45ல் ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப் பதற்கும் வந்தார்" என்று கூறினார். இதன்மூலம் கிறித்து சிலுவை பாடுகள் மூலம் நம்மை சீரமைக்கின்றார். ஆமேன்.








நம்மை சீரமைக்கும் கிறித்து என்றென்றும் நம்மை காப்பாராக. Amen 
Prof. Dr. David Arul Paramanandam 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.