பயமும் பற்றுறுதியும் . FEAR AND FAITH. தவக்காலம் - ஐந்தாம் வெள்ளி. யோவான் 6:16-21.

முன்னுரை:
பிரியமானவர்களே!
யோவான் நற்செய்தியில் வரும் இயேசுவின் கடற்பயணம் என் நினைவில் வருவது சேக்ஸ்பியரின் (The Tempest)   டெம்ப்பஸ்ட் என்ற நாடகத்தில் மிலன் தேசத்தின் ராஜாவான ப்ரோஸ்பெரோவின் 
ஏரியல் என்ற மந்திரவாதி கடலில் ஒரு புயலை உண்டாக்கி நேபிள்ஸ் ராஜா, அவரது மகன் ஃபெர்டினாண்ட், பச்ச அன்டோனியோ மற்றும் பிற பிரபுக்களுடன் ஒரு கப்பலில் சென்றவர்களை ப்ரோஸ்பெரோவின் மந்திரக் கலையின் கீழ் ஏரியல் என்ற ஆவியால் உருவாக்கப்பட்ட கடல், புயலில் கப்பல் சிதைந்தது.அவர்கள்  ஒரு தீவில் சிதறிக்கப்கப் படுவதாக அந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒருமந்திரவாதியினால் கடலில் புயலை ஏற்படுத்தும் பிசாசானவன், சீடர்கள் சென்ற கடலிலும் புயலை உருவாக்கினான் (யோவான் 6:18). சீடர்கள் பலர் மீனவர்கள், கலிலேயா கடல் அவர்களுக்கு மிகவும் பழக்கமான கடல்தான். ஆனால் புயல் இயற்கை யின் சீற்றம். பயம் அனைவருக்கும் ஏற்படுவது உண்மைதான். நம் வாழ்வில் புயல் போல் வரும் பிரட்ச்சனைகள் , கஷ்டங்கள், வியாதிகள், வேதனைகள் அனைத்தும் பிசாசு நமக்கு தரும் சோதனைகள். கடல் கொந்தளிப்பான நேரத்தில் தான் இயேசுவும் சீடர்களிடம் கடலில் நடந்து செல்கிறார்.
சங்கீதம் 50:15 ல்
"ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப் பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்
என ஆபத்தில் நம்மை அழைக்க வேண்டுகிறார். 
        " பயம்" ( Fear) என்ற வார்த்தை வேதத்தில் 22 முறை, சங்கீத புத்தகத்தில், மட்டுமே 73 முறை "பயம்' என்ற வார்த்தை வருகிறது. ஆனால் இறைவன் அருளும் " பயப்படாதே" (Fear not) என்ற வார்த்தை வேதத்தில் 365 முறை கூறப்பட்டுள்ளது, ஆண்டிற்கு ஒவ்வொரு நாளும் ஒரே நம்பிக்கை யின் வார்த்தைதான் "பயப்படாதே"! என ஆண்டவர் நமக்கு கொடுக்கும் கிருபையின் வார்த்தை. பற்றுறுதி ( Faith) என்ற வார்த்தை வேதத்தில் 458 முறை (NIV) வருகிறது. எபிரேயர் 11:1ல்,  "நம்பிக்கை ( விசுவாசம்) என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படா தவை பற்றிய ஐயமற்ற நிலை. " என பவுல் அடிகளார் கூறுகிறார். Dictionary meaning of faith is;
"Strong belief in the doctrines of a religion, based on spiritual conviction rathar than proof".
அன்பிற்குறியவர்களே!
பயமும் பற்றுறுதியும் என்ற தலைப்பை தியானிப்போம்.
இயேசு இல்லாத கடல் பயணம் புயலானது‌. The voyage without Jesus met with the tempest:
இயேசு கடலில் நடந்த அற்புத நிகழ்ச்சி யோவான் நற்செய்தியில் கூறப்பட்ட ஏழு அற்புதங்களில் ஐந்தாவது அற்புதமாகும்.  (Walking on the Sea is the fifth miracle in the gospel of St.John) இயேசு கிறிஸ்து மாபெறும் வல்லமையுள்ள  கடவுள் (The Mighty God) என்பதை அவர் கடலில் நடக்கும் செயலே குறிக்கும். அவர் அற்புதமானவர் என்பது அவர் அற்புதமாய் கடலில் நடந்ததை (Wonderful God) குறிக்கும். இயேசு தம் சீடர்களைப் பார்த்து உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு கட்டாயப் படுத்தினார். ஆலோசனை கர்த்தர் ( Counsellor) அவர். ஏன் இயேசு அவர்களை கட்டாயப் படுத்தி அனுப்பினார் என்றால்; ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐயாயிரம் பேருக்கு உணவளித்தலுக்குப் பிறகு மக்கள் திரளாய் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக் கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து; இதை தவிர்க்க வே  இயேசு மீண்டும் தனியாய் இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். 
(யோவான் நற்செய்தி 6:15)  இதன் மூலம் நாம் பிரச்சனை காலங்களில் ஆண்டவர் போல ஜெபிக்க வேண்டும்.பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் இயேசு தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர் களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, “அது பேய்” என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; "நான்தான்", அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கி யது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். (மாற்கு 6:45-51) ஆண்டவர் இயற்கை மீது அதிகாரம் படைத்தவர். இயற்கையை படைத்தவர் இறைவன். எனவே அவரின் வார்த்தை க்கு கீழ்படிகின்றன. இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் கீழ்படிவதில்லை. நம் வாழ்க்கை பயணத்தில் இறைவனோடு சேர்ந்து பயணிக்கும் போது சோதனைகளை சாதனை யாக்க முடியும். நாம் கடவு ளோடு இனைந் திருக்கும் போது அஞ்ச வேண்டிய தில்லை.  "இதோ! இஸ்ரயேலைக் காக்கின் றவர் கண்ணயர்வது மில்லை; உறங்குவதும் இல்லை".திருப்பாடல்கள்(சங்கீதம் 121:4)  என்ற அருமையான வாக்குதத் ததை நமக்கு கொடுத் திருக்கிறார். நாமே அந்த புதிய இஸ்ரவேலர். யோபு 9:8ல் " தாமே தனியாய் வானை விரித்தவர், ஆழியின் முதுகை (கடலின் மீது) மிதித்து நடந்தவர். " என ஆண்டவரின் கடலில் நடக்கும் செயலை முன்னறித்தவர் யோபு .
யோவான் நற்செய்தியில் "நான் " "நானே" என ஆண்டவர் உறைக்கும் வார்த்தை 7 முறை வருகிறது. இது இயேசு இறைவனின் குமாரன் என மெய்ப்பிக்க யோவான் நற்செய்தியாளர் உறுதிப் படுத்துகின்றார்.
2. கிறிஸ்தவர்களுக்கு தேவை பற்றுறுதியா,  பயமா? Do Christians need Faith or Fear? 
ஒவ்வொரு கிறிஸ்தவர் களுக்கும் மிக முக்கியமான து "பற்றுறுதி" அதாவது நம்பிக்கை. பவுலடிகளார் திட்டமாய் கூறுவது எபிரேயர் 11:6ல்  "நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்த வராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோ ருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும். "
இது ஒவ்வொரு கிறித்தவர் களுக்கும் அடிப்படையான தேவை. To believe in God is the first and basic thing for every Christian. மாற்கு 9:20-24ல் அசுத்த ஆவி பிடித்தவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
இயேசு அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற் கொண்டே உண்டாயிருக் கிறது; இவனைக் கொல் லும்படிக்கு அது அநேக ந்தரம் தீயிலும் தண்ணீ யரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக் கூடு மானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான்.இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசி க்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். அவன் விசுவாசத்தைக் கண்டு இயேசு அவன் மகனை சுகப்படுத்தினார். சீடர்களுக்கு இயேசு கூறியது;
"அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே
தேவனுக்கேற்ற கிரியையா யிருக்கிறது என்றார்."(யோவான் 6:29). வின்னரசிற்குரியவைகளை விசுவாசம் இல்லாமல் பெற் றுக் கொள்ள முடியாது. 
விசுவாசத்தால்தான் நீதிமான் பிழைப்பான். எனவே கிறித்தவர்களுக்கு தேவை விசுவாசம் என்ற பற்றுறுதி‌.
பயம் (அ) அச்சம். என்பது ஒரு உணர்வு. "அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா"" என்று ஒரு பாடல் உள்ளது. பயப்பட வேண்டியதற்கு பயப்ப டாமல் இருப்பது மூடத் தனம்...என்பது
வள்ளுவன் சொல். பயமும் கவலையும் மனிதனை கொள்ளும். பயம் என்ற உணர்வு ஒரு மனிதனுக்கு கட்டுப்பாட்டினை தரும் ஒழுக்கத்தை தரும். தன் கடமையை உணர்ந்து செயல்பாடு இருக்கும். ஆனால், எல்லை தாண்டிய பயம் மனிதனை அழித்து விடும். இதை எப்போதும் மனதில் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். வேதத்தில்  நீதிமொழிகள் 9:10 
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; " என்று கடவுளுக்கு அடிப்படி யில் நாம் பயப்படவேண்டும். அதனால் பாவம் செய்வதை தவிர்ப்போம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லூக்கா 8:50ல்  அந்த சிறுமியின் தந்தையான ஜெப ஆலயத் தலைவனைப் பார்த்து; "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். ஆண்டவரை நம்புவோர் அஞ்ச வேண்டியதில்லை. அப்படியே இயேசு அந்த குழந்தையை உயிர் பெற செய்தார். அவ்வாறே புயல் நடுவே தங்களைத் தேடிவரும் இறைவன், இயேசுவை, சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவிள்ளை தேடிவரும் கடவுளை, பயத்தில் பேய் என்று எண்ணினர், சீடர்கள். அவ்வளவு பயத்தில் இருந்தனர், அவர்கள் "மிரண்டவனூக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல் இயேசுவை யே பேய் என்றனர்.  இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து "அஞ்சாதீர்" என்றார்.  எனவே ஜீவனுள்ள தேவன் நம்மோடு இருக்கும் போது பயம் ஏன்?.
 சீமோன் பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்ட வரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர். (மத்தேயு 14:22-33) ஆண்டவரை முழுமையாக நம்பாத பேதுரு போல நாம் இருக்கிறோமா?  மாறாக 
இயேசுவின் நம்பிக்கை நட்சத்திரமாக (a star of faith)
இருக்கிறோமா? அவர் பிறக்கும்போதே வான் தூதர், " பயப்படாதிருங்கள்" என்ற நம்பிக்கையின் வார்த்தையை கொடுத்தி ருக்கின்றார். எனவே பயம் வேண்டாம். கடவுள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைப்போம். 




































Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.