கனியற்ற அத்திமரம் சபிக்கப்படுதல், போலி ஆன்மீகவாதத்தின் முடிவு. Jesus curses the Fig tree which bears no fruits, the End for the Fake Spirituality.மாற்கு 11:12-14, 20,21 பரிசுத்த திங்கள் ‌ Holy Monday .

முன்னுரை:
கிறிஸ்துவின் அன்பர்களே! 
கனியற்ற அத்திமரம் சபிக்கப்படுதல், போலி ஆன்மீகவாத்தின் முடிவு. என்ற தலைப்பு ஆண்டவ ரின் பசிதாபத்தை வெளிப் படுத்தும் தன்மையை குறிக்கிறது. அவர் சாந்த குணமுள்ளவர். ஆனால் இந்த மரம் கனி தராததால் அதைசபிக்கின்றார். உண்மையில் இயேசுவிடம் பணம் இல்லை. பணத்தை அவர் வைத்து கொள்வ தில்லை. (மத்தேயு 17:24-27) உணவு வாங்க காசும் இல்லை. Jesus is a Penniless God. இந்த பசியின் கொடுமையினால் அத்தி மரத்தை பார்க்கிறார். சபிக்கிறார்.அவர் எருசலேம் செல்லும் வழியில் இந்த அத்திமரத்தை காண்கிறார். அது கனிகாய்க்கும் காலமல்ல. ஆனாலும் அந்த மரம் ஆண்டவரூக்கென்றே சில கனிகளை கொடுத் திருக்க வேண்டும். அவர் தன் பசியாற்றிருப்பார். நம்மை எப்பொழுதும் ஆவியின் கனி தரும் நபராக எதிர்பார்க்கிறார். அத்தி மரம் இஸ்ரவேலரை குறிக்கும். ( ஓசியா 9:10)( எரோமியா 8:13) அவர்கள் மேசியாவாகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை. யோவான் நற்செய்தியாளர் 1:11ல் "அவர் தமக்குரிய வர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வில்லை." இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்பட்ட அத்தி மரத்தை போன்றவர்கள். 
ஆதாம் ஏவாள் பாவம் செய்து தேவ மகிமையற்ற வர்களாய் அவர்களின் நிர்வானத்தை மூடி மறைக்க இந்த அத்தி இலைதான் பயன்பட்டது. எனவேதான் அந்த மரத்தையே சபிக்கிறார்.
கனியற்ற வாழ்வு சபிக்கப்பட்டது: The life without fruits is cursed:
கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஆவியின் கனியாகிய ஒன்பதையும் தர வேண்டும். கலாத்தியர் 5; 22 ,23   "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, 
கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவைகளில் மேலானது அன்பு என்ற நற்கனியே..
நற்செயல்கள் செய்வதிலும் ஆவியின் கனி நம்மில் காணப்படுவதிலும், ஆத்துமா ஆதாயம் செய்வதிலும் கிறிஸ்த வர்கள் கவனமாக இருப் போமாக. இல்லாவிடில் கனிகொடாத மரம் வெட்ட ப்பட்டு தீயினால் எரிக்க ப்படுவதுபோல நரகத் திற்குச் செல்ல நேரிடும் – (மத்தேயு 3 : 10). "நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிற தற்கேதுவாக நற்கிரியை களைச் (Good deeds) செய்யப்பழகட்டும்." (தீத்து 3:14) என அப்.பவுல் எழுதுகிறார். ஏனேனில் விண்ணரசு நாம் செய்கின்ற நற்செயல்களின் அடிப்ப டையில் அமைந் துள்ளது.காண்க: (மத்தேயு 25:34-40).  நீங்கள் என்னிலும், என் வார்த்தை கள் உங்களிலும் நிலைத் திருப்பதே” மிகுந்த கனிகளை கொடுக்கும். "நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால் எனக்கு சீடர்களாய் இருப்பீர்கள். மிகுந்த கனி என்பது நற்செயல்கள்.  நற்செயல்கள் செய்யாமல் நீங்கள் ஒரு நல்ல கிறிஸ்த வராய் இருக்க முடியாது. Good deeds are Godliness. நற்செயல்களை இயேசு வின் நாமம் மகிமைப்பட செய்கிறவர்களே கிறிஸ்து வுக்குள் வாழ்கின்வர்கள், அவர்களுக்கு எப்போதும் வெற்றி உண்டு.

2 போலி போதகர்களின் முடிவு. The End of the False Teachers: இயேசு கள்ள போதகர்களை குறித்து நமக்கு எச்சரிக்கிறார்; யோவான் 10:10-13ல் "அவர்கள் திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்ப தற்குமன்றித் திருடர் வேறெ தற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொரு ட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்து ள்ளேன்‌.நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். 
 "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். 
கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. இவ்வுலகில் கள்ள போதகர்கள் அதிகரித்து வெறும் ஆதாயத்திற்காக ஊழியம் செய்கின்றனர். இவர்களுக்கு ஐயோ! இயேசுவே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டி.
2.பேதுரு 2:13.ல் பேதுரு;
இந்தப் போலிப் போதகர்கள் பலர் துன்புறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களும் துன்புறுத்த ப்படுவார்கள். அவர்கள் செய்ததற்கு அவர்கள் பெறும் சம்பளம் அதுவே யாகும். பகல் நேரத்தில் பெரிய விருந்துகளில் சுகித்திருப்பதையே அவர்கள் சந்தோஷமாக எண்ணுகிறார்கள். கரும் புள்ளிகளாகவும், கறைக ளாகவும் இருக்கிறார்கள். அவர்கள் உங்களோடு உணவுக்கு வரும்போது தம் தந்திரம் நிறைந்த மகிழ்ச் சிகளிலேயே ஈடுபடு வார்கள்.கள்ளத்தீர்க் கதரிசிகளும் ஜனங்க ளுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக் குள்ளும் கள்ளப் போத கர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்தி ரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்து க்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.அழிவை ஏற்படுத்துகிற மதப்பிரிவுகளை அவர்கள் தந்திரமாக உண்டாக் குவார்கள். அவர்கள் தங்களுடைய போலிப் போதனைகளால் உங்களைப் பேராசையோடு சுரண்டிப் பிழைப்பார்கள்; ஆனால், பல காலத்துக்கு முன்பே அவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்ட நியாயத் தீர்ப்பு தாமதிக்காது, அவர்களுக்கு அழிவு வரப் போவது நிச்சயம்.எனவே ஆண்டவரின் நாமத்தை வீனிலே வழங்காதிரி ப்பீர்களாக! பொய்யான ஆசிர்வாத, அற்புத வார்த்தை‌கள் வேண்டாம். உள்ளதை உள்ளது என்றும் வேதத்தின் படி உபதேசம் பன்னுங்கள். கனியற்ற அத்திமரம் போல் இருக்க வேண்டாம். ஆண்டவரின் வார்த்தையின்படி; "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந் திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 
(யோவான் நற்செய்தி 15:4)
கடவுள் தாமே இவ்வுலகில் நற்கனி கொடுக்கும் நல் மாந்தராய் வாழ கிருபை செய்வாராக!.
ஆமேன்










Byzantine icon of the cursing of the fig tree.

Byzantine icon of the cursing of the fig tree.

பேரா.முனைவர்.டேவிட் அருள் பரமானந்தம்.

Pl. Write your comments to correct if any ; suggest for relevant additional information. Thanks 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.