விடுவிக்கும் கிறித்து. The Liberating Christ.விடுதலைப் பயணம்.3:1-13.திருப்பாடல்: 82. கலாத்தியர் 5: 1-12. லூக்கா 13:10-17. (லெந்து நான்காம் ஞாயிறு).

முன்னுரை: 

இந்திய விடுதலை போராட்டத்தில் " விடுதலை எங்கள் பிறப்புரிமை" அதை அடைந்தே தீர்வேன்" ( Liberation is our Birth Right", we must have it") என்றார் பால கங்காதர திலகர்.
முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர்ஆவார்.கிழக்கிந்திய கம்பெனி சுமார் 101 ஆண்டும், ( 1757-1858), பிரிட்டிஷ் அரசு 89 ஆண்டும் ( 1858-1947) இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்ச்சி  செய்தனர். மகாத்மா காந்தி தலைமையில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந் தது.இதனால் இந்தியா விடுதலை பெற்றது. விடுதலை என்பது அரசியல் மட்டும் அல்ல. பொருளா தாரம், சமூகம், கலாச்சாரம், மதம், மொழி சார்ந்தவை.
இஸ்ரவேலர் எகிப்து நாட்டில் 430 ஆண்டுகள் அடிமைப் பட்டிருந்த நிலையில் அவர்களின் அடக்குமுறை, கூக்குரல், இரத்தம் சிந்துதலை கடவுள் பார்த்து அவர்களின் வேண்டுதலை கேட்டு மோசே என்ற மாபெறும் கடவுளின் மனிதனை முன் குறித்து, தேர்வுசெய்து, தயார் படுத்தி  இஸ்ரேவேளர்களை விடுதலை செய்தார். மனித வரலாற்றில் "முதல் சுதந்திர போராட்டம்" வேதத்தின் விடுதலை பயணமாகும்( Exodus). The book of Exodus remains as the first ‘freedom struggle’ in the history of human kind. விடுதலை  என்பது அரசியலை மட்டும் சார்ந்து அல்ல. தனிமனித சுய விடுதலை( Self Liberation) மிக முக்கியமாகும். பாவம் அடிமைத்தனத்தின்  அடையாளமாகும். ( Sin is a symbol of slavery) பாவம் மனிதனை கடவுளிடமி ருந்து பிரிப்பது. முதலாவதாக மனிதன் தன்னை பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். தன் பாவங்களை மறைக் கிறவன் வாழ்வடைய மாட்டான்; அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனே கடவுளிடமிருந்து இரக்கம் பெறுவான். பவுல் அடிகளார் "யார் என்னை இந்த மரண சரிரத்திலிருந்து விடுதலை யாக்குவார்"என கேட்கிறார். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "விடுதலை நாயகர்' அவர் ஒருவரே நம்மை எல்லாவித பாவத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையாக்குவார். ஏனென்றால் "பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு இவ்வுலகில் வந்தார்.".என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான் என 1திமோத் தேயு1:15ல் அதே பவுல் கூறுகிறார். எனவே விடுதலை நம்மிடம் இருந்து ஆரம்பிக்கிறது.
1. திருப்பாடல்கள் 82ன் மன்றாட்டு: The Prayer of Psalmist 82: இந்த உலகம் இரண்டு வகையானது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்கிற எண்ணம் படைத்த அதிகாரவர்க்கத்தி னர் ஒருபுறம்.(Authoritarians) தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சாதாரண மக்கள் மீது வரிகளையும், பாரங்களையும் சுமத்தி, அவர்களைச் சிந்திக்க விடாது செய்துகொண்டி ருக்கிறவர்கள்.(Politicians) இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், திருப்பாடல் ஆசிரியர், கடவுளை இந்த உலகத்தி ற்கு வந்து, நீதியை நிலைநாட்டும்படியாக மன்றாடுகிறார். இந்த உலகத்தில் நடக்கும் அநீதிகளை காண சகிக்காமல், அவர் இப்படி முறையிடுகிறார். ஏழைகள், எளியவர்கள் சார்பில் கடவுள் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. இத்தருணத்தில் "திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரல்லவோ" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
2. விடுதலையாக்கும் கிறித்து: The Liberating Christ: லூக்கா 13:10-17.
லூக்கா நற்செய்திக்கு  'கருணையின் ' நற்செய்தி என்ற பெயரும் உண்டு. ஏனேனில் அவர் அனேக விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை இயேசுவுடன் இணைத்து தன் நற்செய்தியில் கூறியிருப்பார். இந்த நற்செய்திக்கு " Universal Gospel" என்ற பெயரும் உண்டு. நாம் இயேசு கிறிஸ்துவின்  செயல்களை நான்கு நற்செய்தி நூல்களிலும் நான்கு விதமான நற்பணிகளை தன் வாழ்நாளில் செய்வதை பார்க்கிறோம். அவர் ஒரு மத போதகராக (Teacher),  குணப்படுத்தவராக (Healer),
விடுதலை தருபவராக ( Liberator) மற்றும் பாடுபடும் கிறிஸ்துவாக ( Suffering Christ) நாம் பார்க்கலாம். இவற்றில் விடுவிக்கும் கிறிஸ்து அனேக மக்களை பல வேதனை,  வியாதி, துன்பம், பசி, பட்டி, மற்றும் பாவ கட்டுகளிறுந்தும் நம்மை விடுவிக்கிறார். ஏனென்றால் இயேசு கிறிஸ்து ஒருவரே சத்திய நாயகர். யோவான் 8:32ல் சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.  சத்தியம் என்பவர் இயேசு கிறிஸ்துவை குறிக்கும். லூக்கா நற்செய்தியாளர் வானத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியாத ஒரு அபலை பெண்ணை குணப்படுத்துவதை குறிப்பிடுகிறார்.  இயேசு ஒரு ஓய்வு நாளில்(Sabbath Day) தேவாலயத்தில் பிரசங்கம் பண்ணிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த ஆலயத்தில் 18 வருடமாகப் பலவீனப் படுத்தும்( Hunchback) ஆவியோடுள்ள ஒரு பெண் உட்கார்ந் திருந்தாள்.  இந்தப் பெண் வேதத்தில் கூறப்பட்டுள்ள கொடிதான நோயில் மிகவும் பாதிக்கப்பட்டவளாக இருந்தாள். அந்த ஆவியா னது அவள் நிமிரக் கூடாத படி, அவளைக் கட்டி வைத்தி ருந்தது. இயேசு இந்தப் பெண்ணை தனிப்பட்ட விதத்தில் சந்தித்தார்.நாமும் இயேசுவோடு தனிப் பட்ட உறவு உள்ளவர்களாக வாழ வேண்டும். வியாதிகள் பாவத்தின் விளைவாகவோ, சாத்தான் கொண்டு வருவதன் மூலமாகவோ வரலாம்.


Christ healing an infirm woman 


உலகத்திலுள்ளவர்கள் அந்தப் பெண்ணின் கூனைப் பார்த்து, அது இயற்கையாக ஏற்பட்ட கூன் என்று எண்ணினார்கள். ஆனால் கர்த்தரோ, அது சாத்தானின் கட்டு என்பதை அறிந்தார்,  கண்டார், அழைத்தார், “உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,” தன்னு டைய கைகளை அந்தப் பெண்ணின் மேல் வைத்தார். உடனே அவள் நிமிர்ந்து பார்த்துத் தேவனை மகிமைப் படுத்தினாள். இயேசு நமக்கு ஜீவன். நித்திய ஜீவன்.
இந்த அற்புதத்தை இயேசு ஓய்வுநாளில் செய்ததால், ஜெப ஆலயத் தலைவன் கோபத்துடன் ஜனங்களிடம் ஓய்வு நாட்கள் அல்லாத நாட்களில் வந்து சொஸ்த மாக்கிக் கொள்ளுங்கள் என்றான். அதற்கு இயேசு (லூக்கா 13 : 15, 16 )ல்“ கர்த்தர் அவனுக்குப் பிரதியுத் தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதை யையாவது தொழு வத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறது இல்லையா? இதோ, சாத்தான் 18 வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்து விடவேண்டியதில்லையா என்றார்.” இயேசு அப்படிச் சொன்ன போது, அவரை விரோதித்திருந்த அனை வரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கை களைக் குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.”
       இங்கு நாம் கவனிக்க வேண்டியது; லூக்கா நற்செய்தியாளர் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிடவில்லை; எனவே இயேசு கிறிஸ்து அந்த பெண்ணிற்கு "ஆபிரகாம் குமாரத்தி" The Daughter of Abraham' என்று பெயரிடுகிறார். அந்த பெண்ணை ஆபிரகாமின் வாரிசாக மாற்றுகிறார்.
லூக்கா நற்செய்தியாளர் ஒரு மருத்துவர் ( Physician) அவருக்கு நன்றாகவே தெரியும். இது உடலில் ஏற்பட்ட நோய் அல்ல; இது சாத்தானின் கட்டு It was a spirit of infirmity caused by Satan. எனவே அப்பெண் ணை இயேசு பிசாசின் கட்டுகளிருந்து விடுதலை செய்கிறார். நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அந்தப் பெண்மணி இத்தகைய வியாதி இருந்தும் ஆலயத்திற்கு சென்றிருக் கிறார்கள். What a wonderful lady. ஆலயத்துக்கு சென்றதினால் விடுதலை கிடைத்தது‌ எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நாம் தவறாமல் ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வோம்! ஆண்டவர் நம்மை தொட்டு ஆசீர்வதிப்பார்! எல்லா தீமைகள், நாசமோசங்கள், விக்கினங்கள், பொறா மைகள், பாவக்கட்டு களிலிருந்தும் நம்மை விடுவிப்பார்.
3.அடிமைத்தனத்தின் நுகத்திலிருந்து கிறிஸ்துவின் விடுதலை:
The Liberation of Christ from the Yoke of Slavery:
அன்பானவர்களே! கிறிஸ்து நம் பாவ அடிமைத்தனத் திலிருந்து சிலுவையின் மூலமாக நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நாம் உறுதியாக நிலைத்தி ருங்கள். மீண்டும் அடிமைத்தனம் என்னும் நுகத்தை ( The yoke if slavery) உங்கள்மேல் ஏற்றுக்கொள் ளாதீர்கள்.என பவுல் எச்சரிக்கிறார். மேலும் அவர் நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனேஇல்லை.விருத்தசேதனம் செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் திருச்சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமை உண்டு என்பதை நான் மீண்டும் வற்புறுத்திக் கூறுகிறேன். இது புற ஜாதி மக்கள் புதிதாக கிறிஸ்து வை ஏற்றுக் கொண்டவர் களுக்குமிககடினமாகும். நாம் தூய ஆவியின் துணையால் நம்பிக்கை யின் வழியாய் இறைவ னுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவோம். மிக முக்கியமாக கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழ்வோர், விருத்தசேதனம் செய்து கொண்டாலும் செய்து கொள்ளாவிட்டாலும், அவர்களுக்கு எப்பயனும் இல்லை. அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது. நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மெய்யாகவே விடுதலை யாக்கப்பட்டீர்கள்.பாவத்திலிருந்து‌ம் விடுவிக்கப் பட்டுள்ளீர்கள். இதுவே கிறிஸ்து நமக்கு வழங்கும் விடுதலையின் நற்செய்தி.










Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.