The Accepting Christ. ஏற்றுக் கொள்ளும் கிறித்து. ஒசியா 2:14-23,சங்கீதம் 87, பிலோமின் 1:21, மத்தேயு 15: 21-28.
முன்னுரை:
ஓசியா என்ற பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு”.இவர் யூதாதேசத்து ராஜாக் களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களி லும், யோவாசின் குமாரனா கிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெ யாம் என்பவனின் நாட்க ளிலும் பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். (1:1) இவர் இஸ்ரவேல் நாட்டைச்சேர்ந்த தீர்க்கர்.இந்தப் புத்தகத்தின் மையக் கருத்து “கர்த்தரிடத் திற்கு திரும்புங்கள்” என்பதே. இவரின் மிக முக்கியமான தீர்க்கதரிசனம் "இஸ்ரவேல் சிறைப்பட்டு ப்போகும் என்று அவர் சொன்ன தீர்க்கதரிசனம் அவரது வாழ்நாள் காலத்திலேயே நிறைவேறியது.
இஸ்ரேல் மக்களின் விக்கிரக ஆராதனை, பாவ செயல்களையும், விபச்சாரத்திலும் ஈடுபட்ட உண்மையில்லாத இஸ்ரவேல் ஜனங்களின் மீது தேவன் தம் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஓசியாவின் மூலம் பேசினார். ".எசேக்கியா ராஜாவின் ஆரம்பக் காலத்தில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. கி.மு.755 முதல் 710 ஆண்டுகளில் ஓசியா ஊழியம்செய்தார். சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலே பெரிய புத்தகமாக ஓசியாவின் புத்தகம் இருக்கிறது. இப்புத்தகம் தம்மைவிட்டு வழிவிலகிப்போன இஸ்ரவேல் மக்களைத் தம்முடைய வழிகளுக்குத் திருப்பும்படி விடாது அழைக்கும் தேவனுடைய இரக்கத்தையும், அன்பையும் எடுத்துக்காட்டி பறை சாற்றுவது.(Restoring the Lost people of Israel) மிக முக்கிய வசனம்; ஓசியா: 14:1 –ல் “இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத் தினால் விழுந்தாய்.” என்பதே. படைப்பின் காலத்திலிருந்து தீர்க்கர்களின் காலம் தொடங்கி இயேசு கிறிஸ்துவின் காலம் வரை கடவுள் பாவத்தில் விழுந்த மக்களை மீட்பதற்காக பல செயல்களை செய்துக் கொண்டே இருக்கிறார். Restoring is a Continuous process.
ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்து: The Accepting Christ:
இயேசு கிறிஸ்து உலகளாவிய "Universal God" கடவுள். பல நதிகள், ஆறுகள், மலைகள் அனைத்திலிருந்து வருகின்ற நீரினை ஏற்றுக் கொள்ளும் சமுத்திரம் போல இருப்பவர்தான் நம் கடவுள். அவர் நமக்கு அளிக்கும் நம்பிக்கையான வார்த்தை யோவான் 6:37ல்
"தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். " அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கமே ; 1. திமொத்தேயு 1:15ல் திருத்தூதர் பவுளடிகளார். " பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் ". - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக் கொள்ளத் தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். என தன்னை முதன்மைப்படுத்துகிறார்.
1. சிறு பிள்ளைகளை ஏற்றுக்கொள்ளும் இயேசு: Accepting the Children for the Kingdom of God.
முதலாவதாக இயேசு மத்தேயு நற்செய்தி நூலில் 19: 13,14 ல்
"சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.""ஆனால் இயேசு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகை யோருக்கே உரியது" என்றார். தன் வின்னரசு குழந்தைகள் போன்றோருக்கே உரியது என குழந்தைகளை தன்பால் ஏற்றுக்கொள்ளும் தன்மையை நாம் பார்க் கிறோம். இதன்மூலம் நாம் சிறு வயதிலேயே குழந்தை களைஆண்டவரின் வழியில் நடத்துவது நம் கடமை.
2.நம் பாடுகளை ஏற்றுக் கொள்ளும் இயேசு: Accepting Our Sufferings :
மத்தேயு 8:16 17 ல்,
இயேசுவின் ஊழியக்காலத்தில் பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல அசுத்த ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளர் களையும் அவர்குணமா க்கினர். 17 இவ்வாறு, "அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங் களைச் சுமந்து கொண்டார்" இதன்மூலம் ஏசாயா தீர்க்கதரிசியின் 53:4,5ல் உரைத்தது நிறைவேறியது.
"மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம்;; துன்பங் களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக் கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்.
அவரோ நம் குற்றங்க ளுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்." என நம் பாடுகளை ஏற்றுக் கொண்ட கிறிஸ்துவை நாம் பார்க்கிறோம். இரட்சிப்பும், பாடுகளும் தேவனுடைய கிருபையின் கொடைகள்! Salvation and Sufferings are the Gifts of Grace. சாது சுந்தர் சிங், செல்வச் செழிப்பில் திகழ்ந்தவர். அவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு காடுகளில் அலைந்து திரிந்து தேவனுக்கு ஊழியம் செய்தார். பல பாடுகளை அனுபவித்தார். ஒருமுறை சிலர் அவரைக் கல்லெ றிந்து அவர் செத்து விட்டாரென நினைத்து ஒரு கிணற்றில் போட்டார்கள். இப்படிப் பல பாடுகளை அனுபவித்த சாது சுந்தர்சிங் பாடுகளைக் குறித்துக் கூறியது என்ன? “கிறிஸ்துவுக்காக சிலுவை சுமக்கும் பாக்கியம் இந்த உலகில்தான் கிடைக்கிறது” என்றார். கிறிஸ்துவிற்காக பாடுபடுதலை ஒரு பாக்கியம் என்றார். இயேசு நமது பாடுகளை சுமந்ததினால், நாமும் கிறிஸ்துவிற்காய் இவ்வுலகில் பாடுகளை சுமக்க தயாராவோம். வெளிப். 2:10 நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன். என ஆண்டவர் கூறுகிறார்.
3. பாவிகளை ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்து:
Accepting the Sinners:
பாவிக்கு புகலிடம் ( Shelter or Asylum) இயேசு இரட்சகர்
என்ற கண் கலங்கும் பாடல் நினைவில் வருகிறது. Jesus is the shelter of the last resort. பாவியாகிய நமக்கு இவ்வுலகில் இயேசுவே நல் மீட்பர். நம் வேதம் மிக தெளிவாக கூறுகிறது. "பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார் ". -நாம் பாவியாகிய அவரிடம் செல்வோம். பாவ மீட்பு பெறுவோம். 1யோவான் 1:8,9 திட்ட வட்டமாக கூறுகிறது; "ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது.
9 மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோ மென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப் படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். அதுமட்டுமல்ல அன்பானவர்களே! மத்தேயு நற்செய்தி 9:6ல் "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார்". The only Authority in the World to forgive sins is Jesus Christ. என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.லூக்கா நற்செய்தியில் 5:30-32ல் பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர் களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டு பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர். இயேசு அவர்களுக்குமறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாள ர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார். இதுவே அவரின் பிறதான நோக்கமாகும்.The prime aim of Jesus Christ is to accept the Sinners. இதற்கு உதாரணமாக காணாமற்போன ஆடு, காணாமற்போன காசு, காணாமற்போன மகன் உவமைகளை உதாரணமாக இயேசு சொல்லுகிறார்.
4. புற ஜாதிகளையும் ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்து: Accepting the Gentiles: மத்தேயு 15:21-28. இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன்( தற்சமயம் லெபனானில் இருக்கும் மிக முக்கிய நகரங்கள்) ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். யூதர்களிடத் திலிருந்து எதிர்ப்பு இருந்ததால் இயேசுவை இப்பகுதிக்கு சென்றார்.
அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண்( , விவிலியத்தின்படி கடவுள் ஆபிரகாமுக்கும் அவர்தம் மக்கட்கும் உறுதியளித் திருந்த நிலப்பகுதியை "கானான் என்றும் அங்கு வாழ்ந்த மக்கள் கானானியர் என்றும் அழைக்கப்பட்டனர்) ஒருவர் அவரிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக் குள்ளாகி இருக்கிறாள்" எனக் கதறினார். இப்பகுதியில் நாம் அந்த பெண்ணின் தாழ்மை குணத்தையும், "தாவீதின் மகனே" என இயேசுவின் வம்சத்தை குறிப்பிட்டு அழைக்கிறாள்.கெஞ்சு
கிறாள். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, "நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்" என வேண்டினர். இயேசு மறுமொழியாக, "இஸ்ரயேல் குலத்தாருள்காணாமற் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.
மத்தேயு நற்செயலாளர் யூதர்களே விண்ணரசின் உரிமையாளர்கள் இயேசு கிறிஸ்து இவர்களுக்கு சொந்தமானவர் என்ற நம்பிக்கையில் இந்த கருத்தை வலியுறுத்து கிறார். ஏனெனில் இரட்சிப்பு யூதர்கள் வழியாகவருகிறது என்ற நம்பிக்கையில் இது குறிப்பிடுகின்றார். ஆனால் ஆண்டவரின் இரட்சிபு திட்டம் வரையற்றது. எல்லைகள் இல்லை பாகுபாடுகள் இல்லை. நாடு, மொழி, இனம் இவைக ளுக்கு அப்பாற்பட்டது ஆண்டவனுடைய இரட்சிப்பு.
God's Salvation plan is unlimited. It has no boundaries and barriers. It's universal.
ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, "ஐயா, எனக்கு உதவியருளும்" என்றார்.
அவர் மறுமொழியாக , "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார். இயேசு கிறிஸ்து இங்கே இவ்விதமாக நாய்க்குட்டிகள் என்பதாக குறிப்பிட்டு பேசுவது கடினமாக காணப்படுவதைப் போல இருக்கிறது. உண்மையில் இயேசு கிறிஸ்து யூத வழக்கத்தின் முறையை வெளிப்படுத்துகிறார்.
இருப்பினும் மனம் தளராத
அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே" என்றார். எங்களுக்கும் அதில் ஒரு பங்கு இதில் இருக்கிறது என்பதைக் குறித்து அவள் தாமே பேசுவதை பார்க்கிறோம். What a wonderful and wise lady!
இங்கு ஒன்றை நினைவுப் படுத்தவிரும்புகிறேன்.ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்த, லாசர் அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்றஆசையா யிருந்தான்; இந்தத் துணிக்கைகள் என்பது புறஜாதியை குறிக்கிறது. யூதர்களுடைய முக்கிய நம்பிக்கை என்னவென்றால் விண்ணரசில் தாங்கள் மட்டுமே ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்ற முற்பிதாக் களோடு பந்தி இருப்போம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் நடந்தது என்ன? புறஜாதியாய் இருந்த லாசர் தான் விண்ணரசில் ஆபிரகாமின் மடியிலே அமர்த்தபட்டார். எனவே ஆண்டவர் இந்த பெண்ணிற்கும் உதவி செய்கிறார்
இயேசு மறுமொழியாக, "அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்" என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. Salvation through faith is for them just as it is for the woman. மீட்பு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அனைவருக்கும் கொடுக்கப்படுவது. இந்தப் பெண்ணும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் மீட்பை பெறுகிறாள்.
கானானிய பெண்ணின் வேண்டுதல்:
5. சாமானியரையும் ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்து: Accepting the ordinary person:
பவுல் அடிகளார் ரோமாபுரி சிறைச்சாலையில் இருந்து
கொலேலசியர் திருச்ச பையின் தலைவராய் இருந்த பிலமோன் அவர்களுக்கு திமொத் தேயுடன் சேர்ந்து எழுதிய சிறைச்சாலை கடிதம் இது. இது ஒப்புரவாதலை Reconciliation வலியுறுத்தும் கடிதம். தன்னோடு உடன் சிறைப்பட்டிருக்கும் அடிமையாகியஒனேசிமிற்காக (Onesimus), அவரை மன்னித்து ஒரு "சகோதரனாக"ஏற்றுக்கொள்ள பிலமோனுக்கு அன்புடன் எழுதிய விண்ணப்பம் ஆகும். (Philemon was a wealthy Christian, possibly a bishop of the house church that met in his home (Philemon 1:1–2) in Colossae.) இது ஒருவர் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் தன்மையை நமக்கு கற்றுத் தருகிறது. ஆண்டவர் நமக்கு கற்றுக் கொடுத்த விண்ணப்பத்தில் கூட பிறர் செய்த தவறுகளை மன்னிக்க படியாக சொல்லுகிறார். மன்னிக் கின்றவர்களை மட்டுமே ஆண்டவர் ஏற்றுக்கொள்கிறார். எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்து நம்முடைய ஆண்டவர் அனைவரையும் ஏற்றுக் கொள்வது போல இந்த உலகில் நாம் அனைவரையும் அன்பு சகோதரர், சகோதரிகளாக ஏற்றுக் கொள்வோம். அன்பை விதைப்போம் அன்பை அறுப்போம்; கடவுள் நம்மை இந்த தவக்காலங்களில் சிலுவை குறித்தான சிந்தனையே நமக்கு வைப்பாராக ஆமென்.
Comments
Post a Comment