கண்ணொளியும் உள்ளொளியும். VISION AND MISSION. ஆறாவது வெள்ளி.தவக்காலம். யோவான் 9:1-8.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆறாவது வெள்ளி தவக் காலத்தில் கண்ணொளியும் உள்ளொளியும் என்ற தலைப்பில் "கண்ணோளி என்பது ஒளியை உணர் வதற்கு உதவும் ஒரு உறுப்பு".ஔவையார் அவர்கள் "அரிதரிது மானிடர் ஆதல் அரிது; மானிடர் ஆயினும், கூன்குருடு, செவிடு,பேடு நீங்கிப் பிறத்தல் அரிது." என கண்ணின் முக்கிய த்துவத்தை வளியுருத்து கிறார். மத்தேயு 5:29ல் "உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு" என கண்ணிணால் ஏற்படும் பாவத்திலிருந்து விலகிட ஆண்டவர் வலியுறுத்துகிறார். ஒரு பாடலில் வரும் " கண்ணை நம்பாதே ; உன்னை ஏமாற்றும் நீ கானும் தோற்றம்". எனவே நம் கண்கள் நல்லதை பார்க்கட்டும். வேதத்தை தினமும் படிக்க நம் கண்கள் பயன்படுத்தப்படும். இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுசன் பாக்கியவான் என்றும்; "உம் திருச்சட்டத்தில் வியப்பா னவற்றை நான் கண்டுணரு மாறு என் கண்களைத் திறந்தருளும்.
(திருப்பாடல்119:18)
சங்கீதக்காரன் கூறுவது போல நம் கண்கள் வேதத்தை தியானிக்கட்டும்.
ஏனேனில் "கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்.
மத்தேயு நற்செய்தி 6:22 யில் ஆண்டவர் நம் கண்னை நம் உடலின் ஒளி Light of the body. என கூறுகிறார்.
நானே உலகின் ஒளி என்றவர்.
1. குருடனாய் பிறந்தது
யார் செய்த பாவம்?
Bywhose sin he born as a blind?
இயேசுவின் காலத்தில்
யூதசமயத்தின்படி, எல்லா குறைபாடுகளுக்கும் (all cripples) காரணம் பாவமே என்பதாகும். அதாவது, ஒன்றில் அவரவர் செய்த பாவத்தின் விளைவாகவோ, இல்லையெனில் பெற்றோர் செய்த பாவத்தின் விளை வாகவோ இத்தகைய பாதிப்புகள் நேரிடலாம் என்பதே யூதர்களின் நம்பிக்கை. ஆண்டவர் எக்காலத்திலும் "நீ விக்கிரகங்களை (idol worship) வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங் களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்".
(விடுதலைப் பயணம் 20:5) என பெற்றோரின் பாவங்களை பிள்ளைகள் மீது வரும் என்ற நம்பிக்கை இருந்தது. பெற்றவர்கள் செய்த பாவமும், புண்ணி யமும் பிள்ளைகளைச் சேரும் என்பது நல்லதா!. புண்ணியம் வழிவழியாக வருவதில் கவலையில்லை. ஆனால் பெற்றோர் செய்த பாவம்... அவையும் பிள்ளைகளைத்தான் சேருமா?.
யோவான் 9:1,2ல்
"இயேசு அப்புறம் போகை யில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப் படும்பொருட்டு இப்படிப் பிறந்தான் என்றார். இது யூத நம்பிக்கைக்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தாகும். பாவத்தை ஆண்டவர் யூதர்கள் போல அவன் பெற்றோற் மீது பழி போடவில்லை.ஆனால் பாவம் செய்யும் ஆத்துமா சாகும்.(எசேக் 18:4) எனவே "இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது". என வெளிப்படுத்தல் 22: 12 கூறுகிறது. ஒவ்வொரும் செய்கின்ற நன்மை தீமைக்கேற்ற பலன் அவர்களுக்கு உண்டு என்பது உண்மை.
2. ஆண்டவரின் கண்ணோளியையும் உள்ளொளியும் மீறியவர்கள்:
Violation of God 's Vision and Mission:
சிம்சோன் (Nazirite) அவர் இஸ்ரவேலரை பாலஸ்தீனர்களிடமிருந்து மீட்பதற்காகவே ஆண்டவர் ஏற்படுத்தினார், (Mission)வெறும் கையினால் சிங்கத்தை கொன்றவன், கழுதையின் எலும்பினால் விரோதிகளை கொன்று போட்டவன்; பாலஸ்தீன பெண்ணை தன் இனத்தை மறந்து திருமணம் செய்ததால் அவளாளையே தன் கண்ணை இழந்தார் (Vision) இரண்டாவதாக யோனா தீர்க்கரை நினிவே மக்களை காக்கும்படியாக (Mission)அனுப்புகிறார் ஆனால் அவரோ தேவ சமுகத்தினின்று விலகி தர்சீஸ்க்கு பயணபபட்டார் எனவே சமுத்திரத்தில் போடப்பட்டார். மூன்றாவதாக சவுல் ( பவுல்)
கிறிஸ்தவரைத் தேடி அழிக் கும் குழுவின் தலைவர். (Mission) தமஸ்குவில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஒளி வடிவில் இயேசு அவர் முன் தோன்றினார்.பின்னர் தன் பார்வையை (Vision) இழந்தார்.பிறகு மனம் மாறினார். புனித பவுல் ஆனார். எனவே பிரிய மாணவர்களே! இயேசு கிறிஸ்து ஒவ்வொரு வருக்கும் இவ்வுலகில் ஒரு கண்ணொளியும் உள்ளொளளியும் வைத்திருக்கிறார் நாம் அத் திருப்ப பணியை சிறப்போடு செயலாற் றுவோம்.
3.மன்னில் தோன்றிய மனிதனுக்கு மன்னிலே விடுதலை: (Mission) Man is made up of clay, which liberates him : ( Genesis 2:7)
இயேசுவின் குணப்படுத்தும் முறை நான்கு வகைப்படும்.
1. துப்புதல் spitting,
2. தொடுதல் touching,
3.ஜெபித்தல் praying,
4. வார்த்தை words. இங்கு ஆண்டவர் முதல் வகையான துப்புதலை பயன் படுத்துகிறார். யோவான் 9:6,7. "இயேசு தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி; "நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்" என்றார். சிலோவாம் என்பதற்கு "அனுப்பப்பட்டவர்" என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். "அனுப்பபட்டவர்" என்பதினால் இந்த பார்வை யற்றவர் ஒரு " அப்போஸ் தலர்" (An Appostle) ஆக மாற்றப்படுகிறார். இந்த நிகழ்வு எனக்கு 2.அரசர்கள் 5: 9,10 ( II Kings 5:9,10) காணப்படும் நாமான் சிரியா மன்னனின் படைத்த லைவன். வலிமை மிக்க வீரர்; ஆனால் தொழு நோயாளி. தம் குதிரை களுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, "நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்" என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார். இவன் முதலில் மறுத்தாலும் பின்பு புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது.
இது வார்த்தையினால் ஏற்பட்ட சுகம்.எலிசா இந்த சுகம் கொடுத்ததற்கு ஒரு பரிசும் பொருளும் வாங்கவில்லை. நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் யாரிடமும் ஒரு பைசா என்றுமே வாங்கின தில்லை. ஏனென்றால் நியாயம்தீர்ப்பதையோ அழிப்பதையோ அவர் விரும்பாமல், குணமாக்க வேண்டும் என்று அவருடைய இரக்கமுள்ள மனதுஏங்கியது.ஆண்டவரின் அற்புத ஆற்றலை ஏசாயா தீர்க்கதரிசி 35:5,6ல் "பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர் என முனனறிவித்தார். ஆண்டவரின் கண்ணோளி (Miracles of Vision) வழங்கிய அற்புதங்கள் மூன்று இடங்களில் நடந்தேறியது. எரீகோ வில் இரண்டு பார்வையற்றோறும்; பெத்சாய்தா வில் ஒருவரும்; சீலோவாமில்
ஒரு பிறவி பார்வை a born blind யற்றோர். ஆக நான்கு பார்வையற்ற நபர்களையும் குணப்படுத்தினார். These Miracles of vision is a Mission of Jesus Christ. நான் என்னுடைய நாமத் தினாலோ, என்னுடைய சுய பெலத்தினாலோ செயல் படுவதில்லை. மாறாக நான் என்னுடைய பிதாவின் செயல்களை, அவருடைய நாமத்தினாலே, அவருடைய விருப்பப்படி நிறை வேற்றுகிறேன்.” தன்னுடைய செயல்களை இறைவனுடைய செயல்கள் என்று அவர் அழைத்தார். (Mission).
4.. பார்வையற்றவரின் நம்பிக்கை, பற்றுறுதி:
The faith and hope of the blind is a Vision.
தேவ பக்தியின் அடிப்படையே நம்பிக்கை, விசுவாசம். விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது எப்படி? இந்தப் பார்வையற்றவர் இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்றும் மேசியா என்றும் முழுமையாய் நம்பினார். அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டார். விடாமுயற்சியுடன் சீலோவாம் குலத்திற்கு சென்றார். கழுவினார், பார்வை பெற்றார். ஆண்டவர் வார்த்தைக்கு நம்பிக்கையுடன் கீழ்ப்படிந்தார்.அற்புதம் பெற்றார். புதுவாழ்வு பெற்றார். முழு மனிதனாக மாறினார். இறுதியில் இயேசு கிறிஸ்துவை தீர்க்கதரிசி என்று அறிவித்தார். இயேசுவே எனக்கு பார்வை கொடு த்தார் என்று பரிசேயரிக ளிடத்திலும் அங்கிருந்த மக்களிடத்திலும் சாட்சியாக கூறினார். இந்தப் பார்வையற்றவரை இயேசுவே நேரிடையாகப் பார்த்து அவருக்கு கண்ணோளி வழங்குகிறார்.
(Mission). மற்ற பார்வையற்றவர்களோ இயேசுவை அவர்களே அழைக்கின்றனர். தாவீதின் குமாரனே இறங்கும் என்கின்றனர்.(Vision). இவர் பார்வையற்றவராய் இருந்தபோது இவரை பார்ப்பவர் எல்லாம் இவருடைய பெற்றோர் செய்த பாவம்தான் இவன் இப்படி பிறந்தான் என்று கூறி இருப்பார்கள் ஆனால் இயேசுவின் வார்த்தை அவருக்கு ஒரு ஆச்சரி யத்தை கொடுக்கிறது. இயேசு இவன் பிறவி குருடனாய் பிறந்ததற்கு இவன் செய்த பாவவுமல்ல; இவன் பெற்றோர் செய்த பாவவுமல்ல,: தேவனுடைய கிரியே வெளிப்படும் பொருட்டே இப்படி பிறந்தான் என புதிய விளக்கத்தை கொடுத்தார். அதுவே அவனுக்கு ஆன்மீக விடுதலையை கொடுத்தது. யூதர்கள் இயேசுவை கல்லெறிய வந்தார்கள் (யோவான் 8), ஆனால் அதை கடந்து வந்து இவனுக்கு பார்வையளித்து ஆண்டவரின் பணி Mission. His greater Mission took place on a Subbath to give a new life.
5.ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.: The Time of Darkness comes:
ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒளியாய் இருக்கிறார். அவரில் எவ்வளவு வேணும் இருள் இல்லை; எனவே இருள் அவரைப் பற்றிக் கொள்ளாது. ஆண்டவ ருடைய வார்த்தையை கேட்ட மக்கள் இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று யோவான் கூறுகிறார்.பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும், ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. (யோவான் 9:4). எனவே நம்மை இருள் மூடிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நம்மை காத்துக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் இயேசுவின் நற்செய்தியை கொண்டு செல்லும் பணி Mission தொடர்ந்து நடைபெற வேண்டும். அதுவே இந்த இருளை நீக்கும். இந்தியாவில் கிறிஸ்த வர்களுக்கு எதிராக நடக்கின்ற சில செயல்கள் இராக் காலத்தின் செயல்கள். இச்செயலை செய்வோர் வெளிச்சத்தைக் காண(இயேசுவை) இறை வேண்டுதல் செய்வோம். ஆண்டவர் நம்மை ஒருபோதும் இருளில் தள்ளார்; அவர் ஒளியா இருக்கிறது போல, நம்மையும் ஒளியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறார். கடவுள் தாமே உங்கள் அனைவரையும் ஆசிர்வதித்து இந்த லெந்து காலங்களில் நம்மை காப்பாராக ஆமேன்.
Christ healing the blind, by Nicolas Colombel, 1682
Prof. Dr. David Arul Paramanandam.
Comments
Post a Comment