சாட்சியும் மாட்சியும். WITNESS AND FITNESS. St. John 5: 1-18.


முன்னுரை:
இயேசுவின் காலத்திய சமூகம்: Society in Jesus Era.
இயேசுவின் காலத்திய சமூகம் மிகவும் சுயநலமும் மனிதநேயமும் அற்ற சமூகமாய் இருந்தது. ஒரு 38 ஆண்டுகளாக படுத்த படுக்கையாய் இருக்கும் சுகவீனமான மணிதனை குணப்படுத்துவதற்கு ஒருவனும் உதவி செய்யவில்லை. இது அந்த சமூகத்தின் அவள நிலையை குறிக்கிறது.
இதற்கு உதாரணமாக 1.நாளாகமம் 4:10"யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி, தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி,  உமது கரம் என்னோடி ருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக் கொண்டதை தேவன் அருளினார்.” 

இந்த விண்ணப்பத்தில் நாம் பார்க்கின்றபோது, யாபேஸ் என்னை, என்னை என மூன்றுமுறை சொல்லப்பட்டு ஒரு சுயநல விண்ணப்பமாக காணப்படுகின்றது..(Selfish Prayer) யாபேஸ் என்றால் துக்கம் அல்லது துக்கத்தை உண்டாக்குபவன் என பொருள்.அவன் தாய் நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். இந்தப் பகுதியை நான் குறிப்பிடுவது எதற்காக என்றால் யூத மக்களுடைய சுயநலமான பக்தியையும் வாழ்க்கையும் குறிப்பிடவே இதை குறிப்பிட்டேன். 

இயேசுவின் எருசலேம் பயணம்: யோவான் 5:1-18.

நற்செய்தியாளர்கள் லூக்கா மற்றும் யோவான் இருவரும் இயேசு கிறிஸ்து நான்கு முறை எருசலேம்சென்றதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால் யூதர்களின் வழக்கப்படி ஆண்கள் ஆண்டிற்கு மூன்று முறை எருசலேமிற்கு செல்வது கட்டாயமாகும்.

1. குழந்தையாக:(41நாள்) இயேசுவை எருசலேமிற்கு கொண்டு சென்றனர் (லூக்கா 2:22)

2. பாஸ்கா பண்டிகைக்காக 12ம் வயதில் இயேசு எருசலேம் சென்றார். (லூக்கா 2:41)

3. அலகினால் (Devil) சோதிக்கப்படும்போது இயேசு எருசலேம் தேவாலயம் சென்றார். ( லூக்கா 4:9)

4 வெற்றி ஆரவாரத்தோடு எருசலேமில் நுழைதல்: (லூக்கா 19) ஆனால் 

யோவான் அவர்கள் 1. தேவாலய சுத்திகரி ப்பிற்காக (யோவான் 2:13) பாஸ்கா பண்டிகைக்காக சென்றார்.

2.யோவான் 5:1.  யூதர்களின் பண்டிகை காலத்தில் பெதஸ்தா குளம்.

3.யோவான் 7:14 இயேசு எருசலேமில் உபதேசித்தல்.

4 யோவான் 12:12. எருசலேம் வெற்றிப்பயணம்

Nathan Greene, 'At the Pool of Bethesda'Healing at the Pool of Bethesda (John 5:1-16)
Nathan Greene, 'At the Pool of Bethesda,' oil on canvas, 40x30. Copyrighted, permission requested.





இயேசு எருசலேமிற்கு யூதர்களின் திருவிழா( The Feast of Jews) ஒன்றிற்காக  செல்கிறார். அங்கு ஆட்டு வாயிலுக்கு( Sheep Gate - the gate through which the sheep were taken into the city for sacrifice.) அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா (Bethesda - The house of mercy. It was so called on account of its strong healing properties )-  என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர்,( Sick, Blind and crippled) முடக்கு வாதமுற்றோர்(Paralytic) ஆகியோர் திரளாய்ப் படுத்துக்கிடப்பர்.இவர்கள் குளத்து நீர் கலங்கு வதற்காகக் காத்தி ருப்பார்கள். சில வேளை களில் ஆண்டவரின் தூதர் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்றிருந் தாலும் நலமடைவார். இந்த இடத்தில் முப்பத் தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.இயேசு அவரைக் கண்டு, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். அவன் மிக பரிதாபமாக இயேசுவிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அன்பின் ஆண்டவர். மன இரக்கம் உள்ளவர்.  இயேசு அவரிடம், எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து போனான்.அன்று ஓய்வு நாள். யூதர்கள் குணமடைந்தவரிடம், “ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்” என்றார்கள்.அதற்கு அவர் மறுமொழியாக “என்னை நலமாக்கியவரே, ‘உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துசெல்லும்’ என்று என்னிடம் கூறினார்” என்றார்.“‘படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்’ என்று உம்மிடம் கூறியவர் யார்?” என்று அவர்கள் கேட்டார்கள். ஆனால் இயேசுவோ;  மனித நேயமா ? மதச்சட்டமா? என்ற கேள்வியில் மனித நேயமே மகத்தானது என நிரூபிக்கிறார். இநற்கான சாட்சியாய் (Witness) இயேசுஇறைபணி யாற்றினார். ஆனால், நலமடைந்தவருக்கு அவர் யாரெனத் தெரியவில்லை. ஏனெனில், அவ்விடத்தில் மக்கள் கூட்டமாய் இருந்ததால் இயேசு அங்கிருந்து நழுவிப் போய் விட்டார்.பின்னர், இயேசு நலமடைந்தவரைக் கோவிலில் கண்டு, “இதோ பாரும், நீர் நலமடைந்து ள்ளீர்; இதைவிடக் கேடானது எதுவும் உமக்கு நிகழா திருக்க  இனிப் பாவம் செய்யாதீர்”என்றார்.ஆனால் அவன்  போய், தம்மை நலமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தார்.ஓய்வுநாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன் புறுத்தினார்கள். இது நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளமாக இயேசு இருப்பதை நாம் காண்கிறோம்.

இயேசுவின் சாட்சி: Witnessing Christ; 

 திருவெளிப்பாடு 1:5ல்

"இந்தக் கிறிஸ்துவே (i) நம்பிக்கைக்குரிய சாட்சி; (Faithful witness) (ii) இறந் தோருள் முதலில் (the firstborn from the dead) உயிர்பெற்று எழுந்தவர்; (iii) மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். (the ruler of the kings of the earth.) It's his Fitness. இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங் களிலிருந்து நம்மை விடுவித்தார். தன்னுடைய சிலுவை மரணத்தினால் நமக்கு நித்திய வாழ்வு கொடுத்தார் என்பது இதன்மூலம் அவர் மூன்று தன்மையில் தன் மாட்ச்சியை (Fitness) வெளிப்படுத்துகிறது. 

திருத்தூதர் பணிகள்: 2:32.

32கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.(Witness) அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.என்பது அவரின் மாட்ச்சியை (Fitness) நிரூபிக்கிறது.

இயேசுவின் விண்ணேற்றத்திற்கு அவருடைய சீடர்கள் தான் சாட்சிகள். இயேசுவின் துன்பத்தைக் கண்ட சீடர்கள் இயேசுவின் விண்ணேற்றத்தைக் கண்ணால் கண்டு இறை மாட்சியை அனுபவித்தனர்.
திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும் உலகெங்கும் நற்செய்தி பறைசாற்றவும் நம்பிக்கை கொண்டோருக்கு திருமுழுக்கு வழங்கவும் இயேசுவின் பெயரால் நோய்களையும் பேய்களையும் ஓட்டவும் அழைக்கப்பட்டுள்ளோம். இத்தகைய சான்று பகரக்கூடிய வாழ்வு வாழ நாம் இயேசுவோடு இருக்கவேண்டும். இயேசுவோடு இருக்கும்பொழுது நம் வாழ்வில் துன்பங்களும் சோதனைகளும் வேதனைகளும் வரும். ஆனால் நாம் அவற்றைக் கண்டு துவண்டுவிடாமல் துணிச்சலோடு செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் இயேசு என்னோடு இருக்கிறார் என்று முழுமையாக நம்புகின்ற பொழுது, நிச்சயமாக நாம் இறைமாட்சியை (Fitness)நம் வாழ்வில் அனுபவிக்க முடியும்.இயேசுவின் மரணத்தால் சாத்தியமாகிறது என்பதையும் தெரிவிக்கிறது.

மத்தேயு 27 :54 நூற்றவரின் சாட்சி (Witness) :

இயேசுவின் சிலுவை பாட்டில்; "நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, "இவர் உண்மையாகவே இறைமகன்" என்றார்கள். "

ஜனங்கள் பூமியதிர்ச்சியை உணரும் போதும், நடக்கும் காரியங்களைப் பார்க்கும் போதும் அதிக பயமடைகின்றனர். கொலை செய்வதற்கு அதிகாரமுடைய நூற்றுக்கு அதிபதி கடவுளுக்கு மகிமை செலுத்துகிறான்.  இயேசு கடவுளுடைய குமாரன் என்றும், ஆம், அவர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்றும் இப்போது அவன் நம்புகிறான்.(Fitness) இது அவரின் மாட்ச்சியை காட்டுகிறது.

யோவான் 6:14. இயேசுவின் அற்புதம்: 5000 பேருக்கு உணவளித்தல்: (Witness)

இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.(witness ) 5000 பேருக்கு உணவளிக்கும் செயல் இயேசுவின் மாட்ச்சியை (Fitness) வெளிக்காட்டுகிறது.
பிரியமானவர்களே!
1யோவான் 4: 14
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்.நாமும் இயேசுவின் சாட்சிகளாக இவ்வுலகில் அழைக்கப்படுகிறாள். 1யோவான் 5:10.ல் "இறைமகன்மீது நம்பிக்கை கொண்டுள்ளோர் இச்சான்றைத் (witness) தம்முள் கொண்டிருக் கின்றனர். ஆனால், கடவுள்மீது நம்பிக்கை கொள்ளாதோர் அவரைப் பொய்யராக்குகின்றனர். ஏனெனில் தம் மகனைக் குறித்து அவர் அளித்த சான்றை அவர்கள் நம்பவில்லை. இயேசு யூத வம்சத்தில் வந்ததால், பிறப்பிலிருந்தே யெகோவாவுக்குச் சாட்சியாக இருந்தார். (ஏசா. 43:10) யெகோவாவுக்கு சாட்சியாக இருந்த வர்களிலேயே இயேசுதான் மிகச் சிறந்த சாட்சி என்ற சிந்தனையுடன் இந்த லெந்து காலத்தில் சிலுவைப்பாட்டின் சாட்சியாய் வாழ கடவுள் நமக்கு கிருபை செய்வாராக. ஆமென்.





Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.