கிருத்துவை ஆண்டவர் மற்றும் இறைவன் என்று பற்றுறுதி செய்தல். AFFIRMING CHRIST AS THE LORD AND GOD. First Sunday after Easter. வி.ப 3:13-17 கொலே 1:15-23, திரு.பா 93. யோவான் 20:24-29.
முன்னுரை:
கிருஸ்துவின் அன்பு சகோதரர்களே! முற்காலங்களில் ஆண்டவரை ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாக கருதபட்டவர். மோசேவின் காலத்தில் அவர் "இருக்கிற வராக இருக்கிறேன்." " I am who I am" ( வி.ப 3: 14) என தன்னை என்றும் நிலைத்திருக்கின்ற கடவுளாக (Existence) வெளிப்படுத்துகிறார்.
எகிப்திலுள்ள அடிமைப் பட்டிருந்த இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும் படிக்கு தேவனுடைய நாமம் என்ன என்று மோசே கர்த்தரிடம் கேட்டதற்கு, “இருக்கிறவராக இருக்கிறேன் என்பவர் அனுப்பினார் என்று சொல்” என்றார். இது ஆண்டவரின் வல்லமையையும், மகத்து வத்தையும் காட்டுகிறது. கடவுள் தன்னை எப்பொழு தும் இருக்கிறவராகவும்,
எங்கும் இருக்கிராகவும், அனைத்துமறிந்தவராகவும் தன்னை காட்டிக்கொள்ள
இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.கர்த்தருடைய பிள்ளைகளே,! நம்முடைய கடவுள் சர்வ வல்லமையுள்ளவர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர், அவர் அல்பா ஒமேகா. அவரால் எல்லாம்
கூடும். இஸ்ரவேலரக்கு உதவிடும் ஆண்டவர்; நமக்கும் என்றும் உதவிட வல்லவர். இருக்கிரவராய் இருக்கிற ஆண்டவரிடம் நிலையான பற்றுறுதியே நம் நம்பிக்கை.
1. நம் பற்றுறுதியை உறுதி படுத்துவது எவ்வாறு?: How do we affirm our faith?
திருவள்ளுவர் வாய்மை (உண்மை Truth) என்ற சொல்லுக்கு "உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது" வாய்மை எனப்படும். திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது "வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்."
கருத்து: வாய்மை எனப்படுவது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் இல்லாத சொற்களைச் சொல்வது ஆகும். இந்த திருக்குறளை ஏன் இங்கு பயன் படுத்துகிறேன் என்றால் நம் அன்பின் ஆண்டவரின் உயிர்த்தெழுதலை நம்பாமல் பேசிய தோமா அவர்களை குறித்து சிந்திக்கிறேன் மற்றும் வருந்துகிறேன்.உண்மை என்பது பிறருக்கு தீங்கில்லா சொற்களை பயன்படுத்த வேண்டும். நான் அவரை கண்ணால் பார்த்து அவர் காயங்களில் விரலை விட்டு பார்த்துதான் அவர் உயிர்த்தெழுந்தார் என பற்ற்றவராய் பேசியது ஆண்டவரின் மனது எவ்வளவு துன்புற்றிருக்கும் என சிந்திக்க வேண்டும். தோமா அவர்கள் "இந்தியா வின் புனித பாதுகாவலர்" என்று அழைக்கப்படு கிறார்.இயேசு இறுதி இரவுணவு வேளையில், தாம் விண்ணகத்திற்கு செல்வது குறித்து மறைபொருளாக பேசிக் கொண்டிருந்தபோது, தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என கேட்டது அவர் முழுமையாக ஆண்டவரை அறியவில்லை. ஆனால் ஆண்டவர் மிக பொருமை யாக " வழியும் உண்மையும் வாழ்வும் நானே" என்றார்.
யோவான் 20: 26-31 ல் உயர்த்தெழுந்த எட்டு நாள்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியி ருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களு க்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். (My God; My Lord)இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.இயேசுவேஇறைமகனாகிய மெசியா என நாம் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே உயிர் த்த கிறித்து, காணாமல் நம்புவதே நம் பற்றுறுதி என்கிறார். "நம் ஆண்டவரே நம் கடவுள்; அவரே நம் இறைவன்" என்ற உறுதியான பற்றுறுதிதான் கிறித்துவத்தின் அடிப்படை.
2 இயேசுவே கடவுள் என்ற உறுதிப்பாடு: Affirming Jesus as God: கிறித்துவின் அன்பு நண்பர்களே!
இயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான (Iēsoûs) என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங் களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் (Yĕhōšuă‘, Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழி யில் י (Yēšûă ஏசா‘) எனவும் அமைந்ததாகும்.இஸ்லாமியர் இயேசுவை "ஏசா நபி" என அழைக்கின்றனர். நம்புகின் றனர். அவர்களின் வழி பாட்டில் நபிகளின் வரிசையில் ஏசா நபியை உப தேசிக்கின்றனர். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள். கிறிஸ்து என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிசேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம் (Christós) என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேயமொழியில் மெசியா (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமை யால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும்அடிப்படையில் கிறிஸ்து (மெசியா- திருப்பொழிவு பெற்றவர்) என அழைக் கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங் குவோர் அவர் பெயரால் கிறிஸ்தவர் (கிறித்தவர்) என அறியப்பெறுகின்றனர் (திருத்தூதர் பணிகள் 11:26).
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் சீடர்களை பார்த்து "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது (Sover eignty of Christ )எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார். என்றும் நம்மோடு இருக்கிறவராய் இருக்கி றார் நம் ஆண்டவர். அவர் ஆதலால் தேவன் எல்லாவற் றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத் தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும் பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்த ரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.(பிலிப்பியர் 2:9-11).
3.புதிய படைப்பை உறுதிபடுத்தும் இயேசுவின் உயிர்த்தெழுதல்: Jesus' Resurrection Affirms a New Creation. (கொலேசியர் 1:15-23.)
திருத்தூதர் பவுல் அடிகளாரின் முக்கிய நோக்கமே இயேசு கிறிஸ்து யார் என்பதையும் அவர் சிலுவையில் எதை வெற்றிக்கொண்டார் என்பதை கொலேசிய திருச்சபை மக்களுக்கு உறுதிபடுத்தி ஆண்டவர் மீது என்னிலையிலும் பற்றுறுதியுடன் இருக்க வேண்டுகிறார். அவரின் நற்செய்தியே இயேசுவின் உயிர்த் தெழுதலை தன் வாழ்வில் பிரதிபலிக்க கொலேசிய மக்களை வேண்டுகிறார். இயேசுவே இவ்வுலகின் புதிய படைப்பாலி; அனைத்தை யும் ஆள்கின்றவர் என உறுதி படுத்துகிறார். அவரின் முக்கிய கருத்தே; "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண் ணிலுள்ளவை அனைத் தையும் அவர் வழியில் தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண் டார். (கொலோசையர் 1:20) "இயேசு கிறிஸ்துவே கண்களுக்குப் புலனாகாத கடவுளது சாயல்; Jesus is the image of invisible God.படைப் பனைத்திலும் தலைப்பேறு. "(கொலோசையர் 1:15) என பவுல் அடிகளார் கூறுகிறார்.
திருச்சபையாகிய உடலுக் குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழு வோருள் அவர் தலைப்பேறு ஆனார்.உரோமையா 8:35ல் "கிறிஸ்துவின் அன்பிலி ருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின் மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? என புவுல் அடிக ளார் நம்மை கேட்கிறார். என்னிலையிலும் கிறித்து வின் பிரமாணத்தை அவர் என்றும்மீறவில்லை.அத்தகைய பற்றுறுதி என்றும் நம் ஆண்டவரின் இனையற்ற நாமத்தினால் நமக்கு வழங்க கிருபை செய்வாராக ஆமேன்.
பேரா.முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
பழமத்தூர்.
கை பேசி: 9965685511.
Comments
Post a Comment