கிறித்துவை நம்புவதே வழி: BELIEVING IN CHRIST விப: 14:10-20, திருப்பாடல் mm:1-7.
முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! கிருத்துவை நம்புவதே வழி. வழி என்றால் எது? அது ஜீவ வழி. வழிகாட்டிட வந்தவர் இயேசு. ஏனெனில் வழியும் அவர், சத்தியமும் அவர், ஒளியும், அவர் உன்னதமும் அவர். அவர் வழியே நித்திய வழி. நித்திய ஜீவனுக்கான வழி. நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாய் இருக்கிறேன் என்றவர் நல்வழி காட்டுகின்ற நல்ல ஆண்டவர்.யோவான் மட்ட நற்செய்தி 14:6ல் " இயேசு "நானே வழியும் உண்மை யும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை".
தந்தையிடம் செல்ல அவர் ஒருவரே வழி. Jesus Christ is the Passport to Enter into Heaven. எரேமியா 6:16 "ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். இஸ்ரவேலரோ "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்." அவர் வழியில் செல்வர் களுக்கு அமைதி உண்டு. ஏனென்றால் அவர் அமைதியில் அரசர் ( The Prince of Peace) அவர் வழியே அமைதி தரும் வழி. தந்தை யுடன் இணைக்கின்ற நேர் வழி. ஆண்டவரின் வழி "உனக்கு அறிவு புகட்டு வேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டு வேன்; உன்னைக் கண்ணோ க்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 32:8.அறிவு பாதையில் அழைக்கும் வழி.
ஏசாயா தீர்க்கதரிசியி திட்ட மாய் கூறுகிறார். "நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் "இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்" என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.
(எசாயா 30:21.) ஆண்டவரின் மெல்லிய சத்தம் உங்கள் உள்ளத்தில் ஒலிக்கட்டும். , "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாரு ங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்.
மத்தேயு நற்செய்தி 11:28ல்
ஒலிக்கும் வழி. இறுதியாக நீயாய தீர்ப்புக்கான வழி. இயேசு அரியணையில் வீற்றிருக்கும் அரசர். தம் வலப்பக் கத்தில் உள்ளோ ரைப்பார்த்து, "என் தந்தை யிடமிருந்து ஆசி பெற்றவர் களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களு க்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்று க்கொள்ளுங்கள். (மத்தேயு நற்செய்தி 25:34) என நித்திய வாழ்வுக்கான வழியை தருகிறார்.
1. விடுதலைக்கான வழி: The way of Freedom.
வி.ப:14:10-20. விடுதலைக்கான வழி பய ணத்தில் இஸ்ரவேலரக்கு இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஒருபுறம் செங்கடல் மறுபுறம் எகிப்தின் இராணுவம், தெற்கே மலைசிகரங்கள். ஆறு லட்ச்சம் இஸ்ரேல் மக்கள் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், விலங்குகள் மற்றும் சண்டை பயிற்சி அற்றவர் கள். இராணுவ உடை இல் லை. இரதங்கள்.இல்லை. குதிரை வீரர்கள் இல்லை. ஆயுதங்கள் இல்லை. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் அவர்களால் எகிப்து ராணுவத்தை எதிர்த்து போரிட முடியாது. ஏனென்றால் அவர்கள் சாதாரன மேய்ப்பர்கள், அடிமைகள், பிரமீடுகளை கட்டுவது, விவசாய பணிக ளிலும் இருந்தனர். இராணு வத்தில் இவர்கள் இல்லை. நிராயுத பானியாக நின்ற இஸ்ரவேலர் பார்வோன் நெருங்கி வந்து கொண்டி ருக்க, இஸ்ரயேல் மக்களும் தம் கண்களை உயர்த்தி எகி ப்தியர் தங்களைப் பின்தொ டர்ந்து வந்து கொண்டிருப்ப தைக் கண்டனர். பெரிதும் அச்ச முற்றவராய் இஸ்ரயே ல் மக்கள் ஆண்ட வரைநோ க்கிக் கூக்குரல் எழுப்பினர்.
(விடுதலைப் பயணம் 14:10)
ஆபத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உங்களை விடுவிப்பேன் என்ற ஆண்டவரின் வார்த்தை செயல்படுவதை பார்க்கி றோம். இச்சூழ்நிலையில்
இஸ்ரவேலர் மோசேயை நோக்கி, "எகிப்தில் சவக்கு ழிகள் இல்லை யென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்துவந்தீர்? எகிப்திலிருந்து எங்களை வெளியேற்றி இப்படி எங்க ளுக்குச் செய்துவிட்டீரே! என்றார்கள்.
விடுதலைப் பயணம் 14:11
மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்! நிலைகுலை யாதீர்கள்! இன்று ஆண்டவர் தாமே உங்களுக்காக ஆற்று ம் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனி மேல் என்றுமே காணப் போவதில்லை. என
(விடுதலைப் பயணம் 14:13)
செங்கடலை பிளந்து வழி காட்டுகிறார். எகிப்தின் இராணுவத்தை கடலில் அழிக்கிறார். ஆண்டவரின் வல்லமையின் வழிகாட்டு தல் மாபெறும் எகிப்திய இராணுவத்திடமிருந்து மீட்கப்பட்டனர். இதே எகிப்தின் சீனாய் தீபகற்பம் 1967ம் ஆண்டு இஸ்ரேல் கைபற்றி 15 ஆண்டுகள் தன் வசம் வைத்திருந்தது என்ப து வரலாற்றின் நிகழ்வு.
திருப்பாடல்கள் 116ல் ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக் காக வும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 116:12 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 116:13. இஸ்ரவேலரின் விடுதலை பயணத்தின் நோக்கமே ஆண்டவரை தொழுவதற்காகவே. அதற்கு தடையாய் இருந்த பாரோனி ன் இராணுவம் கடலில் மாண்டது.எனவே பிரியமானவர்களே! ஆண்டவரை தொழுவததே ஒரே வழி. உன்னத வழி.
2. மீட்பின் வழி: The way of Salvation: அப் 16:19-34.
தியத்தீரா பட்டிணத்திற்கு பவுலும், சீலாவும் வருகி றார்கள். இது பழமை வாழ்ந்த கிரேக்க நகரம். தற்சமயம் மேற்கு துருக்கி நாட்டில் உள்ளது.இது பெர்கமுவுக்கு 40 மைல் தென் கிழக்கில் அமைந் திருக்கிறது. வியாபாரத் திற்கு சிறந்த இடம். இரத் தாம்பர வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. இவ்விடத் தில் லிடியா என்ற பெண் வியாபாரி இருந்ததாள். இவள் வீட்டில்தான் பவுலும், சீலாவும் தங்குவார்கள். இவள்தான் பவுல் அப்போஸ் தலர் முதன்முதலாக கிருஸ் தவராக மாற்றியஐரோப்பிய பெண்மணி. இயேசுகிறிஸ் துவின் முதல் நற்செய்தி யாக லூக்கா 4:18ல் "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்குஅருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க வும் சிறைப் பட்டோர் விடுத லை அடைவர். பார்வை யற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்க ப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் என்னை அனுப்பியுள்ளார் என வாசி த்தார். இங்கு சிறைபட்டோ ருக்கு இயேசு விடுதலை அளிப்பதை நாம் மூன்று இடங்களில் திருத்தூதுவர் கள் பணிகளில் சிரை மீட்பு செய்திருப்பதை காணலாம். (திரு.தூத 5:17-21, 12:1-11, மற்றும்16:16-34 )
பவுலும் சீலாவும் அநியாய மாக சிறைச்சாலையில் கால்கள் கட்டப்பட்ட நிலை யில் அடைக்கப் பட்டிருந்த னர்.நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்ப்பாபாடி இறைவனிடம் வேண்டினார். மற்ற கைதி களோ இதனைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.திடீரென ஒருபெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறைக்கூடத்தின் அடித்தளமே அதிர்ந்தது. உடனே கதவுகள் அனைத் தும் திறந்தன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழு ந்தன. சிறைக் காவலர் விழி த்தெழுந்து, சிறைக் கூடத் தின் கதவுகள் திறந்தி ருப்பதைக் கண்டு, கைதிகள் தப்பி ஓடியிருப் பார்கள் என எண்ணி, வாளை உருவித் தற் கொலைசெய்துகொள்ள முயன்றார். பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, "நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங் கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம்" என் றார். அங்கு நடந்த அற்புத த்தை பார்த்த காவலர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்து, "பெரியோ ரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆண்டவராகியஇயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றார்கள். அவ்வாறே அவர்கள் இயேசுவை தன் குடும்பத்துடன் மீட்பராக ஏற்றுக் கொண்டனர்.பாடி துதிப்பதால் விடுதலை கிடைக்கிறது. துதிப்பதால் விலங்குகள் (Chains) உடைக்கப்படுகின்றன.
3.இயேசு கிறித்து வாழ்வின் வழி:
Jesus Christ is the Way of Life. யோவா14:1-7.
கிறித்தவர்களின் ஆழ்ந்த நம்பிக்கையே திரித்துவம்.
(Trinity). கடவுள் 'இறை' தன் மையில் ஒருவராகவும், ஆள் தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருக்கிறார்.(Triune God.) இதை முழுமையாக நம்பு வதே ஆண்டவரின் மீது நாம் வைக்கும் பற்றுறுதியாகும். ஆனாலும் சீடர்களுக்கு இயேசு யார் என்பதை முற்றி லும்அறியவில்லை.ஆண்டவர் உள்ளத்தில் சீடர்களின் தன்மையை குறித்து மிகவும் வருந்துகிறார். யூதாஸ் காட்டிக் கொடுக் கப்போகி ன்ற தன்மையும், பேதுரு வின் மறுதலிக்க போகும் செயலும், இங்கு தோமா வின் வார்த்தையான , "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக் குத் தெரியாது. அப்படியி ருக்க நீர் போகுமிடத்து க்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார்.
(யோவான் நற்செய்தி 14:5) மற்றும் பிலிப்புவின், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார்.
இயேசு அவரிடம் கூறியது; "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள் ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியி ருக்க, "தந்தையை எங்களு க்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்?
(யோவான் நற்செய்தி 14:8,9)
இந்த நான்கு சீடர்களின் தன்மை ஆண்டவருக்கு "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்" இருந் தது. It's adding fuel to the fire. இந்த மனநிலையில் ஆண்டவர் உதிக்கும் வார்த்தை, "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளி டம் நம்பிக்கை கொள்ளுங் கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிட ங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், "உங்களு க்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்" என்று சொல் லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். (யோவான் நற்செய்தி 14:1-3) என்ற நம்பிக்கையின் வார்த்தை யை அந்த கடைசி இரவில் பதினோறு சீடர்களுக்கும் கொடுக்கிறார். தந்தை வாழும் இடத்தில் அனேக உறைவிடங்கள் உள்ளன அதில் நீங்கள் என்றும் தந்தையுடன் தங்கி இருக்க நான் ஆயத்தப்படுத்த செல்கிறேன். தந்தையும், என்னையும், என் வார்த்தை யை நம்புங்கள் என வேண் டுகிறார். கலங்கிய உள்ள ங்களுக்கு நம்பிக்கை தருகி றார். என்மேல் நம்பிக்கை உள்ளவர்களை நான் மீண் டும் வந்து தந்தையுடன் என்றென்றும் இருக்க அழைத்து செல்வேன் என்று வாக்குறுதியை அளிக்கி றார். கிறிஸ்துவின் அன்பர்களே! யோவான் 14:6,7ல் நம் நிலை வாழ்விற் கான வழி என்பது தந்தை யிடம் செல்வதற்காக மட்டுமல்ல அது நம்மை இவ்வுலகில் நீதியுடனும் (Justice) அமைதியுடனும் (Peace) அன்புடனுன் ( Love) வாழ்வதே தந்தையிடம் செல்வதற்கான தகுதியான வழி என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆண்டவரிடத்தில் அனேக உறைவிடங்கள் ( dwelling places) உண்டு. அவ ற்றில் ஒன்றை தம் சீடர்களு க்காக தயார்படுத்துகிறார். தந்தையின் இல்லம் அவரை ஏற்றுக்கொண்ட அனைவரு க்கும் சொந்தமானது. அது நித்திய நித்தியமானது. பவுல் அடிகளார் பிலிப்பியரு க்குகூறுவதுபோல" நமக்கோ விண்ணகமே தாய் நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக்காத் திருக்கிறோம். (பிலிப்பியர் 3:20). விண்ணகம் தந்தை யின் வாழ்விடம், அவரை நம்பியவர்களின் நித்திய உறைவிடம். இயேசுவே விண்ணரசு;விண்ணரசே இயேசு.
தோமா ஆண்டவரிடம்; நீர் போகும் இடம் எங்களுக்கு வழி தெரியாது என்று கூறுகின்றபோது; "இயேசு அவரிடம், "வழியும், உண்மை யும், வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. (யோவ: 14:6) "நானே" என்ற சக்திவாய்ந்த ஆறாம் வார்த்தையில்தான் மூன்றும் கலந்திருக்கிறது. அவர் வழியாகவும், உண்மையாகவும், வாழ்வுமாய் இருக்கிறார். இந்த வழியை தவிர தந்தை ரிடம் செல்ல வேறு வழியில் லை என உறுதிபட கூறுவது டன் தானும் தந்தையும் ஒன்றாக உள்ளோம். என் னை காண்கிறவன் தந்தை யை காண்கிறான் என தெளிவுப்படுத்துகிறார். ஆண்டவர் தந்தையின் "ஒளிப்பட நகல் ( Xerox Copy)"
என தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதை நாம் பார்க்கிறோம்." Christ is not Just the Way of Life towards Heaven but also the way of life here and now on Earth. It's not Tomorrow but Today நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும்கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக்கை யால் கட்டப்படாதது, நிலை யானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!
(2 கொரிந்தியர் 5:1) ஒரு கிறிஸ்தவன் இந்த உலகத் தில் வாழ்ந்தாலும் கூட அவ னுடைய குடியுரிமை இந்த உலகத்திற்குரியதாக இல் லை. அது பரலோத்திற்குரி யது. என்பதை என்னாளும் மறவோம்.நாம் நம்புவோர் யார் என்று அறிவோம்.
கிறிஸ்துவின் அன்பு நண்பர்களே!. உடைந்த நெஞ்சங்களின் உள் ஆற்றல் இயேசு. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத் நற்செய்தி 5:3) இயேசுவின் வழியை ஏற்றுக்கொண்டோர் சேரும் இடம் Destination விண்ணரசு. நமக்கென்று பல உறைவி டங்கள் உண்டு. நம்முடைய அசைக்க முடியாத நம்பிக் கை ஆண்டவர்மேல் உறுதி யாக இருக்க வேண்டும். ஆண்டவர் தந்தையிடம் செல்லும் வழியை நமக்கு காண்பித்தார். நாம் மற்ற வர்களுக்கு "இயேசுவே ஒரே வழி" என காட்டுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை தங்களை காக்ககடவதாக! ஆமேன்.
Comments
Post a Comment