கிறித்து: வாழ்வு தரும் உணவு. CHRIST: THE LIFE GIVING FOOD. வி.பயணம் 12:11-20, 1கொரி 11:23-29. தி.பாட 116.யோவான் 6: 47-58 கட்டளை வியாழன்.Thursday.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்து யோவான் நற்செய்தியில்தான் தன்னை "நானே நானே' என தன்னை பல வழிகளில் வெளிப்படுத்துவதை பார்க்கிறோம். யோவான் 6:35ல் இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவரு க்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. எனக்கூறி நம்மை அழைக்கிறார். இயேசு யோவான் நற்செய்தியில் ஏழு முறை நானே நானே என்று அறிக்கை செய்கி றார். இயேசு மேலும்
நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைப் பார்த்தும் நம்பாமல் இருக்கிறீர்கள். . உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று சொல்கிறார்.—(யோவான் 6:43-47; ஏசாயா 54:13.)
உணவு. உயிர் வாழவும், உறவில் வளரவும் உணவு தேவைப்படுவது போல், நாம் அருளுயிரைப் பெற்று இறை உறவிலும், மனித உறவிலும் செழித்து வளர, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்த ஒப்பற்ற உணவே நற்கருணை. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” என்கிறார் இயேசு.
நற்கருணை ஓர் அன்பு விருந்து. அதில் பங்கேற்கும் நாம் ஒரே உள்ளமும் ஒரே உயிரும் உள்ளவர்களாய் வாழவேண்டும். கிறிஸ்து நமக்காக ஏற்படுத்தி புதிய உடன்படிக்கை தான் இந்த நற்கருணை. ஆண்டவரின் திருவிருந்து. இது "இறுதி இரவுணவு" The Last Supper" எனஅழைக்கப்படுகிறது. இயேசுவின் சிலுவைப் பலியின் முன் அடையாள மாக உருவாக்கப்பட்ட நற்கருணை பலி, அவரது திருவிருந்தையும், கல்வாரித் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் சிறப்பிக்கப்படுகிறது. இது இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கி யிருக்கும் அருட்சாதனம் ஆகும். சமுதாயத்தில் அன்பின் தீபமாக ஒளிரவேண்டும். ஓளியாம் கிறிஸ்துவில் ஒன்றுபட்ட நாம், உலகின் ஒளியாய் விளங்க வேண்டும்.நாம் அழிந்து போகும்உண வினால் மட்டுமல்லாமல், அழியாத இறை வார்த்தை யினாலும் உயிர் வாழ்கி றோம். இறைவன் தமது வார்த்தையின் வழியாக நம்மோடு வாழ்கிறார், நம்மோடு பேசுகிறார். எனவே, இறை வார்த்தை யின்படி நம் வாழ்வு அமைந்திட நிலைப்படு த்துவோம். வாழ்வு தரும் உணவு நானே.’ உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் ‘மன்னா’வை உண்டபோ திலும் இறந்தனர். உண்டவரை இறவாமல் இருக்கச்செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே? அது இயேசு கிறிஸ்து என்ற விண்ணக உணவு ஆகும். ‘‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து வாழ்வு தரும் உணவு நானே!’’ இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
1.புதிய உடன்படிக்கை:
The New Covenant.
இயேசு கடைசி இரவு உணவில், அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப் புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.' (மத்தேயு 26:26-29) பவுல் அடிகளார் இதை நீங்கள் திருவிருந்தில் பங்குபெறும் போதெல்லாம் "என் நினைவாக" (In my remembrance) இவ்வாறு செய்யுங்கள் என்றார். திருவிருந்து எனும் ( The Eucharist) நற்கருணை அவரது உண்மை பிரசன் னத்தின் அருட்சாதனமாகும். இந்த நாளில்தான் ஆண்டவர் இயேசு குருத்துவத்தை ( Priesthood) ஏற்படுத்தினார்; இந்த நாளில்தான் இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவினார்; அதைவிட இந்த நற்கருணையை ஆண்டவர் இயேசு, தான் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில் ஏற்படுத்துகிறார்.இது கிறித்தவர்களின் அடையாளம். அனைவரும் அற்பணிப்போடும், கிறிஸ்துவை மனதில் நினைத்துக் கொண்டு பங்கு பெறவேண்டும். நறுக்கருணை பாவ மன்னிப்பின் உறுதியை தருகிறது. ஆண்டவருடைய மரணத்தை நினைவு கூர்ந்து அவர் திரும்ப வரும்வரை அறிவிக்கிறீர்கள்." (1 கொரிந்தியர் 11:23-26) என பவுல் அடிகளார் நம்மை வேண்டுகிறார்.பிரியமாணவர்களே! கடவுள் நமக்கு கற்பித்த புதிய உடன்படிக்கையின் கட்டளைப்படி ஒருவரும் அபாத்திரராய் இந்த திருவிருந்து என்ற நற்கருணையில் பங்கு பெறக் கூடாது. இதில் ஆண்டவருடைய ரத்தமும் (the blood) சரீரமும் ( the body) அவருடைய பிரசன்னமும் ( the presence) மூன்றும் கலந்திருப்பதினால் நம்மை முழுமையாக அர்ப்பணித்து பாவமன்னிப்பின் நிச்சயத் தைப் பெறுகிறோம் என்று அதில் பங்கு பெற வேண்டும். அவ்வாறு செய்வதே கடவுளுக்கு பிரியமான செயலாகும். கடவுள் நம்மை ஆசிர்வதித்து காப்பாராக! ஆமென்.
பேரா. முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
www. David Arul Sermon Centre
Comments
Post a Comment