உயிர்த்த கிறித்துவுடன் அனுதினமும் கூட்டுறவில். Communion With the Risen Christ in Daily Life. வி.பயணம் 40:34-38. பிலிப் 3:8-16. திரு.பாடல் 23. லூக்கா 24:13-33
முன்னுரை:
கிறிஸ்துவின் அன்பு சகோதரர்களே!. அனுதினமும் நாம் ஆண்டவ ரிடம் இனைந்து செயல்பட வேண்டும். அவர் நாமம் "இம்மானுவேல் " என்றும் நம்மோடு இருக்கிறார். நாம் அவரோடு இருக்கிறோமா? ஆண்டவர் நம்மோடு நிழ லாக தொடர்ந்து வருகிறார். இதோ!உலகத்தின் முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறியவர் எப்பொ சட்ட ழுதும் இருக்கிறவராக இருக்கிறார்.
(மத்தேயு நற்செய்தி 28:20) நம்மோடு அவர் என்றும் இருக்க உறுதியளிக்கிறார். நாம் அவரோடு இருக்கி றோமா என சோதித்துப் பாருங்கள். கிறித்துவிடம் அனுதினமும் கூட்டுறவு என்பது இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருப்பது, அனுதினமும் ஜெபிப்பது, துதித்து பாடுவது, ஆண்டவரின் அன்பை திரு வார்த்தையாய் மற்றவர்க ளிடம் பகிர்ந்து கொள்வதே ஆண்டவரோடு இருக்கின்ற கூட்டுறவை வெளிப்படு த்துவதாக இருக்கும். "நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையி டுவார். (திருப்பாடல்கள் (சங்கீதம்) 91:11.வெகு காலத்துக்கு முன்னரே முற்பிதாவாகிய நோவா கடவுளுடைய சித்தத்துக்கும் நோக்கத்துக்கும் இசைவாக வாழ தீர்மானித்திருந்தார். “தன் காலத்தில் இருந்த வர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தார்; நோவா தேவனோடு சஞ்சரி த்துக்கொண்டிருந்தார். சேத்தின் வம்சத்தில் பிறந்த ஏனோக்கு, ஆதாமின் ஏழாம் தலைமுறையில் இருக்கின் றான். ஏனோக் தேவனோடு சஞ்சரிப்பது என்பது, தேவனோடு மிக நெருக்க மாகத் தொடர்புகொள்ளுதல் ஆகும். தேவன்கூறுபவை களை எப்பொழுதும் கேட்க செவிகளை திறந்து வைத்தி ருத்தலாகும். அவ்வாறுதான் ஏனோக்கின் வாழ்க்கை இருந்தது. ஏனோக்கின் நினைவெல்லாம்தேவனைப் பற்றியதாகவுமேஇருந்தது.
ஏனோக்கு ஒரு குடும்பஸ்த னாக இருந்தும் தேவனோடு சஞ்சரித்தான் என்பதைக் கவனிக்க வேண்டும். நாம் ஆண்டவரோடு சேர்ந்து பயணிக்கின்றபோது நம் மோடு அவர் தொடர்ந்து பயணிக்கிறவராய் இருக்கிறார்.
1. யெகோவாவின் வழி நடத்தல்: The Guidance of Jechova in the Desert: விடு. பயணம் 40:34-38.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அந்த பயங்கர அரேபிய பாலைநிலத்தில் கடுமையான வெயில் மற் றும் இரவில் கடுமையான குளிர், மற்றும் பாலை வன சூராவளி காற்றுகள், விச பூச்சிகள் மத்தியில் பகலில் மேக ஸதம்பத்தோடும் (The Pillar of Cloud) இரவில் வெளிச்சம் தர அக்கினிஸ தம்பத்தோடும் ( The Pillar of Fire) பாதுகாத்து வழி நடத்தினார். ஆண்டவர் அவர்களின் பயணதிட்டத் தை அற்புதமாய் வழிநடத் தினார். திரு உறைவிடத் தைவிட்டு(Tabernacle) மேகம் எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும் பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதை யும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள். "God led his people with the pillar of fire and the pillar of cloud." இது ஆண்டவரின் உன்னத பிரசன்னத்தை வெளிப்படு த்துகிறது. ஹென்ரி போர்ட் என்ற அமெரிக்க தொழிலதி பர் தன் வெற்றியின் அனுப வத்தை" Walk With the Lord என்ற தலைப்பில்
“Those who walk with God always reach their destination.” ― Henry Ford" கடவுளோடு எப்பொழுதும் இனைந்து பயணிப்போர் தங்களின் இலக்கை அடைவர் என தன் வெற்றியின் இரகசியத்தை வெளியிட்டார். இஸ்ரவேலர் தங்களின் 40 ஆண்டுகால பாலைவன பயணத்தில் அனுதினமும் ஆண்டவரின் வழிநடத்தலில்,பாதுகாப்பில் கடந்து சென்றனர் பலநேரங் களில் அவர்கள் ஆண்டவ ரைப் பார்த்து முறுமுறுத்தா ர்கள், சோதித்தார்கள் ஆனாலும் கடவுள் அவர் களை கைவிடவில்லை. இயேசுவும் சீடர்களும் மறு ரூப மலையில் பேசிக் கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்ப டைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.
(மத்தேயு நற்செய்தி 17:5) மேகம் ஆண்டவரின் பிரசன்னமும். ஆதியில் இஸ்ரவேலரை காத்த மேகம் இயேசு இவ்வுலகிற்கு மீண்டும் வரும்போது மேகத்தோடே வருவார். மத்தேயு 24:30: ல் அப்பொ ழுது மனுஷ குமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷ குமாரன் வல்லமை யோடும் மிகுந்த மகிமை யோடும் வானத்தின் மேகங் கள்மேல் வருகிறதை பூமியி லுள்ள சகல கோத்திரத்தா ரும் கண்டு புலம்புவார்கள். நாம் மேகத்தை பார்க்கும் போதெல்லாம் இறைவனின் வருகையை எதிர்நோக்கு வோம்.
2. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும்குறையில்லை. திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 23:1 The Lord is my Shepherd:
திருப்பாடல் 23 ல் ஆண்டவரே நம் மெய்யான
ஆயர். நம்மை அற்புதமாய் பாதுகாப்பாய் வழிநடத் துவார் அமர்ந்த தண்ணீர் களண்டைகளில் நடத்து வார். இஸ்ரேல் மக்களை வனாந்தரத்தில் வழி நடத்தியது போல நம்மையும் வழி நடத்துவார் ஏனெனில் இயேசுவே நல்மெய்ப்பர். நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.
(யோவான் நற்செய்தி 10:11)
நல்ல ஆயன் ஆடுகளை அனுதினமும் தண்ணீர் உள்ள இடங்களில் வழி நடத்துவது போல நம்மை யும் வழிநடத்திக்காக்கி ன்றார். நமக்கு நன்மையும் கிருபையும் வாழ்நாள் முழுவதும் தொடர நம்மோடு வருகிறார். நம்மை பாதுகாக் கிறார். அவரே நல்ல ஆயன் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
3. எம்மாவிற்கு செல்லும் வழியில் கிளியோப்பாவை இயேசு சந்தித்தல்: Jesus encounters Cleopas on the way to Emmaus: Luke (24:13–35)
இயேசுவின் சீடர்களான கிளியோப்பாவும் வேரோரு வரும் எருசலேமிலிருந்து 11 கி.மி தூரம் உள்ள எம்மா விற்கு நடந்து செல்கிறார் கள். விவிலியத்தில் ஒரே ஒரு முறை வரும் எம்மாவு உயிர்த்த கிறித்துவின் நாமத்தினால் உலகில் பேசப்படும் ஊராய் மாறி போனது. Praise the Lord. இவர்கள் வருத்தம், கலக்கம் நிறைந்த மனதோடு இயேசு வின் சிலுவை பாடுகளை குறித்து பேசிக்கொண்டு நடந்துக்கொண்டிருந்தனர்.
எங்கே இரண்டு மூன்று பேர் சேர்ந்து என்னை நினைக் கிறார்களோ அவர்கள் மத்தியில் வாசம் செய்யும் இறைவன் இவர்களுடன் ஒரு அன்னியராய் சேர்ந்து அவர்களின் உரையாடலில் பங்கு பெறுகிறார். இஸ்ர வேலரை காப்பார் என்று நம்பி இருந்தோம். ஆனால் மரித்து விட்டாரே என்று கலங்கினர். அவர் அவர் களை நோக்கி, "வழிநெடு கிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டி ருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முகவாட் டத்தோடு நின்றார்கள். அவர் களுள் கிளயோப்பா என்னு ம் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங்கியிருப் பவர்களுள் உமக்குமட்டும் தான் இந்நாள்களில் நிகழ் ந்தவை தெரியாதோ!" என்றார். அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின் றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன் பாகச் சொல்லிலும், செய லிலும் வல்ல இறைவாக் கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகி றார் என்று நாங்கள் எதிர்பா ர்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். சில பெண்கள் அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார்என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்த சீடர்கள் சிலரும் கல்லறைக்குச் சென்று பார்த்தார்கள் ஆனால் அவர்களும் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக் கினர்கள் உரைத்த எல்லாவ ற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப் பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அங்கு நடமாடும்வேதவகுப்பு (Mobile Bible study) நடத்தி னார். அவர் ரபி என்பதை நிரூபித்தார்.அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊர் எம்மாவை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர் கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; "Abide in us" ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். சூரியன் மறையும் நேரத்தில் ஆண்டவரை அழைப்பது நல்ல தருணம். இருள் நம்மை சூழும் முன் அவரை அழைப்பது நமக்கு நல்லது. அவர்களின் அழைப்பை ஏற்று அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
ஆண்டவரின் அன்பை பாருங்கள். அழைத்தால் வரும் உயிர் உள்ள ஆண்ட வர்.அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்த போது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக்கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். நாம் அவருடைய திருவிருந்தில் பங்கு பெறும்போது அப்பம் பிட்கையில் நம் கண்களும் திறக்கின்றன. அவரின் உடலையும், உதிரத்தையும் நம் மீட்பிற்காக கொடுத்தார் என்பதையும், நற்கருணை யில் அவர் பங்குபெறுகிறார்
என்பதே நம் உறுதியான பற்றுறுதியாகும். சீடர்கள்; இயேசு மறை நூலை விளக்குகளில் நம் உள்ளம் கொழுந்து விட்டு எரிய வில்லையா? என்றார்கள். ஆண்டவரோடு பயணிக்கும் போது உள்ளம் ஆற்றல் பெறுகிறது. அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன. தங்களை இருள் சூழ்ந்து கொண்டது என்று பலவாறு புலம்பிக் கொண்டிருந்த அவ்விரு சீடர்களின் உள்ளங்கள், எதிர்பாராத இந்த மகிழ்வால், ஒளிவெள் ளத்தில் மூழ்கின.வெளியில் சூழ்ந்திருந்த இருளைப் பற்றிய கவலை ஏதும் இல் லாமல், இரவோடு இரவாக, அவர்கள் இருவரும் எருச லேம் திரும்பிச் சென்றனர். அவர்களின் இருள் நீங்கி யது. அந்த அனுபவம் நமக்கு இருக்குமேயானால்உயிர்த்த கிறித்து நம் உள்ளத்தில் வாசம் செய்கிறார். எம்மாவு சீடர்களுடன் வழி நடந்த கிறித்து நம் வாழ்வோடும் வழி நடக்க அழைப்போம். அவ்வாறே திருத்தூதர் பவுல், கொலைவெறியுடன் தமஸ்கு நகர் சென்றபோது, உயிர்த்த கிறித்து வழியில் அவரைச் சந்தித்தார், மனமாற்றம் தந்தார் (திருத்தூதர் பணிகள் 9: 3-9).
4. இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்ற செல்வம்: The knowledge of Christ is an Incomparable wealth:பிலிப்பியர் 3: 8-16.
திருத்தூதர் பவுல் அடிகளார்
ஒரு யூதன், ரோமகுடியுரிமை பெற்றவர். பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற் றவர்; இஸ்ரயேல் இனத்த வன்; பென்யமின் குலத்த வன்; எபிரேயப் பெற்றோரு க்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப் பிடிப்பதில் பரிசேயன்.
(பிலிப்பியர் 3:5)
அவர் தந்தையார் ரோமர் குடியுரிமை பெற்றவர். செல்வந்தர். சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத் திலே பிறந்து, எருசலேம் நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து,(கமாலியேல் என்பவர் பலரும் அறிந்த பரிசேய னாக இருந்தார். வேதப் பண்டிதர்) முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட் டவர், தேவனைக்குறித்து மிகவும் வைராக்கியமுள் ளவராய் இருந்தவர். "மரத்தில் தொங்கவிடப் பட்டவன் சபிக்கப்பட்டவன்” (இச 21:23) என்கிறது இணைச்சட்ட நூல். இதை உள்வாங்கிக் கொண்ட தாலோ என்னவோ சவுல், ‘சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு எப்படி மெசியாவாக முடியும்?’ என்று கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றி வந்தவர்களையெல்லாம் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டுகின்றார். இதையெல் லாம் அவர் ஒரு சமயக் கடமையாகவே செய்கின் றார். இப்படி கிறிஸ்தவர் களை சிறைபிடிக்க அதிகா ரம் பெற்று தமஸ்கு நகரை நோக்கி செல்கின்ற போது உயிர்த்த கிறிஸ்துவின் உன்னத தரிசனம் அவரை மனமாற்றியது. இயேசு சவுலிடம் பேசுகின்ற, சவுலே! “சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்து கின்றாய்?” என்ற வார்த் தைகள் மிகவும் கவனிக் கத்தக்கவை. உள்ளத்தை உருக்கும் வார்த்தை. கிறிஸ்தவர்களுக்கு தீங்கிழப்போர் இயேசு விற்கே தீங்கிழப் போர் ஆவர். ஆண்டவரின் அருள் வார்த்தை அவரையே கிறிஸ்துவுக்காய் துன்புறும் பவுலாய் மாற்றியது. பிற இனத்தவரின்அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
இப்பேர்பட்ட பவுல் அடிக ளார் "எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ் துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.
(பிலிப்பியர் 3:7) மிக முக்கியமாக "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே (Knowledge about Christ ) நான் பெறும் ஒப்பற் றச் செல்வம். ( Peerless Wealth) இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருகிறேன்.
(பிலிப்பியர் 3:8)இதுவே அனுதின வாழ்வில் கிறித்துவை பின் பற்றும் செயல். திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி, செல்வாக் குகள் எனக்கிறுப்பினும் குருசை நோக்கி பார்க்கின்ற போது உரிய பெருமை யாவும் அற்பமே. இது உண்மை.
5.உயிர்த்த கிறித்துவுடன் அனுதினமும் கூட்டுற வில் இருப்பது எப்படி? How to Communion With the Risen Christ in Daily Life.?
உயிர்த்த கிறிஸ்துவோடு அனுதினமும் பயணிப்பது எம்மாவு பயணத்திற்கு சமமாகும். ஏனேனில் உயிர்த்த கிறித்து நம்மோடு இனைந்து பயணிக்கிறார். உறவாடுகிறார். நம் உள்ளம் கொழுந்து விட்டு எரிய செய்கிறார். சில வழிகள் நம்மை அவரோடு பயணிக்க செய்கிளது:
1. அதிகாலையில் எழுந்து ஜெபிப்பது.
2. வேத வாசிப்பும், தியானிப்பும் (Meditation.)
3. பொல்லாரின் சொல்லி ன்படி நடவாமல், பாவிக ளின் தீயவழி நில்லாமலும்; இகழ்வாரின் குழுவினில் அமராமல் இருப்பது.
(திருப்பாடல்கள். 1:1)
4. தூய ஆவியின் வரங்களை பெறுவது
5. ஆவியின் கனிகளை வாழ்வில் பெறுவது மற்றும் பகிர்ந்தளிப்பது.
6. கிறித்துவின் இறை தூதராக Ambassador of Christ. விளங்குவது.(மத்:5:13)இவ்வழிகளில் அனுதினமும் நாம் கிறித் துவுடன் பயணிக்க முற்படு வோம்.உயிர்த்த கிறிஸ்து வின் அன்பு நம்மை ஆட்கொள்வதாக! ஆமேன்.
இதன் பொருள் மித வெப்ப நீரூற்று என்பதாகும்[1].
Readers are requested to give your comments with relevant to the topic to add or edit. Thanks
ReplyDelete