பரிசுத்த புதன். Holy Wednesday. மலைகளை பெயர்போம் வாரிர். Come: Let us move the Mountains. மாற்கு 11: 22-24.

முன்னுரை:
பிரியமானவர்களே!. பற்றுறுதி என்கிற விசுவாசம் இல்லாமல் ஆண்டவருக்கு பிரியமாக இருக்க முடியாது. கிறிஸ்தவர்களின் அடிப்படை தெய்வ பக்தி என்பது கடவுள் மேல் வைத் திருக்கின்ற பற்றுறுதி. கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும் இந்த மலைகள் பெயர்ந்து போகும். மத்தேயு 17 : 20.ல் இயேசு சீடர்களைப்பார்த்து , "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் " அன்பிற்குரியவர்களே! ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது கடுகளவு விசுவாசம் மட்டுமே அந்த அளவு விசுவாசம் நமக்கு இருக்கிறதா? அந்த பற்று றுதி நமக்கு இருக்குமே யானால் ஆண்டவரை உறுதியாய் பற்றிக் கொள் வோம்.மலைகளை பெயர்க் கத்தக்க விசுவாசம்” (1 கொரி. 13:2) என்று வேதம்சொல்லுகிறது. உங்களுடையவிசுவாசமானது மலைகளைக் கூடபெயர்க் குமாம். அத்தகைய பற்று றுதி இருந்தாலும் அன்புநமக்கிறாவிட்டால் நாம் ஒன்றுமில்லை. சக மனிதர்களை நேசிப்பது கடவுலையே நேசிப்பதாகும்.
1 சீடர்களின் பற்றுறுதி:   Faith of the disciples; மத்தேயு 17:14-18.
இயேசுவும் சீடர்களும் மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு,  "ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரி லும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்;அவனைக்குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றார். 
அதற்கு இயேசு, "நம்பிக்கையற்ற சீரழிந்த தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக் கொள்ள இயலும்? அவனை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்" என்று கூறி 
 அப்பேயை வெளியேற்றி.  சிறுவனைகுணமாக்கினார்.
சீடர்களைப் பார்த்து உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை கூட இல்லை கடுகளவு நம்பிக்கை இருந்தால் இந்த மலையை பார்த்து பெயர்ந்து போ என்று சொன்னாள் அது நடக்கும்‌ அது மட்டுமல்ல இத்தகைய பிசாசுகளை விரட்டுவதற்கு இறை வேண்டுதலும் உண்ணா நோம்பும் மிக முக்கிய மானது என்று கூறினார்.
2. மலைகளை பெயர்ப் போம் வாரிர்: Come: Let us move the Mountains.
தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கை யில் இருக்கிற மலைகள் என்ன? தடைகள் என்ன? நீண்ட காலமாய் தடைப்பட்டு வருகிற காரியங்கள் என்ன? மலைகளைப் பார்த்து பேசுங்கள். விசுவாசத்தோடு பேசுங்கள். நிச்சயமாய் அந்த மலை கடலிலே தள்ளுண்டு போகும்.  ஆண்டவர் கூறுவது போல இறைவேண்டல் மிக முக்கியமானது இறைவே ண்டல் ஒரு மந்திர சொல். ஆண்டவரிடம் பேசும்மொழி.  இறைவண்டில் இல்லாமல் நாம் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. இறை வேண்டுதலும்,பற்றுறுதியும் கிறிஸ்தவர்களுக்கு இரு கண்கள். இவைகளை என்றும் நாம் விட்டு விடக் கூடாது. பிசாசின் வலிப்பு நோய் (Demon Possed Seizure) என்பது மலை போன்ற வியாதி. இதை விரட்ட பற்றுறுதியுடன் கூடியஇறை வேண்டல் மிக அவசியம். "விசுவாசத்தின் தந்தை"( The father of faith) என அழைக்கப்படும் ஆபிரகாம்,;  விசுவாசத்தாலே தன் மகனை,  ஆண்டவருடைய விருப்பத்திற்கு ஏற்ப காணிக்கை பலியாக செலுத்த முன்வந்தான். ஆண்டவர் அவன் பலியை தடுத்து; ஆசீர்வதித்து அவனை பல நாடுகளின் தந்தையாக மாற்றினார். ( The father of Nations)
சக்கரியா 4:7 ல் மாபெரும் மலையே! செருபாபே லுக்குமுன் உன் நிலை என்ன? ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய். ஆண்டவர்  "பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப் படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். 
(எசாயா 40:4) என உரைக்கிறார். மலைகள் போன்ற பிரச்சினைகள், கவலைகள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் இவைகள் மலைகள் போன்று இருந்தாலும், நாம் ஆண்டவர்மீது கொண்டுள்ள பற்றுறுதியினால் இவைகளை விலகிப் போ என்றால் போய்விடும். எனவே அன்புக்குரியவரே நாம் கடுகு அளவாவது விசுவாசம் ஆண்டவர்மேல், ஆண்டவரின் பெயரில்  வைக்க வேண்டும். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். நம்முடைய விசுவாசம் ஆண்டவரின் மேல் இருக்கிறது, எனவே நாம் உலகத்தை ஜெயிப்போம்.
Prof. Dr David Arul Paramanandam.

God Bless you



Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.