கிறித்துவின் விருந்தோம்பலுக்கு அழைப்பு. INVITATION TO CHRIST'S HOSPITALITY. தொட. நூல் 18:1-10, எபி. 12:9-18, திருப்பாடல் 15, யோவான் 21:1-14. The second Sunday after the Resurrection.
கிறிஸ்துவின் அன்பு விசுவாசிகளே! தமிழர்களின் பண்பாட்டு குணங்களில் ஒன்று விருந்தோம்பல். திருவள்ளுவர் தன் அறத்துப்பாலில் "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந்தலை." பொருள்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற் றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
"மருந்தே ஆயினும் விருந்தோடுண்’ என்கிறார் ஒளவையார். நாம் உண்கி ன்ற உணவை பசியோடு வருகின்றவர்களுக்கும் கொடுத்து உபசரிக்கும் பண்பு தமிழர்களுக்கு உரிய தாகும். ‘இட்டு கெட்டவர் யாரும் இல்லை’ என்றும் கூறுவார்கள். விருந்து என்பது ஏரோது அரசன் கொடுத்த மது விருந்து போல் இருக்க கூடாது. அது திருமுழுக்கு யோவானையே பலி வாங்கியது. இயேசு வின் வாழ்வில் கானாவூர் கலியாண விருந்தில் தொடங்கிய அற்புதம் தனது கடைசிவிருந்தில் தன் உடலையும் இரத்ததையும் பகிர்ந்து கொடுக்கிறார். இயேசு தமக்கு விருந்தளி ப்பவருக்கு ஏதாவது ஒரு பரிசையும் கொடுப்பார். இயேசு விருந்தளிப்பதில் முதன்மையானவர். மார்த்தால், மரியாள் குடும்ப த்திற்கு மரித்த லாசருவை உயிர் பெற செய்தார். சகேயு ஆயக் காரன் கொடுத்த விருந்தில் சகேயுவுக்கு இரட்சிப்பையும், இவன் ஆபிரகாமின் குமாரன் என்ற பரிசை கொடுத்தார். விருந்துகளிலேயே முதன்மையானது இஸ்ரவேல் மக்களை 40 ஆண்டு வனாந்தரத்தில் மன்னா, காடைகளை உணவாக கொடுத்து சுமார் 6,00,000 இலட்சம் மக்களுக்கு உணவளித்த செயலே உலகின் மிகப்பெரிய உணவளித்தல் திட்டமாகும்.
இன்றளவும் நம் குடும்பங் களில் சிறு குழந்தைகள் தான் விருந்தினர்கள் வரும்போது ஓடி சென்று வரவேற்கிறார்கள்.
1. ஆபிரகாமின் விருந்தோம்பல்: The Hospitality of Abraham: (தொடக்க நூல்: 18: 1-10)
ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் ( ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும், ஆநேருக் கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சம பூமியிலே அப்பொழுது குடியிருந்தார்.) தேவதாரு மரங்களருகே (Oak Tree) ஆபிரகாமுக்குத் தோன்றி னார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந் திருக்கையில், கண்களை உயர்த்திப்பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலை விட்டு ஓடினார். அவர்கள் முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, “என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவி யபின், ( இயேசுவும் கடைசிவிருந்துக்கு(The Last
Supper)முன்னாடி சீடர்களின் கால்களை கழுவினார். இது யூத மரபு) இம்மரத்தடியில் இளைப்பாறுங்கள்.கொஞ்சம் உணவு கொண்டு வருகி றேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில், உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்” என்றார். இது வேதத்தின் முதல் விருந்தோம்பல் ஆகும்.
இங்கே தமிழர் வரலாற்றில் நாம் கண்ட விருந்தோம்பல் பண்புகள் ஆபிரகாம்வாழ்வி லும் அப்படியே காணக்கி டக்கின்றன. அதாவது, நாம் நிறைந்த மனதுடன் ஒருவரு க்கு விருந்தோம்பல்செய்யும் போது, அதற்கான பயனாக இறைவனின் அருள்வரங் களைப் பெற்றுக்கொள்கின் றோம். ஆபிரகாம் தன்னிடம் வந்த அம்மூன்று மனிதர்க ளுக்கும் விருந்தோம்பல் அளித்ததன் பயனாக அவரு க்கு ஈசாக் என்னும் மகன் கொடையாக வழங்கப்படு வதைப் பார்க்கிறோம். இந்த நிகழ்வு கிறிஸ்தவத்தின் "திரித்துவத்தை" (Trinity) உருவகப்படுத்துகிறது. (Metaphor). பழைய ஏற்பாட் டில் அரசர்கள்நூலில் அரு மையான நிகழ்வு ஒன்று வருகிறது. எலியா காலத்தி ல் பெரும்பஞ்சம் ஏற்படுகி றது.அப்போது சாரிபாத்தில் வாழும் ஒரு ஏழைக் கைம்பெண்ணிடம் எலியா அனுப்பப்படுகிறார்.(1அரசர்கள் 17 : 13-16) அந்தக் கொடிய பஞ்சத்தி லும் தன்னிடம் இருக்கும் சிறிதளவு மாவு மற்றும் எண்ணையைக் கொண்டு அக்கைம்பெண் அவருக்கு அப்பம் சுட்டு உணவளிக் கிறார்.அத்தாயின் தாராள மனதின் காரணமாக அந்த மாவும் எண்ணையும் சிறிதளவு கூடக் குறைய வில்லை. இதைத்தொடர்ந்து அந்த கைம்பெண்ணின் ஒரே மகன் நோயுற்று இறந்து போகிறான். அப்போது எலியா “என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச்செய்யும்” என்று மன்றாடினார். ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே,அவன் பிழைத்துக் கொண்டான். எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலி ருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, “இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்” என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். (The first resurrection in the Bible) அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவரென் றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையான தென்றும் தெரிந்து கொண்டேன்” என்றார் (1 அர 17:19-24).
2. மார்த்தாள் மரியாள் விருந்தோம்பல்: The Hospitality of Martha and- Marial: (லூக்கா 10:38-42)
இயேசு தம் சீடர்களுடன் பெத்தானியா சென்றார்.( எருசலேமிலிருந்து 2 மைல் தூரம் உள்ளது) அங்கே மார்த்தாள், மரியாள்,இலாசர் ஆகியோர் அவரை பாசத்து டன் வீட்டில் வரவேற்றார் கள். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி ஆண்டவருக்கும் அவர் சீடர்களுக்கும் உணவு தயாரிக்கும் பணியில் தனியே கஷ்டப்பட்டு கொண் டிருந்தாள். இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார். ஆண்ட வர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பல வற்றைப் பற்றிக் கவலைப் பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமி ருந்து எடுக்கப்படாது” என்றார். மார்த்தாள் விருந் தோம்பல் பாரட்டக் கூடியது. விருந்தளிப்பு குடும்பத்தின் கூட்டு பொறுப்பு.இங்கு செவிக்கும் வயிற்றிற்கும் உணவு கொடுக்கப்படு கிறது.ஆண்டவரோடு நாம் நேரத்தை செலவிடவும், அவரோடு உறவாடும்படியும் விரும்புகிறார். இயேசு ஆண்டவர் அக்குடும்பத்தின் மீது கொண்டிருந்தஅளவற்ற சகோதர அன்பைக் குறித் துக் காட்டுகிறது. இதே மார்த்தாள் லாசருவின் மரணத்தில் இயேசுவோடு பேசிக் கொண்டிருக்கிற அந்தத் தருணத்தில், அவள் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளிலேயே முத்தான வார்த்தைகளைச் சொல்கிறாள்; “நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து; நீங்கள்தான் இந்த உலகத்திற்கு வரவேண்டி யவர் என்று நம்புகிறேன்” எனச் சொல்கிறாள்.—(யோவா. 11:27.) விருந்தோம் பலில் முன்னோடியாக திகழ்கிறவள் மார்த்தாளே. இதே பெத்தானியாவை சேர்ந்த தொழுநோயாளி( இயேசுவால் குணம் பெற்ற வர்) சீமோன் ஆண்டவரு க்கு விருந்து கொடுக்கிறார்.
வரிவசூல் செய்த மத்தேயு ( தூய, மத்தேயு நற்செய்தி யை எழுதியவர்) ஆண்ட வரை தன் வீட்டில் ஏற்றுக் கொண்டு விருந்து கொடுத்தார். அவ்விருந்தில் பாவிகள் உட்பட எல்லோரும் கலந்துகொள்கிறார்கள். அப்போது அங்கு வந்த பரிசேயர்கள் சிலர்,“(இயேசு) இவர் பாவிகளோடு உணவு உண்கிறார் என குற்றப் படுத்தினார். இதே தொழி லில் இருந்த சகேயு ஆயக் காரன்"இயேசுவானவர் எப்படிபட்டவரோ" என பார்க்க காட்டத்தி மரத்தில் ஏறி உட்கார்ந்திருந்த சக்கேயுவிடம் ஆண்டவர், ‘சகேயுவே விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்’என்று இயேசு வைத் தம் வீட்டிற்குக் கூட்டிச் சென்று விருந்தோம்பல் செய்தார். மனமாரினார்.
3. இயேசுவின் விருந்தினர்கள் யார்?
Who are the Guests of Christ?
லூக்கா 14: 12-14.
ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவரு டைய வீட்டிற்கு உணவருந் தச் சென்றிருந்தார். அங்கி ருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரி டம் இயேசு, "நீர் பகல் உண வோ இரவு உணவோ அளிக் கும்போது உம் நண்பர்களை யோ, சகோதரர் சகோதரிக ளையோ, உறவினர்களை யோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்கு கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்க ளிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த் தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்று கூறினார். இது மிக கடினமான செயல் நாம் நம் விருந்துகளில் உறவினர் களையும் நண்பர்களையும் மட்டும் அழைப்போம்; அதேநேரத்தில் இத்தகைய விளிம்பு நிலை மக்களையும் நாம் நினைவில் கொண்டு அவர்களுக்கு முடிந்தவரை நம் உணவை பகிர்ந்தளிப் போம். எபி 13:2ல் அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பி யதால் சிலர் தாங்கள் அறி யாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.
4.இயேசுவின் விருந்தோம்பல்: The Feast of Jesus; மத்தேயு 26: 26-29.
இயேசு கிறிஸ்து விருந்தளி ப்பவரும், விருந்தாளியு மாவார். Jesus Christ is a host and a Guest. பசியால் இருந்த 5000 பேருக்கு ஐந்தப்பம் இரண்டு மீன்களை உணவா கவும், 4000 பேருக்கு 7அப்பம் சில மீன்களையும் உணவாக கொடுத்தார். அவர் விருந்த ளிப்பில் ஒழுங்கு இருந்தது. வரிசை வரிசையாக அமரப் பட்டனர். மீதியானவைகளை வீன்படுத்தாமல் சேகரிக்க செய்கிறார். நம்மிடமிருந்து வாங்கி நமேக்கே பகிர்ந்தளி க்கிறார். அவர் நம்முடைய இல்லங்களை நாடி விருந்து ண்ண கதவை தட்டுகிறார். ( திருவெளி 3:20) இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத்திறந்தால், நான் உள்ளே சென்று அவர் களோடு உணவு அருந்துவே ன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.
ஆண்டவரின் விருந்தளிப்பு என்பதுதிருவிருந்து(Eucharist) என்பது இயேசு கிறிஸ்து வின் இறுதி இரவுணவைக் குறிக்கிறது.இயேசு அவர்க ளிடம், "விண்ணகத்திலிரு ந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண் டால் அவர் என்றுமே வாழ் வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்கா கவே கொடுக்கிறேன்.உறுதி யாக உங்களுக்குச் சொல்கி றேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவரு டைய இரத்தத்தைக் குடித் தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத் தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய் வேன். இயேசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக் கிறது.இயேசு கிற்ஸ்துவின் திருவிருந்தில் பங்கு பெறுப வரை மட்டுமே ஆண்டவர் உயிர்த்தெழசெய்வார்.இயேசுவின் இரத்தம் ஓ (-) O (neg). உலகில் உள்ள அனைத்து மக்களின் பாவங்களை நீக்குவதால்; அது உலகின் நன்கொடையாக கருதப்படு கிறது. Jesus is a Universal Donar.பொதுவாக இரத்தம் எட்டு வகை பிரிவுகளாக உள்ளன. அந்தந்த பிரிவு இரத்தம் அதே பிரிவுக்கு மட்டும் பொருந்தும். ஆனால் O (-) அனைத்து பிரிவிற்கும் பொருந்துகிறது. எனவே இயேசுவின் இரத்தம் அனை வருக்கும் பொருத்தமாக பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து புது வாழ்வு மற்றும் நித்திய வாழ்வு தருகிறது. இவ்வாறே
உணவு. உயிர் வாழவும், உறவில் வளரவும் உணவு தேவைப்படுவது போல், நாம் அருளுயிரைப் பெற்று இறை உறவிலும், மனித உறவிலும் செழித்து வளர, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தந்த ஒப்பற்ற உணவே நற்கருணை. அதனால்தான் அது "தூய நற்கருணை"( The Holy Communion) “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்” என்கிறார் இயேசு.நற்கருணை ஓர் அன்பின் விருந்து. அதில் பங்கேற்கும் நாம் ஒரே உள்ளமும், ஒரே உயிரும் உள்ளவர்களாய்வாழவேண்டும். இறைவன் தருகின்ற நன்மை மிக்க கொடை'தான் திருவிருந்து. கிறிஸ்து நமக்காக ஏற்படுத்திய புதிய உடன்படிக்கை தான் இந்த நற்கருணை என்ற கடைசி விருந்து ( The Last Supper) அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்கு மென தன் உடலையும் இரத்தத்தையும் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார். என பவுலடிகிறார் எபிரேயர் 9:12ல் கூறுகிறார். இந்த நற்கருணையில் நாம் பங்கு பெறும் போதெல்லாம் அவரை நினைவு கூறுவது நம் தலையாய கடமை. நற் கருனையில் பஙகேற்பவர்க் கே பாவ மன்னிப்பு என்ற விடுதலை கிடைக்கும். தூய நற்கருணை என அழைக் கப்படும் திருவிருந்ததில் நாம் பங்குப் பெறும் பொழுது பயத்தோடும், பக்தியோடும் பங்கு பெற வேண்டும் தவறினால் ஆண்டவர் நம்மை தண்டிப்பார் என்ற எண்ணம் நமக்கு தேவை.ஆகவே, எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.
1 கொரிந்தியர் 11:27,29,30.ல் ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.
இதனால்தானே, உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்கின்றனர்; மற்றும் பலர் இறந்தும் விட்டனர். எனவே கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! ஆண்டவர் உயிர்த்தெழுந்த பிறகு மூன்றாவது அற்புத மாக சீடர்களுக்கு அப்பத்தை யும், மீனையும் உணவாக கொடுத்து தன் பிரதான சீடனான பேதுருவைப்பார் த்து, அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார்.
(யோவான் நற்செய்தி 21:15)நாம் ஆண்டவர் மீது உண்மையாக அன்பு செலுத் துகிறோமா? சிந்திப்போம். அப்படியானால் நாம் அவரின் நற்செய்திபணி யில் ஆர்வத்தோடு செயல்படுவோம்.
விண்ணப்பம்:
வின்னக உணவளிக்கும் இறைவா!. நாங்கள் பல் வேறுபட்டவர்களாய் இருந்தாலும் எங்களை திருவிருந்து எனும் நற்க ருணையில் ஒன்றுபடுத்தும் ஆண்டவரே! உம்முடைய தூய்மைமிகு திரு உடலும், திரு இரத்தமும்எங்களுக் காக ஈ வாக அளித்தவரே! உம்முடைய புதிய உடன் படிக்கையின் அடையாள மாக உம்மையே எங்களுக்கு கொடுத்ததினால் உம்மை முழுமையாக வணங்கு கிறோம். அன்பின் ஆண்டவரே! ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும் நற்கருணையைத் தகுதியான உள்ளத்தோடும், பயத்தோடும், பக்தியோடும் உட்கொண்டு, என்றும் கிறிஸ்துவுக்குள் வாழ முயற்சி செய்வோம்.ஆமேன்.
முனைவர் பேரா.டேவிட் அருள் பரமானந்தம்.
பழமத்தூர். செங்கை மா.வட்டம்.அ.எ.603111.
கைபேசி. 9965685511.
Comments
Post a Comment