ஆறாம் வார்த்தை:முடிந்தது. It's Finished. யோவான் 19:30.
வார்த்தை. அந்தக் காலத்தில் நிலத்தையோ, ஒரு விலையேறப்பெற்ற பொருளையோ வாங்கும்போது, அதற்கான முழுக் கிரயமும் செலுத்தப் பட்டுவிட்டதுஎன்பதைக்காட்ட‘டெட்டிலெஸ்டாய்’ என்ற கிரேக்கவார்த்தையைப் பயன்படுத் தினர்.. முடிந்தது வார்த்தை கல்வாரி மலை மேல் இருந்து உலகிற்கு உரத்த குரலில் முழங்கிய வார்த்தை. பல மலைகளில் இருந்து மக்களுக்கு அருள் வாக்கு வழங்கியவர்.இன்று மலையில் தன் வாழ்வை முடிக்கும் வார்த்தையாக முடிந்தது என்றார். பிதாவிற்கும், நமக்கும், மற்றும் சாத்தானுக்கும் பதில் சொல்லும் வார்த்தை.
பிதாவினால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்.
இயேசு உலகிற்குவந்த நோக்கம் முடிந்தது.
இரத்தம் சிந்துதல் முடிந்தது.
ஏதேன் தோட்ட பாவம் முடிந்தது, பழைய ஏற்பாட்டின் பலிகள் முடிந்தது.அவருக்கு முடிந்தது என்ற வார்த்தை நமக்கு மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்ல துவக்கமா இருந்தது.
பலி செலுத்துவது முடிந்து விட்டது. பாவத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. உலகத்தின் பாவம் தீர்ந்தது, முடிந்தது. அதாவது, பாவம் இனி ஒரு உள்ள, பிரச்சனையல்ல. ஏனென்றால் அதற்குப் பரிகாரம் வந்து விட்டது.ஒரு பாவி இரட்சிக்கப்பட தேவையான எல்லாவற் றையுமே முழுமையாக இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார்.மரணத்தையும் வென்றார்.
1. இயேசு அரசியல் குற்றவாளியா? (அ) மதகுற்றவாளியா?
Is Jesus a Political prisoner? or Religious prisoner?
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைய முக்கிய காரணமாக சொல்லப்படுவது அரசியல் குற்றம். யோவான் நற்செய்தியாளர் 19:12 ல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால் யூதர்கள், "நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி" என்றார்கள். " தன்னை அரசர் என்று கூறுகிறார் என குற்றம் சாட்டியதால் ; இது அரசியல் குற்றமாகும். மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் அவரை சமய குற்றவாளி யாக பதிவு செய்கின்றனர். மத்தேயு 26:61ல் அவர்கள், "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" என்று கூறினார்கள். ஆக ஆண்டவர் நமக்காக குற்றவாளியாக அவர்கள் முன் நின்றார். வேதத்தில் ஐந்து வகையான பலிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. சர்வாங்க தகனபலி (லேவி1:1-17)
2. சமாதான பலி ( லேவி 3:7)
3.பாவ நிவாரனபலி (லேவி) 4.குற்ற நிவாரன பலி(லேவி 16: 1-34)
5.போஜன பலி ( லேவி 2:1-16) இந்த ஐந்து பலிகளையும் இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் சுமந்தார். நமக்கு இரட்சிப்பு என்னும் விடுதலையை கொடுத்தார்.
ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயங்களை ஏற்றவர் ஐந்து பலியையும் சிலுவை யில் சுமர்ந்து தீர்த்தார்.
2. இயேசுவே பாவ நிவாரண பலி:Jesus is a ransom of our sins:
கிறிஸ்துவின் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்து நமக்காக பாவ நிவாரண பலியாக, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக பலியிடப்படுகிறார்.
பாவிகளை இரட்சிக்குவே கிறிஸ்து இயேசு உலகில் வந்தார் என பவுலடிகிறார் கூறுகிறார். இழுந்து போனதை தேடவும், இரட்சி க்கவுமே மனுஷகுமாரன் இவ்வுலகில் பிறந்தார். இதோ உலகத்தின் பாவத்தை சுமர்ந்து தீர்க்கிற தேவிட்டுக்குட்டி இயேசு என திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார்.
3. இயேசுவின் இன்னும் முடியாத காரியங்கள் என்ன? The unfinished Agenda of Jesus Christ:
அவர் கடவுளின் சித்தத்தின்படி எல்லா நீதி நியாயப் பிரமாணங்களை யும் தீர்க்க தரிசனங் களையும் நிறைவேற்றி முடித்தார். ஆனாலும் அவர் இன்னும் சில முடியாத காரியங்கள் இருக்கின்றன. அதை முடிக்க வேண்டியது யார் என்றால் நாம் தான்.
1. இறையரசு:
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் தன்னுடைய இறையாட்ச்சியை தன் இறையரசு மூலமாக நிறுவ விரும்பினார். அதற்காக தானே அடிக்கல் நாட்டினார். ஆனால் அந்த ராஜ்ஜியம் இன்னும் விரிவுப் பெறவில்லை. இந்த இரையரசை இந்த உலகிற்கு கொண்டு வர வேண்டியவர்கள் நாம் தான். நீங்கள் உலகம் முழுதும் சென்று இவ் ராஜீயத்தின் நற்செய்தியை மக்களுக்கு தெரிவியுங்கள் என்று சொன்னார். உம்முடைய அரசு வருவதாக!
2. அமைதி: Peace:
இயேசு பிறக்கின்றபோது இந்த பூமியிலே சமாதானமும் மனிதர்கள் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொன்னார்கள். ஆனால் இந்த உலகம் நாட்டிற்கு நாடு, வீட்டிற்கு வீடு சண்டையும் சமாதானமும் இன்றி இருக்கின்றது. எனவே இந்த உலகத்தில் அமைதி நிலைத்து நீடித்து இருக்க நாம் முயற்சிக்க வேண்டும், உழைக்க வேண்டும். அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; கடவுளுடைய பிள்ளைகள் என ஆண்டவர் கூறுகிறினார்.
3. நியாய தீர்ப்பும் நீதியரசரின் வருகையும்; The Day of Judgement and the coming of the Judge;
ஆண்டவரின் நியாயத் தீர்ப்பு இன்னும் இவ்வுலகில் முடியவில்லை, அவர் நீதி அரசராய் வருகின்ற போது; அவரவர்களுக்கு உரிய பலன் அவரோடு கூடவரு கிறது என்ற செயல்பாடும் நமக்கு ஏற்படும். நாம் குற்றமற்றவராய், தீங்கு இல்லாதவராய், நன்மை செய்கின்றவராய், அவரை எதிர்கொண்டு வரவேற் போம். நம்மால் ஆண்டவ ருக்கு என்ன செய்ய முடியுமோ அவைகளை செய்து முடிப்போம் !
இன்னைக்கு உங்களால் என்ன முடியுமோ அதனை இன்றைக்கே பண்ணிடு வோம். நாளைக்குனு தள்ளி போடாதீங்க. நாளை என்பது நம்மிடம் இல்லை. ஆமென்.
பேரா.முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
பழமத்தூர்.
Comments
Post a Comment