திருக்கோவில் தூய்மை படுத்துதல்.The Purification of the Temple. மாற்கு 11:15-19. பரிசுத்த செவ்வாய்
முன்னுரை:
கிறிஸ்துவின் அன்பு பிள்ளைகளே! இயேசுவின் காலத்தில் ஆலயங்கள் வியாபார தலமாக மாறி இருந்ததை கண்கூடாக கண்டு; வியாபாரிகளையும், பண மாற்றுபவர்களையும் விரட்டி அடிக்கிறார்.அங்கு ரோமப் பணம் தினார்க்கு பதிலாக யூதர்களின் பணமான சேக்கல் மாற்றப்பட்டது. இதன் மூலம் கொள்ளை இலாபம் வியாரிகள் பெற்றனர். ஆனால் ஆலயத்திற்கு பலி செலுத்தும் விலங்குகள், புறாக்கள் விற்பவர்களை யும் விரட்டி விடுகிறார். அவர் புறா விற்பவர்களிடம், "இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.அப்போது அவருடைய சீடர்கள். "உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்" என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.
(யோவான் நற்செய்தி 2:16,17) புறா வாங்கும் மக்கள் பெரும்பாலும் பெண்களும், ஏழைகள்தான். பண்டிகை தினங்களில் அநேகா் எருசலேம் ஆலயத்திற்கு தூரமான இடங்களில் இருந்து வந்து, தன்னுடைய பிரச்சனைக ளுக்காய் கண்ணீரோடு தேவனுடைய சமூகத்தில் வேண்டிநின்று, பாவங்க ளுக்காய் பாவ நிவாரனபலி செலுத்தி,தங்களுடைய பொருத்தனைகளை நிறைவேற்ற அவருடைய சந்நிதி முன்பாக பயத் தோடு, நடுக்கத்தோடு வருவாா்கள். ஆனால் இதை கொஞ்சம் கூட உணராதபடி அங்கு துயரத்தோடு வருப வா்களிடத்தில் அநியாய ங்களும், வேசித்தன ங்களும், நடக்கிறதை கண்ட கா்த்தா் என்வீட்டை கள்ளா் குகையாய் மாற்றிவிட்டாா்க ளே என்ற வைராக்கியத் தில் சவுக்கை எடுத்து அடித்து விரட்டியதுமல்லா மல் கடைகளையும் கவிழ்த்து ப்போட்டாா்.
1. இந்த ஆலயத்தின் வரலாறு: A brief history of the Temple.
நாம் முதன் முதலில் தெரிந்துக்கொள்ளவேண்டியது இந்த ஆலயம் சாலமோ னால் கட்டப்பட்ட ஆலய மல்ல. இது ஏரோது மீண்டும்கட்டி புதப்பித்த இரண்டாம் ஆலயம். இது கி.மு 19 ல் தொடங்கப்பட்டு 46 ஆண்டுகள் இயேசுவின் காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டது. ஆனால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி 70 ம் ஆண்டு ரோமன் பேரரசர் டைடஸ் (Titus) கிளாடியஸ் இந்த ஆலயத் தை தரைமட்ட மாக்கினான். ஆண்டவரின் தீர்க்கதரிசன வார்த்தைநிறைவேறியது.
மத்தேயு 24: 1,2. "இயேசு கோவிலை விட்டு வெளியே சென்று கொண்டிருந் தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள்.
அவர் அவர்களைப் பார்த்து, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! இங்கே, கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். தாவீதின் குமாரன் அரசர் சாலமோன் கட்டிய கோவிலுக்கு இருந்த மகிமை இந்த ஆலயத்திற்கு இல்லை.சாலமன் கட்டிய முதல் ஆலயம் கி.மு 1000வது ஆண்டில் கட்டப்ப ட்டது. இது பாபிலோனியர் களால் அதன் அரசன் நேபூகாத்நேஸார் கி.மு.587 எருசலேம் முற்றுகையின் போது அழிக்கப்பட்டது.
இரண்டாம் ஆலயம் கி.மு 538ம் ஆண்டு சைரஸ் Cyrus அவர்களாள் ஆரம்பிக்கபட்டு கி.மு 515ம் ஆண்டு முடிக்கப் பட்டது. (எஸ்ரா 3:8-10)இதை கட்ட நான்கு முறை நான்கு அரசர்களால் அழைப்பு கொடுக்கப்பட்டது.கடைசியாக இயேசுவின் காலத்தில் மன்னன் ஏரோது கி.பி 65 ம் ஆண்டில் முடிக்கப்பட்டு கிபி 70ம் ஆண்டு தரைமட்டமா க்கப்பட்டது. அன்பான வர்க ளே இந்த இரண்டு ஆலயங் கள் இருந்த அதே இடத்தில் தான் அள் அக்சா மசூதி இஸ்லாமியர்களால் கட்டப்பட்டிருக்கிறது. ஏன் இந்த இடம் இஸ்லாமியர் களுக்கும், யூதர்களுக்கும் மிக முக்கிய புன்னிய தளமாக (pilgrims) இருக்க றது என்றால்; யூதர்களுக்கு அந்த இடம் ஆபிரகாம் தன் மகனை பலி செலுத்த தேர்ந்தெடுத்த இடம் (Altar) மலை மோரியா (2 நாளக:3) அவ்விடத்தில் தான் முதல் ஆலயம் கட்டப்பட்டது. இஸ்லாமியர்களின் இறை தூதர் முகமது நபி வின்னகம் ஏறிய இடமாகவும் கருதப்படு கிறது. இன்று மூன்றாம் ஆலயம் கட்ட உலகலாவிய அழைப்பு எழுந்துள்ளது.
2. ஏன் ஆலயத்தை சுத்தப்படுத்த வேண்டும்:? Why should we cleanse the Temple?
இயேசுவின் காலத்தில் மத குருமார்கள் வெள்ளையடி க்கப்பட்ட கல்லலறையாய் இருந்தார்கள். ஆலயம் இறைவன் வாழும் இல்லம்.
அது வணிகச்சந்தையாய் இருக்க கூடாது. தேவனை ஆராதிக்கிற இடம் அமைத லான இடமாக காணப்பட வேண்டும். நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும் கூட ஜெபிக்கும்போது “உன் அறைவீட்டுக்குள் பிரவேசி த்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு”(மத்.6:6) என்று சொன்னார். ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஆன்மீகத்தை நாம் என்றை க்கு வியாபாரமாக்குகிறோ மோ அன்றைக்கே ஆண்ட வர் அதைக் கண்டிக்கிறார், எதிர்க்கிறார். தேவனுடைய ஆலயம் ஒரு குறிப்பிட்ட ஜனத்திற்கோ, குறிப்பிட்ட இனத்திற்கோ, குறிப்பிட்ட மக்களுக்கோ உரிய இடம் அல்ல, அது எல்லா ஜனத் திற்கும் உரிய வீடு என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆலயம் யூதர்க ளக்கு மட்டுமே என; தனி தனி இடங்களிலும், மற்ற வர்களை தொழவும் பிரித்து வைத்திருந்தனர்.யூத மதத் தலைவர்கள், ஆசாரியர்கள், வேத பாரகர்கள், ஆலயத் தின் அதிகாரம் படைத்தவர் களாய் பாரம்பரியமாய் இருந்தனர். எனவே அவர்கள் அதை வியாபார சந்தையாய் மாற்றி விட்டனர்.ஆண்டவர் மத்தேயு 28:19ல் “நீங்கள் சகல ஜாதிகளையும் சீஷராக்கி… அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”என்றார்.
ஆலயம் அனைவரும் சேர்ந்து துதிக்கின்ற இடம். இது தூய்மையாய் இருப்பது அவசியம். "ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொரு ட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்."
(மத்தேயு நற்செய்தி 18:20)
மனுசர்கள் மத்தியில் வாழும் இறைவன் ; மனுசர்கள் கூடி தொழக் கூடிய இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என ஆண்டவர்விரும்புகிறார். "என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்’ (ஏசாயா 56:7)
3 நீங்கள் தேவனின் ஆலயமாய் இருக்கி றீர்கள்: You are the Temple of God:
ஆலயம் என்றுமே இறைவேண்டலுக்காகவே மட்டும் பயன்படுத்த வேண்டும். திருத்தூதர் பணிகள் 7:48,49 ல் (அப்போஸ்தலர்) "உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய இல்லங்களில் குடியிருப்பதில்லை" என்று இறைவாக்கினர் கூறியது போல, (1அரசர் 8:27 சாலமன்)
"விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறியிரு க்க, எத்தகைய கோயி லை நீங்கள் எனக்காகக் கட்ட விருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப் பேன்? என மனிதர்கள் கட்டும் ஆலயத்தில் வாசம் செய்யவில்லை; மாறாக நம்மில் வாசமாயிருக்கிறார்.
பவுல் அடிகளார் 1.கொரி 3:16,17ல் "நீங்கள் கடவுளு டைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்.ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.
எனவே நாமே ஆண்டவரின் ஆலயமாய் இருப்பதால்; நம்மை தூய்மை படுத்திக் கொள்ளவும். திருவெளிப் பாட்டில்31:3ல் "பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்க ளுடைய கடவுளாய் இருப் பார். என நம் மத்தியில் வாசம் செய்கிறார் அதற்காக ஆண்டவர்; இதற்கிடையில், தீங்கு புரிவோர் தீங்கு புரிந்து கொண்டே இருக் கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கான வற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும். "இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக் கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.
திருவெளிப்பாடு( 22:11,12) என்று தூயவராய் இருக்க நம்மை ஆண்டவர் அழைக்கிறார். தன்னுடைய மலை பிரசங்கத்தில் மத்தேயு 5:8ல் "தூய்மை யான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். ஆண்டவரை காணவேண்டும் எனில் தூய உள்ளமே இறைவன் வாழும் இல்லம்.எனவே, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளி யில் நடப்போ மானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண் டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசு வின் இரத்தம் எல்லாப் பாவத் தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
(1 யோவான் 1:7) சிலுவையயில் ஆண்டவர் சிந்திய இரத்தத்தால் மட்டுமே நாம் தூய்மை அடைய முடியும். நம் இல்லமும் உள்ளமும் தூய்மையாக இருக்கின்ற பொழுது தான் நம் ஆலயமும் தூய்மையாக இருக்கும். தேவாலயங்கள் பெயரில் நடக்கின்ற அநியாயங்கள்அக்கிரமங்கள் முற்றுப்பெற வேண்டும் என்பதற்காகவே மனித உள்ளங்களே தேவாலயம் என்பதுவரையறுக்கப்பட்டுள்ளது. இறைவனால் படைக்கப்பட்டவன் இறை வனை தமது உள்ளத்தில் அனுமதித்து இறைவனை பிரியப்படுத்த வேண்டும் பரிசுத்த வாழ்வின் மூல மாக. தூய்மைப் படுத்தும் ஆண்டவரின் ஆசிர்வாதம் நம் அனைவரோடும் கூட இருப்பதாக ஆமென்.
The scene is a common motif in Christian art.
Comments
Post a Comment