உயிர்த்தெழுதல் : இயேசுவில் வாழ்வினை கொண்டாடுதல். RESURRECTION: CELEBRATING LIFE IN JESUS. 1 அரசர் 17:17-24. 1 கொரி.15: 42-58.திருப்பாடல் 118:1-4,14-17. லூக்கா 24:1-12.
முன்னுரை:
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் கிறிஸ்தவம் என்பது இல்லை; நாம் கிறிஸ்துவராக இல்லை.If Jesus Christ is not risen, there is no Christianity and no Christians. இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு; சீடர்கள் தங்களின் பழைய தொழிலான மீன்பிடிக்க சென்று விட்டனர் ஆனால் இயேசுவோ மீண்டும் அவர்களின் மத்தியில் உயிரோடு தோன்றி தன்னை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக நிலை நிறுத்தினார், அவர்க ளையும் திடப்படுத்தினார். இயேசு கிறிஸ்து மரித்ததவர்களில் முதல் பலனாக உயிர்த்தெழுந்தார். "Jesus is the first born from the dead."இயேசு கிறிஸ்து சாவின் மீது வெற்றி கொண்டு, உயிர்பெற்றெழு ந்தது உண்மை யாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி.
சாவின்மீது வெற்றி கொண்டு உயிர்பெற் றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார் (திருத்தூதர் பணிகள் 1:3) என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இயேசுவின் உயிர்த் தெழுதல் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இயேசுவின்உயிர்த்தெழுதல் மூலம் மரணம் முடிவல்ல; அது ஒரு வாசல். ஒரு வாழ்க்கையிலிருந்து நித்திய வாழ்க்கைக்குள் ளாக கடந்து செல்லுகிற ஒருவாசல் என்று சொல்லு கிறார். ஈஸ்டர்’ என்ற வார்த்தைக்கு ‘வசந்த காலம்’ என்ற அர்த்தம் உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை பூக்கக்கூடிய அதிசய பூ ‘ஈஸ்டர் லில்லி’. இந்தப்பூ இயேசு உயிர்த்தெழுந்த காலத்தில் அதிகமாக பூப்பதால் உயிர்த்தெழுந்த திருநாளிற்கு ‘ஈஸ்டர்’ எனப்பெயர் வந்திருக்கலாம் எனகருதப்படுகிறது.கிறிஸ்துவின் பிரசன்ன காலத்தின் போது பரலோக உயிர்த் தெழுதல் நடைபெறும் என்று பைபிள் முன்னறிவித்தது. (1 கொரிந்தியர் 15:21-23) இயேசுவின் ஆயிரவருட ஆட்சி காலத்தில், பூமி பூஞ்சோலையாக மாறியி ருக்கும்போது பூமிக்குரிய உயிர்த்தெழுதல் நடை பெறும்.—(லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 20:6, 12, 13.) பரிசுத்தவான்கள் தங்களுடைய கல்லறையில் இளைப்பாறுகிறார்கள். துன்மார்க்கருடைய தொந் தரவு அங்கே ஓய்ந்திருக் கிறது. பெலனற்று விடாய்த் துப்போன பரிசுத்தவான்கள் அங்கே இளைப்பாறுகிறா ர்கள் (யோபு 3:17).
இயேசு கிறிஸ்து அந்த மூன்று நாளும் மரித்த ஆவிகளுக்கு போதித்தார் த்தார். " காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக் குச் சொல்கிறேன்.
(யோவான் நற்செய்தி 5:25)
உயிர்த்தெழுதல் வேதத்தில் புதிய செய்தியல்ல; ஏற்கெனவை தீர்க்கதரி சியான எலியா (1அரசர்கள்: 17:17-23)ல் ஒருநாள், விதவை பெண்ணின் வீட்டில் இருக்கும் போது அவள் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது.அப்பெண் எலியாவிடம், "கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?" என்றார்.
எலியா அவரிடம், "உன் மகனை என்னிடம் கொடு "என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச் சென்று தம் படுக்கையில் கிடத்தினார். அவர் ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்த லாமா?" என்று கதறினார்.
அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப் படுத்து ஆண்டவரை நோக்கி, "என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்" என்று மன்றாடி னார். ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான்.
எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலி ருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, "இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்" என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். இதுவே வேதத்தில் முதல் உயிர்பெறும் நிகழ்வு. அவ்வாறே 2 அரசர் 4 :26-37ல் எலீசா சூனேம் பெண்ணின் மகனை உயிர் பெற செய்தார்கள்.
1.உயிரோடு இருக்கும் கிறிஸ்துவை ஏன் மரித்தவராய் தேடுகிறிர் கள்?
Why do you look for the living among the dead?
வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் கல்லறை க்குச் சென்றார்கள்; சீடர்கள் கூட அதிகாலை செல்ல வில்லை. கல்லறை வாயிலி ருந்து கல்புரட்டப் பட்டிரு ப்பதைக் கண்டார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை. அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இறைதூதர்கள் இருவர் அவர்களுக்குத் தோன்றி னர். இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, "உயிரோடு இருப்பவரைக் கல்லறை யில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும் போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.
மானிடமகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப் படவேண்டும்; மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண் டும் என்று சொன்னாரே" என்றார்கள். ஆனாலும் மகதலேனா மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுது கொண்டிரு ந்தார்; அழுது கொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இருவானதூதரை அவர் கண்டார். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவரும் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "என் ஆண்ட வரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குக் தெரியவில்லை"
இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்த போது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கே நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்து கொள்ளவி ல்லை. இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார். இயேசு அவரிடம், "மரியாளே" என்றார். மரியாள் திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார். இந்த எபிரேயச் சொல்லுக்கு "போதகரே" என்பது பொருள். முதன்முதலாக உயிர்த்தெழுந்த கிறித்து வை கண்ணாள் கண்டவர் இவர்களே!சீடர்களுக்கு காட்சி கொடுக்காத இயேசு தன்னை சிலுவை பயணத்திலும்,மரணத்திலும், உயிர்த்தெழுந்த நாளிலும் பின் தொடர்ந்த பெண்களு க்கே தன்னைமுதன்முதலாக வெளிப்படுத்தினார். இக்கா லங்களில் ஆலயங்களுக்கு வருவோர் பெண்களே அதிகம். இவர்களே இயேசு வின் காலத்திலும் தங்களின் பொருள்களால் ஆண்டவருக்கு சேவை செய்தனர். உயிர்த் தெழுந்த நற்செய்தியை முதன்முத லாக அவர்கள் ஓடி சென்று நிகழ்ந்தவற்றைத் திருத் தூ தர்களுக்குக்கூறினார்கள்.
2. சீடர்களுக்கு தன்னை வெளிப்படுத்திய கிறித்து:Jesus Revealed to Disciples: யோவான் 20:19-22.
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,அஞ்சாதீர்கள்,"உங்களுக்கு "அமைதி" (Peace) உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். உயிர்த்த கிறித்துவின் உறுதியான வார்த்தைகள் அஞ்சாதீர் (Fear Not) என்ற உறுதி மொழி (Promise) வேதத்தில் 300 முறைக்கு மேல் வருகி றது. உயிர்த்த கிறித்து 3 முறை 'அமைதி உரித்தாகுக" என கூறியுள்ளார்.
இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். ஆண்டவர் இருக்கும் இடத்தில் அமைதி உண்டு பயமில்லை சீடர்கள் ஆண்டவரை கண்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தில் எழுந்தது அதன் பயனாக அவர், அவர்கள் மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
(யோவான் 20:22):என்று உலகில் தூய ஆவியின் மூலமே கிறித்துவின் உண்ணத பணியாற்ற முடியும் என்று அவர்களுக்கு ஈவாக கொடுத்தார்.
3. எம்மாவிற்கு செல்லும் வழியில் கிளியோபாவை இயேசு சந்தித்தல்: Jesus encounters Cleopas on the way to Emmaus: Luke (24:13–35)
இயேசுவின் சீடர்களான கிளியோப்பாவும் வேரோரு வரும் எருசலேமிலிருந்து 11 கி.மி தூரம் உள்ள எம்மா விற்கு நடந்து செல்கிறார் கள். விவிலியத்தில் ஒரே ஒரு முறை வரும் எம்மாவு உயிர்த்த கிறித்துவின் நாமத்தினால் உலகில் பேசப்படும் ஊராய் மாறி போனது. Praise the Lord. இவர்கள் வருத்தம், கலக்கம் நிறைந்த மனதோடு இயேசு வின் சிலுவை பாடுகளை குறித்து பேசிக்கொண்டு நடந்துக்கொண்டிருந்தனர்.
எங்கே இரண்டு மூன்று பேர் சேர்ந்து என்னை நினைக் கிறார்களோ அவர்கள் மத்தியில் வாசம் செய்யும் இறைவன் இவர்களுடன் ஒரு அன்னியராய் சேர்ந்து அவர்களின் உரையாடலில் பங்கு பெறுகிறார். இஸ்ரவேலரை காப்பார் என்று நம்பி இருந்தோம். ஆனால் மரித்து விட்டாரே என்று கலங்கினர். அவர் அவர்களை நோக்கி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங்கியிருப் பவர்களுள் உமக்குமட்டும் தான் இந்நாள்களில் நிகழ் ந்தவை தெரியாதோ!" என்றார். அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின் றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன் பாகச் சொல்லிலும், செய லிலும் வல்ல இறைவாக் கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகி றார் என்று நாங்கள் எதிர்பா ர்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். சில பெண்கள் அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார்என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்த சீடர்கள் சிலரும் கல்லறைக்குச் சென்று பார்த்தார்கள் ஆனால் அவர்களும் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக் கினர்கள் உரைத்த எல்லாவ ற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப் பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அங்கு நடமாடும்வேதவகுப்பு (mobile Bible study) நடத்தினார். அவர் ரபி என்பதை நிரூபித்தார்.
அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊர் எம்மாவை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; "Abide in us" ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
ஆண்டவரின் அன்பை பாருங்கள். அழைத்தால் வரும் உயிர் உள்ள ஆண்ட வர்.அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்த போது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக்கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். நாம் அவருடைய திருவிருந்தில் பங்கு பெறும்போது அப்பம் பிட்கையில் நம் கண்களும் திறக்கின்றன. அவரின் உடலையும், உதிரத்தையும் நம் மீட்பிற்காக கொடுத்தார் என்பதையும், நற்கருணை யில் அவர் பங்குபெறுகிறார்
என்பதே நம் உறுதியான பற்றுறுதியாகும். சீடர்கள்; இயேசு மறை நூலை விளக்குகளில் நம் உள்ளம் கொழுந்து விட்டு எரிய வில்லையா? என்றார்கள். அந்த அனுபவம் நமக்கு இருக்குமேயானால் உயிர் த்த கிறித்து நம் உள்ளத்தில் வாசம் செய்கிறார். எம்மாவு சீடர்களுடன் வழி நடந்த கிறித்து நம் வாழ்வோடும் வழி நடக்க அழைப்போம். உயிர்த்த கிறித்துவின் ஆசிர் உங்களை ஆட்கொள்வதாக! ஆமேன்.
பேரா.முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
பழமத்தூர்.
Comments
Post a Comment