மூவொரு கடவுளின் மீது நாம் நம்பிக்கை கொள்கின் றோம். WE BELIEVE IN THE TRIUNE GOD. எசே 1:4-28, திரு.பா 98. 2. கொரி 13:11-14. மத்தேயு 28:16-20. மூவொருமை ஞாயிறு. Trinity Sunday.
முன்னுரை: திரித்துவம் என்றால் என்ன? What's Trinity? திரித்துவம் என்பது இறை த்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் (Triune God) இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் (The Most Holy Trinity)என்று அழைக்கப்ப டுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவு ள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பி னும் தந்தை, மகனிடமிருந் தும், தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தை யிடமிருந்தும் தூய ஆவியிட மிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமி ருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள் (Person). மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறு பாடும் இன்றி, இந்த மூவரு க்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம்,ஒரே வல்லமை, ஒரே இறைத்த ன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இவரை மூ வொரு இறைவன் Triune God என்று அழைக்கின்றோம். இது தான்கிறிஸ்தவர்களின் முதன்மையான நம்பிக்கை. இறைத் தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆளாவார்.இறைவெளிப்பாட்டில் இவர் படைப்பாள...