தூய ஆவியை வாக்களித் தல். Promise of the Holy Spirit.யோவேல் 2:28-32. திருப்பா. 42. கலா.5:22-26. யோவா:14:15-21
முன்னுரை:

கிறிஸ்துவின் பிரியமானவர்களே! வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் அதை உருவற்று வெறுமையாக படைத்தார். அதில் ஆழத் தின் மீது இருள் பரவியிரு ந்தது. நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தா டிக் கொண்டிருந்தது.
(தொ.நூல் 1:2) படைப்பில் செயலாற்றிய தூய மட்டஆவியா னவர், படைப்பு ஒவ்வொன் றையும் அழகாகவும், அருமையாகவும்படைத்தார்.
படைப்பில் துவங்கிய தூய ஆவியின் செயல்பாடு இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் நியா தீர்ப் பின் இரண்டாம் வருகை வரை தொடர்ந்து இருக்கும். தூய உள்ளம் படைத்தோரி டத்தில் மட்டுமே தூய ஆவி யானவர் செயல்படுவார். துதிக்கின்ற போதும், ஜெபிக்கின்ற போதும், ஆண்டவரின் வார்த்தையை பிரசங்கின்ற போதும், வேத த்தை வாசிக்கின்ற போதும் தூய ஆவியர் நம்மோடு இருப்பார். அவர் எந்த மனசனோடும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஏனேனில் மனுஷனுடைய சிந்தனை கள் எப்போதும் பொல்லா தவைகள் என்று வேதம் சொல்கிறது.( மாற்கு 7:21).
கிறிஸ்துவின் சீடர்கள் போல்" இயேசு, "உறுதியாக உங்களுக்குச்சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தி யின் பொருட்டும் வீடுகளை யோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயை யோ, தந்தையையோ, பிள் ளைகளையோ, நிலபுலன் களையோ விட்டுவிட்ட எவ ரும் இம்மையில் நூறு மடங் காக வீடுகளையும் சகோத ரர்களையும் சகோதரிக ளையோ, தாயையோ, நிலபுலன்களையும் இவற் றோடு கூட இன்னல்களை யும் மறுமையில் நிலைவாழ் வையும் பெறாமல் போகார்.(மாற்கு10:29,30).இத்தகையோர்க்கே தூய ஆவி நிச்ச யமாகவும், நிலையாகவும் நீடித்திருப்பார் என்பதே உண்மை.
1. யோவேல் தீர்க்கரின் வாக்குதத்தம்: The Promise of Joel. யோவேல் 2: 28-32.
பெத்துவேல் குமாரனாகிய யோவேல் ஆண்டவரின் உன்னத நாளை குறித்து முன்னுரைத்தார். இவர் ஆமோஸ், ஏசாயா தீர்க்கர்க ளுக்கு முற்காலத்தவர். இவர் மூன்று வாக்குதத் தங்களை தருகிறார்.
1. தேவன் அவர்கள் தேசத்திற்கு தெய் வீக நல்வாழ்வு தருவார்.(
well-being) 2. மக்கள் நடுவில் கடவுளின் பிரசன்னம் குறித்த நிச்சயம்; (The true presence of God.)
3. அவருடைய ஆவியை ஊற்றுவதால் உண்டாகும் ஆவிக்குரியமீட்டமைப்பு. (The pouring of Holy Spirit)
ஆக மூன்று நிலைகளில் தன் வாக்குதத்தம் தருவதை காண்கிறோம். மிக முக்கிய தீர்க்க தரிசனமானது என்னவென்றால்;
யோவேல். 2:28,29 வசனங்கள் “அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கத ரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பன ங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.என்ற வாக்குறுதி திருத்தூதர் பணிகள் (Act 2). பெந்தகோஸ்தே நாளில் பேதுரும், பதினோறு சீடர்களும் மற்றும் உடன் ஊழியர்களாக 120 பேர் அந்த மேல் அறை வீட்டில் பேதுருவின் பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருக் கும்போது; திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொ ருவர் மேலும் வந்து அமர்ந் ததை அவர்கள்கண்டார்கள்.
அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ள ப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வே றான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
(திரு. பணி 2:2-4) கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! முற்காலங்களில் ஒரு குறிப்பிட்ட மக்களிடமே தூய ஆவியானவர் செயல் பட்டார். ஆனால் உயிர்த்த கிறிஸ்துவின் ஐம்பதாவது நாளில் ( பெந்தேகோஸ்தே) தூயாவி "நீங்கள் காணுகின்ற காட்சி இறை வாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே. அவர் மூலம் கடவுள் கூறியது; 'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்க ள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர். அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப் பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள் வேன். அவர்களும் இறை வாக்கு உரைப்பர்.
(திரு. பணி 2:16,17,18) தூயாவியானவர் அனைவ ருக்குமானவராக கருதப்ப டுகிறார். Holy Spirit for Every One. சங்கீதக்காரன் கூறு வதுபோல் "நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோ றும் நான் அவரைப் பாடு வேன்; எனக்கு வாழ்வளி க்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்.
(திரு.பா(சங்கீதங்கள்) 42:8)
இப்படிபட்டோருக்கு தூயாவி அருள்வது நிச்சயம்.தூய ஆவியின் உதவியினால் பேதுருவின் பிரசங்கத்தை கேட்ட மக்கள் ஒரே நாளில் 3000 பேர் திருமுழுக்கு பெற்றனர். இது முதலாம் நூற்றாண்டின் வரலாற்று நிகழ்வு. தூய ஆவியினைப் பெற்ற திருதூதுவர்கள் முதலாவது யூதர்களுக்கும் பிறகு புற ஜாதியினருக்கும் திருவசனத்தை விதைத்தார் கள். திருச்சபைகளை நிறு வினர். தூய ஆவியின் பங்களிப்பில்லாமல் இறைபணியாற்றிட முடியாது. அற்புதங்கள் நடைபெறாது.
2. தூய ஆவியின் நெறிமுறை வாழ்வு:
The Ethics of Holy Spirit in Life. i) (கலாத்தியர் 5:22-23).
தூய ஆவியார் அருளும் கனிகள் பன்னிரண்டு அன்பு,மகிழ்ச்சி,
அமைதி,பொறுமை,பரிவு,
நன்னயம்,நம்பிக்கை,கனிவு,
தன்னடக்கம்,பணிவு நயம்,
தாராள குணம்,நிறை கற்பு என்பவை ஆகும். இவைகள் தூய ஆவியானவர் நாம் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை கோட்பாடு அடங்கிய 12ம் தூய ஆவி யின் கனிகள். கொடுக்கப் படுகிறது.
ii)தூய ஆவியாரின் கொடைகள் யாவை?
தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை:
ஞானம்,மெய்யுணர்வு,
அறிவுரைத்திறன்,நுண்மதி,
ஆற்றல்,இறைப்பற்று,
இறையச்சம் என்பவை ஆகும்.இவை இறைபணியாற்ற மிக அவசியம்
iii)தூய ஆவியாரின் வரங்கள் யாவை?
தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை:
ஞானம் நிறைந்த சொல்வளம்,
அறிவு செறிந்த சொல்வளம்,
இறை நம்பிக்கை,
பிணிதீர்க்கும் அருள் கொடை,வல்ல செயல் செய்யும் ஆற்றல்,
இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்,ஆவிக்கு உரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல்,பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல்,
பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல் என்பவை ஆகும்.
இவை இறைபணியாள ர்களின் அடிப்படை தகுதியாகும்.
iv) தூய ஆவியாரின் அடையாளங்கள்:
நீர், அருட்பொழிவு,நெருப்பு,
மேகம்,நெருப்பு,மின்னல்,
புறா,காற்று என்பவை ஆகும்.
3. கிறித்து அருளும் நன் கொடையே தூய ஆவி;
Holy Spirit is the Endowment of Jesus Christ. யோவா 14:15-21.
கிறித்துவின் அன்பர்களே! வேதம் கூறுகிறது. " வீடும்; சொத்தும் ஒருவனுக்கு வழி வழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை. "
(நீதி.மொழி 19:14.) நல்ல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டையும் கொஞ்சம் சொத்தையும் விட்டுவிட்டு செல்வார்கள். காரணம் தங்களுக்கு பிறகு பிள்ளைகள் நலமுடன் வாழ வேண்டும் என்ற நல்ல மனம்தான் காரணம். ஆனால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர் களுக்கு அளித்த அற்புதமா ன பரிசுதான் " தூய ஆவி" .
மற்றொரு துணையாள ராகிய தேற்றறவாளன் (Comforter) உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன் தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். "மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து, தூய ஆவியாரின் வல்ல மையால் கன்னி மரியாவின் வயிற்றில் பிறந்தார்.இவரே திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய தூய ஆவியர்.
அ. நான் உங்களை திக்கற்றவராக விடேன்:
பிரியமானவர்களே எவ்வளவு பெரிய அருமையான ஆறுதலான வார்த்தையை ஆண்டவர் நமக்கு கொடுக்கிறார். அன்று சீடர்களுக்கு கொடுத்தார்.இன்று நமக்கும் கொடுக்கின்றார்.
ஏசாயாவின் புத்தகத்தில் ‘ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்’(ஏசாயா 66:13) என்று சொல்லுகிறார். இந்த தேற்றரவாளனாகிய தேவன் தம்முடையமக்களை தேற்றுக்கிறவராகவே இருக் கிறார். இப்போதும் யாக்கோ பே, உன்னை படைத்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னு டையவன்” (ஏசாயா 43:1) என்று தேவன் சொல்லு கிறார். தேவன் தம்முடைய மக்களை அறிந்திருக்கிறார். அவர்களின் எல்லாவித சூழ்நிலையையும் அறிவார்.
ஆ. உங்களிடம் திரும்பி வருவேன்:
இயேசு தன் சீடர்களுக்கு கூறிய நம்பிக்கையின் வார்த்தை.தான் திரும்பி வந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அவர்களோடு என்றும் இருப்பதாகவும் இயேசு சொன்ன சொற்கள், சீடர்களின் மனதில் இன் னும் அதிகமான நிறைவை, நம்பிக்கையைத் தந்திருக் கும். "என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.”—(மல். 3:7.) நம்முடைய பிள்ளைகள் வேலைத்தேடி, பொருள் தேடி பல ஊர்களுக்கும்,நாட்டிற்கு செல்கிறார்கள் அவர்கள் சில நேரங்களில் திரும்பி வந்து பார்ப்பதில்லை. ஆனால் ஆண்டவர் "நான் உங்களிடம் திரும்பி வருவேன்" என்று உறுதி அளிக்கிறார். அவர் திரும்பி வருவதின் முக்கிய நோக் கமே தூய ஆவியை தம் சீடர்களுக்கு அளிக்கவும். நமக்கும் வாக்குறுதி கொடுக்கிறார்." "தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தே 5:8) தூய்மையான உள்ளத்தில் தூய ஆவி இருக்கிறார். தூய்மையாய் இருப்போம் தூயாவி பெறுவோம், இறை பணி ஆற்றிடுவோம்.
இ. உண்மையை எடுத்து ரைக்கும் தூய ஆவி:
தூய ஆவியானவரை நோக்கி நாம் எழுப்பும் ஜெபம், நமக்கு சரியான பாதையை, உண்மையை எடுத்துரைப்பதாக இருக் கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. தூய ஆவியானவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துபவராக, உண்மையை வெளிப்படுத் துபவராக இருக்கக்காரணம் அவரே உண்மையாக இருக் கின்றார் என்பதுதான் நிதர் சனம். யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வாசிக் கின்றோம், "தூய ஆவியாரே உண்மை" என்று (1 யோவா 5:6). ஆகையால், தூய ஆவியாரே உண்மை, அவரே நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்தக்கூடிய வர் என்பதை உணர்ந்து, எப்போதும் அவருடைய பாதுகாப்பில் வாழ்வோம். தூய ஆவியை ஊற்றுவது என்பது ஆண்டவர் நம்மை முழுமையாக தூய ஆவியா ல் நிரப்புவதாகும். தூய ஆவி நமக்கு அருளும் வாக்குறுதி; "தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்ல மையைப் பெற்று எருச லேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார்.
(திருத்தூதர் பணிகள் 1:8)
பிரியமானவர்களே! ஆண்டவருக்கு பிரியமாய் தூய ஆவியின் அருளோடு இவ்வுலகில் சாட்சியாக வா ழ்ந்து இறைபணி யாற்றிடுவோம். ஆமேன்.
Prof.Dr. David Arul Paramanandam.
Holy Spirit.

The Holy Spirit as a dove in the Heavenly Trinity
Comments
Post a Comment