கிறிஸ்துவின் அமைதியை பகிர்ந்திடும் அருள்பணி. மீ.கா 4:1-7, திருப்பா 85, பிலி 4:4-9. லூக்கா 24:36-49. Mission as Sharing Christ's Peace.

முன்னுரை:   உயிர்த்த கிறித்துவை உள்ளத்தில் ஆராதனை செய்யும் அன்பர்களே! இயேசு கிறிஸ்து அமைதியின் அரசர். (Prince of Peace). முதன் முதலில் மனிதன் ஏதேன் தோட்டத்தில் தன் தேவ அமைதியை இழந் தான். உலகத்தின் நாடுக ளில் சண்டைகளும்,  மனித பலிகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அமைதி இல்லாத சூழ்நிலை எல்லா நிலையிலும் எல்லா இடங்க ளிலும் பரவி இருப்பதை நாம் பார்க்கிறோம். சண்டை களினால் பல்வேறு இடங்களில் மக்கள் இடம் பெயர்வதை ( Migration) அமைதியைத் தேடி, புது வாழ்வு கான  கடினமான பயணங்களை மேற்கொள் வதை நாம் பார்க்கிறோம். உலகளவில் 89.4 மில்லியன் மக்கள் பல்வேறு சூழ்நிலை காரணமாக இடம் பெயர் கின்றனர். ( Acc.to 2020 Migration Census).. சண்டை, இன, மத கலவரங்கள் காரணமாக மக்கள் பாது காப்பான இடங்களை தேடி ஓடுவதை பார்க்கிறோம். தற்போது வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன கலவரத்தில் வாழ் வாதாரங்களை இழந்து மக்கள் பாதுகாப்பு முகாம் களில் தஞ்சம் அடைந்திருந் திருப்பதை காண்கிறோம். மக்கள் அமைதியற்ற வாழ்க் கை வாழ்வதை பார்க்கி றோம். ஆக உலக தோற்ற முதல் இதுவரையிலும் இந்த உலகில் அமைதி நிலவவி ல்லை. உலகிலேயே அமைதி நிலவும் நாடாக ஐஸ்லாந்து என்ற ஐரோப்பா நாடு உள்ளது.  இந்தியா 135 தாவது நாடாக உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இயேசுவின் பிறப்பில் லூக்கா 2:13,14.ல் "விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து,
“உன்னதத்தில் கடவுளுக்கு
மாட்சி உரித்தாகுக!உலகில் அவருக்கு உகந்தோருக்கு
அமைதி (Peace)உண்டாகுக!”
என்று கடவுளைப் புகழ்ந் தனர்.. அந்த அமைதியை இவ்வுலகில் நிலை நாட்டு வதே கிறித்துவின் அருள் பணி. 
1. மீகாவின் அருள்பணி: The Ministry of Micah;
மீக்கா (Micah), "கடவுளைப் போன்றவர் யார்?" என்ற அர்த்தமுடைய பெயரை உடைய இவர் ஏறக்குறைய கி.மு 737–696 காலப் பகுதியில் யூதவில் இறை வாக்குரைத்தவரும், மீகா நூலின் ஆசிரியரும் ஆவார். இவர் ஏசாயா, ஆமோஸ், ஒசேயா ஆகிய இறைவாக் கினர்களின்சமகாலத்தவரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் ஒருவரும் ஆவார். தென்மே ற்கு யூதாவிலுள்ள மெரே சேத் எனும் இடத்தில் இவர் பிறந்தார். இயேசு கிறிஸ்து வின் பிறப்பை அறிவித்த தீர்க்கர்களில் இவரும் ஒருவர் ( மீகா 5:2). தீர்க்கரின் மகா நம்பிக்கை என்ன வென்றால் மேசியா வின் ஆட்ச்சி காலத்தில் சண்டைகள் இருக்காது. இப்போது ஏற்படும் நாட்டி ற்கு நாடு சண்டைகள் மேசியா காலத்தில் சீர் செய்யப்படும். தீர்க்கர்கூறும் கடைசி நாட்கள் என்பது ஆண்டவரின் நற்செய்தி காலத்தைகுறிக்கிறது."இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை;மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத் தப்படும்; குன்றுகளுக் கெல்லாம் மேலாய் உயர்த் தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 
(மீக்கா 4:1)என சீயோன் (Zion) மலையின் மான்பை கூறுகிறார்.சீயோனிலிருந்து ஆண்டவரின் வார்த்தை யும் நீதி சட்டமும் புறப்படும் என தீர்க்கர் வாக்குறைக் கிறார். மனிதர்களுக்கு அமைதி என்பது நற்செய்தி காலத்தில் உண்டாகும் என்பதே தீர்க்கரின் கூற்று.
ஆண்டவரின் நீதி, இரக்கம் என்பது நிலவும். ஆண்டவரி ன் மக்கள்மீது நியாதீர்ப்பும் அதேநேரத்தில் அம்மக்க ளுக்கு இரக்கமும் இரடச்சி ப்பும் அளிப்பார் என்பதே தீர்க்கரின் நம்பிக்கை.
2.  பவுல் அடிகளாரின் அமைதி பணி: The Peace Mission of St. Paul. பிலிப் 4:4-9.
பவுல் அடிகளார் பிலிப்பிய ருக்கு எழுதுகின்ற போது உயிர்த்த கிறித்துவின் நிச்சயத்தில் உறுதியுடன் நிலைத்திருங்கள் என கூறுகிறார். பிலிப்பியர் திருச்சபைக்குள்ளும் மற்றும் வெளியே ஏற்பட்ட எதிர்ப்புகளின் மத்தியில் அவர் அளிக்கும் அமைதி யின் வார்த்தை தான் "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டு ம் கூறுகிறேன், மகிழுங்கள். கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந் திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். 
(பிலிப்பியர் 4:4,5) என உற்சாகப்படுத்துகிறார். நம் மகிழ்ச்சி கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும். மற்றவர் களின் துன்பத்தில் இன்பம் காண்கின்றவர்கள் ஆண்ட வரின் அமைதி அரசிற்கு அப்பாற்பட்டவர்கள்.  எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றி யோடு கூடிய இறை வேண் டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ண ப்பங்களைத்தெரிவியுங்கள்.என நமக்கு கூறுகிறார். 
(பிலிப்பியர் 4:6) அறிவிற்கு அப்பார்பட்ட "இறை அமை தி" இயேசுவிடம் இனைந்து இயேசுவின் வழியில் இறைபணியாற்றிடும்  உள்ளங்களிலும், மனதிலும்
நிலைத்திருக்கும்அவர்களை பாதுகாக்கும் என கூறுவதுடன்; அமைதியை அருளும் ஆண்டவர் எப்பொழுதும் நம்மோடு யிருக்க நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக் கொண் டவை, என்னிடம் கேட்டறிந் தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற் றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அரு ளும் கடவுள் உங்களோடி ருப்பார். (பிலிப் 4:9) என உறுதியளிக்கிறார்.
3. இறைபணியாளர்க ளின் உன்னத நோக்கமே உலகில் கிறித்துவின் அமைதியை நிலை நாட்டுவதே: The Mission of God's People is to make Peace in the World .லூக்கா 24:36-49.

அ) உயிர்த்த கிறித்துவின் உன்னத வார்த்தை:
பூட்டிய அறைக்குள் முடங் கிக் கிடந்த சீடர்கள் மத்தி யில் உயிர்த்த கிறித்து வின் முதல் வார்த்தை உங்களு க்கு அமைதி உரித்தாகுக என்றார். சீடர்கள் உண்ணா மலும்,  உறங்காமலும், பயத்தோடும், திகிலோடும் அந்த அறையில் இருந் தார் கள் அவர்கள் மத்தியில் தோன்றுகின்றார் ஆறுத லின் வார்த்தையாக அமைதியை கொடுக்கிறார். இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அமைதியை கொண்டு வந்தார். இயேசு என்றால் அமைதி அமைதி என்றால் இயேசு. இயேசு தரும் அமைதி நிலையானது நித்தியமானது. அமைதி யாற்றோர் அனைவரும் அவரிடம் வருகின்ற பொழுது உள்ளத்திலும் இல்லத்திலும் அமைதி பெறுவர். எங்கெல்லாம் இரண்டு மூன்று பேர் தன் நாமத்தினால் ஒன்றாக கூடி தொழுகின்றார்களோ அவ ர்கள் மத்தியில் தோன்று கின்ற இறைவனாய் இருக்கிறார். இயேசு தரும் அமைதி இந்த உலகம் தருகின்ற அமைதி போன்று அல்ல. அவர் அளிக்கும் அமைதி சண்டையாலும், அடக்குமுறையாலும், ஆயுதங்களாலாலும் ஏற்படுத்தப்படுகின்ற அமைதி அல்ல. இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் அமைதி யின் தூதர்களாக (The Messengers of Peace Makers) இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். " அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற் றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். "
(மத் 5:9) இறை மக்களாகிய நாம் இவ்வுலகில் அமைதி யை மற்றவர்களுக்கு கொடுக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.
ஆ) உயிர்த்த கிறித்துவின் உணவளிப்பு:
பசி வந்தால் பத்தும் பறந்து போகும். சீடர்கள் மூன்று நாட்களாக உண்ணாமல், உறங்காமல், பயத்துடன் பூட்டிய அறைக்குள் இருந்த வர்களுக்கு மீன் உணவை பகிர்ந்தளிக்கிறார். உணவு உயிர்வாழ.
'"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பு திருமூலர் சொன்ன சொல். இன்றும் நமக்கு வழிகாட்டும் அற்புத சொல் அது. வளமான வாழ்வுக்கு நலம் நிறைந்த உடல் வளம் தேவையாகும். உடலைப் பேணினால் உயிரைப் போற்றியதாகும். உடலை வளர்த்தால் தான் உள்ளத் தை வளர்க்க முடியும்."தனி ஒருவனுக்கு உணவில்லை யெனில் இந்தஜெகத்தினை அழித்திடுவோம்" என்றார் பாரதி." இயேசுவின் ஊழியங்களில் 5000, 4000 மக்களுக்கு உணவளித்து நாம் எவ்வளவு முக்கியம் என கவணிக்க வேண்டும்.
உயிர்த்தபின், இயேசு, தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில், உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை, ஒரு கருவியாகப் பயன் படுத்துகிறார். தன்னைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தி ருந்த சீடர்களிடம் உண்ப தற்கு இங்கே ஏதேனும் உண்டா என கேட்கிறார் (லூக் 24:41) இங்கேஉணவு அமைதியை கொடுக்கும். உணவில்லாமல் மக்களு க்கு அமைதியை தரமுடி யாது. கல்லரையிலிருந்து உயிர்த்த கிறித்துவின் உறவு தொடங்குவதின் காரணமே சீடர்கள் இவ்வு லகில் இறை அமைதியை நிலை நாட்டவே. மரணத்திற்கு முன்பு இறுதி உணவை(The Last Supper) அளிக்கின்ற கிறிஸ்து ; மீண்டும் உயிர்த்த பிறகும் உணவு அளிக்கும் தன்மை யை வெளிப்படுத்துகிறார்.
இ. உயிர்த்த கிறித்துவின் உன்னத கட்டளை:
இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணு லகிலும் அனைத்து அதிகார மும் எனக்கு அருளப்பட்டி ருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களின த்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக் கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கி றேன்" என்று கூறினார். 
(மத் 28:18,19,20)நீங்கள் என்னிடம் கற்றுக்கொண் டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற் றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்க ளோடிருப்பார். (பிலி 4:9 ).
உயிர்த்த கிறிஸ்து தன் உடலில் ஏற்பட்ட காயங் களை சீடர்களுக்கு ஒவ்வொன்றாக காட்டினார். தான் விண்ணக ஆடையில் தோன்றியதைஅவர்களுக்கு உறுதிப்படுத்தினார். என்றும் அந்த காயங்களை அவர் சீடர்கள் மறக்கக் கூடாது என்பதற்காகத்தான்
தன்னை வெளிப்படு த்தினார். உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு துன்பத்தின் மத்தியில் இறை பணி ஆற்றுவது உலகில் அமைதி நிலை நாட்டுவது உங்கள் பணி என்பதை அறிவுறுத்தினார் .செல்லும் இடங்களில்லாம் " "உங்களுக்கு அமைதி உரித்தாகுக " என்க என்று அறிவுறுத்தினார். தாம் அமைதி பெற,  பிறருக்கு அமைதியை அளிப்போம்.  என்னிலையிலும் அமைதி பணியாற்றி இறைபணி ஆற்றுவோம். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில், 
பேரா. முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.

Jesus is the Peace Maker
Spas vsederzhitel sinay.jpg








Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.