மூவொரு கடவுளின் மீது நாம் நம்பிக்கை கொள்கின் றோம். WE BELIEVE IN THE TRIUNE GOD. எசே 1:4-28, திரு.பா 98. 2. கொரி 13:11-14. மத்தேயு 28:16-20. மூவொருமை ஞாயிறு. Trinity Sunday.

முன்னுரை:
திரித்துவம் என்றால் என்ன?
What's Trinity? 
திரித்துவம் என்பது இறை த்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் (Triune God) இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் (The Most Holy Trinity)என்று அழைக்கப்ப டுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவு ள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பி னும் தந்தை, மகனிடமிருந் தும், தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தை யிடமிருந்தும் தூய ஆவியிட மிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமி ருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள் (Person). மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறு பாடும் இன்றி, இந்த மூவரு க்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம்,ஒரே வல்லமை, ஒரே இறைத்த ன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இவரை மூ வொரு இறைவன் Triune God என்று அழைக்கின்றோம். இது தான்கிறிஸ்தவர்களின் முதன்மையான நம்பிக்கை. இறைத் தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆளாவார்.இறைவெளிப்பாட்டில் இவர் படைப்பாளராக காணப்படுகிறார். The Lord is the Creator. இவர்தனதுஇறை வார்த்தையான ஒரேபேறா ன மகனை உலகிற்கு கொடுத்ததால் " தந்தை" என அழைக்கப்படுகிறார். தந்தை எட்டாத ஒளியில் வாழ்கின்றார். விண்ண கமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாத வையாவும் இவராலே படை க்கப்பட்டன. இறைத்தந்தை தனது வார்த்தையின் வழியாக அனைத்தையும் படைத்து, தனது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக் கம் அளித்தார். மகனாகிய இயேசுகிறிஸ்து அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளாவார்.இறை வெளிப் பாட்டில் இவர் மீட்பவராக (Saviour) காணப்படுகிறார் .இவர் வழியாகவே விண் ணகத்தையும், மண்ண கத்தையும், நாம்காண்பவை, காணாதவை அனைத்தை யும் தந்தையாகிய கடவுள் படைத்தார்; அனைத்தும் இவருக்காகவே படைக்க ப்பட்டன. மானிடரான நமக் காகவும்,  இறைவன் உலகத் தின் மீது அன்பு கூர்ந்ததால் நமது மீட்புக்காகவும் விண் ணகத்திலிருந்து இறங்கி னார்.  தூய ஆவியினால் கன்னி மரியாளிடம் பிறந் தார். தூயாவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம்ஆளாவார்.இறைவெளிப்பாட்டில் இவர் புனிதப்படுத்துபவராகவும், படைப்பை புதுபிக்கின்ற வராயும் காணப்படுகிறார். தந்தையாகிய கடவுளிடம் இருந்தும்,மகனாகியகடவுளிடம் இருந்தும் இறைத்தந்தை யோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கி ன்றார்.முற்காலத்தில்இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர்இவரே.இன்றைக்கும் தந்தை மகன் இருவரின் சார்பாக நம்மை காக்கின்ற வர். உலகில் செயல்படுபவர் இவரே. இவரின் செயல்பாடு இறைமைந்தன் இயேசு கிறிஸ்து நீதியரசராய் இவ்வுலகில் இரண்டாம் வருகைவரை தொடர்ந்து The Holy Spirit is the Comforter after Jesus Christ and reacts in us till the Second coming of Jesus Christ on the Day of Judgement. நம்மிடம் செயலாற்றிக் கொண்டி ருப்பார். தூய ஆவியானவர் இயேசுவின் மீது பற்றுறுதி உள்ளோருக்கு இயேசுவிற்கு நிகரான அற்புத சக்தியை தருகிறார். எனவே அவர்கள் உலகமுழுவதும் அவருக்கு சாட்ச்சியாய்இருக்கிறார்கள்

1.இறைவாக்கினர் எசேக்கியேல்: எசேக்1:4-28.
The vision of Prophet Ezekiel.
எசேக்கியேல் என்னும் பெயருக்கு "ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்" என்பது பொருள். எருசலேமின் வீழ்ச் சிக்கு முன்பும் பாபிலோனி  யச் சிறையிருப்பின் போதும் இறைவாக்கினர் எசேக்கி யேல் வாழ்ந்தார். இவருக்கு நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது...நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது. இது ஆண்டவரது மாட்சிமிகு காட்சி." - (எசேக் 1:5,26,28.)
ஒவ்வொருவரும் தம் தீவி னைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், அவர்தம் நெஞ்சமும் எண்ண மும் உள்ளார்ந்த புதுப்பொ லிவு பெறவேண்டும் என்றும் எசேக்கியேல் வலியுறுத் தினார்; நாடும் புதுப் பொலி வு பெற்று வாழ்ந்திட வேண் டும் என்று அறை கூவல் விடுத்தார்.இவர்கோவிலைக் குறித்தும் உள்ளத் தூய் மையைக் குறித்தும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண் டார்.அந்தவிலங்கினங்கள் (seraphim) சேராபீன்கள் கடவுள் மீது வைத்துள்ள அன்பை குறிக்கிறது. இவர்கள் தேவ தூதர்கள். இவர்கள் ஏசாயா 6: 1-7 ல் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச்சொன்னார்கள். என காண்கிறோம். சிறை பட்ட இஸ்ரேவேலருக்கு கடவுள் என்றும் பாதுகாவ லராய் உள்ளார் என்பதே தீர்க்கரின் கடவுளின் வெளிப்பாடு.
2. கடவுள் அருளும் விடு தலை: திருப்பாடல் 98:
இத் திருப்பாடல் நாம் கடவுளை மகிழ்ந்து பாட நமக்கு அழைப்புவிடுக்கி றது. நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? நமது மகிழ்ச்சிக்கு எது காரணம்? ஆண்டவர் வர இருக்கின் றார் என்கிற செய்திக்காக நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். எதற்காக ஆண்ட வர் வர இருக்கின்றார்? இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர் பார்ப்பு மெசியாவின் வருகை. அடிமைப்பட்டு க்கிடந்த இஸ்ரயேலுக்கு விடுதலையை வழங்கவும், அநீதியால் மலிந்து போயிருந்த உலகத்தை, நீதியோடு ஆட்சி செய்யவும் இஸ்ரயேல் மக்கள் மெசி யாவை எதிர்பார்த்து காத் திருந்தனர். அந்த எதிர்பார் ப்பு நிறைவேறும் காலம் வருகிறது, எனவே, அனைவ ரும் இதனை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று ஆசிரியர் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியைவெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழி யையும் அவர் நினைவுகூர்ந் தார். கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து மக்களுக்கும் தலைவராய் இருந்து, மக்க ளினங்களை நேர்மையோடு ஆட்சி செய்வார். அதனால் நாம் அவரைப் போற்றிப் புகழ்வோம்.
3. பவுல் அடிகளாரின் இறுதி அருளுரை: 2. கொரி 13:11-14. St Paul's Farewel Address to Corinthians.
சகோதர, சகோதரிகளே, இறுதியாக நான் உங்களு க்குச் சொல்வது; மகிழ்ச்சி யாயிருங்கள்; உங்கள் நடத் தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதி யுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக் கும் கடவுள் உங்களோடு இருப்பார். தூய ஆவியின் வாழ்த்துதலான பிதா, குமாரன், தூய ஆவியின் பெயரால் வாழ்த்துவதை நாம் பார்க்கிறோம்‌. எபேசு நகருக்கு எழுதும் திருமட லில் 'தூயஆவியானவரு க்கு  துயரம் வருவிக்காதீர் கள்' (4:30) என அறிவுறுத் துகிறார் பவுல். திருச்சபை யில் தூய ஆவியின் செயல் பாட்டைவலியுறுத்துகிறார்.ஐந்து திருச்சபைகளை உரு வாக்கினார் பவுல்அடிகளார். அவற்றில் ஒன்றுதான் கொரிந்து சபை. இம்மக்கள் அமைதியுடன் வாழவும், தங்களின் தீய பழக்கங்களி ருந்து விலகவும், ஒருவரை ஒருவர் தாங்கவும் வலியுறு த்துகிறார். கிறித்துவின் தூய சிந்தனை தங்களிடம் காணப்பட வலியுறுத்து கிறார். கொரிந்தியர்கள் கிறிஸ்துவுக்குள் தூய ஆவியின் புதிய படைப்பாய் இருக்க வேண்டுகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், பிதாவின்அன்பும்,தூயஆவியின் ஒருமைப்பாடு என்றெ ன்றும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தூய ஆவியானவர்கடவுளிடமிருந்துவருகின்றவர்.திருச்சபைகள் தூய ஆவியின் அரவ ணைப்பைபெற்றிருக்கிறார்கள்."தூயஆவியேதிருச்சபையின் இறைசக்தியாக இருக்கிறது."Holy Spirit is the mighty  Power' of The Churches" திருச்சபைகள் தூய  ஆவியி னால் வழிநடத்தப்பட வேண்டும் என்று பவுல் அடிகளார் வேண்டுகிறார். கடவுள்,: கிறிஸ்து இயேசு வின் தூய ஆவியினால் செயல்படுகிறார் என்பதை வலியுறுத்துகிறார்.
4. மூவொரு கடவுளின் மீது நம் நம்பிக்கை: மத்தேயு: 28:16-20.WE BELIEVE IN THE TRIUNE GOD:
இயேசு தன்னுடைய பதி னோறு சீடர்களைப் பார்த்து "புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்க ளாக்கி,  அவர்களுக்கு பிதா, குமாரன், தூயாவியினால் திருமுழுக்கு  கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்ட ளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப் பிடிக்கும் படி அவர்களுக்குக் கற்பியுங் கள்.” என்றார். இந்தக் கட்ட ளையை ஒருவர் நிறைவே ற்றினால்தான் அவர் உண் மையாக கிறிஸ்துவை பின் பற்றுவதாகச் சொல்ல முடியும். இயேசு தன் சீடர்களிடம் கூறியது; என் பெயரால் தந்தை அனுப்ப ப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களு க்கு நினைவூட்டுவார். (யோவ 14:26) எனவே இயேசு சென்றாக வேண் டும். அப்படி நடந்தால் தான் தூய ஆவி அருளப்படும். திருதூதுவர் பணி 1:8ன் படி 
" ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமை யைப்பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதி லும் உலகின் கடையெல் லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார். இவற்றில் தூய ஆவியானவர் அனைத்து இடங்களிலும் பரவி இருப்பதை (Amni presence)
நாம் காணலாம். தூயாவி நம்மில் செயல்படுவது என்பது நாம் கிறித்து விரும் பும் வாழ்வை வாழ்வதாகும். தூய ஆவியானவர் நம்மை மனம் மாறவும் கிறிஸ்துமீது நம்பிக்கை வைக்கவும் செய்கிறார்.தூய ஆவியே நம்மை புதுபிக்கும், ஆவியி ன் கனியோடு வாழ துனை புரியும். புதுப்பித்தல் மற்றும் தூய்மைபடுத்துதல் தூய ஆவியின் செயல்பாடே.பாவ செயல்பாடுகளை ஒவ்வொ ன்றாக நாம் விட்டு விடும் போது தூய ஆவி நம்மில் செயல்படுவார். தூய ஆவி யான கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன் பும், கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கி யுள்ளார். (2 திமத் 1:7) தூய ஆவியே நமக்கு தைரியமாக பிரசிஙகிக்கவும், அற்புதங் கள் செய்யவும் அதிகாரம், வல்லமை தருகிறார். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 
(உரோமையர் 8:14) இவர்களே ஆண்டவரின் தகுதியான பணியாளர்கள்.
உண்மையை வெளிப்படு த்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மை யை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட் டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற் றை உங்களுக்கு அறிவிப் பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவி ப்பார். இவ்வாறு அவர் என்னைமாட்சிப்படுத்துவார். (யோவான் நற்செ 16:13,14)
இயேசு கிறிஸ்து பாவங் களை மன்னிக்கின்றவர். ஆனால் தூய ஆவியோ நம் பாவங்களுக்கு தண்டிப்பார்.
எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படும்' என்று சொல்லும் இயேசு 'தூய ஆவியானவருக்கு எதிரான பாவம் மட்டும் மன்னிக்க ப்படாது' என்கிறார். இதை லூக்கா மட்டுமல்ல, மத்தே யுவும், மாற்கும் பதிவு செய் கின்றனர். உண்ணா நோம் பும் உறுதியான ஜெப விண் ணப்பத்தினால்தான் நாம் தூய ஆவியின் ஆற்றலை பெறமுடியும். படைப்பில் இருந்த தூய ஆவியின் செயல்பாடு நம்மோடு தொடர்ந்து செயல்பட்டு இயேசுவின் இரண்டாம் வருகை வரை இருப்பார்.  இதற்கிடையில், தீங்கு புரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய் வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக் கட்டும்; தூயோர் தூய்மை யானவற்றைச் செய்து  கொண்டே இருக்கட்டும். 
 "இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவ ருக்கு நான் அளிக்கவிருக் கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. 
(திருவெளிப்பாடு 22:11,12) ஆக நாம் தூயவரின் திரு நாமத்தில் தூய்மையான வற்றை தொடர்ந்து செயல் பட தூய்மையாய் இருப் போம்."தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற் றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். 
(மத்தேயு நற்செய்தி 5:8)
தூய்மையற்றவன்கடவுளை 
காண இயலாது. நம் முழு நம்பிக்கை மூவொரு கடவுள் மீது உறுதியாக இருப்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை தன்மையாகும். தூய உள்ளம் உள்ளோரிடம் தூய ஆவியானவர் இருக்கிறார். நம் கண்களுக்கு தெரியாது. Holy Spirit is invisible. அவர் நம்மில் இருப்பதை நம்தூய செயல்களின் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.கிறிஸ்துவின் நாமத்தினால் தந்தையால்அனுப்பப்படும் தேற்றறவாளனாகிய தூய ஆவியானவர் நமக்கு போதிப்பார். (யோவான் 14:26) நம் ஜெபம் ஒருவரை குணப்படுத்தினால் தூய ஆவி உங்களில் செயல்படு கிறது என்பதை தெரிந்து கொள்ளளாம். தூய ஆவியே
வல்லமை அளிப்பார். இயேசு என்ற நாமத்திற்கு வல்லமை உண்டு. மூவொரு கடவுளின் செயல்பாடு நம்மை இவ்வுலகில் இயக்குவதாக! ஆமென். 
Prof. Dr. David Arul Paramanandam.





 
 








Trinity,  proves that everything comes "from the Father," "through the Son," and "in the Holy Spirit."[

A compact diagram of the Trinity, known as the "Shield of Trinity". 





































    

 



Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.