தூயாவியாரே வருக: படைப்பனைத்தையும் மாற்றுருவாக்குக! COME HOLY SPIRIT: TRANSFORM THE WHOLE CREATION. எசேக் 36:24-36, திரு.பா.29, திரு.தூ.பணிகள் 2:1-13. யோவான் 20:19-23.பெந்தெ கொஸ்தே ஞாயிறு.

முன்னுரை: ஆண்டவராக இயேசு கிறிஸ்து உயிர்த்தெ ழுந்த ஐம்பதாவது நாள் பெந்தகோஸ்தே நாள் எனப் படுகிறது. பெந்தெகொஸ்தே நாளின் உண்மையான நிகழ்வுகள் பற்றிய ஒரே வேதாகமக் குறிப்பு திரு.தூத.(அப்போ) 2:1-3 ) ஆகும். பெந்தெ கொஸ்தே கடைசி திருவிருந்து நினை வூட்டுகிறது; இரண்டு நிகழ் வுகளிலும் சீடர்கள் ஒரு வீட்டில் ஒன்றாக இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாக நிரூபிக்கிறது. கடைசி திரு விருந்தின் போது, சீடர்கள் மேசியாவின் பூமிக்குரிய ஊழியத்தின் முடிவைக் காண்கிறார்கள், அவர் மரித் தப்பிறகு அவர் திரும்பி வ ரும் வரை அவரை நினைவு கூரும்படி கேட்டுக் கொள் கிறார். பெந்தெகொஸ்தே நாளில், அனைத்து விசுவாசி களின் மேல் 120 நபர்கள் மீது  பரிசுத்த ஆவி ஊற்றப் படுகிறது. இதுவே பின் நாளில் புதிய ஏற்பாட்டின் திருச்சபையின் பிறப்பாக கருதப்படுகிறது.. இவ்வாறு, பெந்தெகொஸ்தே நாளில் ஒரு அறையில் இருந்த சீடர்களின் காட்சி, திருச் சபையில் பரிசாக கருதப் பட்டு தூய ஆவியின் வருகையினை நினைவு கூறும் விதமாக "தூய ஆவி பெருவிழா" என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழாவே திருச்சபை யின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது. Pentecast Day is the Birth Day of The Church. அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழாவான பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் கொண்டா டப்பட்டது.  விண்ணேற்ற விழாவுக்குப் (Ascention) பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் என்று திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். முதல்முறை தூய ஆவியார் நிழலிட்ட வேளையில் இயேசுவைப் பெற்றெடுத்த மரியா, இரண்டாம் முறை அவர் இறங்கி வந்தபோது திருச்சபையின் பிள்ளை களைப் பெற்றெடுத்தார் என்பது கத்தோலிக்க திருச் சபையின் நிலைப் பாடு. இவ்வாறு, அவர் திருச்சபை யின் தாயாக விளங்கு கிறார்.  "Mary is the Mother of the Church Believers" ஏனேனில் அந்த மேலறை யில் 120 பேருடன் இயேசு வின் தாயான மரியாளும், இயேசுவின் சகோதரர் களான யாக்கோபு, யூதா, , (திருதூதர் 1:14) பங்கு பெற்று பரிசுத்த ஆவி பெற் றார்கள். இந்தசூழ்நிலை யில் தூயாவியாரே வருக: படைப்பனைத்தையும் மாற்றுருவாக்குக என ஏன் கூற வேண்டும். ? ஏனேனில் படைப்பு அனைத்தும் மனித னின் சுய நலத்தாலும், பேரா சையாலும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் பாவத்தில் வீழ்ந் தான். இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு சுற்றுச்சூழல், பாதிக்கப்பட்டு உயிரினங்க ளின் வாழ்வாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால்; பரிசுத்த ஆவி யின் வருகையே படைப்ப னைத்தையும் மறு சீரமைப்பு (Reconstruction) செய்ய முடியும். தூய ஆவியானவர் தொடர்ந்து படைப்பனைத் தையும் மாற்றுருவாக்கி கொண்டு வருகிறார். Transforming the whole creation is a Contineous process. தூய ஆவியானவர் படைப்பின் முகவராக இருக்கிறார். The Holy Spirit was the Agent of Creation.

1. எசேக்கியேல் தீர்க்கரின் நம்பிக்கை:; எசேக் 36:24-36.
The Message of Hope:
எசேக்கியேல் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரே யத்தில்  "ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்"என்பதாகும்.இறைவாக்கினர் எருசலேம் நகரின் வீழ்ச்சிக்கு முன்பும் பாபிலோனியச் சிறையிரு ப்பின் போதும் வாழ்ந்தவர். பாபிலோனுக்கு நாடு கடத்த ப்பட்டோருக்கு மட்டுமன்றி, எருசலேமில் எஞ்சியிருந் தோருக்கும் அவர் இறை வாக்கு உரைத்தார். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சுமார் 22 ஆண்டுகள் அவர் பணி யாற்றினார் (கி.மு. 595-573).
இஸ்ரவேலரக்கு தீர்க்கரின் நம்பிக்கையின் வார்த்தை தான்  நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து, பல நாடுகளிடை யே கூட்டிச் சேர்த்து, உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும் பக் கொணர்வேன். மற்றும் தூய நீரை ஊற்றி தூய்மை படுத்துவேன். உங்களின் கல்லான இருதயத்தை எடுத்து விட்டு சதையிலான இருதயத்தையும்.ஆண்டவரின் தூய ஆவியை பொருத்து வேன் என நம்பிக்கை அளிக்கிறார்.
2. பரிசுத்த அலங்காரத்து டன் கர்த்தரை துதியுங் கள். திரு.பாடல்.29. Worship the Lord in the beauty of Holiness. Psalms 29:2. தேவப்பிள்ளைகள் கர்த்தருடைய நாமத்திற் குரிய மகிமையை அவரு க்குச் செலுத்த வேண்டும்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத்தொழுதுகொள்ளுங்கள் என தாவிது அரசர் நம்மை வேண்டுகிறார். ஏனேனில் கர்த்தர் பரிசுத்தர். வானங்கள் பூமியும் அனை த்து இயற்கையும் அவரை துதிக்கின்றன. துதிக்கு பாத்திரமான கர்த்தரை துதியுங்கள்.முதன் முதலில் மனுஷர்கள் கர்த்தரை தொழுதுகொள்ள ஆரம்பித் தது ஆதாம் ஏவாள் படைக் கப்பட்டு சுமார் 235 வருடங்க ளுக்கு பிறகு என்று வேதம் குறிப்பிடுகிறது. அதாவது ஆதாம் தேவனை முகமு கமாக அறிந்து பேசியிருந் தான் அவனது குமாரனான சேத்துக்கு குமாரன் பிறந்த பிறகே கர்த்தரை தெய்வ மாக வணங்கினர். கர்த்த ருடைய சத்தம் வல்லமையு ள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. கர்த்தரு டைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக் கும். இது தூய ஆவியான வர் சீடர்கள் மீது பொழியும் போது ஏற்பட்ட சத்தத்தை குறிக்கிறது (திருதூத2:3). தூய ஆவி அனைவர்மீதும் வல்லமையாய்இறங்கியது.பேதுரு சமாரியா,செசரியா பட்டிணங்களில் தூய ஆவியின் வல்லமையால்
" பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள் மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார் கள். (திருத்தூதர் பணி 8:17) செசரியாவில் "பேதுரு தொடர்ந்து பேசிக் கொண் டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனை வர்மீதும் தூய ஆவி இறங்கி வந்தது. (திருத.பணி 10:44)
 இப்படி தூய ஆவியானவர் ஆள் தத்துவம் (A Unique Person) நிறைந்தவராய் ஆதி திருச்சபையில் செயலாற் றியதை நாம் காண்கிறோம்.  தூய ஆவியார் பிலிப்பிடம், "நீ எழுந்து எருசலேமிலிரு ந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. 
 "நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ" என்றார். பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார். அப்போது எத்தி யோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டி ருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டி ருந்தார். பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப் பதைக் கேட்டு, "நீர் வாசிப்ப தின் பொருள் உமக்குத்தெரி கின்றதா?" என்று கேட்டார். அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காவிட்டால் எவ் வாறு என்னால் தெரிந்து கொள்ள முடியும்?" என்று கூறித் தேரில் ஏறித் தன் னோடு அமருமாறுபிலிப்பை அழைத்தார். அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப் பற்றிய நற் செய்தியை அவருக்கு அறி வித்தார். அவர்கள்  போய்க் கொண்டிருந்த போது வழி யில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், "இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக் குப்பெற ஏதாவது தடை உண்டா?" என்று கேட்டார்.  "அதற்குப் பிலிப்பு, "நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை" என்றார். உடனே அவர், "இயேசு கிறிஸ்து இறை மகன் என்று நம்புகிறேன்" என்றார். உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.அவர்கள் தண் ணீரிலிருந்து வெளியேறின வுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன் பின் அவரைக்காண வில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார். 
(திருத்தூதர் பணி 8:36-39)
இது தூய ஆவியானவரின் ஆள்தத்துவத்தை (நபர்)   குறிக்கிறது. மற்றொன்று திருமுழுக்கு யோவான் தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தார். இயேசுவின் கட்டளைப்படி திருத்தூதுவர் கள் பிதா, குமாரன், தூயாவி மூலம் திருமுழுக்கு கொடுத் தார்கள்.
3. படைப்பனைத்தையும் மாற்றுருவாக்கு செய்யும் தூயாவி: Holy Spirit Reforms the Entire Creation:  யோவான் 20:19-23.  தூய ஆவி என்பத ற்கு கடவுளின் ஞானம், கடவு ளின் ஆற்றல், கடவுளின் சாரம் என்று பல்வேறு பொ ருள்கள்உண்டு.திரித்துவத்தின் படி, ( பிதா, குமாரன், தூய ஆவி) இதில் தூயாவி என்பவர் கடவுளின் மூன்றா ம்  நபர் ஆவார்.இயேசு கிறிஸ்து பிதாவும் குமார னாகவும் இருக்கிறார். Jesus Christ is the Son of God as well as Son of Man. "நான் தந்தை யுள்ளும் நீங்கள் என்னுள் ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர் கள். (யோவா 14:20).
கத்தோலிக்க திருச்சபையி னரின் தின விண்ணப்பத் தில், "தூயாவியரே வாரும்" " Come Holy Spirit" என வேண் டுதல்செய்வர்.தூயாவியானவரே தன் படைப்பனைத் தையும் புதுபிக்கவும், மறுசீரமைக்கவும் முடியும். அவர்படைப்பில்இருந்தார்.தொடக்க நூல் 1:2 (Genesis1:2) மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண் டிருந்தது. வெறுமையான உலகை தூய ஆவியானவர் சரிபடுத்தி உயிரினங்கள் வாழ பூமியை சீர்படுத்தி னார். தூய ஆவியானவர் தன்னிச்சையாக செயல் படமாட்டார்‌. நம்மோடு சேர்ந்து படைப்பை புதிதாக மாற்றுவார்.தூயாவின்மூலம் நாம் செயல்பட்டால் தான் ஆண்டவரின் கட்டளை யாகிய "எவருடைய பாவங் களை நீங்கள் மன்னிப்பீர்க ளோ, அவை மன்னிக்கப்ப டும். எவருடையபாவங்களை மன்னியாதிருப்பீர்களோ,   அவை மன்னிக்கப்படா" என்றார். (யோவா 20:23) தூயாவி மூலமாகதான் இப்புவியில் ஆண்டவரின் நற் செய்தி விதைக்கமுடி யும்.இதை திருத்தூதர்வர் கள் சிறப்பாக செயல்படுத்தி னர்.தூயாவி பெற்ற தூய கிறித்தவர்கள் எபேசியர் 4: 29-31 ன்படி "கெட்டவார்த்தை எதுவும் உங்கள் வாயினி ன்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கு ஏற்றவாறு, அருள் வளர்ச்சிக் கேற்ற நல்ல வார்த்தைக ளையே பேசுங்கள். கடவுளி ன் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதிர்கள். Don't bring grieve to Holy Spirit, Because he is a person to brieve. மீட்பு நாளை முன்னி ட்டு உங்கள்மீது "பொறிக் கப்பட்ட முத்திரையாக"Sealed for Redumption"அவர் இருக்கி றார். மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். (எபே 4:30,31)என்றேன்றும் நம்மோடு இருக்கும் தூயா வி. "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களு க்கத் தருமாறு நான் தந்தை யிடம் கேட்பேன்(யோவ14:16) தூய ஆவியானவர் ஏன் நம்மோடு என்றென்றும் இருக்க வேண்டும். ஏனெ னில் இந்த பூவுலகில் படைப் பனத்தையும் சீர்படுத்த நமக்கு தூய ஆவியின் மூலம் செயல்பட கடவுள் விரும்புகிறார். தூயாவியும்
தேற்றறவாளனும் ஒருவரே.
படைப்பில் இருந்த தூய ஆவியானவரே, படைப்பை புதுபிக்கமுடியும்‌. பிதாவா னவர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கிய பொழுது அது நித்திய வாழ்வு பெற்றதாய் இருந்தது. ஆனால் ஆதாம் ஏவாள் செய்த கீழ்ப்படி யாமை என்ற பாவத்தினால் அந்த நித்திய தோட்டம் நம் கண்ணில்மறைக்கப்பட்டது. கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தன் தேவ சாயலை இழந்தான். 
 இவ்வுலகில் தூய ஆவின் உதவியின் மூலம்தான் கறைபட்ட உலகத்தை, பாவத்தில் மூழ்கிய உலக த்தை சீர்படுத்துவது நம் ஒவ் வொருவரின் கடமையாக இருப்பதை கடவுள் உணர்த் துகிறார். "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவி யாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அல கையின் கொடுமைக்கு உட் பட்டிருந்தஅனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். (திருத்.பணி 10:38) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கே தூய ஆவியாரின் அபிஷே கம் தேவைப்பட்டதால் நாம் அனைவருக்கும் தூய ஆவி யானவரின் வல்லமை மிக அவசியம். ஆண்டவர் நிக்கதேமுவை பார்த்து ஒருவன் தண்ணீரினாலும், தூய ஆவியினாலும் மறுபடியும் பிறக்க வேண்டும்.(Born Again) என்று கூறுகிறார். இயேசு அவரைப் பார்த்து, "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவி யாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதி யாக உமக்குச் சொல்கி றேன். (யோவ 3:5) தண்ணீர் திருமுழுக்கை குறிக்கிறது. தூய ஆவியினால் பிறப்பது புது படைப்பாக கருதப்படும்.இவர்களுக்கே இறையாட்சியில் இடம் உண்டு என் ஆண்டவர் கூறுகிறார்.
சீர் அற்ற படை ப்பை சீரமைக்க தூயாவியின் துனையோடு நாமும் நம் திருச்சபைகளும் செயல் படுவோம். தூய ஆவியே வாரும்!. படைப்பனைத்தையும் புதுப்பியும். ஆமேன்.

பேரா. முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.

PRAYER OF HOLY SPIRIT.

Come, Holy Spirit, fill the hearts of Thy faithful and kindle in them the fire of Thy love.
Send forth Thy Spirit and they shall be created.
And Thou shalt renew the face of the earth.
Let us pray.
O God, Who did instruct the hearts of Thy faithful by the light of the Holy Spirit,
grant us in the same Spirit to be truly wise, and ever to rejoice in His consolation.
Through Christ, our Lord. Amen.

கடவுளின் மூன்றாம் ஆள் (நபர்) தூயாவி ஆவார்.



  .

புறா வடிவில் தூய ஆவி












Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.