விடுதலைக்காக ஏங்கும் படைப்பு. CREATION GROANS FOR LIBERATION. எசேக்:36:24-36; உரோமையர் 8:18-25: திருப்பாடல் 29: யோவான் 20:19-23. Environment Sunday.
முன்னுரை:
கிறிஸ்துவின் அன்பு விசுவாசிகளே! விடுதலைக்காக ஏங்கும் படைப்பு என்ற தலைப்பு நம்மை வியக்கவும் சிந்திக்க செய்கிறது. கர்த்தர் இவ்வுலகை படைத்தபோது "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கி னார். அவை மிகவும் நன் றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.
(தொடக்கநூல் 1:31) ஆறு நாளின் படைப்புகள் ஆண்டவருக்கு மிகவும் நன்றாய் இருந்தன. ஆனால் ஆண்டவர், "நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வ ன, வானத்துப் பறவைகள் வரை அனைத்தையும் அழிப் பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்" என்றார். (தொடக்கநூல் 6:7).
கடவுள் தன் படைப்பைக் குறித்து மனம் வருந்துகிற அளவிற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே( Adam to Abraham took 2008 years). The days of Genesis 1 may be 1 million years long).கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் பாவக் கரையில் வீழ்ந்தனர். "கடவுள் மண்ணுலகை உற்று நோக்கினார். இதோ! அதுசீர்கெட்டுப்போயிருந்தது. மண்ணுலகில் ஒவ்வொ ருவரும் தீய வழியில் நடந்து வந்தனர்.(தொட.கநூல் 6:12).
எனவே கடவுள் நோவாவின் குடும்பத்தையும், சில விலங் கினங்களையும் தவிர்த்து வெள்ளப் பெருக்கினால் அழித்து போட்டார். ஆனாலு ம்மனிதனின்சுயநலத்தினாலும், பேராசையாலும், சுரண் டல்,சண்டைகள்,கொலைகள் போன்றவற்றால் அனைத்து படைப்பும்பேரழிவில்உள்ளன(Disaster).இவ்அழிவிலிருந்து விடுதலைக்காக யார் என்னை மீட்பார் என ஏங்கு கின்றன. Who will liberate me from this disaster? மணிப்பூரில் நடக்கும் கலவ ரங்களில் பாதிக்கப்பட்டிருக் கின்ற கிறித்துவமக்களின் மீட்பை உறுதி செய்வது யார்? இந்த உலக அரசா? நம் இறைஅரசா? உலகில் உங்க ளுக்குத் துன்பம் உண்டு, எனினும் துணிவுடன் இருங் கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்றார். (யோவான் 16:33) எனக்கு காலம் சென்ற போதகர் மோசஸ் ராஜசேக ரன் பாடல் நினைவுக்கு வருகிறது."கிறிஸ்தவனை Disturb பண்ணாதே!அவனை Assault டாகஎண்ணிவிடாதே!
அவன் வெட்ட வெட்ட வளரு வான் கொட்ட கொட்ட உயரு வான்.'. இந்த பாடல் மணிப் பூர் கிறிஸ்தவ மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.இப்படி உலகில் உள்ள படைப்பனை த்தும் பேரழிவில் இருக்கி ன்றன. சத்திய நாயகனா கிய இயேசுவே நம் விடுத லை வீரர்.
1. சிதறுண்ட இஸ்ரவே லரின் மீட்பு: எசேக்கியேல் 36:24-36. God's Liberation to the exiled Israel.
தீர்க்கர் எசேக்கியேல் அவர்கள் இஸ்ரவேலரின் மீறுதல்களை கண்டித்தவர். அவர்களின் அநீதிக்காகவே அவர்கள் அன்னியர் கைக ளில் வீழ்ந்தனர். சமாதான நகரான எருசலேம் வீழ்ந்தது.
இப்படி சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலரை மீண்டும் ஒன்றினைக்க கடவுள் தரும் நம்பிக்கையை தீர்க்கர் இங்குவெளிப்படுத்துகிறார். கடவுள் அவர்களை தண்டி த்து மீண்டும் அவர்களுக்கு புது வாழ்வை கொடுத்து எருசலேம் திரும்புகின்ற விடுதலையை தருகிறார். தீர்க்கரின் தண்டனை தீர்ப்பி ற்கு பதிலாக அவர் தரும் நம்பிக்கை இஸ்ரவேலரை மீண்டும் எருசலேமில் மறு குடி அமைத்தல், சிதறுண்ட மக்களை ஒன்று சேர்த்தல், சுத்தப்படுத்துதல், சுத்த இருதயத்தையும் தூய ஆவி யை நிலைநிறுத்தலே ஆண் டவரின் விருப்பம் என தீர்க்க ரின்வாக்காகும்.இதன்மூலம் இஸ்ரவேலர் கடவுளின் பிள்ளைகளாகவும், கடவுள் அவர்களின் தேவனாகவும், மீட்பராகவும் இருப்பார் என தீர்க்கர் இஸ்ரவேலரக்கு நம்பிக்கை தருகிறார். இஸ்ரவேலர் பாபிலோனி யர்கள் முதற்கொண்டு ரோம ஆட்ச்சிவரை நான்கு முறை நாடு கடத்தப்பட்டனர் (exiled). காரணம் அவர்கள் கடவுளை மறந்தனர். அநீதியில் வீழ்ந் தனர். ஆனாலும் அவர்கள் மீது வைத்த அன்பினிமித் தமாக மீட்டார். எகிப்த்தின் 430 ஆண்டின் அடிமைத்த னத்திலிருந்துவிடுவித்தார்.ஏனேனில் அவர் ஒருவரே விடுதலை வீரர். God is a Liberator.
2. படைப்பே! கர்த்தரை துதியுங்கள்: திருப்பாடல் 29. O Creation! Praise the Lord
தாவிது இந்த சங்கீதத்தை எழுதும்போது, இடி, மின்னல், மழை, புயல்காற்று, ஆகிய வைஉண்டாயிற்று.வானத்தில் இடி ஓசை கேட்கிறது. ஒவ்வொரு முறை இடி ஓசை கேட்கும்போதெல்லாம், அது கர்த்தரை மகிமைப்படு த்துவதாக தாவிது கூறுகி றார். எனவே பலவான்களும் பலவான்களின் புத்திரரும், பிரபுக்களும் கர்த்தருக்கு மகிமையைச் செலுத்த வேண்டும் என கூறுகிறார் . தாவீது எட்டாவது சங்கீதத்தை சந்திரனின் வெளிச்சத்தில் எழுதினார். பத்தொன்பதாவது சங்கீத த்தை அதிகாலை வேளையி ல் சூரிய வெளிச்சத்தில் எழுதினார். கர்த்தர் மகிமை யுள்ளவர். அவருடையநாமம் பரிசுத்தமானது. கர்த்தரு டைய நாமத்திற்குரிய மகி மையை நாம் அவருக்குச் செலுத்தவேண்டும். இதுவே மெய்யான ஆராதனை. பரிசுத்த அலங்காரத்துடனே நாம் கர்த்தரைத் தொழுது கொள்ளவேண்டும்.கர்த்தர் எல்லாவற்றிற்கும் மேலாக சர்வஆளுகையுள்ளவர். தாவீது இந்த சங்கீதத்தில் தேவனுடைய சர்வ ஆளுகை யை விவரித்துச் சொல்லுகி றார். இயற்கையில் கர்த்தரு டையமகிமையும்அவருடையவல்லமையும்வெளிப்படுகிறது இயற்கையில் நடை பெறும் ஒவ்வொரு சம்ப வங்களும் கர்த்தருடைய மகத்துவத்தை வெளிப்படு த்திக் காண்பிக்கிறது. கர்த்தருடைய மகிமையி னால் இடி முழக்கம் உண்டா கிறது.கிறிஸ்தவனின்ஆவிக்குரியகிரியைகளில் மிகவும் சிறந்தவை கர்த் தரைத் துதிப்பதும், அவருக் கு ஆராதனை செய்வதுமே.
கடவுளைத் துதித்தல் மிக வும் சிறப்பானது. நீங்களும், நானும் உண்மையாகத் தேவனைத் துதிப்போ மானால் பரிசுத்த ஆவியா னவர் நமது வாழ்க்கையை க்கட்டியெழுப்புவார். ஆவிக்குரிய குணமாகுதல் அநேகருக்குத் தேவை. அதற்குரிய மருந்தில் ஒரு பகுதிதான் “துதித்தல்” ஆகும். பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் கட்டு ண்டிருந்தபோதிலும் தேவ னைப் பாடித் துதித்தார்கள். அது அந்தச் சிறைச்சாலை யில் அடைக்கப் பட்டிருந்த பிற கைதிகளுக்குச் சாட்சி யாக மட்டுமல்ல, அவர்களு டைய காயங்களுக்குக் குணமளிக்கும் இதமான மருந்தாகவும் இருந்தது. கர்த்தர் இந்த உலகத்தின் மீது சர்வ ஆளுகை உடைய வர். கர்த்தர் நம்மீது அன்பா யிருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறார். நம்முடைய ஆராதனையில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.தாவீது இந்த 29ம் சங்கீதத்தில் கர்த்தர் என்னும் நாமத்தை பதினெட்டு தடவை சொல் லுகிறார். கர்த்தருடைய நாமம் பரிசுத்தமாயிருப்பதி னால், தாவீது அந்த நாமத் தைத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார். இயற்கை யில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களும் கர்த்தருடை யமகத்துவத்தை வெளிப்படு த்திக் காண்பிக்கிறது. கர்த்தருடையமகிமையினால் இடி முழக்கம் உண்டாகி றது.கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது. அவருடைய சத்தம் மகத்து வமுள்ளது. கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது.லீபனோனில் ஏராளமான கேதுரு மரங்கள் இருக்கும். அங்கு வீசுகிற பலத்த புயல்காற்று கேதுரு மரங்களை வேரோடு கீழே சாய்த்துவிடும்.மரங்களுக்கு இயற்கையாகவே மக்களு க்கு பாதுகாப்பு தருகிறது. கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜுவாலைகளைப் பிளக்கும். கர்த்தர் தம்முடைய சத்தத்தினால் மின்னல்களைஅனுப்பினார். இடி முழக்கம் உண்டாயிற்று. வனாந்தரத்தில்கர்த்தருடைய இடி ஓசை சத்தம் கேட்கி றது. அது காதேஸ் வனாந் தரத்தை அதிரப்பண்ணு கிறது. நாம் கர்த்தருக்கு மகி மையையும் வல்லமையை யும் செலுத்துவோம். பரி சுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத்தொழுதுகொள்ளுவோம். அவருடைய மகி மையை பிரஸ்தாபம் பண் ணுவோம்.சகோதரி சாராள் நவரோஜ் பாடல் " கர்த்தரின் சத்தம் வல்லமை உள்ளது பாடல்" இந்த சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட தெய்வீக பாடல். கேட்க கேட்க நம் உள்ளம் உருகிவிடும்.
3. பேராவலோடு காத்திரு க்கும் படைப்பு: The Creation Waits in eager Expectation. ரோமர் 8:18-24.
கடவுளின் பிரதான படைப் பான மனிதனின் வீழ்ச்சி மனித வர்க்கத்திற்கு மட்டு மல்ல அந்த பாதிப்பு இயற் கையும் பாதித்தது.இயற்கை மனிதனின் பேராசையால் அழிந்து வருகிறது. இயற் கையோடு சேர்ந்து வாழ வேண்டிய மனிதன் இயற் கை அழித்து வாழ்கிறான். இந்த பூமி கடவுளின் பரிசு. Land is a gift of Nature. இயற்கையே கடவுள். இதை பயன்படுத்தவும்,பாதுகாக்கவும் ஆண்டவர் மனிதனுக்கு பொறுப்பை கொடுத்தார். ஆனால் அவனோ அதை காயப்படுத்திக் கொண்டிரு க்கிறான். படைப்பு தன்னை அழித்துக்கொண்டிருக்கிறது. அழிந்து வருகிறது. பவுல்அடிகளார் கூறுவது "படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்ப த்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அதுஎதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை.
(உரோமையர் 8:20) படைப்பு அழிவுக்கு அடிமைப்பட்டி ருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெரு மையையும் விடுதலையை யும் தானும் பெற்றுக்கொள் ளும் என்கிற எதிர்நோக் கோடு இருக்கிறது.
(உரோமையர் 8:21) என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
கடவுள் அரசின் படைப்பு ஏசாயா 11:6 -8ல் அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றைநடத்திச்செல்லும்.
(எசாயா 11:6)
பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்;
எசாயா 11:7
8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளை யில் விளையாடும்; பால்குடி மறந்தபிள்ளைகட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். (எசாயா 11:8) இது ஆண்டவரின் ஆயிரம் வருட அரசாட்சி காலத்தில் நடை பெறும்.( திரு வெளிப்பாடு 20:1-6)
Creation recognizes the Creator. படைப்பு படைப்பாளியை அறியும். இயேசு தன் உலக வாழ்வில் காற்றையும், கடலையும் கட்டுப்படுத்தி னார். அவைகள் கீழ்படிந் தன.( மாற்கு 4:39-41). பவுல் அடிகளார் கூறும்போது "இயேசு கிறிஸ்து சிலுவையில் பிசாசை வெற்றி கொண்டார் இதன் மூலம் மனிதன் தான் இழந்த கடவுளின் மகிமையை மீண்டும்பெற்றான்.அவ்வாறே படைப்பும் தான் இழந்த மகிமையைதிரும்பபெறும்.
படைப்பனைத்தும் மிக ஆவ ளுடன் தன் படைப்பாளியிட ம் திரும்பிட காத்திருக்கி ன்றன." என்கிறார்.
4. படைப்பை புதுபிக்கும் படைப்பாளி: Renew the Creation by the Creator. , யோவான் 20: 19-23.
சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று என்பவற்றை உள்ளடக்கிய இயற்கை பரப்பாகும். இதில் காடுகள், கடல்கள் என பல்வேறு நில பரப்புக்கள்உள்ளடங்கும். பூமியில் வாழும் உயிரினங் களுக்காக நாம் சூழலை பாதுகாக்க கடமைப்பட்டு ள்ளோம். மனிதன் படைப் பை காக்க தவறும் பட்சத்தி ல் இறைவன் தன் மறு சீரமைப்பு (Reconstruction) முறையில் படைப்பை சீராக் குகிறார். ஆனால்தொடர்ந்து காற்று மாசடைந்து (Air Pollution) மனிதவாழ்விற்கும், மற்ற உயிரினங்களுக்கும் மிக ஆபத்தான சூழ்நிலை யில்உலகம்சென்றுக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் உயிர்த்த கிறித்து யோவான் 20:22ல் "இயேசு அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள் ளுங்கள். " என்று தன் சீடர்களுக்கு தூய ஆவியைப் பெற்றுக் கொள்ள " ஊது" கிறார்.Breathed on them. அவர் ஊதுகின்ற போது தூய காற்றுடன், தூய ஆவியும் பெற்றுக் கொள்கி ன்றனர்.அந்த தூய காற்று மாசு காற்றை polluted air தூய்மைப்படுத்தி ஆண்டவர் படைப்பை தூய்மை படுத்துகிறார். திருத்தூதர் பணிகள் 2:2ல் "திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.( A mighty wind from heaven.) இங்கு பெந்தகோஸ்தே நாளில் சீடர்களுக்கு தூய ஆவியில் நிரப்புவதற்கு முன்பு வானத்திலிருந்து தூய காற்று அந்த வீட்டை நிரப்புவதை பார்கிறோம். ஆண்டவர் "இப்பூவுலகின் கடையெல்லைகளிலிருந்து மேகங்களை எழச் செய்கின் றார். மழை பெய்யும்படி மின் னலை உண்டாக்குகின்றார்; காற்றைத் தம் கிடங்குகளி லிருந்து(Warehouse)வெளிவரச்செய்கின்றார்.திருப்பாடல்கள்(சங்கீதங்கள்)135:7.
கிறித்துவிற்கு பிரியமான வர்களே!கடவுள்இவ்வுலகை தூய்மை படுத்துகிறார். இதன் மூலம் தொடர்ந்து தன் படைப்பை சீர்படுத்தி வருகிறார். மனிதன் படைப்பை அழிக்கிறான். கடவுள் படைப்பை காக்கிறார். இவை தொடர் நிகழ்வுகள். உலகின் சுற்றுசூழலை பாதுகாக்க Kyoto Protocol - 2010. மற்றும் The Paris Agreement of 2015 போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. நாம் இப்படைப்பை பாதுகாக்க செயல்படுவோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னை படைப்போடு இனைந்து செயல்பட்டவர். அவர் பிறப்பு மாடுகளோடு தொடங்கியது. நாற்பது நாள் வனாந்திர வாழ்க்கை. காட்டு விலங்குகள் மத்தியில் வாசம் மற்றும் கடல், ஆறு, பயணங்கள். மலைகளில் மீதுஜெபிப்பது,பிரசங்கிப்பது, முக்கிய முடிவுகளை எடுப்பது. உவமைகளில் விதைக்கிறவன் நல்ல நிலம், வழிபாதை,கற்பாறை, முள்ளுள்ள இடங்கள் என நில பாகுபாட்டை எடுத்து கூறுகிறார். ஆகாயத்து பறவைகள் என காகங்க ளையும், புறாக்ககளையும், சிட்டு குருவிகளையும், கடல் மீன்களையும், ஒற்தலாம், வெந்தியம், மருக்கொழுந்து பூண்டுபோன்ற தாவர வகைகள். அத்திமரஙகள், திராட்சை தோட்டம், நாய்கள், பன்றிகள், ஓநாய்கள், ஒட்டகம், பாம்பு மற்றும் ஆடுகள் என்றும், சூரியன், நட்சத்திரம்,மேகம்,காற்றையும் குறிப்பிடுகிறார்.இவ்வாறு இயேசு இயற்கையோடு இனைந்த வாழ்வை குறிக்கிறது. "மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனை த்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ் வனவும் அவருக்கே சொந்தம்.திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 24:1) எனவே இவ்பூவுலகம் கடவுளுக்கு சொந்தமானது. இதனால் உயிர்த்த இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு "விண்ணு லகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்குஅருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்;தந்தை,மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கு ம்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கி றேன்" என்று கூறினார்.
(மத்தேயு நற்செய்தி 28:18-20)
இவ்வுலகத்தின் முடுவு வரை ஆண்டவர் நம்மோடு இருப்பார். நாம் அவரோடு என்றும் இருப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசிர்வதித்து காப்பாராக! ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam.
பல்லுயிர் பாதுகாப்பு சட்டம் 1999
Coat of Arms of Australia.svg
சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
Comments
Post a Comment