பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடைமை: STEWARDSHIP: RESPONSIBLE RESOURCE MANAGEMENT. வி.ப.18:13-27 திரு.பாட 147:1-11; 2 கொரி 8:1-15; மத்தேயு 25:14-30.
முன்னுரை:
கிறித்துவின் அன்பு விசுவா சிகளே! "பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடை மை" என்ற தலைப்பு பொருளாதாரத்தை(Economics).அடிப்படையாக கொண் டது. 'Human wants are unlimited. But the Resources are limited" (Abraham Maslow) மனிதனின் தேவைகள் அளவற்றது.இயற்கையாக மீண்டும் மீண்டும் எழக்கூடி யது. ஆனால் முழுமையாக பூர்த்தி அடைவதில்லை. ஆனால் இயற்கை வளங்க ளோ வரையறுக்கப்பட்டது. எனவே உலக பொருளாதார
உற்பத்தியாளர்கள் மிக குறைவான இயற்கை வளங்களை பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறையே "பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடைமை" என்கிறோம்.
What is meant by Responsible Resource Management?
Responsible Resource Manage ment (RRM) means that in order to conserve natural resources, we need to use them in a morally responsible way, directed by good science, and to work for positive action to improve the soil, water and biodiversity..
இயற்கை வளங்களை பொறுப்புடனும், நீதியுடனும்
சரியான அறிவியல் முறை ப்படி நீர், நிலம் , பல்லுயிரை மேம்படுத்தும் செயலே நாம்
பொறுப்புடன் வள ஆதார மேலாண்மை செய்யும் பொறுப்புடைமை" என்கி றோம். மேளாண்மை என்பது
"சகல வளங்களையும் பய னுறுதி மிக்க வண்ணம் முறைப்படுத்தி வழிநடத்திச் செல்லும் தன்மையே மேலாண்மை" என்கிறோம்.
Stewardship என்ற வார்த்தைக்கு " பணியாளர்" , பொறுப்பாளர், மேற்பாற் வையாளர்' என பொருள். வேதத்தில் ஆதியா: 39: 4-6 ல் " போத்திபார் தயை யோசேப்புக்குக் கிடைத்தது. அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும் வீட்டின் மேலாளராகவும் நியமித்து, தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில்ஒப்படைத்தான்
(தொடக்கநூல் 39:4)
யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தை யும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை.". (ஆதி 39:6தொட.நூல் 39:6) யோசேப் " மேற்பாற்வை யாளர் (Stewadship) என்பதில் மிகபொறுத்தமானவர். இதில் நேர்மை, உண்மை அடங்கியுள்ளது. Joseph was the First Good Stewardship in the Holy Bible.பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்பர். " If you want to test a person, give him power" (Abraham Lincoln, the former President of America). 'ஒருவன் எப்படிபட்டவன் என்பதை அறிந்துக்கொள்ள; அவனுக்கு அதிகாரத்தை கொடுங்கள்" என்று கூறிய வர். கருப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட ஆபிரகாம்லிங்கன்.
யோசேப்பு தன் அதிகார8த் தை நேர்மையாக பயன் படுத்தியதால்; அரசருக்கு அடுத்தவராகஉயர்த்தப்பட்டான். " கொஞ்சத்திலே உண்மையாய் இருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாகவைப்பேன்" (மத்தேயு 25:23.)
இது நூற்றுக்கு நூறு யோசேப்பின் வாழ்வில் பொறுத்தமாய் இருந்தது.
ஒரு நல்ல கிறித்தவர் தன் பணியில் யோசேப்பை போல் இருக்க வேண்டும்.
தங்கள் பணியில் நேர்மை, உண்மை, உழைப்பு இருந்தால் தாங்கள் ஆண்ட வரை மற்றவர்களுக்கு முன்பாக மகிமைப் படுத்து கிறிர்கள். இது 100 பிரசங்க
த்திற்கு சமம்.
1. மோசசின் மனிதவள மேளாண்மை; Human Resource Management of Moses. வி.ப. Exodus 18:13-27.
நம் வேதத்தில் உள்ள மோசஸ் அவர்கள் உலகத் தின் முதல் மனிதவள மேம்பாட்டின் செயல்பாட்டர். இவரின் ஆற்றல்மிக்கதலை மையில் தான் விடுதலை பயணம் வெற்றிபெற்றது. நமது ஆண்டவர் " ஏதேன் தோட்டத்தைப் பண்படுத் தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டு வந்துகுடியிருக்கச்செய்தார்.
(தொட. நூல் 2:15 Genesis)
மனித ஆற்றலையும், பொறு ப்பையும் முதன் முதலில் கொடுத்தவர் நம் ஆண்டவர்.
மேளான்மையின் தந்தை என்று அழைக்கப்படும் பீட்டர் டக்கர் (Peter Drucker - the Father of Management) இவரின் கோட்பாடு உலகி லுள்ள பல நிறுவனங் களிலும் நடைமுறைப்படு த்தப்படுகின்றது. மனித வள மேம்பாடு என்பது மனித ஆற்றளை மிக சிறப்பாக செயல்படுத்துவது. ஆனால் சுமார் 3500 ஆண்டுகளுக்கு (கி.மு 1391-1271)முன்பாகவே மோசஸ் அவர்கள் மனித வள மேம்பாட்டை தன் மாமனான இத்திரோவின்
ஆலோசனைப்படி "மக்கள் அனைவரிலும்திறமையும்,Skilled இறையச்சமும்,Godfearing நாணயமும் Honest கொண்டு கையூட்டை (Bribery) வெறுக்கும் பண்பாளரைக் கண்டு பிடியும். அவர்களை ஆயிர மவர், நூற்றுவர், ஐம்பதி ன்மர். பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர்.Exodus(விடு.ப18:21) சுமார் 6,00,000 இஸ்ரவே லரை நீதி,நியாயம் விசாரி க்க தனி மணிதனாக முடியாது என்று பல குழுக் களையும்தலைவர்களையும்
ஏற்படுத்தி தனது மனிதவள மேளாண்மை ஆற்றலை முதன்முதலில் ஏற்படுத் தினார். இங்கு லஞ்சம் வாங்காத நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அன்பு நண்பர்களே! தாங்களும் இத்தகைய நற்குணங்களைப் பெற்ற திருச்சபை, சமுக தலைவர் களாக செயலாற்ற உங்க ளை அழைக்கிறேன்.
2.மக்கதோனிய திருச்சபையின் பொறுப்புடைமை:Stewardship of Masido nians: 2.கொரி 8:1-15.
அன்பின் தேவ பிள்ளை களே! பவுல் அடிகளார் தோர்ஸ் (Troas )என்ற இடத்தில் தங்கி இருக்கின்ற
போது ஒரு நாள் இரவு மாசிடோனியமனிதன் ஒருவன் பவுல் அவர்களை மாசிடோனியா மக்களுக்கு வந்து உதவி செய்யும்படி வருந்தி கேட்டுக் கொள்கிற காட்சியை (Vision) காண்கிறார்.( திருத் தூதர். (அப்போ). 16:9) இதன் மூலம்
பவுல் அடிகளார் உடனே மாசிடோனியா மக்களிடம்
சென்று இயேசுகிறித்துவை
அம்மக்களுக்கு அறிவிக்கி
ன்றார். அம்மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இதுவரை
நற்செய்தி ஆசியாவரை
மட்டுமே சென்றடைந்தது.
ஆனால் மாசிடோனியாவிற்
கு இறை செய்தி வழங்கி யதின் மூலம் முதன்முதலாக
இறைசெய்தி ஐரோப்பாவி ற்கும், மேற்குலகநாட்டிற்கும்
பரவியது.கிரேக்க நாட்டின்
வடக்கு பகுதிதான் மாசி டோனியா ஐரோப்பாவின் நுழைவு வாயில் (The Gate way to Europe)
பவுல் அடிகளார் கொரிந்து,
மற்றும் பல திருச்சபைக ளுக்கு எருசலேம் விசுவாசி களுக்கு பண உதவி செய்ய கடிதங்கள் எழுதினார். எருச லேமில் உள்ள விசுவாசி களை யூதர்கள் மிகவும் ஒடுக்கினர். அவர்கள் பண கஸ்டத்துடன் மிகவும் பாதிக் கப்பட்டனர். இந்தசூழ் நிலையில் மாசிடோனிய மக்கள் அவர்களுக்கு ஏற் பட்ட இன்னல்களால் கடு மையாகச் சோதிக்கப்பட்ட போதும் அவர்கள் எப் போதும் மகிழ்ச்சி நிறைந் தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் வறுமையில்மூழ்கி இருந்தாலும் வள்ளன்மை யோடு வாரி வழங்கினார் கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்க ளாகவே கொடுத்தார்கள். ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி. என
(2 கொரிந்தியர் 8:2,3) பவுல்
அடிகளார் கூறுகிறார். கொடுப்பது கடவுளின் கிருபை. It's an act of Grace.
என கூறுகிறார்.இந்த எட்டாம் அதிகாரத்தில் மட்டு ம் ஏழு முறை " கிருபை" என்ற வார்த்தையை பயன்
படுத்துகிறார்.மாசிடோனிய
மக்களின் கொடுக்கும் செய லை கிருபையின் செயல் என்கிறார்.சகோதரசகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தெரியப்படு த்த விரும்புகிறோம்.
(2 கொரிந்தியர் 8:1) இதில் மாசிடோனிய மக்களின் பொறுப்புடைமையை காட் டுகிறது.இத்தகையபொறுப்புடைமையை கடவுள் தன் விசுவாசிகளுக் கொடுக் கிறார். நம் திருச்சபையும், அதன் விசுவாசிகளுக் மாசி டோனிய, கொரிந்து திருச்சபைகள் போல்
இருக்க வேண்டும். மாசிடோனிய மக்கள் தங் கள் திறமைக்கும், according to their ability, மனரம்மிய மாய் freely willing to give, கொடுத்தார்கள் என அவரே
சாட்சி பகிர்கிறார். முதலில்
அவர்கள் தங்களையே
கடவுளுக்கு கொடுத்தனர்.
பிறகு எங்களுக்கு உதவி யாய் கொடுத்தனர். என மாசிடோனிய திருச்சபை
மக்களின் கொடுக்கும் தன்மையே கொரிந்தியர்க ளுக்கு முன்மாதிரியாக
கூறுகிறார். கொடுக்கும்
தன்மை தாங்கள் கடவுள் மீது வைத்துள்ள அன்பை
வெளிப்படுத்துகிறது. திருச்
சபைக்கும், ஆண்டவரின்
அடியார்களுக்கு கொடுப்பது
நம்முடைய பொறுப்புடமை
யாகும். பவுல் அடிகளார் கொரிந்து சபைக்கும், மாசி
டோனிய சபை இரண்டிற்கு
ம் இடையே யார் அதிகம்
கொடுக்கிறார்கள் என போட்டிவைக்கிறார்.கொரிந்தியர்கள் பண வசதி படை த்தவர்கள்.மாசிடோனியர் தன்ஏழ்மைநிலையிலும்
கடவுளுக்கு கொடுத்தார்கள்.
Giving is divine, receiving is
Grace. மணிதர்கள் ஆண்டவ ரிடமிருந்து அதிகம் பெறு கிறார்கள். ஆனால் நாம் கொடுப்பதோ சிறியது. ஆண்டவரின் பிள்ளைக ளின் கடமை மூன்று:
1. Give - கொடு
2. Send -அனுப்பு
3. Go - செல். இதுதான் நம்
பொறுப்புடைமை.
3. உண்மையும் உத்தமு மாய் இருப்பதே பொறுப் புடைமை: மத்தே 25:14-30
Good and Faithfulness is Stewardship.
கிறித்தவர்களின் சிறப்பு தன்மையே உண்மையும் உத்தமுமாய் இருப்பது. தன்
வாழ்வில், பணி செய்யும்
இடங்களில் உண்மையும்
உத்தமமாய் இருப்பதே.
இதுவே பொறுப்புடைமை. ஆண்டவர் மூன்றுவித மனி
தர்களைகுறிப்பிடுகிறார். இந்த உவமை தன்சீடரகளு க்கு கூறுகிறார்;"விண்ணரசு யாருக்காக என்பதை விளக் குகிறார். நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைக ளை ஒப்படைத்தார். அவர் கள் திறமைக்கு ஏற்ப; ஒருவ ருக்கு ஐந்து தாலந்தும்,(an ancient unit of weight and money) வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற் கொண்டார். ஐந்து தாலந்து வாங்கியவன் உடனே போய், அவற்றை வைத்து வியாபாரம் செய்து, இன்னும் ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அதேபோல், இரண்டு தாலந்தை வாங் கியவனும் இன்னும்இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரேவொரு தாலந்தை வாங்கியவனோ புறப்பட்டுப் போய், தன் எஜமான் கொடு த்த பணத்தை குழிதோண் டிப் புதைத்து வைத்தான்” என்று இயேசு சொல்கிறார்.
ஒவ்வொருவருக்கும் கடவுள்
அறிவு, ஆற்றல், பொருட்கள், மற்றும் தகுந்த வாய்ப்பும்
கொடுக்கிறார். இவைகளை
கடவுள் நாமம் மகிமைப்பட
பொறுப்புடைமையுடன் நாம் செயல்படவேண்டும்.இவர்களே விண்ணரசின் பங்காள ர்கள். உண்மையும்உத்தமும்
உள்ளவர்களுக்கு ஆண்ட
வர்உயர்வைதருகிறார்.இவர்களே ஆண்டவரின் மகிழ்ச் சியில் (Joy) பங்கு பெறுவர்.
நம் அறிவு, கல்வி, ஆற்றல்
அனைத்தையும் ஆண்டவரு க்கே பயன்படுத்தவேண்டும்.
நமக்கு கொடுக்கப்படும்
திறமைகளை உண்மையாய்
செயல்படுத்தாதவர் ஒரு
தாலந்தை வாங்கியவருக்கு
சமமானவர். தண்டிக்கபடு பவர். எனவே, கிறிஸ்து விற்கு பிரியமானவர்களே!
நாம் நம் வளங்களை பொறுப்புடன் காப்போம்.
சமூகத்தில் உண்மையும்
உத்தமமாய் நடப்போம்.
இறையரசு இவ்வுலகில் வர
செயல்படுவோம்.
Prof. Dr. David Arul Paramanandam.
Sermon Writer.
www. david arul blogs.com
www.david arul sermon centre.
Rev.Prabakar ராஜசேகர் According to Our today’s Gospel portion My insights are following. The Parable of Talents- Here talents should not be understood in terms of our Skills It should be understood in terms of WEIGHT This is the parable of Kingdom Values-like Justice Love Sharing and Service etc….வியபாரம் செய்து கொள்ளை லாபம் அடிப்பதற்காக சொல்லப்பட்ட்உவமை அல்ல. 1:Ability of the servants 2:Accountability 3:Adoptabilty/ Appreciation இறை அரசின் தகவின் கதவுகளை தட்ட/உழைக்க அது நீண்டு கொண்டே செல்லும்
ReplyDelete