மக்களின் பற்றுறுதியை கொண்டாடுவது வழிபாடு WORSHIP: CELEBRATION OF PEOPLE'S FAITH. ஏசாயா 6:1-8, திருப்பாடல் 148; திருவெளிப்பாடு 4:1-11. யோவான் 4:16-26.

முன்னுரை:
கிறித்துவிற்கு பிரியமான அன்பு நண்பர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாம த்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துவர்களின் வழி பாட்டின் ஆனி வேரே நமது " பற்றுறுதி" ஆகும். வேதம் திட்டவட்டமாக கூறுவது என்னவென்றால்; எபிரெயர் 11:1ல் "விசுவாசமானது (பற்றுறுதி) நம்பப்படுகிற வைகளின் உறுதியும், காணப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது". Expressing our total confidence in God until our desires are fully met.உறுதியானநம்பிக்கையின் அடிப்படையிலே நம் வழிபாடு அமைந்துள்ளது. விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக் கிறார் என்றும், அவர் தம் மைத் தேடுகிற வர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்று ம் விசுவாசிக்கவேண்டும். (எபி 11:6). இதுவே கிறிஸ்தவர்களின்அடிப்படைதகுதியாகும்.இந்த தகுதியே நம் பற்றுறுதி விழாவாக கொண்டாடப்பட வேண்டும். ""பற்றுறுதி இன்றி கிறிஸ் தவம்இல்லை; கிறித்து இன்றி கிறிஸ்தவர்கள் இல்லை" No Christianity without faith and Without Christ no Christianity ". என்பதை மனதில்கொள்ளவேண்டும்.நம்முடைய பற்றுறுதி எப்படி இருக்க வேண்டும் என்றால் 
 " ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்" என் வேலைக் காரன் பிழைப்பான்" என்ற நூற்றுக்கு அதிபதியின் வார்த்தைஇயேசுகிறிஸ்துவையே வியக்கவைத்தது. 
(மத்தேயு 8:5-10). நூற்றுக்கு அதிபதியின் பற்றுறுதி இஸ்ரவேலருக்குகூட இல் லை என்கிறார். நூற்றுக்கு அதிபதியின்பற்றுறுதிபோல் நமக்கு ஆண்டவர் மீது பற்றுறுதி இருந்தால் நாம் மகிழ்வுடன் நம் பற்றுறுதி யை கொண்டாடுவோம். சாத்ராக், மேசாக், ஆபேத் நெகோ அவர்கள் நேபுகாத் நேசரின் பொற்சிலையே வணங்காமல்( தானியேல் (3:17,18) கடவுள் மீது ஆழ்ந்த பற்றுறுதி கொண்டவர்களா ய்நேபுகாத்நேசரின்ஆனையை எதிர்த்து எங்களுக்கு 
 எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவு ள், எரிகின்ற தீச்சூளையினி ன்று எங்களை மீட்க வல்ல வர். (தானியல் 3:17)அவரே எங்களை உம் கையினின்று ம் விடுவிப்பார். அப்படியே அவருக்குமனமில்லாமல்போனாலும்,அரசரே! நாங்க ள்உம்முடையதெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற் சிலையை யும் நாங்கள் தொழப்போவ தில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்" என்றார்கள். (தானி 3:18) 
இத்தகைய பற்றுறுதியை  கொண்டாடப்பட வேண்டும்.
1. ஆண்டவரை கண்டஒரே தீர்க்கன்: ஏசாயா: 6:1-8. The only Prophet Isaiah sees God seated upon his throne:
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ( உசியா ராஜா ஆமாசின் குமாரன்  (2  நாளாகமம்: 26) எருசலேமை தலைநகராக கொண்ட யூதேயா  நாட்டை 52 ஆண்டு கள் கி.மு.791-739. ஆட்ச்சி செய்தவர். தன் 16ம் வயதி லேயே அரியணை ஏறினார். இவன் ஆண்டவருக்கு பிரிய மாய் நடந்துக் கொண்டதால் இவன் காலத்தில் யூதேயா நாடு எல்லாவற்றிலும் வளர்ச்சி பெற்றது. ஆனால் அவனுடைய பெருமையி னால் "Pride goes before a fall".
ஆசாரியர்கள் மட்டுமே தேவாலயத்தில் செய்யக் கூடிய தூபம் காட்டுதலை இவனே செய்ததினால் ஆண்டவர் அவனை அழித் துப் போட்டார். (2.நாளா.26: 15-16)  ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காச னத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ் திரத்தொங்கலால் தேவால யம் நிறைந்திருந்தது. இதை தூய யோவானும் உறுதிப் படுத்துகிறார்.  யோவான் 12:41ல் "எசாயா மெசியா வின் மாட்சியைக் கண்டதால்தான் அவரைப் பற்றி இவ்வாறு கூறினார்". 
ஆக ஏசாயா ஆண்டவரை நேரிடையாக காண்பதை பார்க்கிறோம். கடவுள் பரிசுத்தர். எனவே ஏசாயா வின் தூய்மையற்ற உதடு களை சேராபீன்கள் சுத்தப் படுவத்தை பார்க்கிறோம். நம்மில் இருக்கும் பெருமை, மேட்டிமை என்ற உசியா ம‌ரிக்கவேண்டும். அப்பொழு துதான் உன்னதமானவரை நாம் காணமுடியும்‌. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபைஅளிக்கின்றார்.(யாக்கோபு 4:6.) ஆனால் யோவான் அவர்கள்; "கடவுளை எவரும் என்றுமே கண்டதில்லை. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண் டுள்ளோமென்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப் பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். (1 யோவா 4:12) ஆண்டவரின் மகத் தான நாமம் "இம்மானுவேல்"
அதாவது கடவுள் நம்மோடு இருக்கிறார். நாம் தூய வராய் இருந்தால் நம்மோடு இருக்கும் கடவுளை நாம் காண முடியும். 
2. யோவானின் விண்ணக திருவெளிப்பாடு:  John's Revelation on the Throne in Heaven: திருவெளி 4:1-11.
கடவுள் ஏசாயா தீர்க்கருக்கு வெளிப்படுத்தியவிதமாகவே யோவானும்,விண்ணகம் பற்றிய ஒரு காட்சியைக் காண்கின்றார். அந்தக் காட்சியில் அரியணை ஒன்று இருக்கின்றது. அதில் ஒருவர் வீற்றிருக்கின்றார்; அரியணையைச் சுற்றிப் போடப்பட்ட இருபத்து நான் கு அரியணைகளில் இருபத் து நான்கு மூப்பர்கள் இருக் கின்றார்கள் அதன்பின் நான்கு உயிர்கள் காணப் படுகின்றன. அவை நான்கு உயிர்களும், “தூயவர், தூயவர், தூயார், எல்லாம் வல்ல இறைவனாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக் கின்றவரும் இவரே” என்று அல்லும் பகலும் பாடுகின் றன.யோவான்காணக்கூடியஇக்காட்சி,விண்ணகம் இப்படியெல்லாம் இருக்குமா என்று நம்முடைய கண்க ளை வியப்பில் விரியவைப் பதாக இருக்கின்றது.மேலும் நான்கு உயிர்களும் பாடக் கூடிய பாடல், கடவுள் ஒருவ ரே தூயவர்; அவர் என்றும் இருப்பவர் என்ற உண்மை யைப் பறைசாற்றுவதாக இருக்கின்றது. ஏசாயா தீர்க்கரின் காட்ச்சியில் சேரா பீன்கள் கடவுள் தூயவர் தூயவர் என ‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌முழங்கினர். இங்கு நான்கு உயிர்கள் கட வுள்தூயவர்எனமுழங்கினர்.
இவற்றில் நாம் தெரிந்துக் கொள்வது மற்றும் புரிந்துக் கொள்வது மிக முக்கிய மானது; இயேசு இருக்கும் விண்ணகத்தில் நாமும் இருக்க, அவருடைய வழி யில் நடந்து, அவருடைய உண்மையான தொண்டர் களாய், தூயவர்களாய் இருந்தால் மட்டுமே நாம் அவருடன் இருக்க முடியும்.
3. இயேசுவே வாழ்வு தரும் தண்ணீர்: யோவான் 4: 16:26 Jesus is the Living Water.
‌‌‍ ஆண்டவர் இயேசு ஒரு முறை சமாரியாவில் உள்ள சீகார் என்ற ஊருக்கு சென் றிருந்தார். யாக்கோபு கீகேமிலே எமோரியரின் கையிலிருந்து வாங்கின நிலத்திற்கு சீகார் என்று பெயர்.  இது கெர்சீம் மலையடிவாரத்திலிருக்கிற அந்த இடத்திலே தான் யோசேப்பின் எலும்புகளை நாப்ளஸ் என்ற இடத்தில் அடக்கம் பண்ணினார்கள். ( யோசுவா 24:32 )இவ்விடத் தில் யாக்கோபு வெட்டிய மிகப்பெரிய கிணறு உண்டு. இதற்கு சீகார் கிணறு என்று பெயர்.இயேசுஇக்கிணற்றின் மேட்டிலிருந்து கொண்டு தான் சமாரியா பெண்ணி டம் பேசினார். சமாரியர்கள் யூதர்களுக்கு பிடிக்காத வர்கள். அவர்களை தீண்டத காதவர்களாய் நடத்தினர்.(Untouchables). . இஸ்ரேல் மக்களுக்கும் இறைவனு க்கும் இடையில் யோசுவா வின் காலத்தில் ஏற்பட்ட உடன்படிக்கையும் இவ்விடத் தில்தான் செய்யப்பட்டது (ஆதி. 12:6 மற்றும் யோசுவா 8:30 –35). இது பழைய ஏற் பாட்டில் வரலாற்று முக்கிய த்துவம் வாய்ந்த ஒரு இடமா‌ க சமாரியா இருந்தது.  இந்த ஊரின் வழியாக இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவை விட்டு கலிலே யாவை நோக்கிப் பயணமா னார்கள். ஆச்சரியப்படும் விதமாக இயேசு அவர்களை வழக்கமான பாதையில் கூட்டிச்செல்லாமல்சமாரியா வழியாக கூட்டிச் சென்றார். 
சமாரியர்கள் இந்த பக்கத் திலிருக்கிற கெரிசீம் மலையில்கடவுளைவணங்கினார்கள்.யூதர்கள்எருசலேம் மலையில் (சீயோன்) கடவுளை வணங்கினார்கள்.( யோவான்4:19 ,20). 
சமாரியர்களின் புனித நூல் என்பது மோசே எழுதிய சட்டதிட்டங்கள் அடங்கிய ‘தோரா’ என்றழைக்கப்படும்
யூதர்கள் எருசலேமில் மோரியா மலைமீது அமைந் துள்ள எருசலேம் தேவாலய த்தில்கடவுளைவழிபடுவதை வழக்கமாக்கிக் கொண் டிருந்தார்கள்.சமாரியர்களோ கரிசிம் மலையின் மீது கட்டப்பட்டிருந்த ஆலயத்தில் தான் கடவுளை வழிபட்டு வந்தார்கள்.எருசலேம் தேவாலயத்தில் வழிபடு வதே சரியான முறை என்று யூதர்களும், கரிசிம்மலையே சரியான இடம் என்று சமாரி யர்களும் வாதிட்டு வந்தார் கள். இது தான் யூதர்களு க்கும் சமாரியர்க ளுக்குமி டையேஇருந்தமிகப் பெரிய கருத்துவேற்றுமைக்குக்காரணம். இயேசுகிறித்து உலக இரட்சகர். உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க் கிறதேவஆட்டுக்குட்டி.எனவே யூத பாரம்பரியங்களை தூக்கி எரிந்து சமாரியா வழியை தேர்ந்தெடுக்கிறார்‌.
இயேசுகளைப்படைந்தவராய்அங்கேயிருந்தகிணற்றருகே உட்கார்ந்திருந்தார். பகல் பன்னிரண்டு மணி அப்பொழுது. சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் மொண்டுக்கொள்ளவந்தாள். இயேசு அவளிடம் தாகத்து க்கு தண்ணீர் தா என்று கேட்டார். இயேசுவை கண்ட அந்தப் பெண் இயேசு யூதர் என்று அறிந்து கொண்டார். அதனால், நீர் யூதர், நான் சமாரியப் பெண். தாகத்துக் குத் தா என்று என்னிடம் கேட்பது எப்படி? என்றாள். யூதர்களோடு சமாரியர்கள் உறவாடுவதில்லை.
இயேசு அவரைப் பார்த்து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் "குடிக்கத் தண்ணீர் கொடும்" எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்" என்றார். 
(யோவான் நற்செய்தி 4:10)
அவர் இயேசுவிடம், "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக் கு எங்கிருந்து கிடைக்கும் எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார்.இந்தக் கேள்வி ஆண்டவரை வியக் க செய்தது.  உடனே இயேசு அவரைப் பார்த்து, "இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ் வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்று மே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும்தண்ணீர்அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்" என்றார். அப்பெண் அவரை நோக்கி, "ஐயா, அத்தண்ணீரை எனக் குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும்எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது" என்றார். அப்படியானால் "நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்" என்று கூறினார்.  அப்பெண் அவரைப் பார்த்து, "எனக்குக் கணவர்இல்லையே"என்றார். இயேசு அவரிடம், "எனக்குக் கணவர் இல்லை" என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந் தார்கள் என்றாலும் இப்போ து உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே" என்றார். அவள் ஐந்தாவது மறுமணம் செய்திருந்தாள். இது அவர்களின் வழக்கம்.
ஆண்டவரின் பார்வை யில் சமாரியபெண்
சமாரிய பெண்ணின் கடந்தகால குடும்ப வாழ்வை யும் நிகழ்கால வாழ்வையும் இயேசு சொன்னார். சமாரி யப் பெண் இயேசுவை தீர்க்கதரிசி என்று அறிந்து
கொண்டாள். கிறிஸ்து எனப் பட்ட மேசியா வருகிறார் என்று தெரியும் என்றாள். இயேசு அவளைப் பார்த்து உன்னோடு பேசும் நானே அவர் என்றார். அவர்தான் மேசியா, என்று நம்பினாள். உடனடியாக ஊருக்குள் ஒடிச் சென்றாள். சாட்சி பகர்ந்தாள். அவளுடைய வாழ்வில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட அநே கர் அவரிடம் நம்பிக்கை வைத்தார்கள். அவரே உலக இரட்சகர் கிறிஸ்து என்று அறிந்தார்கள். சாட்சி பகர்ந் தார்கள். சமாரியாவில் கிறிஸ்துவை அறியக் கார ணமாய் இருந்தவர் இந்தப் பெயர் சொல்லப்படாத பெண். இயேசுவுக்கும், சமாரியப் பெண்ணுக்கும் இடையே நடந்த உரையாடல் உயர்மட்டத் தன்மை கொண் டது. அதில் யூதர்களின் வரலாறு பற்றியும், ஜீவ தண்ணீர் பற்றியும், கடவுள் பற்றியும், உண்மையான வழிபாடு பற்றியும் மற்றும் மேசியா பற்றியும் இடம் பெற்றிருந்தது.இயேசுவுடன்சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமாரியப் பெண் வரலாற்று அறிவும், சமய அறிவும், சமூக அறிவும் உடையவராய் இயேசுவிடம் கேள்விகள் எழுப்பி உரையா டியது என்பது நம்மை வியப் பில் ஆழ்த்துகிறது. 
இயேசு சமாரியர்களை பல இடங்களில் மேன்மைப் படுத்துவதை பார்கிறோம்.
1.பத்துத்தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்’ என்னும் நிகழ்வில் (காண்க லூக் 17:11-19), குணம்பெற்ற பத்து பேரில், சமாரியர் மட்டு மே திரும்பி வந்து இயேசு வுக்கு நன்றி கூறுகின்றார். 
2. எனக்குப் பிறன் யார் என்ற கேள்விக்கு ஆசாரி யனையோ,லேவியனையோ
கூறாமல் சமாரியனைகுறிப் பிடுகிறார். (லூக் :10:29).
3.சாட்சிகளாகஇருக்க; பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலன டைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் எல்லைகளிலும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்." (அப்போஸ்தலர் 1: 8,9)
இந்த சமாரிய பெண்ணின் பற்றுறுதியை நாம் கொண் டாட வேண்டும். அவள் தன் ஊர் மக்களுக்கு ஆண்டவ ரைஅறிவித்தாள்.மேசியாவை கண்டேன் என்றாள். ஊர் மக்களும் ஆண்டவரை நேரிடையாக கண்டு ஏற்றுக் கொண்டனர்.நாம் ஆண்டவர் மீது பற்றுறுதியாய் இருப் போமானால்; மற்றவரை கிறித்துவுக்குள் கொண்டு வருவதே நம் பற்றுறுதியின் வெற்றியாகும். ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam.
www. davidarulblogs.com
www.David Arul Sermon Centre.



‌Romans 10:17 📖
So then FAITH COMETH BY HEARING, AND HEARING BY THE WORD OF GOD .

        





  

   


Image result for Samaritan women



 

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.