YOUTH SUNDAY தற்கால உலகில் இளையோரின் ஆன்மீகம். SPIRITUALITY OF THE YOUTH IN THE CONTEMPORARY WORLD. தொடக்க நூல்: 41:37-43; திருபாபாட 111; பிலிப் 3:1-16; மத்தேயு : 19:16-22..

முன்னுரை:
கிறிஸ்துவின் அன்பு இறை மக்களே உங்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்து க்கள். இந்திய மக்கள்  தொகையில் 140 கோடி (2021 கணக்கெடுப்பு) யில் 65% இளைஞ்ர்களாவர்.அதாவது
18 -35 வயது உள்ளோர் 600 மில்லியன் (60 கோடி) இளைஞ்ர்கள் உள்ளனர். இந்தியாவின் விவே கானந்தரின்பிறந்தநாளை   ஒவ்வொறு ஆண்டும் தேசி ய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அவர் "100 இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை மாற்றுகிறேன் என்றார், " இளைஞர்கள் இல்லாமல் நாட்டில் வளர்ச்சி, பாதுகாப்பு இருக்காது. திருச்சபைகளின் எதிர் காலம் ஆலய கட்டிடங்களில் இல்லை;பற்றுறுதி கொண்ட இளைஞ்சர்கள் கரங்களில் தான் உள்ளது. எனவே தான் நம் திருச்சபைகள் குழந்தை கள் ஞாயிறு, வாலிபர் ஞாயி று, பெண்கள் ஞாயிறு என வகைப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.
வேதத்தில் யோசப்பை 17 வயதில் தன்சகோதரர்களா ள் 20 வெள்ளிக்காசிற்காக விற்றுப்போடப்பட்டவர், பின் நாளில்எகிப்த்தில்அரசனுக்கு அடுத்த இடத்தில் நியமிக் கப்பட்டார். ( தொட.நூல் 37) மோசஸ்அவர்கள்கானானை உளவு பார்க்க அனுப்பிய 12 பேரும் 30-40வயதிற்குட்பட்ட
வர்கள்(யோசுவா14:7),
அவர்கள்சென்றார்கள்,வென்றார்கள்.ரூத் தன் 20 வயதில் விதவையானாலும் தன் மாமியாரை விட்டுப் போகாமல் இருந்ததால் மறுவாழ்வு பெற்றார். எஸ்தர் தன் மக்களை காக் கின்றபொறுப்பு14வயதிலேயே வந்தது. தாவிது தன் இளமைப் பருவத்தில் தான் சிங்கத் தையும், கோளியாத் தையும் கொன்று போட்டார். தன்30ம்வயதில்அரசரானர்.இன்னும்பலஉதாரணங்கள்உண்டு.
ஆண்டவராகிய இயேசு கிறித்துவின் தாயான மரி யாள் டீன்ஏஜ் இளம்பெண்.
இயேசுவின் ஊழிய தொட க்கமே 30 வயது இளைஞர். எனவே இளைஞர்கள் நம் திருச்சபையின் தூண்கள்.
அவர்களை ஆற்றல்மிக்க திருச்சபை தலைவர்களாக உருவாக்குவது நமது கடமை. எனவே, என் அன்பு‌ வாலிப பிள்ளைகளே!  வேதம் நமக்கு எச்சரிப்பது; "இளையோரே! இளமைப் பருவம்மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள் களில் உள்ளக்களிப்புடனி ருங்கள். மனம் விரும்புவ தைச்செய்யுங்கள்;கண்களின்நாட்டத்தைநிறைவேற்றுங்கள்.ஆனால்,நீங்கள்செய்கிற ஒவ்வொரு செயலுக்கு ம் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். (பிரசங்கி.
சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 11:9)

1. குழியிலிருந்து கோபுரத் தில் : Pit to Pinnacle.
தொ. நூல்: 41:37-43; (Genesis)
யோசப் தன் சொந்த சகோத ர்களாள் குழியில் போடப் பட்டவர், போத்திப்பாலின் இச்சையில் விழாமல்  தன் வாலிபத்தை காத்துக் கொண்டார். அதனால் கர்த் தர் அவன் சிறைவாழ்வை சிங்காரவாழ்வாக மாற்றி னார். பார்வோனின் கனவை விளக்கியதால் அது பார்வோனுக்கும் அவன் அலுவலர் அனைவருக்கும் நலமெனத் தோன்றியது. பார்வோன் தன் அலுவலர் களை நோக்கி, "இறையாவி பெற்றுள்ள இவரைப் போல் வேறெவரையும் நாம் காண முடியுமோ?" என்றான். பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, "இவற்றையெல் லாம் கடவுள் உம் ஒருவரு க்கே அறிவித்துள்ளார். உம்மை விட மதிநுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர் எனவே, நீரே என் அரண்மனையின்பொறுப்பை ஏற்பீர்.உம்வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணை யில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய்இருப்பேன்" என்றான். வாலிப வயதில் உத்தமமாய் நடந்தாள் ஆண் டவர் நம்மை உயர்வாய் வைப்‌பார் என்பதை வாலிபனான யோசப்பின் வாழ்வு நமக்கு வழிகாட்டி. வாலிபர்கள் பயத்தோடும், பக்தியோடும் கடவுளை வணங்கவேண்டும். "ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் நல்லறி வுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள் ளது. "திருப்ப(சங்கீதங்கள்) 111:10
2.இயேசுவைப் பற்றிய அறிவே ஒப்பற்றசெல்வம்: Knowing Jesus Christ is the surpassing worth:பிலிப் 3:1-16.
கிறித்துவின்வீராதிவீரர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் அவர்கள் பிலிப் பியர் நிருபத்தை சிறையிலி
ருந்து எழுதினார்.( கி.பி 60-  62) இதை எழுதுவதற்கு காரணமே தன்னுடைய ஊழியத்திற்கு உதவி செய்த பிலிப்பியர்களுக்கு நன்றி செலுத்தவும்,அவர்கள் மன உறுதியோடும், கிறிஸ்தவ நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்பதற்காக இதை எழுதினார். கிறித்து வுடன் இருப்பவரே உண்மை யான விருத்தசேதனம் அடைந்தவர்கள் என்கிறார். கர்த்தரிடத்தில் எவ்வாறு வளரவும், நம் உறவை அதிகரிக்கவும், போதிக்கி றார். தன் கல்வி, குல பெரு மை அனைத்தும் கிறிஸ்து வின் பொருட்டு இழப்பு என கருதினார். நாமும் ஆண்ட வருக்காக நம் கல்வி, அறிவு, ஆற்றல் அனைத்தையும் படைப்போம். உலகெங்கும் இறை செய்தியை கொண்டு செல்வோம். வாலிப வயது ஊழியத்திற்கான ஏற்ற வயது. பவுல் அடிகளார் கூறுவதுபோல் "உண்மையி ல், என்னைப் பொறுத்தமட் டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றி ய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற் றையும் இழப்பாகக் கருதுகி றேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பை யாகக் கருகிறேன்.(பிலி 3:8)
எனவே வாலிப சகோதரர் களே!  நாம் இவ்வுலகில் வாழ்வது ஒருமுறைதான் நம் வாழ்வுஆண்டவருக்காக 
இருக்கட்டும். பவுல் அடிகளா ரின் ஊழியத்திற்கு உறுது னையாய் இருந்தவர் வாலி பர் தீமொத்தேயு. 
இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக்கடைப்பிடிப்பதால் அன்றோ? திருப(சங்கீ) 119:9
வாலிபனே ! நற்செய்தி  அறிவிப்பு என்பது இறைவ னின் கருணையையும் இரக் கத்தையும் அறிவிப்பதாக இருக்கவேண்டும். சமயம் வாய்த்தாலும்வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப்பிரசங்கம்பண்ணு.எல்லாநீடியசாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு.        (2 தீமோத்தேயு 4:2) இந்த அறிவுறை நமக்கும் பொருந்தும். 
3.வாலிபனே! நித்திய வாழ்வா? நித்திய
அழிவா?
Youth!. Eternal Life or Eternal Perish? St.Matt: 19:16-22.
இயேசு  எருசலேம் செல்வ தற்காக கலிலேயாவை விட்டுஅகன்றுயோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்‌.
அப்பொழுது தெய்வபக்தியு
ள்ள வாலிபர் ஒருவர் இயேசு விடம் வந்து, "போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு
இயேசு அவரிடம், "நன்மை யைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவ ரே. நீர் வாழ்வடைய விரும்பி னால் பத்து கட்டளைகளைக் கடைப்பிடியும்" என்றார். அந்த வாலிபர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத் தையும் நான் என் இளமை யிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறி னார். அப்போது இயேசு அன்புடன் அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்றுஏழைகளுக்குக்கொடும்.அப்போதுவிண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின் பற்றும்" என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்ன தைக் கேட்டதும் அவர் முகம் வாடி வருத்தத்தோடு சென் று விட்டார். ஏனெனில் அவ ருக்கு ஏராளமான சொத்து இருந்தது. ஆண்டவரிடம் வந்து வருத்தத்துடன்சென்ற ஒரே நபர் இவராகத்தான் இருக்கும். ஆனாலும் அவரி டம் காணப்பட்டநல்ல செய ல்கள் என்னவென்றால்; ஓடி சென்று முழங்கால் படியிட்டு
கேட்கிறார். இவரிடம் பணிவு இருந்தது.இவர்அரசுஅதிகாரி (லூக் 18:18), செல்வந்தர் ஆனாலும் வேதங்களை கற்று அதன்படி நடந்தார். விண்ணரசை தேடினார். இயேசுவே மேசியா என நம் பினார். விண்ணரசுக்காண
ஆவல் இருந்தது. நான் நிலைவாழ்வை பெற என்ன நன்மை செய்யவேண்டும் என கேட்கிறார். ஆண்டவரு ம் அவனிடத்தில் அன்பு வைக்கிறார்.அந்தவாலிபனின் நித்திய வாழ்வின் வாஞ் சையை காண்கிறார். என வேதான் அவனைப்பார்த்து உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தி ல் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னை பின் பற்றும்" என்றார். அவர் விண்ணரசுக்காக தன் செல் வத்தை இழக்க விரும்பவில் லை. வருத்தத்துடன் சென்று விட்டார். ஏழைகள் மீது அன் பில்லாதவர் இறையரசில் 
பங்கில்லாதவர்.  "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்தேயு  5:3) 
கிறித்துவின் அன்பு வாலிப ர்களே! தாங்கள் சார்ந்திருக் கின்ற திருச்சபைக்கு தாங் கள் ஆற்றும் இறைபணி என்ன? சமுக பணி என்ன?
 "யாரை நான்அனுப்புவேன்? நமதுபணிக்காகயார்போவார்?"எனவினவும் நம் ஆணட வரின் குரலை என்றாவது கேட்டேயா? நற்செய்தி பணி
க்காக சென்றாயா? ஆலய பணிகளில் உன்னை ஈடுபடு
த்தினாயா? கொடு அல்லது
கொடுத்தனுப்பு என்பதில்
உன் பங்கு என்ன? நீயும் அந்த வாலிபனை போலவா?
அன்பு வாலிபர்களே! திருச்ச
பை என்பது சமய பணியாற் றுவதோடு நின்றுவிடாமல்
சமுக, பொருளாதார வளர்ச் சி பணிகளில் பங்கு பெற சேர்ந்து செயல்படு. ஆலயம் வராமல் இருப்போரை தேடி செல், சுகவீனமானவர்களை தேடி சென்று ஜெபி. ஆண்ட வரிடம் குணமாக்கும்
வரத்தை கேட்டு பெற்றுக் கொள்."நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையா க்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று இயேசு அந்த வாலிபனைப் பார்த்து கேட்டார். சுய பக்தி மட்டும் போதாது; ஏழைகளை யும்நினைத்துக்கொள், இறையரசில் பங்கு பெற செயல் படு. அறுப்போ மிகுதி. ஆட்களோ குறைவு. நீ அதை நிறைவாக்க செயல் படு. கடவுள் தாமே உங்கள னைவரையும்ஆசிர்வதித்து காப்பாராக!.
ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam.
www. davidarulblogs.com
www. David Arul Sermon Centre.


Paul the Apostle to the Gentiles.
Saint Paul, Rembrandt van Rijn (and Workshop?), c. 1657.jpg

Apostle to the Gentiles, Martyr

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.