இறையியல் மூலம் இறைமக்களை ஊக்கப்படுத்துதல். EQUIPPING THE PEOPLE OF GOD; THEOLOGICAL EDUCATION, SUNDAY. இ.சட் 6:1-17. திரு.பா.119: 89-104. எபேசியர்; 4:7-16 மத்தேயு 7:24-29.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை :
கிறித்துவின் அன்பர்களே!
இறையியல் என்றால் என்ன
என்பதை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். இறையியல் என்பது "இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு என்னும் பொருள்கொண்டது.". Theology is the systematic study of the Nature of God. இது
"Theo" என்ற கிரேக்க வார்
த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் "கடவுள்"
என்றும் "logy' என்றால் "the study of" கற்றல் என்ற பொருள்படும். Theology என்ற இறையியல் "the study of God".எனப்படும். கடவு ளை ப் பற்றிய கல்வியே இறை யியல். இதன் மூலம் இறை மக்களுக்கு தெளிவான மற்றும் அறிவு சார்ந்த முறையில் இறையியலை போதிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். கிறித்துவ
இறையியல் என்பது கடவுள் தம்மை இயேசுகிறித்துவின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்னும் உண்மையை மையப் பொருளாகக் கொண்டு, அதன்உட்பொரு ளை அறிவியல் (Scientific approach) முறைப்படி ஆய்ந் து விளக்குதல் கிறித்துவ இறையியல் எனப்படும். (Christian Theology).கிறித்துவ இறையியல் நான்கு வகைப்படும்.இதில் மிக முக்கியமானதுஒழுங்குபடுத்தப்பட்ட இறையியல்( Syste matic )or (Dogmatictheology) எனப்படும்.வேதத்தில் காணப்படும் எல்லா முக்கிய போதனைகளையும் சீராகத் தொகுத்து, முறைப்படுத்தித் தருவதே "முறைப்படுத்தப் பட்ட இறையியலாகும்". இறையியலை பல்கலை க்கழகங்களிளோ
(University) அல்லது இறையி
யல் கல்லூரிகளிலோ (Seminary) படிக்கின்ற கல்வி
யாகும். இக்கல்வியை
இறைமக்களுக்கு இறை பக்தியோடும், பற்றுதியுடன் வழங்குதல் வேண்டும். இதன் மூலம் இறையரசை இவ்வுலகில் ஏற்படுத்து
வதாகும்.
1. இறைவனிடத்தில் அன்புகூறுவதே இறை கல்வி.Theological education is to love God. இனண சட்டம்
6:1-17.
அன்பின் இறை மக்களே! இறையியல் என்பது இறைவனிடத்தில் அன்பு கூறுவதே. வேதத்தில் ஏசாயா தீர்க்கர் "நன்மை செய்யக் கற்றுக்கொள் ளுங்கள்" நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட் டோருக்கு உதவி செய்யு ங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண் ணுக்காக வழக்காடுங்கள். "
(எசாயா 1:17) என நாம் கற்கும் கல்வி பிறருக்கு நன்மை செய்வதாக இருக்க வேண்டும்.( Learn to do right).
ஆக இறையியல் கல்வியின்
நோக்கமே; இறைவனிடத்
தில் அன்பு கூறுவது. கற்றுக் கொடுப்பது கடவுளின் கட்டளை. அவர் கற்றுக் கொடுத்தது மூன்று காரியங்கள்.1 கட்டளைகள் (The Commandments) 2. நியமங்களும், ( The Statutes) முறைமைகளும்( The Ordinances) இவைகளே.
(இணைச் சட்டம் 6:1)
இஸ்ரவேலரே கேளுங்கள்.
"அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியே" கூட்டிவந்த ஆண்டவரை மறந்துவிடாதபடி கவனமாய் இரு". (இ. சட்டம் 6:12).
கடவுள் அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்சரவேல் மக்களை பாலும் தேனும் ஓடுகின்ற கானான் தேசத்திற்கு போகும் முன் அவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கல்வியை கட்டளை யாக கொடுக்கிறார். முற் பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு அவர் களுக்கு வாக்குத்தமாக கொடுக்கப்பட்ட கானான் தேசத்தில் போகும்முன்பாக கடவுளே அவர்களுக்கு ஆசிரியராக போதிக்கின் றார். இஸ்ரவேலருக்கு ஆண்டவர் வழங்கும் முதல் இறையியல் கல்வி இதுவே.
"இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண் டவர். உன் முழு இதயத் தோடும், உன் முழு உள்ள த்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவு ளாகிய ஆண்டவரிடம் அன்பு கூருவாயாக!
இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த் தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.
(இணைச் சட்டம் 6:4-6)
நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்
போதும், நீ படுக்கும்போதும், எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களு க்கிடையே அடையாளப் பட்டமாக அவை இருக்க ட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது. (இ. சட்டம் 6:7-9).
நம் ஆண்டவரிடம் முழுமை யாக அன்பு செலுத்துவதே முதன்மை பணி. எந்நிலை யிலும், எங்கு சென்றாலும், எப்பொழுதும் வீட்டிலும், வெளியிலும் உள்ளத்திலும் இருக்க வேண்டியது இதுவே என கட்டளையிடுகிறார். இங்கு இஸ்ரேவேலர் அனைவருக்கும் ஆண்டவர் "பிரதான ஆசாரியரான" போதகராக போதிக்கின் றார். (The High Priest). ஆண்டவரே 10 கட்டளை களை இரண்டு கற்பலகை களில் தன் விரல்களால் எழுதி மோசேக்கு கொடுத்து இஸ்ரேல் மக்களுக்கு போதிக்கும்படியாக கட்டளையிட்டார். பிள்ளை களின் பிள்ளைகளுக்கு போதிக்கும்படியாக ஆண்டவர் கட்டளையிட்டார் நம் பிள்ளைகளுக்கு போதிப்பவர் யார்? பெற்றோர்களே. ஆண்ட வரை பற்றி பெற்றோர்களே முதல் ஆசிரியராக இருந்து போதிக்க வேண்டும். இறையியல் கல்வி இல்லத்
திலிருந்தே துவங்கப்பட
வேண்டும். ஒரு தந்தை
ஆயிரம் ஆசிரியர்களுக்கு
சமம். "A father is equal to
Thousand teachers". எனவே
ஆண்டவரின் போதனை
களை பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுப்பது தந்தை
யின் தலையாய கடமை.
எனவேதான் திருவள்ளு வரும் "தந்தை மகற் காற் றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்."
என கூறுகிறார்.அதாவது
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
கிறித்துவ குடும்பங்களில்
தந்தையோ (அ) தாயோ தலைமை தாங்கிஒவ்வொரு நாளும் இரவில்குடும்பமாக
ஆண்டவரை ஆராதிக்க
வேண்டும். பிள்ளைகளுக்கு
சுருக்கமாக ஆண்டவரின்
உவமைகளை, வசனங் களை, பத்து கட்டளைகளை கற்றுத்தர வேண்டும். அதில்
கேள்விகள்கேட்கவேண்டும்.
இதன் மூலம் நாம் ஆண்டவர் கூறிய பிள்ளைகளின்
பிள்ளைகளுக்கு கற்றுத்
தரவேண்டும் என்றகட்டளை
நிறைவேற்றுகிறோம்.
2. இறைவனால் நியமிக் கப்பட்டவரே இறையிய லாலர்: Theologians are appointed by God. எபேசு 4: 7:16.
கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே!ஆண்டவர் மக்க ளை வழி நடத்துவதற்காக ஒவ்வொரு காலகட்டத்தில் தகுதியான மக்களை தானே தேர்ந்தெடுத்து அவர்களை வழிநடத்துகிறார். இஸ்ர வேலரைவழி நடத்துவதற் காக நியாயபதிகளையும், தீர்க்கர்களையும் இராஜாக் களையும் ஏற்படுத்தினார்.
இஸ்ரவேலர் யாருக்கும் செவி கொடுக்கவில்லை.
பவுல் அடிகளார் எபேசு சபைக்கு;"அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப் பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். என்கிறார்.ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குஏற்றவாறு தம் கிருபையே தருகிறார்.
திருச்சபை மக்களை வழி நடத்துவது அவை.(சபை).
அவரே சிலரைத் திருத் தூதராகவும்(Apostles), சிலரை இறை வாக்கினராக வும் ( Prophets), வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் (Evangelists) ஏற்படுத்தினார். திருத் தொண்டாற்ற(Pastors) இறை மக்களை ஆயத்தப் படுத்தவும் (Teachers) கிறிஸ் துவின் உடலாகிய திருச் சபையை கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத் தினார். (எபேசியர் 4:11,12).
இவர்கள் அனைவரும் இறையியலை மக்களிடம் எடுத்துச்செல்லும் இறை யியளாளர்கள்.இவர்களே கடவுளின் பிரதிநிதிகள். கடவுளால் தூய்மைப்படுத் தப்பட்டவர் (Consecrated). இவர்களின் முக்கிய பணி; இறை மகனாகிய இயேசு பற்றிய அறிவிலும், நம்பி க்கையிலும், ஒருமைப் பாட்டிலும் நிலைத்து நிற் கவும், கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் (Fullness and Perfectness of Christ).பெறுமளவுக்கு இவர்களின் இறைப் பணி இறை கல்வி வழியாக
தொடர்ந்து இறை மக்களை ஊக்கப்படுத்த நடைபெற வேண்டும். இன்று திருச்
சபையில் திருத்தூதுவர்
கள், இறைவாக்கினர்கள் இல்லை. போதகர்கள்,
அருட் பணியாளர்கள்,
நற்செய்தியாளர்கள், சபை
ஊழியர்கள் மட்டுமே
இறையியல் கல்வியை
இறைமக்களுக்கு அளிக்கும்
சேவையை செய்துக் கொண்டு வருகின்றனர் .
They are the Channels of theology distributors. கடவுளின் திருச்சபையை கட்டி எழுப்பி மந்தையை காப்பதே இவர்களின் முதன்மை பணி.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மலைப் பிரசங் கத்தில் உவமைகள் மூலம் முக்கியமான கருத்துக்களை விளக்கியுள்ளார். இந்த உவமையில் அறிவுள்ள வர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும், அறிவு இல்லாத வர்கள் கட்டிய வீட்டைப் பற்றியும் இயேசு விவரிக் கிறார்.இயேசுவின் போதனையை பின்பற்றுபவர்கள் அறிவாளிகள் என பொருள் படும்படி கூறினார். இயேசு சொன்ன இவ்வார்த்தை களைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் இயேசு எனும் பாறை மீது தனது அடித்த ளத்தை அமைக்கிறான்.
பெருமழை சொரிந்தது, பெருவெள்ளம் வந்தது, காற்று அடித்தது, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென் றால், அது கன்மலையாகிய
இயேசுவின் மேல் அடித் தளம் போடப்பட்டிருந்தது.
இங்கு நான்கு விதமான சோதனைகள் வருகின்றன எல்லாவற்றிலும் இருந்து அந்த வீடு காப்பாற்றப் படுகிறது. அந்த வீட்டின் உரிமையாளன் நல்ல நிலத்தில் விழுந்த விதை போல இருக்கிறான். நம்முடைய வாழ்க்கையும் கன்மலையாகிய கிறிஸ்து வின் மேல் கட்டப்பட்டிருந் தால், எந்த புயல் அடித்தா லும் அது அசையாதபடி உறுதியாய் நிலைநிற்கும்.
மற்றவன் அறிவில்லாதவன்
தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். அந்த வீடோ அழிந்தது. இவன் ஆண்ட வரின் வார்த்தை படி செயல் படாதவன். இவன் முள்ளு ள்ள இடங்களிலும் கற் பாறையின் மீது விழுந்த விதை போல இருக்கிறான்.
எனவே இறையியல் கல்வியானது திருச்சபை மக்களை ஆண்டவரின் வார்த்தை படி வாழ செய்வது. தேவ வசனங்கள் வார்த்தைகளாய் அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட வேண்டும். அவைகள் நல்ல நிலத்தில் விழுந்த விதை போல அறுவதும் 100 மாக பலன் கொடுக்க வேண்டும். ஆண்டவர் லூக்கா 6:46ல் “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல் லுகிறபடி நீங்கள் செய்யா மற்போகிற தென்ன?” இக்கேள்வையை ஆண்டவர் நம் அனைவறையும் கேட்கிறார். யார் ஒருவர் ஆண்டவரின் வார்த்தையை
கேட்டு அதன்படி தன் வாழ்வை நடுத்துகிறார் களோ அவர்களே
இறையரசில் பங்கேற்பர்.
இறை மக்களை ஊக்கு வித்தல் என்பது கடவுள் கற்றுக் கொடுத்த; அன்பு கூறுங்கள். காண்கின்ற சகோதர இடத்தில் அன்பு கூறாதவன் காணாத கடவுளிடம் அன்பு கூறுவது எப்படி என கேட்கிறார். இறை மக்கள் சக மனிதர்களை நேசிக்கும் போது ஆண்டவறை நேசிக் கின்றனர். மன்னியுங்கள்; அப்பொழுது மன்னிக்கப்படு வீர்கள். நன்மை செய்யுங் கள்.தான தருமங்களை செய்யுங்கள். பற்றுறுதி யில் உறுதியாக இருக்க குடும்ப கூடுகையை தவறாதீர். இதன்மூலம் பிள்ளைகளுக்கு ஆண்டவ ரின் அருள் கட்டளைகளை போதிக்கின்றீர்கள். திருச் சபைகள் இறை மக்களை ஊக்கிவிக்க பல வித நற் செய்தி பணிகள், எழுப்புதல் கூட்டங்கள், பாடல் ஆராத னைகள்,: நாடகங்கள், போட்டிகள்பல நடத்தி பெறுவாரியான மக்கள் நேரிடையாக பங்கு பெறும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
ஆயர்கள் திருச்சபை மக்களை ஊக்குவிக்க ஒவ்வொரு குடும்பத்தை பற்றி தெளிவாக பெயரோடு அறிந்திருக்க வேண்டும். உரிமையுடன் பெயர் சொல் லி அழைக்க வேண்டும். ஆலயத்துக்கு வராதவர் களை தேடி சென்று காண வேண்டும். முடிந்த அளவில் வருடத்திற்கு மூன்று முறையாவது ( Atleast three times in a year) ஒவ்வொரு குடும்பத்தின் மக்களை சந்திக்க வேண்டும் அவர்களுடைய இன்பத்தி லும்,துன்பத்திலும், தேவை யிலும், ஆலோசனைகளை வழங்க பங்கு பெற வேண்டும். அழைத்தாலும் அழைக்காவிட்டாலும்; மந்தையை தேடி செல்வது மேய்ப்பரின் கடமை. கடவுளின் அன்பு கட்டளை. ஆண்டவர் காணாமல் போன ஒரு ஆட்டை குறித்து தான் அதிக கரிசனையோடு தேடி சென்றார். அந்தப் பணியை நம் ஆயர்கள் முழு உள்ளத்தோடு செய்ய வேண்டும். Make a casual visit, to meet the congregation with tracts or the Church bulletin as a meaningful visit. குடும்பத் தலைவர்களை சந்தித்து ஆலயத்திற்கு வருவதற்கு உற்சாகப்படுத்த வேண்டும். உரிமையுடன் ஏன் நீங்கள் சென்ற வாரம் வரவில்லை? ஏன் உங்கள் கரத்தில் வேதம் கொண்டு வரவில்லை என அன்புடன் கேட்க வேண்டும். பிள்ளைகள் என்ன செய்கி றார்கள், என்ன படிக்கி றார்கள் என்று விசாரிக்க வேண்டும்.முடிந்த அளவு பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். தேவைப்படும் பட்ச்சத்தில் உதவவேண்டும். இப்படி செய்வதினால் அவர் கள் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கடவுளை அதிக மாக மகிமைப்படுத் துவார்கள். ஆலயத்திற்கு வர தவற மாட்டார்கள். இப்படி செய்கிறவர்களே நல்ல ஆயர் என பேர் பெறுவீர்கள். கடவுளையும் மகிமை படுத்துவீர்கள். திருச்சபை மக்களையும் உற்சாகப்படுத்துவீர்கள்.A visit of a family is the visit of a church. நாம் ஒரு கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ குடும் பத்தை சந்திக்கின்ற பொழுது; பக்கத்தில் வீட்டில் உள்ளவர்களும், வியாதி படுக்கையில் உள்ளவர் களும் தங்களை அழைத்து ஜெபிக்க கூறுவர். இதன் மூலம் அருட்பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இத்தகைய நற்செயல்கள் மூலம் நீங்கள் உள்ளார்ந்த மகிழ்ச்சியை பெறுவீர்கள்.
அன்பான இறைமக்களே!இறை கல்வி நம்மை தெளி வாக வரலாற்று சூழ்நிலை யோடு தகுந்த விளக்கத் துடன் ( Interpretation)சரியாக வேதத்தை புரிந்துக் கொள்ள உதவுகிறது. மிக சரியான வேத அறிவை இறை மக்களுக்கு கொடுப் பதற்கு ஆயர்களுக்கு தகுதி யான கல்வி அளிக்கப் படுகிறது.
சங்கீதகாரன் கூறுவது போல; "உம் நீதிநெறி களைவிட்டு நான் விலகவில்லை; ஏனெனில், நீர்தாமே எனக்குக் கற்றுத் தந்தீர். உம் நியமங்களால் நான் நுண்ணறிவு பெறு கின்றேன். ஆகவேதான் பொய்வழிகள் அனைத் தையும் நான் வெறுக்கின் றேன்.
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:102,104)
என தெளிவான இறைக் கல்வி பெற திருச்சபை நம்மை ஊக்கிவருகின்றது. கடவுள்நம்மைஇறைவழியில் என்றும் வழி நடத்தி செல்ல ஆசிர்வதித்து காப்பாராக. ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.
www.davidarulblogs.com.
www.davidarulsermoncentre.com.
"Theology is not only about understanding the world; it is about mending the world. "Miroslav Volf - a Criation Protestant Theologian.
முன்னுரை: கிறித்துவின் அன்பு நற்செய்தி பணியாளர்களே! உங்க அனைவருக்கும் துன்புறும் கிறித் துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல் என்ற தலைப்பை சிந்திப்போம். திருப் பணி என்றால் என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதே நற்செய்தி. கிறித்தவர்கள் உலகெங்கும் செய்யும் சமயப்பணியைக் குறிக் கிறது. கிறித்தவ சமயத்தைப் பரப்புதல், மனித நேய நடவடிக் கைகள், ஏழைகள் மற்றும் இயலா தோருக்கு உதவுதல் ஆகிய செயல்பாடுகள் மறைப்பணியில் (அ) திருப்பணியில் அடங்கும். திருப்பணி ஞாயிறுவை Mission Sunday முதன் முதலில் அறிவித் தவர் போப் பியூஸ் XI அவர்கள் 1926ம் ஆண்டு உலக முழுவது முள்ள திருச்சபைகள் கொண்டாட அறிவிப்பு செய்தார். இது வேதத் தின் அடிப்படையில், ஆண்டவரின் அருள் வாக்கான," எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரை யும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழு க்குக் கொடுங்கள். (மத்தேயு நற்செய்தி 28:19) திருப் பணியாகும். உலகில் திருப்பணி யாற்றுவது மிக எளிதல்ல; கடின மானது.ஆனாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக பல நற்செய்தியா ளர்களின் உயிர்பலிகளுடன், நற்செய...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னுரை: கிறித்துவின் அன்பு இறை மக்களே! மாணவர் (Student) என்பவர் முதன் மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயி லும் ஒருவரைக் குறிப்பதாகும். மாணவர்" என்பவர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்பு களில் (எ.கா., கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ) சேர்ந்தவர் களைக் குறிக்கிறது; Students can be children, teenagers, or adults who are going to school, but it may also be other people who are learning, such as in college or university. இவர்களுக் காக நம் திருச்சபை ஒரு ஞாயிற்று கிழமையை மாணவர் ஞாயிறு ஆக கொண்டாடிவருகிறது. ஞானம் என்பது,"அறிவு ,அனுபவம் , புரிதல் ,பொதுஅறிவு நுண்ண றிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிந்தித்து செயலாற்றும் திறனே ஞானம் எனப்படும். கிறிஸ்தவ இறையியல் பழைய ஏற்பாட்டில் ஞானம் (ஹீப்ருமொழி யில் சோக்மா) என்றும் கிரேக்க மொழியில் ஞானம் ( சோபியா ) என்று அழைக்கப்படுகிறது. இது பிளாட்டோனிசத்திலிருந்து பெற்றது . Acc.to Collins' dictionary, "Wisdom is the ability to use your expe rience and knowledge in order to make sensible decisions or judgments." ...
Comments
Post a Comment