முன்னுரை :
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! திருமணங்கள் சொர்க்கத் தில் நிச்சயம் படுத்துவதாக
கூறுகின்றனர். கிறிஸ்தவர் கள் திருமணத்தை தூய மெய் விவாகம் என (Holy Matrimony). அழைக்கின்ற னர். Matrimony என்ற
வார்த்தை "matrimonium" என்ற லத்தீன் வார்த்தையி
லிருந்து வந்தது. அதன்
பொருள் "Motherhood".or
Marriage என்பதாகும். திருமணம் இருவருக்கும் ஏற்படுகின்ற ஒரு தூய ஒப்பந்தம். ஒருவர் கடவுள் மற்றும் இருவர் கணவன் மனைவி இவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற தூய ஒப்பந்தம் தான் தூய மெய் விவாகம் என அழைக்கப் படுகிறது. இது அன்பு, நம்பிக்கை மற்றும் பற்றுறுதியின் அடிப்படை யில் அமைக்கப்படுகிறது.
" Marriage is not just a legal contract but a sacred covenant". between two people and God.
கணவன் மனைவியாக இணைகின்றவர்கள் முதலில் கடவுளை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அது தூய விவாகம் என அழைக்கப்படுகிறது. திருமணத்தை உருவாக்கி யவர் கடவுள். படைப்பில் அவர்களை ஆணும் பெண்ணுமாக படைத்தார். மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல; என்று ஏற்ற துணையை உருவாக் கினார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவி யுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
(தொடக்கநூல் 2:24) இது
கடவுளின் கட்டளை. மனைவி ஆணிடமிருந்து
உருவாக்கப்பட்டவள். எனவே மனைவி கணவனுக்குள் அடங்கியி
ருக்கிறாள். இவர்கள்
இல்லத்தின் தலைவர்கள்
ஆவர். ஆண் குடும்பத்தை
வழி நடத்தும் தலைவன்.
பெண் குடும்பத்தை நிர்வகிக்கும் தலைவி. இவர்கள் இனைந்து நடத்து
வதே இல்லறம். திருவள்ளுவர்; "மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்:வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."
என்றார்.
வீட்டுக்குத் தேவையானதை சிறப்புற செய்பவளை தனதாகக் கொண்டவன், வளம் பல காணும் வாழ்க்கைத் துணையை அடைந்தவன்.என நல்ல மனைவியை அடைந்த வனை சிறப்புற்றவன் என கூறுகிறார்.
"மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லா சியையும் பெறுவான். என நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 18:22ல் கூறுகிறது.
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர்' என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1. மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல:
It's not good for the man to be
alone. தொடக்க நூல்: 2:18-25.
பிரயமாணவர்களே!ஆதாமுடன் வாழ்வதற்கு மற்றும் அவனின் “மற்றொரு பகுதியாக” இருந்து அவனுக்கு உதவியாயிருப்பதற்காகவே ஏவாள் படைக்கபட்டாள்.
வேதாகமம் முதல் திருமணத் தைக் குறித்து விவரிக் கிறபோது, எவாளை “துணை” என்கிற சொல் லைப்பயன்படுத்தி ஏவாளை அடையாளப் படுத்துகிறது திருமணம் செய்வதினால் ஒரு மனிதனும் மனுஷியும் “ஒரே மாம்சமாகிறார்கள்.” இந்த ஒருமை மிக முழுமை யாக பாலியல் உறவில் வெளிப்படுத்தப்படுகிறது.
தேவன் முதலாவது மனிதனை படைத்தார்; பிறகு உறுதுணையாக இருக்கும்படி ஸ்திரீயைப் படைத்தார். “மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல” (தொ.நு 2:18) என்று கண்டு, தேவன் இதற்கு ஒரு “நல்ல தீர்வாக” திருமணத்தை ஏற்படுத் தினார். திருமணம் செய்வதினால் ஒரு மனிதனும் மனுஷியும் “ஒரே மாம்சமாகிறார்கள்.”
எனவே ஆதாம்: "இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்ட படியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்." இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப் பார்கள்.” ஆண்டவரும் மிக
தீர்க்கமாய் "இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத் ததை மனிதர் பிரிக்கா திருக்கட்டும். "என்றார்.
(மத்தேயு நற்செய்தி 19:6)
கடவுள் " அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.
(தொடக்கநூல் 1:28) கணவன் மனைவி இருவருக்கும் இந்த உலகை
ஆள அதிகாரம் ஆண்டவர்
கொடுத்திருக்கிறார். இவர்
கள் ஒன்றாய் இனைந்தி
ருப்பதே கடவுளின் திட்டம்.
2. இறைவனே இல்லத் தின் தலைவர்:
சங்கிதம் 127.
God is the Head of the House.
பிரியமானவர்களே! ஆண்
டவரால் கட்டப்படுவதே
வீடு. அதாவது குடும்பம்.
ஆண்டவர் இருக்கும்
ஒவ்வொரு இல்லமும்
"பெத்தேல்" ஆகும். யாக்கோபை ஆண்டவர்
பாதுகாத்து (ஆதியாகம் 28:10-22.) வழி நடத்தினார்.
கடவுள் என்னோடிருந்து நான் போகிற இந்த வழியில் எனக்குப் பாதுகாப்பளித்து உண்ண உணவும், உடுக்க உடையும் தந்து, என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார். மேலும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற் றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.'
என வாக்கு கொடுக்கிறார்.
இல்லம் கடவுளின் பணி
களுக்கு கொடுக்கும்
உள்ளங்களாக இருக்க
வேண்டும்.
சங்கீதகாரன் கூறுவது
போல் ஆண்டவரே வீட்டை
கட்டவேண்டும். இல்லை
யெனில் கட்டுபவர்களின்
உழைப்பு வீண். இதில் ஆண்டவரே தன் அறிவு ஆற்றலை கட்டுவதற்கு
வெளிப்படுத்துகிறார்.
அதை கற்பாறையின்
மீது கட்டுகிறார்
ஆண்டவரே நம் நகரைக் காக்கிறார்.
இல்லையெனில் காக்கி
ரவர்கள் விழித்திருப்பதும்
வீண்.ஆண்டவர் நம்மை
காக்க உறங்குவதுமில்
லை தூங்குகிறதுமில்லை.
இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர் வதுமில்லை; உறங்குவதும் இல்லை.திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 121:4)
நாம் நிம்மதியாய் உறங்
குகிறோம். பிள்ளைகள்
கடவுளின் கொடை. பிள்ளைகளே குடும்ப
வாழ்வின் மகிழ்வை
தருகிறார்கள்.நல்ல குடும்பம் பல்கலைகழகம்.
நம் கிறித்துவ குடும்பங்
கல் ஆண்டவர் தங்கும்
ஆலயமாக இருக்க வேண்டும். நம் குடும்பங்
கள் பெதஸ்தா என்றால்
" இரக்கத்தின் வீடு" எனப்படும். எனவே அன்பு, இரக்கம் நிறைந்த உள்ளங்களே நல்ல இல்லங்கள்.
3 அன்பே திருமணத்தின்
அடிப்படை:
The basic of Marriage is Love.
எபிரேயர் 13:1-6.
பவுல் அடிகளார் எபிரேய
சகோதரர்களுக்கு கொடுக்கும் முதல் அறிவு ரையே சகோதர அன்பிலே நிலைத்திருங்கள். அன்போடு இருந்தால் தான் கடவுளை மகிமைப்படுத்த முடியும். அன்பு இல்லாதவன் கடவுளை அறியான். ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்.
இரண்டாவதாக; "அன்னி யரை வரவேற்று விருந் தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பி யதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர் களை மகிழ்ச்சிப்படுத்தி யதுண்டு. (எபிரேயர் 13:2)
திருவள்ளுவர் "அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்கை பண்பும்
பயனும் அது" எனகிறார்
அதாவது மனைவி பிள்ளைகள் இடத்தில் அன்பும் தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க் கையில் பண்பும் அதுவே பயனும் அதுவே" என்கிறார்.
பவுல் அடிகளார்
"அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம் பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர் களை மகிழ்ச்சிப்படு த்தியதுண்டு. என ஆபிர
காம் தேவ தூதர்கள் என
அறியாமலேயே விருந்
தோம்பியதை இங்கு
நினைவுப் படுத்துகிறார்.
ஆபிரகாம் " கொஞ்சம் உணவு கொண்டுவரு கிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்" என்றார். "நீ சொன்னபடியே செய்" என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
(தொடக்கநூல் 18:5) என
கிறித்துவ குடும்பங்கள்
விருந்தோம்பலில் சிறக்க
வேண்டும் என்கிறார். அப்படி செய்கின்ற போது
நாம் ஆசிர்வாதமும், வாழ்த்துதலும் பெறுகிறோம்.
திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் களவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.
(எபிரேயர் 13:4) என
திருமணத்தை உயர்வாக
மதிக்க வேண்டும் என்கி
றார். திருமணத்திற்கு
"Wedlock" என்ற பெயரும்
உண்டு. அதன்படி திருமண
த்தில் இனணந்தவர்கள்
நிரந்தரமாக நீடிய நாட்
கள் இனணந்திருக்க
வேண்டும் wed (Locked).
4. கடவுள் இணைத்ததை சட்டம் பிரிப்பதா?
மத்தேயு 19:3-6
Is the law separating what God has ordained?
கிறித்துவின் அன்பர்களே!
ஆண்டவர் திருமணத்தை
தூய்மையாக கருதுகிறார்.
திருமணம் கடவுளால் ஏற்படுத்தப்படுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறார் எனவே மனிதன் பிரிக்கக் கூடாது என விரும்புகிறார்.
ஆண்டவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். திரளான ஜனங்கள் அவரு க்குப் பின் சென்றார்கள்;
அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்க வேண்டு மென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந் தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். இது
உள்நோக்கம் கொண்ட
கேள்வி. ஆண்டவறை சோதிக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்வி.
ஆண்டவர் அவர்களுக்கு பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண் ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவி யோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்ன தையும், நீங்கள் வாசிக்க வில்லையா? இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; One Flesh ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதி ருக்கக்கடவன் என்றார்.
ஆனால் இதில் விதிவிலக்கு
என்ன வெனில் விபச்சாரம்.
மோசே உங்களுக்கு உங்களின் இருதய கடினத்தின் நிமித்தமாக தள்ளுதல் சீட்டை கொடுக்க
அனுமதி கொடுத்தார் என்றார். வேதம் திட்டவட்ட மாக கூறுவது தன் மனைவியை தள்ளிவிட்டு வேறு ஒருவரை மணப்பது விபச்சாரம் செய்வதற்கு சமம் என கூறுகிறார். எனவேதான் கிறித்தவர் களின் விவாகரத்து 25%
அதிகரித்துள்ளது. இது
மிகவும் வருத்தப்பட
வேண்டியது. ஆண்டவர்
திட்டமாய் கூறவது; நான் உங்களுக்குச் சொல் கிறேன்; எவரும் தம் மனை வியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் கார ணத்திற்காகவும் விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப் பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.
(மத்தேயு நற்செய்தி 5:32)
என கண்டிப்புடன் கூறுகி
யார். மற்றும்
"தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான். கணவனால் தள்ளப்பட்ட பெண்ணை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.
(லூக்கா நற்செய்தி 16:18)
ஆக கடவுள் விவாகரத்தை
(Divorce) கடுமையாக எதிர்கிறார்.
மோசஸ் இஸ்ரவேல் மக்களி
டம்; ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடிய பின், அவளது அருவருக் கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான்.
(இணைச் சட்டம் 24:1) குடும்ப வாழ்க்கை ஒன்று
தான் பெண்களுக்கு பாது
காப்பானது.
குறு நில மன்னனாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாளை மறுமனை வியாய் வைத்திருந்ததை திருமுழுக்கு யோவான் கண்டித்ததினால் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்தி ருந்தான்.
(மத்தேயு நற்செய்தி 14:3)
இது சட்ட விரோதமானது.
5. திருமணம் புனித மானது. Marriage is Holy:
திருமணம் கிறிஸ்தவத்தில் மிகவும் புனிதமானது எனவே அதற்கு Holy Matrimony என்கிறோம். அதன் அடையாளமாக சிலுவைசின்னம் திருமண த்தில் அடையாளமாக
பெண்ணிற்கு மோதிர
மாகவும் தாலியிலும்
அளிக்கப்படுகிறது. மோதி
ரம் அணிவிப்பது பழங்
காலம் தொட்டு திருமண த்தின் ஒப்பந்த அடையாள
மாக இருக்கிறது.திருமண
மோதிரம் இருவருக்குமான
அன்பின் வெளிப்பாடு.இது
திருமண சடங்கில் இருவரி
ட்டும் உறுதி மொழி ஆலயத்தில் திருச்சபை
மக்கள் மத்தியில் ஆயர்
பெறுகிறார். இந்த திருமண உறுதி மொழியை கடவுள்
முன் கொடுப்பதினால்
திருமணம் "புனித திரு மணமாக " கருதப்படுகிறது.
இவர்கள் திருமண உறுதி
மொழியாக " தேவனுடைய பரிசுத்த நியமணத்தின்படி
நன்மையிலும், தீமையிலும்
வாழ்விலும் , தாழ்விலும் சுகத்திலும், சுகவீனத்திலும்
உயர்விலும் தாழ்விலும் நாம் உயிரோடு இருக்கும் நாள் அளவும்; உன்னை நேசிக்கவும் ஆதரிக்கவும் வாக்களிக்கிறேன்". என
கடவுள் முன் வாக்கூறுதி
கூறுகிறவர்கள் இதன்படி
வாழ்வதே தூய திருமண
வாழ்வு.
இதைதான் ஆண்டவர்
கடவுள் இனைத்ததை
மனிதன் பிரிக்காதிருப்
பாய் என கட்டளை இடு
கிறார். கிறிஸ்துவை அவரது மணமகளான தேவாலயத்துடன் ஒன்றிணைப்பதை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலர் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்பு கூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்;திருமண ஏற்பாட்டை கனமுள்ளதாக கருதுவதற்கு இருவரும் ஒருவரையொருவர் உயர்வாக மதிக்க வேண் டும். (ரோமர் 12:10) என கட்டளையாக கூறுகிறார். மற்றும் கிறிஸ்தவர்கள் அன்பையும் மரியாதை யையும் கண்டிப்பாக காட்ட வேண்டும். “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என பவுல் எழுதினார்.(கொலேசி.3:13) இது கணவன் மனைவி
இருவருக்கும் மிக
முக்கியமானது.
புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை யைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக் கடவள்” என பைபிள் கூறுகிறது.(1.கொரி 7:3)
இதை வாழ்வில் கடைப்
பிடித்தால் மணமுறிவு
ஏற்படாது.
6. நிலையான வாழ்வி
ற்கு நித்திய வார்த்
தைகள்: Eternal words for a stable life. எபேசியர் 5.
பவுல் அடிகளாரின் அறிவுறைகளும் ஆலோச
னைகளும் நிலையான
நிம்மதியான குடும்ப
வாழ்வை கொடுக்கும். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்து வுக்குப் பணிந்திருப் பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். Humility, the virtue of all virtues.
திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். (எபேசியர் 5:23-25) அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட் டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். (எபேசியர் 5:28)
திருமண பாதுகாப்பு சட்டங்கள் :
1. திருமண பதிவு கட்டாயம் 2 .பதிவு செய்த திருமணம் மட்டும்தான் சொத்துரிமை, வாரிசு உரிமை, குழந்தை நலம் பெற ஒரே ஆதாரம்.
3.இந்திய கிறித்துவ திருமணச் சட்டம் 1874 .
4. திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
5.தவறினால் குற்ற வழக்குதொடரப்படும்.
கடவுள் கொடுத்த திருமண வாழ்வை தூய்மையாய் காப்பது நம் கடமை.
பேரா.முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
www.davidarulblogs.com
www.davidarulsermoncentre.
திருமணம் அருளடையாளம்
வரலாற்று நோக்கு.
Comments
Post a Comment