கிறித்துவின் தூதுவராகும் இறைமக்கள். PEOPLE OF GOD - AMBASSADORS OF CHRIST. யோசுவா1:1-9. திருபா.18:1-6, 20-30. 2.கொரி. 5.16-6.10.மாற்கு 6.7-13.
முன்னுரை:
கிறித்துவின் பிரியமான
அன்பு நண்பர்களே! கிறித்துவின் தூதுவராகும்
இறைமக்கள் என்ற தலைப்பு நம்மை ஆண்ட வரின் திருப்பணியை இவ்வுலகில் ஆற்றிட
அழைக்கும் ஆண்டவரின்
அழைப்பு. "தூதுவர்'"என்பவர் Ambassadar இருதரப்பினரி
டையே செய்தியை கொண்டு செல்பவர். சீடர்
கள் வேறு தூதுவர்கள் வேறு. நல்லெண்ண தூதுவர் இருநாட்ட வருக் கும் நல்உறவை ஏற்படுத்து வார்.
கிறித்துவின் தூதுவர்
"கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஆர்வத்தோடு பிரசங்கிக்கிறவர்கள்.ஆண்
டவரின் இரட்சிப்பு, அன்பு ,
மன்னிப்பை அடிப்படையாக
கொண்டது. ஆண்டவர் அமைதியின் தூதுவர். (Ambassadar of Peace ) என பவுல் அடிகளார் எபேசியர்
2:14 ல் "ஏனெனில் இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். "என ஆண்டவர் அமைதியின்
தூதுவராக செயல்படுவதை பார்க்கிறோம்.
மலாக்கி 3:1ல் "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன்.அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்;அப்
பொழுது, நீங்கள் தேடு கின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வரு வார்.நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உடன் படிக்கையின் தூதர்இதோ வருகிறார்." என
மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயார்செய்யும் தூதர். ஆண்டவராகிய கடவுள், என் தூதனை உமக்கு முன்பு அனுப்பு கிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார் என்று கூறுகிறார். அது திருமுழுக்கு யோவான்தான் என்பது புரிந்துவிடும்.
1. யோசுவா கர்த்தரின்
வாக்குதத்ததை நிறை
வேற்றும் தூதுவர். Joshua fulfil the promise of God as an Ambassadar. யோசுவா 1:1-9.
நூனின் குமாரனானயாகிய யோசுவா மோசேவால் இஸ்ரவேலரை வழிநடத்த
தேர்வு செய்யப்பட்டவர்.(உபாகமம் 34:9). மோசே இவரை கானானுக்கு வேவு
( Spy)பார்க்க அனுப்பிய பன்னிருவரில் ஒருவர். A spy
become as an Ambassador.
மோசேயோடு பேசிய இறைவன் யோசுவாவோ டும் பேசினார். துணிவான
படைத்தலைவன். இவர்
தான் "நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று தீர்மானம் செய்து, குடும்பமாக ஆசீர்வதிக்கப் பட்டவர்". ஆண்டவர் அவரிடம் "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதா யிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." அவர் ஆண்ட வரின் செயலை நிறை வேற்றும் தூதுவராக
செயல்பட்டு; ஆறு ஆண்டுகளில் கானான் நாட்டுக்குள் சென்றார். எரிகோ பட்டணத்தைப் பிடித்தார். பல போர்களில் வெற்றி கண்டார். தான்
பிடித்த தேசத்தை பன்னி
ரண்டு கோத்திரங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். கானான் என்ற நாட்டின் முதல் இறை தூதுவர். The God's first Ambassador of Canan. ஆனால் ஆண்டவரின் விடுதலைப் பயணத்தில் மோசஸ்தான் கடவுளின் இறை தூதராக எகிப்து சென்று பாரோவிடம் இஸ்ரேல் மக்களுக்காக போராடியவர். கடவுளுக்கும் மக்களுக்கும் நல்லுறவு ஏற்பட பணியாற்றும் தூதவராக யோசுவாவும் திகழ்ந்தார்.
2.இறைபணியாற்று பவரே இறைதூதர்.God's Servants are alone the Ambassadors.
பவுள் அடிகளார் "எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கி றோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவா குங்கள் என்று கிறிஸ் துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். (2 கொரிந்தியர் 5:20) கடவுளுக்கும் மக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்துபவர்.
ஆண்டவரின் இறையரசை இவ்வுலகில் ஏற்படுத்தும்
தூய பணியே தூதுவர்
பணிகள்.இவர்கள் கடவுள்
அரசின் நல்லெண்ண தூதுவர்கள். இவர்கள் "இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். "
(மத்தேயு நற்செய்தி 5:16)
என தூதர்கள் மனிதர்கள்
முன் வீசும் ஒளியாக
இருக்க வேண்டும். மோசஸ்
பாரோ மன்னன் முன் ஆண்
டவரின் அற்புதத்தை
நிகழ்த்தி காட்டினார்.
யோனா ஆண்டவரின்
தூதராக நினிவே மக்களின்
டம் அனுப்ப்பட்டார். மக்கள்
மனமாறினர்.
ஆண்டவரின் தூதுவர் களாய் தானியேல், எஸ்தர்
என்பவர்கள் அன்னிய
நாட்டில் சிறப்பாக செயல்
பட்டனர். இறைதூதர் எப்படி
இருக்க வேண்டும் என பவுல் அடிகளார் "எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண் டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
(கலாத்தியர் 2:20) என இருக்க வேண்டும்.
3. அப்போஸ்தலர்களே ஆண்வரின் திருத் தூத
ர்கள்: Apostles are Ambas sadors of Christ. மாற்கு 6:7-13.
இயேசு தன் சொந்த ஊரில்
மக்களால் ஏற்றுக்கொள்ளப்
படாத சூழ்நிலையில் ஆண்டவர்பன்னிருவரை
யும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்க ளுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.
கிறிஸ்துவினால் அனுப்பப் பட்டவர்கள் அப்போஸ்த லர்கள்;அவருடைய தூதுவ ராகவும், அவருடைய விண்ணரசு மற்றும் மண்ணரசின் பிரதிநிதி யாகவும் இருக்கிறார்கள். தன்னால்தெரிந்துகொள்
ளப்பட்டோரை ஆயுதமில் லாமல், இரண்டு இரண்டு பேராக ஆவிக்குரிய யுத்தம் செய்யும்படி அனுப்பினார். மிதியடி, கைத்தடி தவிர "பயணத்திற்குக் உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். (மாற்கு நற்செய்தி 6:8)
இத்தகைய திருத்தூதர்
களுக்கான தேவையை விசுவாசிகள் அளிக்க
வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கூறுகிறார்.
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப் படுத்தினார்கள். இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், "இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்; என
நினைக்கும் அளவிற்கு ஆண்டவரின் தூதுவர்கள்
சிறப்பாக பணி செய்தனர்.
திருத்தூதுவர்களுக்கு அசுத்த ஆவிகளை விரட்டும்
அதிகாரம் கொடுத்தார். தன்
சீடர்கள் உணவு போன்ற
தேவைகளை குறித்து
கவலைப்பட கூடாது. இவற்
றை அவரே அளிக்க வள்ளவர்.
ஆண்டவர் தன் திருத்தூது வர்கள் பையை (Bag) எடுத்து
செல்லக் கூடாது என
கட்டளை இட்டது ஏன் என்றால், அக்காலத்தில்
ஆலயத்தை சேர்ந்த குருக்
கள் ஊர் ஊராக சென்று
ஆலயத்திற்கு பணம், பொருட்களை சேகரிப்பா
ர்கள். அவ்வாறு ஆண்ட
வர் அனுப்பும் திருத்தூது
வர்கள் செய்யக் கூடாது
இவர்கள் ஆண்டவரின்
அன்பை கொடுக்கிறவர்
களாய் இருக்க வேண்டுமே
தவிற; பெறுகின்றவர்
களாய் இருக்க கூடாது.
யூத மத சட்டப்படி, மத
தலைவர்கள்(Rabbanic Law) தேவாலயத்தின் Temple Court பகுதிக்கு செல்லும் போது தன் தடி, பணப் பை, காலணிகளை வெளியை வைத்துவிட்டுதான் உள்ளே
செல்வர் அதன் அடிப்படை
யில் தான் ஆண்டவர்
தன் சீடர்களும் ஒவ்வொரு
வீட்டிற்கும் செல்ல வேண்
டும் என கட்டளையிட்டார்.
ஒவ்வொறு இல்லங்களும்
ஆலயங்கள் என ஆண்டவர்
நோக்குகிறார்.
திருத்தூதுவர்கள் ஆண்ட வரின் நல்லென்ன தூது
வர்கள். ஆண்டவரின்
இறையாட்சியை இவ்வு
லகில் கொண்டுவர
பாடுபடும் பணியை செய்கி
றவர்கள்.
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு மக்களுக்கு
நற்செய்தி அறிவித்தார்.
இப்பணி இவ்வுலகில் அனுப்ப படாமல் நிறைவே றுவது எப்படி? தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பு கிறேன்''(யோவா20:21)என்றஇயேசு கிறிஸ்துவின் வார்த்தையின்படி, திருச் சபை தன் திருதூதுவர்
களை நல் லெண்ணத்துடன் அனுப்பி கொண்டே இருக்கும். கிறிஸ்துவின் பிள்ளைகள் அனைவரும் இறைபணி யாற்றும் இறை தூதுவர்கள் என்பதை மனதில் கொண்டு வாழ்ந்திடுவோம்.நேற்றும் இன்றும் என்றும் மாறா இறைவன் நம்மை காத்து இரட்சிப்பாராக. ஆமேன்.
முனைவர். டேவிட் அருள்பரமானந்தம்.
நற்செய்தி ஆசிரியர்.
விவிலிய நீதித்தலைவர்
| |||
---|---|---|---|
மேசேயும் கானானிலிருந்து செய்தியாளர்களும், | |||
Comments
Post a Comment